﻿<?xml version="1.0" encoding="utf-8"?>
<?xml-stylesheet type="text/xsl" href="sidiyar.xsl"?>

<document>

<heading>
<title>
<line>சிவஞானசித்தியார்</line>
<line2>சுபக்கம்</line2>
</title>
</heading>

<verse>
<p-title>காப்பு</p-title>
<line>ஒருகோட்ட னிருசெவியன் மும்மதத்த</line>
<line>	னால்வாயைங் கரத்த னாறு</line>
<line>தருகோட்டம் பிறையிதழித் தாழ் சடையான்</line>
<line>	றருமொருவா ரணஹ்த்டின் றாள்க</line>
<line>ளுருகோட்டன் பொடும்வணங்கி யோவாதே</line>
<line>	யிரவுபக லுணர்வோர் சிந்தைத்</line>
<line>திருகோட்டு மயன்றிருமால் செல்வமுமொன்</line>
<line>	றோவென்னச் செய்யுந் தேவே.</line>
</verse>

<verse>
<p-title>பாயிரம்</p-title>
<p-title>மங்கல வாழ்த்து</p-title>
<line>அறுவகைச் சமயத் தோர்க்கு மவ்வவர் பொருளாய் வேறாங்</line>
<line>குறியது வுடைத்தாய் வேதா கமங்களின் குறியி றந்தங்</line>
<line>கறிவினி லருளான் மன்னி யம்மையோ டப்ப னாகிச்</line>
<line>செறிவொழி யாது நின்ற சிவனடி சென்னி வைப்பாம்.</line>
</verse>

<verse>
<p-title>நூல்வழி</p-title>
<line>என்னையிப் பவத்திற் சேரா வகையெடுத் தென்சித் தத்தே</line>
<line>தன்னைவைத் தருளி னாலே தாளிணை தலைமேற் சூட்டு</line>
<line>மின்னமர் பொழில்சூழ்  வெண்ணெய் மேவிவாழ்  மெய்கண்</line>
<line>								டானூல்</line>
<line>சென்னியிற் கொண்டு சைவத் திறத்தினைத் தெரிக்க லுற்றாம்</line>
</verse>

<verse>
<p-title>நுதலியபொருள் முதலியன</p-title>
<line>பண்டைநற் றவத்தாற் றோன்றிப் பரமனைப் பத்தி மண்ணுந்</line>
<line>தொண்டரைத் தானே தூய கதியினிற் றொகுப்பன் மார்க்கர்</line>
<line>கண்டநூ லோதி வீடு காதலிப் பவர்கட் கீசன்</line>
<line>புண்டரி கத்தாள் சேரும் பரிசினைப் புகல லுற்றாம்.</line>
</verse>

<verse>
<p-title>அவையடக்கம்</p-title>
<line>மறையினா லயனான் மாலான் மனத்தினான் வாக்கான் மற்றுங்</line>
<line>குறைவிலா வளவி னாலுங் கூறொணா தாகி நின்ற</line>
<line>விறைவனார் கமல பாத மின்றியா னியம்பு மாசை</line>
<line>நிறையினார் குணத்தோர்க் கெல்லா நகையினை நிறுத்து மன்றே</line>
</verse>

<verse>
<p-title>ஆசங்கை நீக்கல்</p-title>
<line>அருளினா லாக மத்தே யறியலாமளவி னாலுந்</line>
<line>தெருளலாஞ் சிவனை ஞானச் செய்தியாற் சிந்தை யுள்ளே</line>
<line>மருளெலா நீங்கக் கண்டு வாழலாம் பிறவி மாயா</line>
<line>விருளெலா மிரிக்க லாகு மடியரோ டிருக்க லாமே.</line>
</verse>

<verse>
<p-title>அளவையியல்</p-title>
<line>அளவை காண்டல் கருதலுரை யபாவம் பொருளொப்</line>
<line>								பாறென்ப</line>
<line>ரளவை மேலு மொழிபுண்மை யைதி கத்தோ டியல்பெனநான்</line>
<line>களவை காண்ப ரவையிற்றின் மேலு மறைவ ரவையெல்லா</line>
<line>மளவை காண்டல் கருதலுரை யென்றிம் மூன்றி</line>
<line>							னடங்கிடுமே.</line>
</verse>

<verse>
<line>மாசறு காட்சி யையந் திரிவின்றி விகற்ப முன்னா</line>
<line>ஆசற வறிவ தாகு மனுமான மவினா பாவம்</line>
<line>பேசுறு மேதுக் கொண்டு மறைபொருள் பெறுவ தாகுங்</line>
<line>காசறு முரையிம் மானத் தடங்கிடாப் பொருளைக் காட்டும்.</line>
</verse>

<verse>
<line>கண்ட பொருளை யிரட்டுறவே கருத லையந் திரியவே</line>
<line>கொண்ட றிரிவாம் பெயர்சாதி குணமே கன்மம்</line>
<line>						பொருளெனவைந்</line>
<line>துண்ட விகற்ப வுணர்வினுக்குப் பொருளினுண்மை</line>
<line>						மாத்திரத்தின்</line>
<line>விண்ட லில்லா வறிவாகும் விகற்ப மில்லாக் காட்சியே.</line>
</verse>

<verse>
<line>காண்டல் வாயின் மனந்தன்வே தனையோ டியோகக்</line>
<line>							காட்சியென</line>
<line>வீண்டு நான்கா மனுமானந் தனக்கும் பிறர்க்கு</line>
<line>						மென்றிரண்டா</line>
<line>மாண்ட வுரைதந் திரமந்திரத்தோ டுபதே சச்சொ</line>
<line>						லெனமூன்றாம்</line>
<line>பூண்ட வளவைக் கெதிர்புலன்றன் னியல்பு பொதுவென்</line>
<line>							றிரண்டாமே.</line>
</verse>

<verse>
<line>அன்னிய சாதி யுந்தன் சாதியு மகன்று நிற்ற</line>
<line>றன்னியல் பன்னி யத்தைத் தவிர்ந்துதன் சாதிக் கொத்த</line>
<line>றுன்னிய பொதுவி யற்கை சொன்னவிவ் விரண்டி னுள்ளே</line>
<line>மன்னிய பொருள்கள் யாவு மடங்கிடு மான முற்றால்</line>
</verse>

<verse>
<line>உயிரினோ டுணர்வு வாயி லொளியுரு வாதி பற்றிச்</line>
<line>செயிரொடு விகற்ப மின்றித் தெரிவதிந் திரியக் காட்சி</line>
<line>யயர்விலிந் திரிய ஞான மைம்புலன் சார்ந்து யிர்க்கண்</line>
<line>மயர்வற வந்த ஞான மானதக் காண்ட லாமே.</line>
</verse>

<verse>
<line>அருந்தின்பத் துன்ப முள்ளத் தறிவினுக் கராக மாதி</line>
<line>தருந்தனவே தனையாங் காட்சி சமாதியான் மலங்கள்வாட்டிப்</line>
<line>பொருந்திய தேச கால வியல்பகல் பொருள்க ளெல்லா</line>
<line>மிருந்துணர் கின்ற ஞானமி யோகநற் காண்ட லாமே.</line>
</verse>

<verse>
<line>பக்க மூன்றின் மூன்றேது வுடைய பொருளைப் பார்த்துணரத்</line>
<line>தக்க ஞானந் தன்பொருட்டாம் பிறர்தம் பொருட்டா</line>
<line>							மனுமானந்</line>
<line>தொக்க விவற்றாற் பிறர்தெளியச் சொல்ல லாகு மச்சொல்லு</line>
<line>மிக்க வன்னு வயத்தினொடு வெதிரே கச்சொல்</line>
<line>							லெனவிரண்டாம்.</line>
</verse>

<verse>
<line>மூன்று பக்கம் பக்கநிகர் பக்க நிகரில் பக்கமெனத்</line>
<line>தோன்றும் பக்கந் துணிபொருளுக் கிடமா முவமை நிகர்பக்க</line>
<line>மான்ற பொருள்சென் றடையாத விடமா நிகரில் பக்கமுத</line>
<line>லென்ற விரண்டும் பொருளுண்மைக் கிடமா மொன்று</line>
<line>							பொருளின்றாம்.</line>
</verse>

<verse>
<line>ஏது மூன்றா மியல்புகா ரியத்தோ டநுப லத்தியிவை</line>
<line>யோதி னியல்பு மரமரத்தைக் காட்ட லுறுகா ரியம்புகைதன்</line>
<line>னாதி யாய வனல்காட்ட லாகு மநுப லத்தியது</line>
<line>சீதமின்மை பனியின்மை காட்டல் போலுஞ் செப்பிடினே.</line>
</verse>

