﻿<?xml version="1.0" encoding="utf-8"?>
<?xml-stylesheet type="text/xsl" href="article.xsl"?>

<article>
<border>#6B8E23</border>

<title>
<line>அரியது எளிது</line>
</title>

<author>டாக்டர் இரா. நாகசாமி</author>
<date>14-Apr-2007</date>

<para>
<text>
எது அரிது என நினைக்கிறோமோ அதை எளிதாக்கிவிட முடியும். நமது ஆற்றலால் என்கிறார் பூதத்தாழவார். ஏதாவது ஒன்றை அடைய முடியுமோ முடியாதோ என பயந்து இருக்க வேணடாம். நமது ஆற்றலால் முயற்சி செய்து அதை அடைய முடியும் என்ற மனத்திண்மை கொள்ள வேண்டும் என்று ஊக்குவிக்கிறார். அரிதை மாற்றி யமைக்க வேண்டுமானால் ஆற்றல் மிக்கவரை அடைந்தால் அரிதை எளிதாகப்பெற முடியும்.எடுத்துக்காட்டாக கஜேந்திரமோக்ஷ வரலாற்றைப் பாருங்கள் எனக்காட்டுகிறார். நல்ல வெண்மையான தந்தத்தை உடையது அந்த கரிய யானை. குளிர்ந்த தாமரை மலரால் திருமாலை பூசித்து  முதலை வாயிலிருந்து விடுபட்டு வெற்றி கண்டது அல்லவா! அதைக் கூறுகிறார். கஜேந்திரன் தனது ஆற்றலால் திருமாலை அடைந்தது. அது போல் என்கிறார். யானை தனது ஆற்றலால் வல்லமை மிக்க திருமாலை அடைந்து தன் குறிக்கோளை அடைந்தது என்கிறார்.
</text>
</para>

<para>
<text>
இப்பாடலில் "கரியது" 'வெண்"கோடுடையது என்று மாறுபட்ட வண்ணத்தைக் கூறியுள்ளார். இதன் பொருள் நல்லோரை அடைந்தால் கரியதும் வெண்மை ஆவது போல் செயற்கரிய செயலையும் செய்யலாம் என்கிறார். திருமாலைக்காட்டிலும் வெறு யாராவது நல்லவர் இருக்கமுடியுமா? அதலின் திருமாலை வணங்கு என்கிறார். அதைச் சூசகமாக "தாழ்ந்து" என்று கூறி பெரியோரிடை தாழ்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற பண்பையும் புகட்டுகிறார். அந்தப் பாடல் இதுதான்.
</text>
</para>

<para>
<verse>
<line>"அரியது எளிது ஆகும் ஆற்றலால் மாற்றிப்</line>
<line>பெருக முயல்வாரைப் பெற்றால்: கரியது ஓர்</line>
<line>வெண் கோட்டு மால் யானை வென்றி முடித்தன்றே -</line>
<line>தண் கோட்டு மா மலரால், தாழ்ந்து. "</line>
</verse>
</para>

</article>





