பல்லவர் இசையில் மயிலை

"பல்லவர் இசையில் மயிலை", தமிழகத்தை ஆண்ட மன்னர்களில் பல்லவர்கள் பல சிறந்த கலைப் படைப்புகளை விட்டுச் சென்றிருக்கின்றனர். அது போல அவர்கள் இசைக்கும் பெரும் தொண்டு ஆற்றியுள்ளனர். கி.பி. 600ல் ஆண்ட பல்லவன் மஹேந்திரன் ஆட்சியில் மயிலாப்பூர் உட்பட்டு இருந்தது. அவன் கலை ஆர்வம் மிகுந்தவன். அவன் தான் முதன் முதலில் மயிலைக் கபாலீச்சுரத்தைப் பாடியுள்ளான். அவன் எழுதிய மத்த விலாச ப்ரஹசனம் என்னும் நாடகத்தில் நடமாடும் கபாலீச்சுரரை பாடியுள்ளான். அப்பாட்டில் பரத முனிவர் கூறியுள்ள நால் வகை அபினயத்தைப் பாடியுள்ளான். அவனுக்குப் பிறகு மாமல்லையை தோற்றுவித்த இராஜசிம்மன் ஒரு கல்வெட்டில் தனது சங்கீத ஆர்வத்தை குறிப்பிட்டு அதில் பரதருடைய சங்கீதத்தையும் புகழ்கிறான். அவன் 700ல் ஆண்டவன். மயிலை அவன் ஆட்சியின் கீழ் திகழ்ந்தது. 650ல் வாழ்ந்த ஞான சம்பந்தர் மயிலை வந்து அங்கம் பூம்பவையை பாடியுள்ளார். அப்பதிகத்தில் ஒவ்வொரு பாட்டிலும் மயிலாப்பூரில் நடைபெற்ற விழாவைப் பாடியுள்ளார். 4000 பாடலகள் பாடியுள்ள அவர் காலம் தான் தமிழ் இசையின் பொற்காலம் ஆகும். எத்தனை வகைப் பண்கள் உண்டோ அத்தனையிலும் அவர் பாடி உள்ளார். இசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தர் என்பது அவர் பெயர். அவருக்கு பின் தெள்ளாறெறிந்த நந்தி வர்மன் காலத்தில் மயிலை சிறந்த நகரமாக விளங்கியது. அம்மன்னனுக்கு "மயிலையர் கோன்" என்றும் "மயிலைக் காவலன்" என்றும் பெயர்கள் இருந்தன. இவற்றை அவன் மீது இயற்றப் பட்ட நந்திக் கலம்பகம் என்னும் நூலில் கூறுகிறான். இவ்வாறு காலம் தோறும் வளர்ந்தது தமிழ் இசை என நாகசாமி, சென்னையில் மதுரத்வனி நிறுவனத்தில் ஆற்றிய விளக்க உரையில் குறிப்பிட்டார். திருமதி. காயத்ரி கிரீஷ் இப்பாடல்களை மிக அழகாக பாடிக்காட்டினார். பல்லவர் காலத்தில் இவ்வளவு சிறந்த பாடல்கள் இருந்தனவா என வியந்தனர் அவற்றைக் கேட்டு மகிழ்ந்தோர்.
bhāṣā veṣa vapuḥ kriyā guṇakṛtān āśritya sarvān tata bhāvāveśavaśāt samasta jagatāṁ trailokya yātrāmayam | niśśeṣa pratibaddha bodhamahimā yaḥ prekṣakaśca svayaṁ saṁprāptāvanibhājanaṁ diśatu vo nṛttaḥ kapāli yaśaḥ || mattavilāśa prahasaṇa - mahendra pallava 1
yadi na vidhātā bharato na hariḥ nārado vā skandhaḥ | bodghuṁ iva samarthaḥ saṁgītaṁ kālakālasya || māmallapuram likitam rājasimha
Link to the Program on Youtube

திரு. இரா. நாகசாமி அவர்கள் தொல்பொருள் ஆய்வுத்துறையின் இயக்குனராக இருந்த போது, கல்லூரி ஆசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் தமிழ் நாட்டின் கலை, கலாசாரம், கோயில்கள், கோயில்களின் சிறப்பு, பண்டய எழுத்துக்கள், அவற்றைப் படிக்கும் முறை, பண்டய காசுகளை அறியும் முறை, சிற்பங்களின் தத்துவங்கள் என்று பலவற்றை அறிந்து கொள்ள தெரிந்து கொள்ள பயிற்சிகள் அளித்துள்ளார். பயிற்சியின் ஒரு பகுதியாக கலைச் செல்வங்கள் நிறைந்த இடங்களுக்கு அழைத்து சென்று விளக்கியிருக்கிறார்.
1972 ஆம் ஆண்டு, அத்தகைய பயிற்சி முகாமின் போது, உலகப் புகழ்வாய்ந்த, சோழப் பேரரசன் இராஜராஜனாலேயே "பெரிய திருக்கற்றளி" என்று அழைக்கப்பட்ட "கச்சி கைலாயநாதர் ஆலயத்தில்", அக்கோயிலின் சிறப்பை, பெருமையை விளக்கிக் கூறினார். அந்த விளக்கவுரையின் எழுத்து வடிவமே இந்தக் கட்டுரை. இந்தக் கட்டுரையில் அவருடைய உரையையும், கேட்பதற்கு வசதியாக 1 நிமிடத்திலிருந்து - 2.5 நிமிடம்வரை உள்ள சிறிய பகுதிகளாக கொடுக்கப்பட்டுள்ளன. காஞ்சி கைலாயநாதர் ஆலயம் (கட்டுரை)
Within a few years of the construction of the Kailāsanatha temple at Kāñcīpuram, the Chalukya ruler Vikramaditya II vowed to pulverize the city of Kāñcīpuram to avenge the destuction of his own ancestral capital Vātāpi at the hands of previous Pallava rulers. Yet, on seeing the glory of the Rājasimhesvara temple (popularly known as Kailāsanātha), he was so filled with admiration that he refrained from damaging it. The mighty conqueror was conquered by this edifice. So magnificient was the temple that in the eleventh century, the Cholā emperor Rājarāja, builder of the Great Temple at Tanjore, refered to the Kailāsanātha as the "great stone temple of Kāñci" (kacippeṭṭu periya tirukkaṛṛaḷi). Rājasimheśvaram of Kāñci (article)
Home