<verse>
<line>புகையா லனலுண் டடுக்களைபோ லென்னப் புகற லந்நுவயம்</line>
<line>வகையா மனலி லாவிடத்துப் புகையின் றாகு மலரினொடு</line>
<line>முகையார் நீரிற் போலென்று மொழிதல் வெதிரே</line>
<line>								கச்சொலிவை</line>
<line>தொகையா ருறுப்பைந் தொடுங்கூடச் சொல்லு வாரு</line>
<line>						முளர்துணிந்தே.</line>
</verse>

<verse>
<line>போது நாற்றத் தாலறிதல் பூர்வக் காட்சி யனுமான</line>
<line>மோது முரையா லறிவினள வுணர்தல் கருத லனுமான</line>
<line>நீதி யான்முற் கன்மபல நிகழ் வ திப்போ திச்செய்தி</line>
<line>யாதி யாக வரும்பயனென் றறித லுரையா லனுமானம்.</line>
</verse>

<verse>
<line>அனாதியே யமல னாய வறிவனூ லாக மந்தான்</line>
<line>பினாதிமா றின்றிப் பேண றந்திர மந்தி ரங்கண்</line>
<line>மனாதிக ளடக்கித் தெய்வம் வழிபடும் வாய்மை யாகுந்</line>
<line>தனாதியீ றிலாதான் றன்மை யுணர்த்துத லுபதே சந்தான்.</line>
</verse>

<verse>
<line>ஈண்டு பக்கப் போலிநான் கேதுப் போலி யொருமூன்றாய்</line>
<line>வேண்டு மெழுமூன் றாகும்விளங் குவமைப் போலி</line>
<line>							யீரொண்பான்</line>
<line>காண்டுந் தோல்வித் தானமிரண்டிருபத் திரண்டாங்</line>
<line>							கருதிலிவை</line>
<line>யாண்டு மொழிவ ரவையெல்லா மளக்கி லறுபத்</line>
<line>							தைந்தாகும்.</line>
</verse>

<verse>

</verse>

<verse>

</verse>

<verse>
<p-title>பிரமாணவியல்</p-title>
<p-title>முதற்சூத்திரம்</p-title>
<line>ஒருவனோ டொருத்தி யொன்றென் றுரைத்திடு முலக</line>
<line>வருமுரை வந்து நின்று போவது மாத லாலே [மெல்லாம்</line>
<line>தருபவ னொருவன் வேண்டுந் தான்முத லீறு மாகி</line>
<line>மருவிடு மநாதி முத்த சித்துரு மன்னி நின்றே.</line>
</verse>

<verse>

</verse>
<p-title>முதலதிகரணம்</p-title>
<verse>
<line>உதிப்பது மீறு முண்டென் றுரைப்பதிங் கென்னை முன்னோர்</line>
<line>மதித்துல கநாதி யாக மன்னிய தென்ப ரென்னி</line>
<line>னிதற்குயா னநுமா னாதி யெடேனிப்பூ தாதி யெல்லாம்</line>
<line>விதிப்படி தோற்றி மாயக் காணலான் மேதி னிக்கே.</line>
</verse>

<verse>
<line>இயல்புகாண் டோற்றி மாய்கை யென்றிடி னியல்பி னுக்குச்</line>
<line>செயலதின் றியல்ப்பு செய்தி செய்தியே லியல்ப தின்றா</line>
<line>மியல்பதாம் பூதந் தானே யியற்றிடுஞ் செய்தி யென்னிற்</line>
<line>செயல்செய்வா னொருவன் வேண்டுஞ் செயற்படு</line>
<line>							மசேதனத்தால்.</line>
</verse>

<verse>
<line>நிலம்புன லனல்கால் காண நிறுத்திடு மழிக்கு மாக்கும்</line>
<line>பலந்தரு மொருவ னிங்குப் பண்ணிட வேண்டா வென்னி</line>
<line>னிலங்கிய தோற்ற நிற்ற லீறிவை யிசைத லாலே</line>
<line>நலங்கிளர் தோற்ற நாசந் தனக்கிலா நாதன் வேண்டும்.</line>
</verse>

<verse>
<line>சார்பினிற் றோன்று மெல்லாந் தருபவ னில்லை யென்னிற்</line>
<line>றேரினில் லதற்கோ தோற்றா முள்ளதற் கோநீ செப்பா</line>
<line>யோரினில் லதுவுந் தோன்றா துள்ளதே லுதிக்க வேண்டா</line>
<line>சோர்விலா திரண்டு மின்றி நிற்பது தோன்று மன்றே.</line>
</verse>

<verse>
<line>உள்ளது மிலது மின்றி நின்றதொன் றுளதே லுண்டா</line>
<line>மில்லதே லில்லை யாகுந் தோற்றமு மிசையா தாகு</line>
<line>முள்ளகா ரணத்தி லுண்டாங் காரிய முதிக்கு மண்ணி</line>
<line>லில்லதாம் படங்க டாதி யெழிறரு மியற்று வானால்.</line>
</verse>

<verse>
<line>ஒருபொரு ளொருவ னின்றி யுளதில தாகு மென்னிற்</line>
<line>றருபொரு ளுண்டே லின்றாந் தன்மையின் றின்றேலுண்</line>
<line>வருதலின் றிலது கார்ய முதலுள தாகு மென்னிற்	[டாய்</line>
<line>கருதுகா ரியமு முண்டாய்த் தோற்றமுங் கருத்தா வாலாம்.</line>
</verse>

<verse>
<line>காயத்தி னழிவு தோற்றங் கண்டன முலகிற் காணா</line>
<line>நீயித்தை யுரைத்த வாறிங் கென்னெனி னிகழ் த்து முண்மை</line>
<line>மாயத்த வுலகம் பூநீர் தீவளி வான மாதி</line>
<line>யாயித்தா னொன்றி னொன்று தோன்றிநின் றழித லாலே.</line>
</verse>

<verse>
<line>ஓரிட மழியப் பின்னு மோரிட நிற்கு மொக்கப்</line>
<line>பாரிட மழிவ தின்றா மென்றிடிற் பயில்வித் தெல்லாங்</line>
<line>காரிட மதனிற் காட்டு மங்குரங் கழியும் வேனிற்</line>
<line>சீருடைத் துலகு காலஞ் சேர்ந்திடப் பெயர்ந்து செல்லும்.</line>
</verse>

<verse>
<line>காலமே கடவு ளாகக் கண்டனந் தொழிலுக் கென்னிற்</line>
<line>காலமோ வறிவின் றாகு மாயினுங் காரி யங்கள்</line>
<line>காலமே தரவே காண்டுங் காரணன் விதியி னுக்குக்</line>
<line>காலமுங் கடவு ளேவ லாற்றுணைக் கார ணங்காண்.</line>
</verse>

<verse>
<line>அழிந்தபி னணுக்க டாமே யகிலமாய் வந்து நின்று</line>
<line>கழிந்திடுங் கன்மத் தென்னிற் கன்மமு மணுவுங் கூட</line>
<line>மொழிந்திடுஞ் சடமே யாகி முடிமுதலான் முடியா செய்தி</line>
<line>யொழிந்திடு மணுரு பங்க ளூலகெலா மொடுங்கு மன்றே.</line>
</verse>

<verse>
<line>காரண வணுக்கள் கெட்டாற் காரிய வுலகின் றென்னிற்</line>
<line>காரண மாயை யாகக் காரியங் காண லாகுங்</line>
<line>காரண மாயை யென்னை காண்பதிங் கணுவே யென்னிற்</line>
<line>காரண மாயை யேகாண் காரிய மணுவிற் கண்டால்.</line>
</verse>

<verse>
<line>காரிய மென்ப தென்னை காரண வணுவை யென்னிற்</line>
<line>காரிய மவய வத்தாற் கண்டனங் கடாதி போலக்</line>
<line>காரிய வுருவ மெல்லா மழிதருங் கார ணத்தாற்</line>
<line>காரிய வுறுப்பின் மாயை தருமெனக் கருதி டாயே.</line>
</verse>

<verse>
<line>தோற்றமு நிலையு மீறு மாயையின் றொழில தென்றே</line>
<line>சாற்றிடு முலகம் வித்துச் சாகாதி யணுக்க ளாக</line>
<line>ஏற்றதே லீண்டு நிற்கு மில்லதே லியைவ தின்றா</line>
<line>மாற்றநீ மறந்தா யித்தான் மாயையை மதித்தி டாயே.</line>
</verse>

<verse>
<line>மாயையி னுள்ள வஞ்சம் வருவது போவ தாகு</line>
<line>நீயதிங் கில்லை யென்னி னிகழ் ந்திடு முயலிற் கோடு</line>
<line>போயுகு மிலைக ளெல்லா மரங்களிற் புக்குப் போதி</line>
<line>னாயிடு மதுவு மென்னிற் காரணங் கிடக்க வாமே.</line>
</verse>

