﻿<?xml version="1.0" encoding="utf-8"?>
<?xml-stylesheet type="text/xsl" href="article.xsl"?>

<article>
<border>#6B8E23</border>

<title>
<line>வேதத்தின் சுருக்கு</line>
</title>

<author>டாக்டர் இரா. நாகசாமி</author>
<date>14-Apr-2007</date>

<para>
<text>
வேதம் என்பது மிகப்பெரியது. கடல் போன்றது. அது முடிவில் சொல்வது என்ன? புருஷோத்தமனாகிய திருமாலை வணங்குவது தான் வேதத்தின் முடிந்த முடிவு என்பர். இதை அறிந்தார் சிறந்தோர். செல்வம் மிகுந்தவர்கள். செல்வத்தில் செல்வம் செவிச்செல்வம் அல்லவா? ஆதலின் செவிச்செல்வத்தை பெற்றோர் வேதமுடிவை அறிந்தோர். இதை அறியாதவர் ஏழைகள் என்கிறார் பூதத்தாழ்வார். செவிச்செல்வம் பெற்றோர் செல்வந்தர். அது அற்றவர்கள் ஏழைகள் தாமே! அவர்களுக்கு கூறுகிறார் வேதத்தை அறிந்து ஓதுங்கள். அது மிகவும் நன்று. அது அறிந்து ஓத இயலவில்லை என்றால் வருந்த வேணடாம். வேதத்தின் சுருக்கமான "திருமாலை" வாணங்குங்கள். எதை அடையவேண்டுமோ அதை திருமாலை வாழ்த்துவதாலேயே அடைந்து விடலாம் என்கிறார்.
</text>
</para>

<para>
<verse>
<line>ஓத்தின் பொருள் முடிவும் இத்தனையே-உத்தமன் பேர்</line>
<line>ஏத்தும் திறம்: அறிமின், ஏழைகாள்! ஒத்து-அதனை</line>
<line>வல்லீரேல் நன்று: அதனை மாட்டீரேல், மாதவன் பேர்</line>
<line>சொல்லுவதே ஓத்தின் சுருக்கு</line>
</verse>
</para>

<para>
<text>
வேதத்தில் நாராயண சூக்தம் என்ற பகுதி ஒன்று உள்ளது. அதில் 
</text>
</para>

<para>
<verse>
<line>"நாராயண பரோ த்யாதா த்யானம் நாராயண: பர:"</line>
</verse>
</para>

<para>
<text>
முடிவாக தியானிக்கத் தக்கவன் நாராயணனே. நாராயண தியானம் தான் ஒப்பற்றது என்கிறது வேதம். இந்தக் கருத்தைத் தான் ஆழ்வார் கூறுகிறார். 
</text>
</para>

<para>
<text>
ஓதப்படுவதால் வேதம் "ஓத்து" எனப்பட்டது. ஓத்தின் சுருக்கு எனில் வேதத்தின் சுருக்கம் (இறுதி முடிவு) என்பது பொருள்.
</text>
</para>

</article>

