கச்சிப்பேட்டு பெரிய திருக்கற்றளி



திரு நாகசாமி அவர்கள் தொல்பொருள் ஆய்வுத்துறையின் இயக்குனராக இருந்த போது, கல்லூரி ஆசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் தமிழ் நாட்டின் கலை, கலாசாரம், கோயில்கள், கோயில்களின் சிறப்பு, பண்டய எழுத்துக்கள், அவற்றைப் படிக்கும் முறை, பண்டய காசுகளை அறியும் முறை, சிற்பங்களின் தத்துவங்கள் என்று பலவற்றை அறிந்து கொள்ள தெரிந்து கொள்ள பயிற்சிகள் அளித்துள்ளார். பயிற்சியின் ஒரு பகுதியாக கலைச் செல்வங்கள் நிறைந்த இடங்களுக்கு அழைத்து சென்று விளக்கியிருக்கிறார்.

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் (1972 ஆம் ஆண்டு), அத்தகைய பயிற்சி முகாமின் போது, உலகப் புகழ்வாய்ந்த, சோழப் பேரரசன் இராஜராஜனாலேயே பெரிய திருக்கற்றளி என்று அழைக்கப்பட்ட கச்சி கைலாயநாதர் ஆலயத்தில், அக்கோயிலின் சிறப்பை, பெருமையை விளக்கிக் கூறினார். அந்த விளக்கவுரையின் எழுத்து வடிவமே இந்தக் கட்டுரை.

இந்தக் கட்டுரையில் அவருடைய உரையையும் கேட்பதற்கு வசதியாக 1 நிமிடத்திலிருந்து - 2.5 நிமிடம்வரை உள்ள சிறிய பகுதிகளாக தரப்பட்டுள்ளன.

இந்த கட்டுரையை துவங்கும்போது உரையின் முதல் பகுதி கேட்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. கட்டுரையின் மற்ற பகுதிளை கேட்க தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

கட்டுரை