<verse>
<line>கருதுகா ரணமுண் டாகக் காரிய முள்ள தாகி</line>
<line>வருதலா லநாதி வைய மற்றொரு கடவு ளித்தைத்</line>
<line>தருதலா லாதி யாகச் சாற்றலு மாகு மாயைக்</line>
<line>கொருவனா ரென்னிங் கென்னி னுள்ளவா றுரைப்பக் கேணீ.</line>
</verse>

<verse>
<line>புத்திமற் காரி யத்தாற் பூதாதி புருடன் றானு</line>
<line>மத்தனா கரணம் பெற்றா லறிதலா லவற்றை மாயை</line>
<line>யுய்த்திடு மதனான் மாயைக் குணர்வொன்று மில்லை யென்றே</line>
<line>வைத்திடு மதனா லெல்லாம் வருவிப்பா னொருவன் வேண்டும்</line>
</verse>

<verse>
<line>காரிய கார ணங்கண் முதறுணை நிமித்தங் கண்டாம்</line>
<line>பாரின்மண் டிரிகை பண்ணு மவன்முத றுணைநி மித்தந்</line>
<line>தேரின்மண் மாயை யாகத் திரிகைதன் சத்தி யாக</line>
<line>ஆரியன் குலால னாய்நின் றாக்குவ னகில மெல்லாம்.</line>
</verse>

<verse>
<line>விந்துவின் மாயை யாகி மாயையி னவ்வி யத்தம்</line>
<line>வந்திடும் விந்துத் தன்பால் வைகரி யாதி மாயை</line>
<line>முந்திடு மாரக மாதி முக்குண மாதி மூலந்</line>
<line>தந்திடுஞ் சிவன வன்றன் சந்நிதி தன்னி னின்றே.</line>
</verse>

<verse>
<line>வைகரி செவியிற் கேட்ப தாயத்த வசன மாகி</line>
<line>மெய்தரு முதான வாயு மேவிட விளைந்த வன்னம்</line>
<line>பொய்யற வடைவு டைத்தாய்ப் புத்திகா ரணம தாகி</line>
<line>யையமில் பிராண வாயு வடைந்தெழுந் தடைவு டைத்தாம்.</line>
</verse>

<verse>
<line>உள்ளுண ரோசை யாகிச் செவியினி லுறுதல் செய்யா</line>
<line>தொல்லிய பிராண வாயு விருத்தியை யுடைய தன்றித்</line>
<line>தெள்ளிய வக்க ரங்கள் சிந்திடுஞ் செயல தின்றி</line>
<line>மெள்ளவே யெழுவ தாகு மத்திமை வேற தாயே.</line>
</verse>

<verse>
<line>வேற்றுமைப் பட்ட வன்னம் வெவ்வேறு விபாக மாகித்</line>
<line>தோற்றுத லடைவோ டுக்கிச் சொயம்பிர காச மாகிச்</line>
<line>சாற்றிடு மயிலி னண்டந் தரித்திடுஞ் சலமே போன்றங்</line>
<line>காற்றவே யுடைய தாகிப் பைசந்தி யமர்ந்து நிற்கும்.</line>
</verse>

<verse>
<line>சூக்கும் வாக்க துள்ளோர் சோதியா யழிவ தின்றி</line>
<line>யாக்கிடு மதிகா ரத்திற் கழிவினை தன்னைக் கண்டா</line>
<line>னீக்கமி லறிவா னந்த முதன்மைநித் தியமு டைத்தாய்ப்</line>
<line>போக்கொடு வரவி ளைப்பும் விகாரமும் புருட னின்றாம்.</line>
</verse>

<verse>
<line>நிகழ் ந்திடும் வாக்கு நான்கு நிவிர்த்தாதி கலையைப் பற்றித்</line>
<line>திகழ் ந்திடு மஞ்ச தாகச் செயல்பரி ணாம மன்று</line>
<line>புகழ் ந்திடும் விருத்தி யாகும் படங்குடி லானாற் போல</line>
<line>மகிழ் ந்திடும் பிரம மன்று மாமாயை யென்பர் நல்லோர்.</line>
</verse>

<verse>
<line>வித்தைகள் வித்தை ஈசர் சதாசிவ ரென்றி வர்க்கு</line>
<line>வைத்துறும் பதங்கள் வன்னம் புவனங்கண் மந்தி ரங்க</line>
<line>டத்துவஞ் சரீரம் போகங் கரணங்க டாமெ லாமு</line>
<line>முய்த்திடும் வைந்த வந்தா னுபாதான மாகி நின்றே.</line>
</verse>

<verse>
<line>மூவகை யணுக்க ளுக்கு முறைமையின் விந்து ஞான</line>
<line>மேவின தில்லை யாகில் விளங்கிய ஞான மின்றா</line>
<line>மோவிட விந்து ஞான முதிப்பதோர் ஞான முண்டேற்</line>
<line>சேவுயர் கொடியி னான்றன் சேவடி சேர லாமே.</line>
</verse>

<verse>
<line>அருவினி லுருவந் தோன்றி யங்காங்கி பாவ மாகி</line>
<line>யுருவினி லுருவ மாயே யுதித்திடு முலக மெல்லாம்</line>
<line>பெருகிடுஞ் சுருங்கும் பேதா பேதமோ டபேத மாகு</line>
<line>மொருவனே யெல்லா மாகி யல்லனா யுடனு மாவன்.</line>
</verse>

<verse>
<line>அருவுரு வீனா தாகும் விகாரமு மவிகா ரத்தின்</line>
<line>வருவது மில்லை யென்னின் வான்வளி யாதி பூதந்</line>
<line>தருவது தன்னின் மேக சலனசத் தங்க ளோடு</line>
<line>முருவமின் னுருமே றெல்லா முதித்திடு முணர்ந்து கொள்ளே</line>
</verse>

<verse>

</verse>

<verse>

</verse>

<verse>

</verse>

<verse>

</verse>

<verse>
<p-title>இரண்டாமதிகரணம்</p-title>

<line>மண்ணினிற் கடாதி யெல்லாம் வருவது குலால னாலே</line>
<line>யெண்ணிய வுருவ மெல்லா மியற்றுவ னீசன் றானுங்</line>
<line>கண்ணுகா ரியங்க ளெல்லாங் காரண மதனிற் காண்பன்</line>
<line>பண்ணுவ தெங்கே நின்றிங் கென்றிடிற் பகரக் கேணீ.</line>
</verse>

<verse>
<line>சீலமோ வுலகம் போலத் தெரிப்பரி ததனா னிற்குங்</line>
<line>கோலமு மறிவா ரில்லை யாயினுங் கூறக் கேணீ</line>
<line>ஞாலமே ழினையுந் தந்து நிறுத்திப்பின் னாசம் பண்ணுங்</line>
<line>காலமே போலக் கொண்ணீ நிலைசெயல் கடவுட் கண்ணே.</line>
</verse>

<verse>
<line>கற்றநூற் பொருளுஞ் சொல்லுங் கருத்தினி லடங்கித்</line>
<line>								தோன்றும்</line>
<line>பெற்றியுஞ் சாக்கி ராதியுயிரினிற் பிறந்தொ டுக்க</line>
<line>முற்றதும் போல வெல்லா வுலகமு முதித்தொ டுங்கப்</line>
<line>பற்றொடு பற்ற தின்றி நின்றனன் பரனு மன்றே.</line>
</verse>

<verse>
<line>உயிரவை யொடுங்கிப் பின்னு முதிப்பதெ னரன்பா லென்னி</line>
<line>செயிருறு மலத்தி னாகுஞ் சிதைந்தே தென்னிற் சித்தத் [ற்</line>
<line>தயர்வொழி காரி யங்க ளழியுங்கா ரணங்கி டக்கும்</line>
<line>பயிறரு காரி யம்பின் பண்டுபோற் பண்ணு மீசன்</line>
</verse>

<verse>
<line>தோற்றுவித் தளித்துப் பின்னுந் துடைத்தரு டொழில்கண்</line>
<line>								மூன்றும்</line>
<line>போற்றவே யுடைய னீசன் புகுந்தது விகார மென்னிற்</line>
<line>சாற்றிய கதிரோ னிற்கத் தாமரை யலருங் காந்தங்</line>
<line>காற்றிடுங் கனலை நீருங் கரந்திடுங் காசினிக்கே.</line>
</verse>

<verse>
<line>உரைத்தவித் தொழில்கண் மூன்று மூவருக் குலக மோத</line>
<line>வரைத்தொரு வனுக்கே யாக்கி வைத்ததிங் கென்னை</line>
<line>								யென்னின்</line>
<line>விரைக்கம லத்தோன் மாலு மேவலான் மேவி னோர்கள்</line>
<line>புரைத்ததி காரசத்தி புண்ணிய நண்ண லாலே.</line>
</verse>

