﻿<?xml version="1.0" encoding="utf-8"?>
<?xml-stylesheet type="text/xsl" href="article.xsl"?>

<article>
<border>#6B8E23</border>

<title>
<line>பிராம்மண முதலியார்</line>
</title>

<author>இரா. நாகசாமி</author>
<date>15-செப்டம்பர்-2007</date>

	
<para>
<text>
முதலி என்ற சொல் இப்பொழுது ஒரு ஜாதியை குறிக்கிறது. தொண்டை மண்டல முதலியார், கைக்கோள முதலியார், செங்குந்த முதலியர் எனப் பல பிரிவுகள் உள்ளன. இக்காலத்தில் இது ஒரு ஜாதியாகவே கருதப்படுகிறது. பச்சையப்ப முதலியார் என்ற தர்மவான் இருந்தார். கல்விக்காக அவர் எரராளமான கொடை அளித்திருக்கிறார்.இவர் முதலியார் ஜாதியைச் சார்ந்தவர்.
</text>
</para>

<para>
<text>
ஆனால் முன் காலத்தில் முதலியார் என்பது ஒரு பட்டப்பெயராக இருந்தது. ஒரு வகுப்பினரில் தன் ஆற்றலாலும் வன்மையாலும் அவ்வகுப்புக்கே முதன்மையாக இருந்தவருக்கு முதலி என்ற பட்டம் அளித்து அரசன் சிறப்பித்திருக்கிறான் அந்தப் பட்டம் தான் அது பெற்றவரின் சந்ததியினர் தங்களது பட்டப்பெயராக் கொண்டனர்.அவரது மக்களும் மக்களின் மக்களும் அவர்களில் இருந்து தோன்றிய கிளைகளும்  முதலி என்றே தங்களைக் கூறிக்கொள்ளத் தலைப்பட்டனர். ஆனால் முற்காலங்களில் எல்லா ஜாதியிலும் முதலிகள் இருந்திருக்கிறார்கள் எனக் கல்வெட்டால் அறிகிறோம். அவ்வாறு தான் பிராம்மணரில் கூட முதலியார்கள் இருந்திருக்கிறார்கள்.
</text>
</para>

<para>
<text>
கொங்கு நாட்டில் 13ஆம் நூற்றாண்டில் அவினாசியில் இவ்வாறு பிராமண முத்லியார் இருந்திருக்கிறார்.கொங்கு நாட்டை பல ஆண்டுகள் சீரும் சிறப்புடன் ஆண்ட கொங்கு சோழ மன்னன் வீரராஜெந்திரன் காலத்தில் வயிரப்பள்ளி என்ற ஊர் "உத்தமச் சோழச் சதுர்வேதி மஙகலம்" என்று ஆழைக்கப்பட்டது.இந்த ஊரில் இருக்கும் சிவன் கோயில் உத்தமசோழீச்சுரம் என்று ஆழைக்கப்பட்டது.
</text>
</para>

<para>
<text>
அந்தக் கோயிலில் பூஜை செய்யும் சிவப்பிராம்மணன் சாலங்காயன கோத்திரத்தைச் சேர்ந்தவன். அவனுடைய பெயரை கல்வெட்டுக் கூறுகிறது.அவனை "உடையான் முதலியான சைவ புரந்தரச் சக்கரவர்த்தி" என்று கூறுகிறது. அவன் ஆவினாசிக் கோயிலுக்கு சந்தியா தீபம் எரிக்க ஒரு கட்டளையை ஏற்படுத்தியிருக்கிறான்.அதற்காக "பழஞ்சலாகை அச்சு" என்னும் காசைக்  கொடுத்திருக்கிறான்.அது ஒரு தங்கக் காசு. அவன் கொடுத்த இந்த தங்கக் காசின் வட்டியிலிருந்து அந்த சந்தியா தீபத்தை எரிக்க வேண்டும். 
</text>
</para>

<para>
<text>
அவனது சைவ புரந்தர சக்கரவர்த்தி என்ற பெயரே அரசனால் குடுக்கப் பட்ட பட்டப் பெயர் என்று தெரியும். .உடையான் முதலி என்பதும் அவ்வாறு கிடைத்த பட்டப்பெயர் தான். ஆதலின் இவரைப் பிராம்மண முதலி எனக் கூறலாம்.இதிலிருந்து முதலி என்பது ஒருவர் பெற்ற பட்டம் என்பதும் காலப்போக்கில் இதுவே ஜாதிப்பெயராக மாறிவிட்டது என்றும் அறியலாம். நம்மிடையே எத்தனையோ ஜாதிகளும் அவற்றில் உட்பிரிவுகளும் உள்ளன இவற்றில் யாரோ ஒருவர் எப்பொழுதோ பெற்ற பட்டப்பெயர் இப்பொழுது ஜாதி உட்பிரிவாக மாறிவிட்டது என்று தெளியலாம். ஆதலின் ஒவ்வொரு ஜாதியைப் பற்றியும் ஆய்வு மேற்கொண்டால் நம்மிடையே உள்ள தவறான கருத்துகள் மறைய ஏதுவாக் அமையும் என்பதில் ஐய்யமில்லை
</text>
</para>

</article>

