﻿<?xml version="1.0" encoding="utf-8"?>
<?xml-stylesheet type="text/xsl" href="article.xsl"?>

<article>
<border>#6B8E23</border>

<title>
<line>வேண்டுகோள் இழத்தல்</line>
</title>

<author>இரா. நாகசாமி</author>
<date>15-Sep-2007</date>

<para>
<text>
கொங்கு நாட்டில் வேண்டுகோள் என்பது ஒரு வகைக் காணிக்கை. 13 ஆம் நூற்றாண்டில் பல ஊர்களை சேர்ந்த சைவப்பிராமணர்கள் ஆதிச்சைவச்சக்கரவர்த்தி என்பவருக்கு இக்காணிக்கயைக் கொடுத்து வந்தனர். நல்லுர்க்கா நாடு, காவடிக்கா நாடு, வாயரைக்கா நாடு, இடிகரை, கூடலூர், கவையன் புத்தூர், துடியலூ, சூரலூர்(சூளூர்), அரிய பிராட்டி நல்லூர் ஆகிய ஊரில் இருந்த சிவப்பிராமணர்களும் இந்த வேண்டுகோள் என்னும் காணிக்கையையும் பரிவட்டம் என்ற கானிக்கையையும், தவநடை, தான்யப்பேறு என்ற காணிக்கைகளையும் ஆதிச்சக்கரவர்த்தி என்பவரிடம் கொடுத்து வந்தனர். இவை அரசனுக்கு செலுத்த வேண்டியவை போலும்.இதனால் பிரம்மணர்கள் சில சலுகைகள் பெற்றனர் போலும். ஆனால் அந்த உரிமைய எதோ காரனத்தால் விற்று விட்டனர். ஆண்டு தோறும் அரசனுக்கு ஓலை எழுதி வந்தவர்களுக்கு அந்த உரிமையை விற்று விட்டனர். இதனால் இவர்களுக்கு வந்து கொண்டிருந்த வரும்படியை இழந்தனர். இதன் காரனமாக கோயில் களுக்கும் வருமபடி குறந்து போயிற்று. பூஜை. சரிவர ந்டை -பறாமல் போயிற்று .இது அரசனுக்கு தெரிந்தது. கோயில்களில் முன் போலவே பூஜை நடை பெற்றால் தான் தனக்கு நன்மை எனக்கருதினான். அதனால் சைவப்பிராமணர்களுக்கே இந்த உரிமையைத் திருப்பிக் கொடுத்துவிட்டான். அதாவது அந்தந்த கோயில் பண்டாரத்துக்கே அந்தப் பணம் சேரும். பணடாரம் என்றால் பொக்கிஷம் என்று பொருள். அதற்கு அரச ஆணை வழங்கினான். அந்த ஆணை கோயம்புத்தூரில் வடமதுரைக்கோயிலில் எழுதப்பட்டு உள்ளது.  நாட்டில் பல கோயில்களுக்கு கொடுக்கபடவேண்டிய காணிக்கை ஆதலின் சம்பந்தப்பட்ட  கோயில்களில் எல்லாம் இக்கல்வெட்டை எழுத வேண்டும் என்றும் ஆணையிட்டான். இந்த ஆணையில் தனக்கு வரவேண்டியதை வேண்டாமென்று கூறியதை கல்வெட்டில் "நமக்கு நன்றாக மூன்றாவது ஆண்டு முதல் இம்முதல்களை இழந்தோம்" என்று கூறியிருக்கிறான். இதை இக்காலத்தில் "relinquishing  ones right" என்று கூறுவர். 
</text>
</para>

<para>
<text>
இதிலிருந்து அரசனுக்கென வருவதை ஆண்டு தோறும் அரசனுக்கு வருவதை அதிகாரிகள் ஓலையில் எழுதி வைப்பது வழக்கம் என்றும் அறிகிறோம்.
</text>
</para>


</article>