<verse>
<line>இறுதியாங் காலந் தன்னி லொருவனே யிருவ ருந்தம்</line>
<line>முறுதியி னின்றா ரென்னி னிறுதிதா னுண்டா காதா</line>
<line>மறுதியி லரனே யெல்லா மழித்தலா லவனா லின்னும்</line>
<line>பெறுதுநா மாக்க நோக்கம் பேரதி கரணத் தாலே</line>
</verse>

<verse>
<line>சொன்னவித் தொழில்க ளென்ன காரணந் தோற்ற</line>
<line>								வென்னின்</line>
<line>முன்னவன் விளையாட் டென்று மொழிதலு மாமு யிர்க்கு</line>
<line>மன்னிய புத்தி முத்தி வழங்கவு மருளான் முன்னே</line>
<line>துன்னிய மலங்க ளெல்லாந் துடைப்பதுஞ் சொல்ல லாமே.</line>
</verse>

<verse>
<line>அழிப்பிளைப் பாற்ற லாக்க மவ்வவர் கன்ம மெல்லாங்</line>
<line>கழித்திட னுகரச் செய்தல் காப்பது கன்ம வொப்பிற்</line>
<line>றெழித்திடன் மலங்க ளெல்லா மறைப்பருட் செய்தி தானும்</line>
<line>பழிப்பொழி பந்தம் வீடு பார்த்திடி னருளே யெல்லாம்</line>
</verse>

<verse>
<line>அருவமோ வுருவா ரூப மானதோ வன்றி நின்ற</line>
<line>வுருவமோ வுரைக்குங் கர்த்தா வடிவெனக் குணர்த்திங்</line>
<line>னருவமு முருவா ரூப மானது மன்றி நின்ற [கென்னி</line>
<line>வுருவமு மூன்றுஞ் சொன்ன வொருவனுக் குள்ள வாமே.</line>
</verse>

<verse>
<line>நண்ணிடு முருவ மென்னி னமக்குள வுருவம் போலப்</line>
<line>பண்ணிட வொருவன் வேண்டு மிச்சையேற் பலரு மிச்சை</line>
<line>கண்ணிய வுருவங் கொள்ளேம் யாம்பெருங் கடவு டானு</line>
<line>மெண்ணிய யோக சித்தர் போலுரு விசைப்பன் காணே.</line>
</verse>

<verse>
<line>வித்தக யோக சித்தர் வேண்டுருக் கொள்ளு மாபோ</line>
<line>லுத்தமன் கொள்வ னென்னி னவர்களி லொருவ னாவ</line>
<line>னத்தகை யவர்க ளெல்லா மாக்குவ தருளா லாங்கு</line>
<line>வைத்தது மாயை யென்னின் வடிவெலா மாயை யாமே.</line>
</verse>

<verse>
<line>மாயைதான் மலத்தைப் பற்றி வருவதோர் வடிவ மாகு</line>
<line>மாயவா ணவம கன்ற வறிவொடு தொழிலை யார்க்கு</line>
<line>நாயக னெல்லா ஞானத் தொழின்முத னண்ண லாலே</line>
<line>காயமோ மாயை யன்று காண்பது சத்தி தன்னால்.</line>
</verse>

<verse>
<line>சத்தியே வடிவென் றாலுந் தான்பரி ணாம மாகு</line>
<line>நித்தமோ வழியு மத்தா னின்மல னருவே யென்னி</line>
<line>லத்துவா மார்க்கத் துள்ளா னலனிவ னருமை தன்னைப்</line>
<line>புத்திதா னுடையை போல விருந்தனை புகலக் கேணீ.</line>
</verse>

<verse>
<line>உலகினிற் பதார்த்த மெல்லா முருவமோ டருவ மாகி</line>
<line>நிலவிடு மொன்றொன் றாகா நின்றவந் நிலையே போல</line>
<line>அலகிலா வறிவன் றானு மருவமே யென்னி லாய்ந்து</line>
<line>குலவிய பதார்த்தத் தொன்றாய்க் கூடுவன் குறித்தி டாயே.</line>
</verse>

<verse>
<line>பந்தமும் வீடு மாய பதபதார்த் தங்க ளல்லா</line>
<line>னந்தமு மாதி யில்லா னளப்பில னாத லாலே</line>
<line>யெந்தைதா னின்ன னென்று மின்னதா மின்ன தாகி</line>
<line>வந்திடா னென்றுஞ் சொல்ல வழக்கொடு மாற்ற மின்றே.</line>
</verse>

<verse>
<line>குறித்ததொன் றாக மாட்டாக் குறைவில னாத லானு</line>
<line>நெறிப்பட நிறைந்த ஞானத் தொழிலுடை நிலைமை யானும்</line>
<line>வெறுப்பொடு விருப்புத் தன்பான் மேவுத லிலாமை யானு</line>
<line>நிறுத்திடு நினைந்த மேனி நின்மல னருளி னாலே.</line>
</verse>

<verse>
<line>ஆரண மாக மங்க ளருளினா லுருவு கொண்டு</line>
<line>காரண னருளா னாகிற் கதிப்பவ ரில்லை யாகு</line>
<line>நாரணன் முதலா யுள்ள சுரர்நரர் நாகர்க் கெல்லாஞ்</line>
<line>சீரணி குருசந் தானச் செய்தியுஞ் சென்றி டாவே.</line>
</verse>

<verse>
<line>உருவருள் குணங்க ளோடு முணர்வரு ளுருவிற் றோன்றுங்</line>
<line>கருமழ மருள ரன்றன் கரசர ணாதி சாங்கந்</line>
<line>தருமரு ளுபாங்க மெல்லாந் தானரு டனக்கொன் றின்றி</line>
<line>யருளுரு வுயிருக் கென்றே யாக்கின னசிந்த னன்றே</line>
</verse>

<verse>
<line>உலகினை யிறந்து நின்ற தரனுரு வென்ப தோரா</line>
<line>ருலகவ னுருவிற் றோன்றி யொடுங்கிடு மென்று மோரா</line>
<line>ருலகினுக் குயிரு மாகி யுலகுமாய் நின்ற தோரா</line>
<line>ருலகினி லொருவ னென்ப ருருவினை யுணரா ரெல்லாம்.</line>
</verse>

<verse>
<line>தேவரி னொருவ னென்பர் திருவுருச் சிவனைத் தேவர்</line>
<line>மூவராய் நின்ற தோரார் முதலுருப் பாதி மாத</line>
<line>ராவது முணரா ராதி யரியயற் கறிய வொண்ணா</line>
<line>மேவுரு நிலையு மோரா ரவனுரு விளைவு மோரார்.</line>
</verse>

<verse>
<line>போகியா யிருந் துயிர்க்குப் போகத்தைப் புரித லோரார்</line>
<line>யோகியா யோக முத்தி யுதவுத லதுவு மோரார்</line>
<line>வேகியா னாற்போற் செய்த வினையினை வீட்ட லோரா</line>
<line>ரூகியா மூட ரெல்லா மும்பரி னொருவ னென்பர்.</line>
</verse>

<verse>
<line>ஒன்றொடொன் றெவ்வா வேட மொருவனே தரித்துக்</line>
<line>நின்றலா லுலக நீங்கி நின்றன னென்று மோரா		[கொண்டு</line>
<line>ரன்றியவ் வேட மெல்லா மருள்புரி தொழிலென் றோரார்</line>
<line>கொன்றது வினையைக் கொன்று நின்றவக் குணமென்</line>
<line>								[றோரார்.</line>
</verse>

<verse>
<line>நாயகன் கண்ண யப்பா னாயகி புதைப்ப வெங்கும்</line>
<line>பாயிரு ளாகி மூடப் பரிந்துல கினுக்கு நெற்றித்</line>
<line>தூயநேத் திரத்தி னாலே சுடரொளி கொடுத்த பண்பிற்</line>
<line>றேயமா ரொளிக ளெல்லாஞ் சிவனுருத் தேச தென்னார்</line>
</verse>

<verse>
<line>கண்ணுதல் யோகி ருப்பக் காமனின் றிடவேட்கைக்கு</line>
<line>விண்ணுறு தேவ ராதி மெலிந்தமை யோரார் மாறா</line>
<line>னெண்ணிவேண் மதனை யேவ வெரிவிழித் திமவான் பெற்ற</line>
<line>பெண்ணினைப் புணர்ந்து யிர்க்குப் பேரின்ப மளித்த</line>
<line>							[தோரார்</line>
</verse>

