﻿<?xml version="1.0" encoding="utf-8"?>
<?xml-stylesheet type="text/xsl" href="article.xsl"?>

<article>
<border>#6B8E23</border>

<title>
<line>பொய்கையின் சொல் மாலை</line>
</title>

<author></author>
<date></date>

<para>
<text>
பொய்கை ஆழ்வார் இடர் ஆழி நீங்க ஒர் அழகிய அகல் விளக்கேற்றுகிறர்,
</text>
</para>

<para>
<!--<image height="250" align="bottom">../images/IMG_9600.JPG</image>-->
</para>

<para>
<verse>
<line>வையம் தகளியா, வார் கடலே நெய் ஆக,</line>
<line>வெய்ய கதிரோன் விளக்கு ஆக, செய்ய</line>
<line>சுடர்-ஆழியான் அடிக்கே சூட்டினென் சொல்-மாலை-</line>
<line>இடர்-ஆழி நீங்குகவே என்று. --பொய்கை ஆழ்வார்</line>
</verse>
</para>

<para>
<text>
உலகமே அகலாக, கடலே நெய்யாக, சூரியன் விளக்காக, இடர் நீங்க பொய்கை ஆழ்வார் சூட்டிய சொல்மாலை என்றென்றும் வாடா மாலை.
</text>
</para>

<para>
<text>
காலையை, கதிரவனை எவ்வளவு அனுபவித்து பாடியிருக்கறார்கள்
</text>
</para>

<para>
<verse>
<line>காலை எழுந்து உலகம் கற்பனவும், கற்று உணர்ந்த</line>
<line>மேலைத் தலை மறையோர் வேட்பனவும், வேலைக்கண்</line>
<line>ஓர் ஆழியான் அடியே: ஓதுவதும், ஓர்ப்பனவும்-</line>
<line>பேர் ஆழி கொண்டான் பெயர். --பொய்கை ஆழ்வார்</line>
</verse>
</para>

<para>
<verse>
<line>பெயரும் கருங் கடலே நோக்கும்-ஆறு; ஒண் பூ</line>
<line>உயரும் கதிரவனே நோக்கும்; உயிரும்</line>
<line>தருமனையே நோக்கும்; ஒண் தாமரையாள் கேள்வன்</line>
<line>ஒருவனையே நோக்கும்-உணர்வு. --பொய்கை ஆழ்வார்</line>
</verse>
</para>

<para>
<verse>
<line>திருக் கண்டேன்; பொன் மேனி கண்டேன்; திகழும்</line>
<line>அருக்கன் அணி நிறமும் கண்டேன்; செருக் கிளரும்</line>
<line>பொன் ஆழி கண்டேன்; புரி சங்கம் கைக் கண்டேந்</line>
<line>என் ஆழி வண்ணன்பால், இன்று. --பேயாழ்வார்</line>
</verse>
</para>

</article>


