﻿<?xml version="1.0" encoding="utf-8"?>
<?xml-stylesheet type="text/xsl" href="article.xsl"?>

<article>
<border>#6B8E23</border>

<title>
<line>பகல் கண்டேன் நாரணனை</line>
</title>

<author>டாக்டர் இரா. நாகசாமி</author>
<date>14-Apr-2007</date>

<para>
<text>
பகல் என்றால் சூரியன் என்று பொருள். சூரியன் ஆகிய ஆகாசத்தே விளங்கும் சோதிதான் நாராயணன் என்று கண்டுகொண்டேன் என்பது பொருள். பகல் கணடேன் என்றால் புறத்தே கண்டேன் என்றும் பொருள். அதே போன்று கனவிலும் அவனைக் கண்டேன். கனவில் காண்பது உண்மை இல்லை. மிகையாகக் காண்பது. கற்பனையில் காண்பது. இருப்பினும் உள்ளுணர்வு தான் அதைக் காண்கிறது. உள்ளுணர்வு என்பது உயிர்த் துடிப்பு எனப்படும். கனவில் இருந்து மீண்ட பின் உண்மை எது என்று கண்டு கொண்டேன்். கையிலெ சக்கரமும் ஒளி திகழும் சேவடியும் உடையவன் என்று கண்டேன். அவன் உருவம் சக்கர வடிவாய் உள்ளது. அவனுக்கு ஏராளமான ஒளிக்கதிர்கள்.ஆதலின் அவனை ஆயிரம் கால்களை உடையவன் (ஸஹஸ்ரபாத்) என்றும் கூறுவர். அவன் யார் எனில் ஆகாயத்ததே விளங்கும் சோதிவடிவானவன். சூரியன். அவனே நாராயணன் என்கிறார் பூதத்தாழ்வார்.
</text>
</para>

<para>
<verse>
<line>பகல் கண்டேன்; நாரணனைக் கண்டேன்; கனவில்</line>
<line>மிகக் கண்டேன் மீண்டு அவனை, மெய்யே மிகக் கண்டேன்</line>
<line>ஊன் திகழும் நேமி ஒளி திகழும் சேவடியான்</line>
<line>வான் திகழும் சோதி வடிவு</line>
</verse>
</para>

<para>
<text>
வேதத்தில் இரண்டு சூக்தத்ங்கள் (பாடல்கள்) உள்ளன. ஒன்று "புருஷ சூக்தம்". மற்றது "நாராயணசூக்தம்". இரணடு சூக்தங்களையும் எல்லாக் கோயில்களிலும் எல்லாவீட்டுக் காரியங்களிலும் பயன்படுத்துவர்.அபிஷேகம், ஆராதனை, பூஜைகளிலும் கூறுவர்.இரணடுமே சூரியனை முழுமுதல் கடவுளாக போற்றும் பாடல்கள். அவற்றில் நாராயண சூக்தம் என்பது சூரியனை புறத்தும் அகத்தும் சோதிவடிவில் காண்பதைக் கூறுகிறது. வெளி உலகில் நமக்கு அநைத்தையும் தோற்றுவிப்பது சோதிவடிவான சூரியனே. நமது உள்ளத்தின் உள்ளே சோதியாக அனைத்தெயும் நமக்கு பிரகாசிக்கச் செயவதும அந்த தெய்வச்சக்தியே. இந்த தெய்வச்க்தியையே பிரும்மா, விஷ்ணு, சிவன். இந்திரன், அழிவிலாதவன்,பரம்பொருள் என்கிறோம். என்று கூறுகிறது நாராயணசூக்தம். அதைத்தான் ஆழ்வாரின் பாடல் காட்டுகிறது.உள்ளும் புறமும் ஒளிவிட்டுப்பிரகாசிக்கிற அப்பரமனே நாராயணன் என்கிறார் ஆழ்வார்.
</text>
</para>

<para>
<verse>
<line>அந்தர் பகிஸ்ச தத் ஸர்வம் வ்யாப்ய நாராயணஸ் ஸ்தித:</line>
</verse>
</para>

<para>
<verse>
<line>நாமம் பல சொல்லி நாராயணா என்று,</line>
<line>நாம் அங்கையால் தொழுதும், நல் நெஞ்சே! வா, மருவி;</line>
<line>மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த, வண்டு அறையும்</line> 
<line>தண் துழாய், கண்ணனையே காண்க, நம் கண்</line>
</verse>
</para>

<para>
<text>என்னும் பேயாழ்வார் வாக்கும் காண்க.</text>
</para>

<para>
<sanskrit-p-title>नारायण सूक्तम्</sanskrit-p-title>
<sanskrit-verse>
<line>शहस्र शीर्षम् देवम् विश्वाक्षम् विश्वसम्भुवं विश्वम् नारायणं देवं अक्षरं परमं पदम्</line>
<line>विश्वतः परमान् नित्यं विश्वं नारायणँ हरिम् विश्वमेवदँ सर्वम् तद् विश्वं उपजीवति </line>
<line>पतिं विश्वस्यात्मेश्वरँ  शास्वतँ शिवं अच्युतम् नारायणं महा ज्ञेयं विश्वात्मानं परायणम्</line>
<line>नारायण परो ज्योतिः आत्मा नारायण परः नारायण परं ब्रह्म तत्त्वम् नारायणः परः </line>
<line>नारायण परो धयाता ध्यानन् नारायणः परः यच्च किञ्चित्  जगत् सर्वम् दृश्यते श्रूयतेऽपि वा</line>
<line>अन्तर् बहिश्च तत् सर्वम् व्याप्य नारायणः स्थितः  अनन्तं अव्ययं कविँ समुद्रेन्तं विश्व सम्भुवम्</line>
<line>पद्म कोश प्रतीकाशं हृदयम्चाप्यधोमुखम्  अधो निष्ठया वितस्यान्ते नाभ्याम् उपरि तिष्ठति</line>
<line>ज्वालमालाकुलम् भाति विश्वस्यायतनम् महत् सन्ततम् शिलाभिस्तु लम्बत्याकोश सन्निभम् </line>
<line>तस्यान्ते सुषिरं शूक्ष्मं तस्मिन् सर्वम् प्रतिष्ठितम् तस्य मध्ये महान् अग्निः विश्वार्च्चिः विस्वतो मुखः </line>
<line>सोग्रभुक् विभजन् तिष्ठन् आहारम् अजरः कविः तिर्यक् ऊर्ध्वं अधः शायी रश्मयः तस्य सन्तता</line> 
<line>सन्तापयति स्वम् देहम् आपादतल मस्तकः  तस्य मध्ये वन्हि शिखा अणीयोर्ध्वा व्यवस्थिता </line>
<line>नील तोयद मध्यस्था विद्युल्लेखेव भास्वरा  नीवार शूकवत् तन्वी पीता भास्वत्यनूपमा </line>
<line>तस्यश्शिखाया मध्ये परमात्मा व्य्वस्थितः स ब्रह्मा स शिवः स हरिः  सेन्द्रः सोक्षरः परमः स्वराट्</line>
</sanskrit-verse>
</para>

</article>