<verse>
<line>படைப்பாதித் தொழிலும் பத்தர்க் கருளும்பா வனையு நூலு</line>
<line>மிடப்பாக மாத ராளோ டியைந்துயிர்க் கின்ப மென்று</line>
<line>மடைப்பானா மதுவு முத்தி யளித்திடும் யோகும் பாசந்</line>
<line>துடைப்பானாந் தொழிலு மேனி தொடக்கானேற் சொல்லொ		</line>
<line>									ணாதே.</line>
</verse>

<verse>
<line>உருமேனி தரித்துக் கொண்ட தென்றலு முருவி றந்த</line>
<line>வருமேனி யதுவுங் கண்டோ மருவுரு வான போது</line>
<line>திருமேனி யுபயம் பெற்றோஞ் செப்பிய மூன்று நந்தங்</line>
<line>கருமேனி கழிக்க வந்த கருணையின் வடிவு காணே.</line>
</verse>

<verse>
<line>அத்துவா மூர்த்தி யாக வறைகுவ தென்னை யென்னி</line>
<line>னித்தனாய் நிறைந்த வற்றி னீங்கிடா நிலைமை யானுஞ்</line>
<line>சித்துட னசித்திற் கெல்லாஞ் சேட்டித னாத லானும்</line>
<line>வைத்தவா மத்து வாவும் வடிவென மறைக ளெல்லாம்.</line>
</verse>

<verse>
<line>மந்திர மத்து வாவின் மிகுத்தொரு வடிவ மாகத்</line>
<line>தந்ததெ னரனுக் கென்னிற் சகத்தினுக் குபாதா னங்கள்</line>
<line>விந்துமோ கினிமான் மூன்றா மிவற்றின்மே லாகி விந்துச்</line>
<line>சிந்தையா ரதீத மான சிவசத்தி சேர்ந்து நிற்கும்.</line>
</verse>

<verse>
<line>சுத்தமாம் விந்துத் தன்னிற் றோன்றிய வாத லானுஞ்</line>
<line>சத்திதான் பிரேரித் துப்பின் றானதிட் டித்துக் கொண்டே</line>
<line>யத்தினாற் புத்தி முத்தி யளித்தலா லரனுக் கென்றே</line>
<line>வைத்தவா மந்தி ரங்கள் வடிவென மறைக ளெல்லாம்.</line>
</verse>

<verse>
<line>மந்திர மதனிற் பஞ்ச மந்திரம் வடிவ மாகத்</line>
<line>தந்திரஞ் சொன்ன வாறிங் கென்னெனிற் சாற்றக் கேணீ</line>
<line>முந்திய தோற்றத் தாலு மந்திர மூலத் தாலு</line>
<line>மந்தமில் சத்தி யாதிக் கிசைத்தலு மாகு மன்றே.</line>
</verse>

<verse>

</verse>

<verse>
<p-title>மூன்றாமதிகரணம்</p-title>
<line>அயன்றனை யாதி யாக வரனுரு வென்ப தென்னை</line>
<line>பயந்திடுஞ் சத்தி யாதி பதிதலாற் படைப்பு மூல</line>
<line>முயன்றன ரிவரே யாயின் முன்னவ னென்னை முற்று</line>
<line>நயந்திடு மவனி வர்க்கு நண்ணுவ தொரோவொன் றாமே.</line>
</verse>

<verse>
<line>சத்திதான் பலவோ வென்னிற் றானொன்றே யநேக மாக</line>
<line>வைத்திடுங் காரி யத்தான் மந்திரி யாதிக் கெல்லா</line>
<line>முய்த்திடு மொருவன் சத்தி போலர னுடைய தாகிப்</line>
<line>புத்திமுத் திகளை யெல்லாம் புரிந்தவ னினைந்த வாறாம்.</line>
</verse>

<verse>
<line>சத்திதன் வடிவே தென்னிற் றடையிலா ஞான மாகு</line>
<line>முய்த்திடு மிச்சை செய்தி யிவைஞானத் துளவோ வென்னி</line>
<line>னெத்திற ஞானமுள்ள தத்திற மிச்சை செய்தி</line>
<line>வைத்தலான் மறைப்பின் ஞானான் மருவிடுங் கிரியை</line>
<line>							[யெல்லாம்</line>
</verse>

<verse>
<line>ஒன்றதா யிச்சா ஞானக் கிரியையென் றொருமூன் றாகி</line>
<line>நின்றிடுஞ் சத்தி யிச்சை யுயிர்க்கரு ணேச மாகு</line>
<line>நன்றெலா ஞான சத்தி யானயந் தறிவ னாத</line>
<line>னன்றருட் கிரியை தன்னா லாக்குவ னகில மெல்லாம்.</line>
</verse>

<verse>
<line>சீவனு மிச்சா ஞானக் கிரியையாற் சிவனை யொப்ப</line>
<line>னாவனென் றிடின நாதி மலமிவற் றினைம றைக்குங்</line>
<line>காவல னிவன்செய் கன்மத் தளவினிற் கொடுப்பக் காண்பன்</line>
<line>பாவியாம் புத்தி முத்திப் பயன்கொளும் பண்பிற் றாகும்.</line>
</verse>

<verse>
<line>ஞானமே யான போது சிவன்றொழின் ஞான மொக்கி</line>
<line>னீனமில் சதாசி வன்பே ரீசனாந் தொழில தேறி</line>
<line>னூனமேற் கிரியை வித்தை யுருத்திர னிலய போக</line>
<line>மானபே ரதிகார ரத்தோ டதிகர ணத்த னாமே.</line>
</verse>

<verse>
<line>வித்தையோ டீசர் சாதாக் கியஞ்சத்தி சிவங்க ளைந்துஞ்</line>
<line>சுத்ததத் துவஞ்சி வன்றன் சுதந்திர வடிவ மாகு</line>
<line>நித்தமென் றுரைப்பர் கால நீங்கிய நிலைமை யாலே</line>
<line>வைத்திலர் முற்பிற் பாடு வருவித்தார் கருமத் தாலே.</line>
</verse>

<verse>
<line>ஒருவனே யிராவ ணாதி பாவக முற்றாற் போலத்</line>
<line>தருவனிவ் வுருவ மெல்லாந் தன்மையுந் திரியா னாகும்</line>
<line>வரும்வடி வெல்லாஞ் சத்தி சத்திதான் மரமுங் காழ் ப்பு</line>
<line>மிருமையும் போல மன்னிச் சிவத்தினோ டியைந்து நிற்கும்.</line>
</verse>

<verse>
<line>பொன்மைநீ லாதி வன்னம் பொருந்திடப் பளிங்க வற்றின்</line>
<line>றன்மையாய் நிற்கு மாபோற் சத்திதன் பேத மெல்லா</line>
<line>நின்மலன் றானாத் தோன்றி நிலைமையொன் றாயே நிற்பன்</line>
<line>முன்னருட் சத்தி தன்பான் முகிழ் க்குந்தான் முளையா னன்றே</line>
</verse>

<verse>
<line>சத்தியுஞ் சிவமு மாய தன்மையிவ் வுலக மெல்லா</line>
<line>மொத்தொவ்வா வாணும் பெண்ணு முணர்குண குணியுமாகி</line>
<line>வைத்தன னவளால் வந்த வாக்கமிவ் வாழ் க்கை யெல்லா</line>
<line>மித்தையு மறியார் பீட லிங்கத்தி னியல்பு மோரார்.</line>
</verse>

<verse>
<line>சிவனரு வுருவு மல்லன் சித்தினோ டசித்து மல்லன்</line>
<line>பவமுதற் றொழில்க ளொன்றும் பண்ணிடு வானுமல்லன்</line>
<line>றவமுதலி யோக போகந் தரிப்பவ னல்லன் றானே</line>
<line>யிவைபெற வியைந்து மொன்று மியைந்திடா வியல்பி னானே</line>
</verse>

<verse>
<p-title>இரண்டாஞ் சூத்திரம்</p-title>

<line>உலகெலா மாகி வேறா யுடனுமா யொளியா யோங்கி</line>
<line>யலகிலா வுயிர்கள் கன்மத் தாணையி னமர்ந்து செல்லத்</line>
<line>தலைவனா யிவற்றின் றன்மை தனக்கெய்த லின்றித் தானே</line>
<line>நிலவுசீ ரமலனாகி நின்றன னீங்கா தெங்கும்.</line>
</verse>

<verse>
<p-title>முதலதிகரணம்</p-title>

<line>ஒன்றென மறைக ளெல்லா முரைத்திட வுயிர்க ளொன்றி</line>
<line>நின்றன னென்று பன்மை நிகழ் த்துவ தென்னை யென்னி</line>
<line>னன்றவை பதிதா னொன்றென் றறையும் அக்கரங்க டோறுஞ்</line>
<line>சென்றிடு மகரம் போல நின்றனன் சிவனுஞ் சேர்ந்தே.</line>
</verse>

