﻿<?xml version="1.0" encoding="utf-8"?>
<?xml-stylesheet type="text/xsl" href="article.xsl"?>

<article>
<author>இரா.நாகசாமி</author>
<book>மாமல்லை</book>

<title>
<line>தமிழக அரசு கல்வி அமைச்சர் மாண்புமிகு</line>
<line>நாவலர் இரா நெடுஞ்செழியன் அவர்களின்</line>
<line>அணிந்துரை</line>
</title>

<para>
<text>
தமிழக வரலாற்றுப் புகழையும், பண்பாட்டுப் பெருமையையும், நாகரிக மேம்பாட்டையும் விளக்கிக் காட்டிடும் அரண்மனைகள், கோட்டைகள், கோயில்கள், கட்டிடங்கள், குகைகள், சிற்ப்பங்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள், மண்டையோடுகள், புதைபொருட்கள் தமிழக மெங்கணும் சிதறிக் கிடக்கின்றன. அவற்றையெல்லாம் பேசவைக்கும் பணியில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், வரலாற்றுப் பேராசிரியர்கள், இலக்கிய வல்லுநர்கள், கலைஞர்கள் ஆகியோர் சென்ற் சில காலமாக ஈடுபட்டு வருகின்றனர்.
</text>
</para>

<para>
<text>
மேலை நாடுகளில் வரலாறு, இலக்கியம், கல்வெட்டுகள், கலை ஆகியவற்றின் அடிப்படையில் எண்ணற்ற வியப்புக்குரிய நூல்கள் அந்தந்த நாட்டின் சிறப்பை வெளிப்படுத்தும் முறையில் வெளிப்பட்டு வருகின்றன. வரலாற்றுப் பெருமை வாய்ந்த கலைச் செல்வங்களைக் காணச் செல்வதற்கு முன்னர் அவை பற்றிய் நூல்களைப் படித்துப் பார்த்து விட்டு தூண்டப்பட்ட ஆவலுடன் அச்செல்வங்களைக் காண விழைகின்றனர். குறிப்பாக மேலை நாடுகளில் கல்லூரி மாணவர்களிடத்திலும் பள்ளி மாணவர்களிடத்திலும் இந்தப் பழக்கம் பரவலாகக் காணப்படுகின்றது. இது போன்ற பழக்கம் நம் நாட்டிலும் பெருகினால்தான் நம் கலைச் செல்வங்களின் அருமை பெருமைகளை நாமும் உணர முடியும்; பிறர்க்கும் உணர்த்த முடியும். தமிழகத்திலும் அப்படிப்பட்ட நூல்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பது தான் தமிழக அரசின் பேராவலாகும். அந்த ஆவலை நிறைவேற்ற எடுத்தௌளக் கொண்ட ஒரு முயற்சியின்  விளைவுதான் "மாமல்லை" என்னும் இந்நூல்.
</text>
</para>
<para>
<text>
இந்நூல் வரலாற்றுச் சிறப்புப் பெற்ற, சிற்பக் கலை நிரம்பிய மாமல்லபுரத்தைப் பற்றிய பல்வேறு செய்திகளை இலக்கியத்திலிருந்தும், கல்வெட்டுக்களிலிருந்தும், சிற்பக்கலை நுணுக்கத்திலிருந்தும், வரலற்றுக் குறிப்புக்களிலிருந்தும் திரட்டித் தருகிறது.
</text>
</para>

<para>
<text>
தமிழக அரசின் தொல்பொருள் ஆரய்ச்சித்துறையின் இயக்குநரும், சிறந்த இலக்கிய நுண்ணறிவு, கல்வெட்டு ஆராய்ச்சியறிவு, தொல்பொருள் ஆராய்ச்சியறிவு, வரலாற்றறிவு, ஆகியவற்றை ஒருங்கே பெற்றவரும் ஆன திரு இரா. நாகசாமி அவர்கள் இந்நூலை உருவாக்கித் தந்திருப்பது பாராட்டுவதற்குரியதாகும்.
</text>
</para>

<para>
<text>
ஆசிரியர் இனிய, எளிய தமிழிலும், இலக்கிய நயம் சிறக்க அழகான முறையில் எழுதியுள்ளார்.
</text>
</para>

<para>
<text>
தமிழக அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறை வரலாற்று அடிப்படையில் கொண்டு வந்துள்ள முதல் நூல் "மாமல்லை" என்ற இந்த ஆராய்ச்சி நூலாகும். இது போன்ற பல நூல்கள் வெளிவர வேண்டும் என்பது தமிழக அரசின் பேராவலாகும்.
</text>
</para>

<para>
<text>
தமிழக பெருமக்கள் இந்நூலுக்குப் பேராதரவு தந்து அதனால் பெரும் பயன் பெறுவார்களாக.
</text>
</para>

<para>
<text>
இரா. நெடுஞ்செழியன்
</text>
</para>

</article>


