﻿<?xml version="1.0" encoding="utf-8"?>
<?xml-stylesheet type="text/xsl" href="article.xsl"?>

<article>
<border>#6B8E23</border>

<title>
<line>தீ வினைகள் அஃகாவே</line>
</title>

<author>டாக்டர் இரா. நாகசாமி</author>
<date>14-Apr-2007</date>

<para>
<text>
பக்தியின் பெருமையைக் கூறும் ஆழ்வார்களும் நாயன்மார்களும் பரமனை தூய்மையான மனத்தினால் பரவினாலே போதும் நமது தீ வினைகள் எல்லாம் மறைந்துபோகும. கடுமையான பாலவிரதங்களை மேறகொள்ளவேண்டாம் என வலியுறுத்தி உள்ளனர்.
</text>
</para>

<para>
<text>
அந்த மரபிலே பேயாழ்வார் கீழ்வருமாறு தமது பாடலில் பாடுகிறார்.பெரிய மலைமேல் ஏறி ஒற்றை காலில் நின்று தவம் செய்ய வேண்டாம். க்ஷேத்ராடனம் சென்றோ புண்ணிய தீர்த்தங்களில் நீரில் மூழ்கியோ அலைய வேணடாம். ஐந்து அக்னியின்  நடுவிலே நின்று தவிக்க வேண்டாம். நாம் விரும்பும் திருவெஃகாவில் நிற்கும் திருமாலை மெய்யான மலர்களால் அர்ச்சித்தாலே போதும். தீ வினைகள் நம்மை தீண்டா என்று பாடுகிறார்.
</text>
</para>

<para>
<verse>
<line>பொருப்பிடையே நின்றும், புனல் குளித்தும்,</line>
<line>ஐந்து நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா;</line>
<line>விருப்புடைய வெஃகாவே சேர்ந்தானை மெய்ம்மலர் தூய்க்</line>
<line>கைதொழுதால், அஃகாவே தீவினைகள், ஆய்ந்து.</line>
</verse>
</para>

</article>