<verse>
<line>உருவொடு கருவி யெல்லா முயிர்கொடு நின்று வேறாய்</line>
<line>வருவது போல வீச னுயிர்களின் மருவி வாழ் வன்</line>
<line>றருமுயி ரவனை யாகா வுயிரவை தானு மாகான்</line>
<line>வருபவ னிவைதா னாயும் வேறுமாய் மன்னி நின்றே.</line>
</verse>

<verse>
<p-title>இரண்டாமதிகரணம்</p-title>

<line>இருவினை யின்பத் துன்பத் திவ்வுயிர் பிறந்தி றந்து</line>
<line>வருவது போவ தாகு மன்னிய வினைப்ப யன்க</line>
<line>டருமரன் றரணி யோடு தராபதி போலத் தாமே</line>
<line>மருவிடா வடிவுங் கன்ம பலன்களு மறுமைக் கண்ணே.</line>
</verse>

<verse>
<line>இருவினை யென்னை யின்பத் துன்பங்க ளியல்ப தென்னி</line>
<line>னொருதன்மை யியல்புக் குள்ள தொருவனுக் கிரண்டு செய்தி</line>
<line>வருவதென் மலருந் தீயு மருவலின் வாசம் வெம்மை</line>
<line>தருவதெ னீரென் செய்து தானியல் பாகு மன்றே.</line>
</verse>

<verse>
<line>தன்னியல் பொழியப் பூவுந் தழலும்வந் தணைய நீரின்</line>
<line>மன்னிய திரண்டு செய்தி வருமிரு வினையி னானு</line>
<line>முன்னிய வின்பத் துன்ப முறுமுயி ருணர்வில் லாத</line>
<line>துன்னிய வசித்தை யின்பத் துன்பங்கள் சூழ் ந்திடாவே.</line>
</verse>

<verse>
<line>இம்மையின் முயற்சி யாலே யிருநிதி யீட்டி யின்ப</line>
<line>மிம்மையே நுகர்வர் செய்தி யிலாதவர் பொருளு மின்றி</line>
<line>யிம்மையே யிடரு ழப்பர் வேறிரு வினைய துண்டே</line>
<line>லிம்மையின் முயற்சி யின்றி யெய்திட வேண்டு மிங்கே</line>
</verse>

<verse>
<line>இருவினைச் செயல்கா ணிம்மை யிரும்பொரு ளின்பம்</line>
<line>								வேண்டி</line>
<line>வருவினை செய்யுங் காலை மடிவரு மடியு மின்றித்</line>
<line>தருவினை யதனி லத்தந் தானறுந் துயருந் தங்கு</line>
<line>மொருவினை செய்யா தோரு முடையரிவ் வுலகத் துள்ளே</line>
</verse>

<verse>
<line>பேறிழ வின்ப மோடு பிணிமூப்புச் சாக்கா டென்னு</line>
<line>மாறுமுன் கருவுட் பட்ட தவ்விதி யனுப வத்தா</line>
<line>லேறிடு முன்பு செய்த கன்மமிங் கிவற்றிற் கேது</line>
<line>தேறுநீ யினிச்செய் கன்ம மேலுடற் சேரு மென்றே.</line>
</verse>

<verse>
<line>உடற்செயல் கன்ம மிந்த வுடல்வந்த வாறே தென்னின்</line>
<line>விடப்படு முன்னு டம்பின் வினையிந்த வுடல்வி ளைக்குந்</line>
<line>தொடர்ச்சியா லொன்றுக் கொன்று தொன்று தொட்டநாதி</line>
<line>									வித்தி</line>
<line>னிடத்தினின் மரம ரத்தின் வித்தும்வந் தியையு மாபோல்.</line>
</verse>

<verse>
<line>முற்செயல் விதியை யிந்த முயற்சியோ டனுப வித்தா</line>
<line>னிச்செயல் பலிக்கு மாறெ னிதமகி தங்கண் முன்ன</line>
<line>ரச்செய லானா லிங்கு மவைசெயின் மேலைக் காகும்</line>
<line>பிற்செயா தனுப விப்ப தின்றுபின் றொடருஞ் செய்தி.</line>
</verse>

<verse>

</verse>

<verse>
<line>மேலைக்கு வித்து மாகி விளைந்தவை யுணவு மாகி</line>
<line>ஞாலத்து வருமா போல நாஞ்செயும் வினைக ளெல்லா</line>
<line>மேலத்தான் பலமாச் செய்யு மிதமகி தங்கட் கெல்லா</line>
<line>மூலத்த தாகி யென்றும் வந்திடு முறைமை யோடே.</line>
</verse>

<verse>
<line>இதமகி தங்க ளென்ப திகன்மன வாக்குக் காயத்</line>
<line>திதமுயிர்க் குறுதி செய்த லகிதமற் றதுசெய் யாமை</line>
<line>யிதமகி தங்க ளெல்லா மிறைவனே யேற்றுக் கொண்டிங்</line>
<line>கிதமகி தத்தா லின்பத் துன்பங்க ளீவ னன்றே.</line>
</verse>

<verse>
<line>இறைவனிங் கேற்ப தென்னை யிதமகி தங்க ளென்னி</line>
<line>னிறைபர னுயிர்க்கு வைத்த நேசத்தி னிலைமை யாகு</line>
<line>மறமலி யிதஞ்செய் வோருக் கநுக்கிர கத்தைச் செய்வன்</line>
<line>மறமலி யகிதஞ் செய்யி னிக்கிர கத்தை வைப்பன்.</line>
</verse>

<verse>
<line>நிக்கிர கங்க டானு நேசத்தா லீசன் செய்வ</line>
<line>தக்கிர மத்தாற் குற்ற மடித்துத்தீர்த் தச்சம் பண்ணி</line>
<line>யிக்கிர மத்தி னாலே யீண்டற மியற்றி டென்ப</line>
<line>னெக்கிர மத்தி னாலு மிறைசெய லருளே யென்றும்.</line>
</verse>

<verse>
<line>தந்தைதாய் பெற்ற தத்தம் புதல்வர்க டஞ்சொ லாற்றின்</line>
<line>வந்திடா விடினு றுக்கி வளாரினா லடித்துத் தீய</line>
<line>பந்தமு மிடுவ ரெல்லாம் பார்த்திடிற் பரிவே யாகு</line>
<line>மிந்தநீர் முறைமை யன்றோ வீசனார் முனிவு மென்றும்.</line>
</verse>

<verse>
<line>செயல்களே பலத்தைச் செய்யுந் தெய்வம் வேண்டாவிங்</line>
<line>								கென்னின்</line>
<line>முயலுமிச் செயல்களிங்கே முழுவது மழியு மெங்கே</line>
<line>பயனளிப் பனவ ழிந்தே பலன்களைப் பண்ணுங் கெட்ட</line>
<line>வயலிடுந் தழையுந் தின்னு மருந்தும்பின் பலிக்கு மாபோல்.</line>
</verse>

<verse>
<line>செய்க்கிடுந் தழையுந் தின்னுந் திரவிய மதுவும் போல</line>
<line>வுய்த்திடுஞ் செய்தி கெட்டே யுறுவிக்கும் பலத்தை</line>
<line>							யென்னின்</line>
<line>வைத்திடுஞ் சோறும் பாக்கு மருந்தினர் வயிற்றின்</line>
<line>							மாய்ந்தான்</line>
<line>மெய்த்திடும் பலமு னக்கு மலமலால் வேறு முண்டோ.</line>
</verse>

<verse>
<line>திரவிய முவமை யன்று செய்திக்கட் டிரவி யங்கள்</line>
<line>விரவிய விடஹ்தே வீந்து பலந்தரு மிம்மை யம்மை</line>
<line>பரவிநீ பார்நீ பாத்திரத் திட்ட வெல்லாங்</line>
<line>கரவிடு மிங்கே யெங்கே பலன்கொளக் கருதினாயே.</line>
</verse>

<verse>
<line>செய்தவர் மனத்தே யெல்லாச் செய்தியுங் கிடந்து பின்ன</line>
<line>ரெய்தவே பலன்க ளீனு மென்றிடி னிருஞ்சு வாக்கம்</line>
<line>பொய்யர்வாழ்  நரகம் பூமி புந்தியிற் கிடந்து போந்த</line>
<line>தையனே யழகி துன்சொ லிந்திர சால மாய்த்தே.</line>
</verse>

<verse>
<line>தானஞ்செய் பொருட ரித்தோர் செய்தவர் தக்க செய்தி</line>
<line>யூனம்பின் னுறவே காண்டும் பலமுறு விப்பான் வேண்டு</line>
<line>மீனமில் செய்தி யீச னிடும்பணி யிவைநாஞ் செய்தா</line>
<line>னூனங்க ளதிக நோக்கி நுகர்விப்பன் வினைநோய் தீர.</line>
</verse>

<verse>
<line>உலகுடல் கரணங் கால முறுபல நியதி செய்தி</line>
<line>பலவிவை கொண்டு கன்மம் பண்ணுவ துண்ப தானா</line>
<line>னிலவிடா திவைதாஞ் சென்று நினைந்துயிர் நிறுத்திக்</line>
<line>							கொள்ளா</line>
<line>தலகிலா வறிவ னாணை யணைத்திடு மருளி னாலே.</line>
</verse>

<verse>
<line>ஒழுக்கமன் பருளா சார முபசார முறவு சீலம்</line>
<line>வழுக்கிலாத் தவந்தா னங்கள் வந்தித்தல் வணங்கல்</line>
<line>								வாய்மை</line>
<line>யழுக்கிலாத் துறவ டக்க மறிவொடர்ச் சித்த லாதி</line>
<line>யிழுக்கிலா வறங்க ளானா லிரங்குவான் பணிய றங்கள்.</line>
</verse>

<verse>
<line>மனமது நினைய வாக்கு வழுத்தமந் திரங்கள் சொல்ல</line>
<line>இனமலர் கையிற் கொண்டங் கிச்சித்த தெய்வம் போற்றிச்</line>
<line>சினமுத லகற்றி வாழுஞ் செயலற மானால் யார்க்கு</line>
<line>முனமொரு தெய்வ மேங்குஞ் செயற்குமுன் னிலையா </line>
<line>								மன்றே.</line>
</verse>

<verse>
<line>யாதொரு தெய்வங் கொண்டீ ரத்தெய்வ மாகி யாங்கே</line>
<line>மாதொரு பாக னார்தாம் வருவர்மற் றத்தெய் வங்கள்</line>
<line>வேதனைப் படுமி றக்கும் பிறக்குமேல் வினையுஞ் செய்யு</line>
<line>மாதலா னிவையி லாதா னறிந்தருள் செய்வ னன்றே.</line>
</verse>

<verse>
<line>இங்குநாஞ் சிலர்க்குப் பூசை யியற்றினா லிவர்க ளோவந்</line>
<line>தங்குவான் றருவா ரன்றே லத்தெய்வ மத்த னைக்கா</line>
<line>ணெங்கும்வாழ்  தெய்வ மெல்லா மிறைவனா ணையினா னிற்ப</line>
<line>தங்குநாஞ் செய்யுஞ் செய்திக் காணைவைப் பால ளிப்பன்.</line>
</verse>

<verse>
<line>காண்பவன் சிவனே யானா லவனடிக் கன்பு செய்கை</line>
<line>மாண்பற மரன்றன் பாத மறந்துசெ யறங்க ளெல்லாம்</line>
<line>வீண்செய லிறைவன் சொன்ன விதியறம் விருப்பொன்</line>
<line>							றில்லான்</line>
<line>பூண்டனன் வேண்டல் செய்யும் பூசனை புரிந்து கொள்ளே.</line>
</verse>

<verse>
<line>தாபர சங்க மங்க ளென்றிரண் டுருவி னின்று</line>
<line>மாபரன் பூசை கொண்டு மன்னுயிர்க் கருளை வைப்ப</line>
<line>னீபரன் றன்னை நெஞ்சி னினைவையே னிறைந்த பூசை</line>
<line>ஆய்பரம் பொருளை நாளு மாச்சிநீ, யன்பு செய்தே.</line>
</verse>

<verse>
<line>அரனடிக் கன்பர் செய்யும் பாவமு மறம தாகும்</line>
<line>பரனடிக் கன்பி லாதார் புண்ணியம் பாவ மாகும்</line>
<line>வரமுடைத் தக்கன் செய்த மாவேள்வி தீமை யாகி</line>
<line>நரரினிற் பாலன் செய்த பாதக நன்மை யாய்த்தே.</line>
</verse>

<verse>
<line>மறைகளீ சன்சொ லச்சொல் வழிவாரா வுயிரை வைக்குஞ்</line>
<line>சிறைகண்மா நிரய மிட்ட பணிசெய்வோர் செல்வத் தோடு</line>
<line>முறையுமா பதிக ளும்ப ருலகங்கள் யோனிக் கெல்லா</line>
<line>மிறைவனா ணையினா லின்பத் துன்பங்க ளியைவ தாகும்.</line>
</verse>

<verse>
<line>ஆணையா லவனி மன்ன னருமறை முறைசெய் யாரை</line>
<line>யாணையிற் றண்டஞ் செய்து மருஞ்சிறை யிட்டும் வைப்ப</line>
<line>னாணையின் வழிசெல் வோருக் கரும்பதி செல்வ நல்கி</line>
<line>யாணையும் வைப்ப னெங்கு மாணையே யாணை யேகாண்.</line>
</verse>

<verse>
<line>அரசனுஞ் செய்வ தீச னருள்வழி யரும்பா வங்க</line>
<line>டரையுளோர் செய்யிற் றீய தண்டலின் வைத்துத் தண்டத்</line>
<line>துரைசெய்து தீர்ப்பன் பின்பு சொல்வழி நடப்பர் தூயோர்</line>
<line>நிரயமுஞ் சேரா ரந்த நிரயமுன் னீர்மை யீதாம்.</line>
</verse>

<verse>
<line>அருளினா லுரைத்த நூலின் வழிவாரா ததன்மஞ் செய்யி</line>
<line>னிருளுலா நிரயத் துன்பத் திட்டிரும் பாவந் தீர்ப்பன்</line>
<line>பொருளுலாஞ் சுவர்க்க மாதி போகத்தாற் புணியந் தீர்ப்பன்</line>
<line>மருளுலா மலங்க டீர்க்கு மருந்திவை வயித்யன் நாதன்.</line>
</verse>

<verse>
<line>மருத்துவ னுரைத்த நூலின் வழிவரிற் பிணிகள் வாரா</line>
<line>வருத்திடும் பிணிக டப்பிற் றப்பிய வழியுஞ் செய்யத்</line>
<line>திருத்தினன் மருந்து செய்யா துறும்பிணி சென்றுந் தீர்ப்ப</line>
<line>னுரைத்தநூற் சிவனு மின்னே யுறுங்கன்ம மூட்டித் தீர்ப்பன்.</line>
</verse>

<verse>
<line>மண்ணுளே சிலவி யாதி மருத்துவ னருத்தி யோடுந்</line>
<line>திண்ணமா யறுத்துக் கீறித் தீர்த்திடுஞ் சிலநோ யெல்லாங்</line>
<line>கண்ணிய கட்டி பாலுங் கலந்துடன் கொடுத்துத் தீர்ப்ப</line>
<line>னண்ணலு மின்பத் துன்ப மருத்தியே வினைய றுப்பன்.</line>
</verse>

<verse>
<line>பூதனா சரீரம் போனாற் புரியட்ட ரூபந் தானே</line>
<line>யாதனா சரீர மாகி யின்பத்துன் பங்க ளெல்லா</line>
<line>நாதனா ராணை யுய்க்க நரகொடு சுவர்க்கந் துய்த்துத்</line>
<line>தீதிலா வணுவா யோனி சேர்ந்திடுஞ் சீவ னெல்லாம்.</line>
</verse>

<verse>
<line>உடல்விடா யோனி பற்றி யுதிப்பினு முதிக்கு மொன்றிற்</line>
<line>படர்வுறா துறும்பா பாவத்தாற் பாடாணம் போற்கி டந்து</line>
<line>கடனதாங் காலஞ் சென்றார் கடுநர கதனில் வீழ் ந்தங்</line>
<line>கிடருறு முருவங் கன்மத் தளவினி லெடுக்கு மன்றே.</line>
</verse>

<verse>
<line>பன்னக மந்த சங்கள் பரகாயந் தன்னிற் பாய்வோர்</line>
<line>துன்னுதோன் முட்டை யாக்கை துறந்துசெல் வதுவே</line>
<line>வுன்னிய வுயிர்க டூல வுடல்விட்டு வானி னூடு 	[போல</line>
<line>மன்னிடு நனவு மாறிக் கனவினை மருவு மாபோல்.</line>
</verse>

<verse>
<line>தன்மமோ டதன்ம மாகித் தானிரு பயனுந் தந்து</line>
<line>நன்மைதீ மையினு மின்பத் துன்பினு நாடிக் காண</line>
<line>முன்னமே யான்மா வின்றன் மும்மலத் தொன்ற தாகிக்</line>
<line>கன்மமு மூலங் காட்டிக் காமிய மலமாய் நிற்கும்</line>
</verse>

<verse>
<line>இருவினை யநாதி யாதி யியற்றலா னுகர்வா லந்தம்</line>
<line>வருமலஞ் சார்ந்து மாயா வுருவுகண் மருவி யார்த்துத்</line>
<line>தருசெயன் முறைமை யாலே தான்பல பேதங் காட்டி</line>
<line>யருவதாய் நின்ற ரன்ற னாணையி னமர்ந்து செல்லும்</line>
</verse>

<verse>
<line>சங்கமந் தாப ரங்க டத்தங்கன் மத்துக் கீடா</line>
<line>அங்குரு யோனி மாறு மச்சுமா றாதிங் கென்னி</line>
<line>னிங்குமா னுடரி யற்றும் புண்ணியத் தின்ப வீட்ட</line>
<line>மங்குவான் சுரர்க ளாயோ நரர்களா யருந்து வாரோ</line>
</verse>

<verse>
<line>நரர்களாய்த் துய்ப்ப ரென்னி னரர்பதி சுரரு லோகஞ்</line>
<line>சுரர்களாய்த் துய்ப்ப ரென்னிற் சொன்னவச் சழிவுமாகுஞ்</line>
<line>சுரர்களாய்ப் பலன்க டுய்த்துத் தாமிங்குத் தோன்றும் போது</line>
<line>நரர்களாய்ப் பிறப்பர் ஞாலத் தமரராய் நண்ணி டாரே.</line>
</verse>

<verse>
<line>வண்டுக ளாகி மாறு மயிர்க்குட்டி மற்றோர் செந்துப்</line>
<line>பண்டைய வுருவந் தானே வேட்டுவ னாய்ப்பி றக்குந்</line>
<line>கண்டுகொள் யோனி யெல்லாங் கன்மத்தான் மாறு மென்றே</line>
<line>கொண்டன சமய மெல்லா மிச்சொனீ கொண்ட தெங்கே.</line>
</verse>

<verse>
<line>அகலியை கல்ல தானா ளரிபல பிறவி யானான்</line>
<line>பகலவன் குலத்திற் றோன்றிப் பாரெலா முழுது மாண்டு</line>
<line>நிகரிலா வரச னாகுஞ் சிலந்திநீ டுலகம் போற்றச்</line>
<line>சகமதி லெலிதா னன்றோ வாவலி மாய்த்துத் தானே.</line>
</verse>

<verse>
<line>செப்பினாய் மாற வேறு சிலர்விதி யாலே கன்மால்</line>
<line>வைப்புறுமி யோனி யெல்லா மாறிவந் திடாவிங் கென்னி</line>
<line>னெப்படி யானுஞ் செய்திக் கிறைக்ளி யாவ னென்றே</line>
<line>முற்பட மொழிந்தே னெல்லா முதல்வன்றன் விதியே யாகும்</line>
</verse>

<verse>
<line>அவ்வவ யோனி தோறு மவ்வவ வுலகந் தோறும்</line>
<line>செவ்விதி னறிந்து கன்மஞ் சேர்ந்திடா சீவன் சேரா</line>
<line>இவ்வகை தம்மிற் சேர்வு மிறைசெய லானாற் செய்த</line>
<line>எவ்வுரு வுந்தங் கன்மான் மாற்றுவ னிறைவன் றானே.</line>
</verse>

<verse>
<line>மாறியிவ் வுருவ மெல்லாம் வருவதெங் கேநின் றென்னிற்</line>
<line>கூறிய சூக்கு மத்தா முருவெனிற் குறியொன் றென்னின்</line>
<line>வேறொரு குறியா மாரம் வீரசங் கிலியு மாகுந்</line>
<line>தேறுநீ யொருவ னாலிச் செயலெலாஞ் சிவனா லாகும்.</line>
</verse>

<verse>
<line>சூக்குங் கெட்டுத் தூலந் தோன்றிடா சூக்கு மத்தி</line>
<line>னாக்கியோ ருடல்கி டப்ப தின்றுட லாக்குந் தன்மைக்</line>
<line>கோக்கிய சத்தி யுண்டா யுடறருங் கால முற்று</line>
<line>நீக்கிட மரம்பின் வேரோர் நீண்மர நிகழ் த்து மாபோல்.</line>
</verse>

<verse>
<line>விதிப்படி சூக்கு மத்தே யுருவரும் வினையா லிங்கே</line>
<line>யுதித்திடா வுருவ மாக வுருவரு மரங்கள் வித்திற்</line>
<line>கதித்தெழு மரமும் வித்துங் கழியும்பின் னழியுஞ் சூக்க</line>
<line>மதிக்கெழு கலைகள் போல வருவது போவ தாமே.</line>
</verse>

<verse>
<line>தூலமா முருவி னுக்குச் சூக்கும முதல தற்கு</line>
<line>மூலமா னதற்கு மூல மோகினி யதன்மு தற்றான்</line>
<line>மேலதாம் விந்து சத்தி சிவமிவை மிசையா மெல்லாஞ்</line>
<line>சாலவின் றாகு மான்மாச் சிவத்தினைச் சார்ந்த போது.</line>
</verse>

<verse>
<p-title>மூன்றாமதிகரணம்</p-title>

<line>அரன்விதி யருள தென்றே யறைந்தன னதுவு முன்னே</line>
<line>தரைநர கருந்து றக்கந் தனுகர ணாதி யெல்லாம்</line>
<line>வருவதுஞ் செய்த நாதி மலங்களிம் மருந்தாற் றீர்த்துப்</line>
<line>பரகதி யதுவுந் தந்து பாதபங் கயமுஞ் சூட்டும்.</line>
</verse>

<verse>
<line>எழுமுடல் கரண மாதி யிவைமல மலம லத்தாற்</line>
<line>கழுவுவ னென்று சொன்ன காரண மென்னை யென்னிற்</line>
<line>செழுநவை யறுவை சாணி யுவர்செறி வித்த ழுக்கை</line>
<line>முழுவதுங் கழிப்பன் மாயை கொடுமல மொழிப்பன்</line>
<line>						[முன்னோன்</line>
</verse>

<verse>
<line>நித்தமா யருவா யேக நிலையதா யுலகத் திற்கோர்</line>
<line>வித்துமா யசித்தா யெங்கும் வியாபியாய் விமல னுக்கொர்</line>
<line>சத்தியாய்ப் புவன போகந் தனுகர ணமுமு யிர்க்காய்</line>
<line>வைத்ததோர் மலமாய் மாயை மயக்கமுஞ் செய்யு மன்றே.</line>
</verse>

<verse>
<line>மாயையிற் கால மோடு நியதிபின் கலாதி தோன்று</line>
<line>மாயவக் கால மூன்றா யாக்கியு மளித்தும் போக்கிக்</line>
<line>காயமோ டுலகுக் கெல்லாங் காலசங் கையினைப் பண்ணி</line>
<line>நாயக னாணை யாலே நடத்திடுஞ் சகத்தை யெல்லாம்.</line>
</verse>

<verse>
<line>நியதிபின் றோன்றிக் கன்ம நிச்சயம் பண்ணி நிற்கு</line>
<line>மயர்விலாக் கலைபின் றோன்றி யாணவ மொதுக்கிச் சித்தின்</line>
<line>செயல்புரி கிரியா சத்தி தெரிவிக்குஞ் சிறிதே வித்தை</line>
<line>யுயர்கலை யதனிற் றோன்றி யறிவினை யுதிக்கப் பண்ணும்</line>
</verse>

<verse>
<line>விச்சையி னராகந் தோன்றி வினைவழி போகத் தின்க</line>
<line>ணிச்சையைப் பண்ணி நிற்குந் தொழிலறி விச்சை மூன்றும்</line>
<line>வைச்சபோ திச்சா ஞானக் கிரியைமுன் மருவி யான்மா</line>
<line>நிச்சயம் புருட னாகிப் பொதுமையி னிற்ப னன்றே.</line>
</verse>

<verse>
<line>வருங்குண வடிவாய் மூல ப்ரகிருதி கலையிற் றோன்றித்</line>
<line>தருங்குண மூன்றா யொன்றிற் றான்மூன்றாய் மும்மூன் றாகு</line>
<line>மிருங்குண ரூப மாகி யியைந்திடு மெங்கு மான்மாப்</line>
<line>பெருங்குண வடிவாய்ப் போக சாதனம் பெந்த மாமே.</line>
</verse>

<verse>
<line>சித்தமா மவ்வி யத்தஞ் சிந்தனை யதுவுஞ் செய்யும்</line>
<line>புத்தியவ் வியத்திற் றோன்றிப் புண்ணிய பாவஞ் சார்ந்து</line>
<line>வத்துநிச் சயமும் பண்ணி வருஞ்சுக துக்க மோகப்</line>
<line>பித்தினின் மயங்கி ஞானக் கிரியையும் பேணி நிற்கும்</line>
</verse>

<verse>
<line>ஆங்காரம் புத்தி யின்க ணுதித்தகந் தைக்கு வித்தா</line>
<line>யீங்கார்தா னென்னோ டொப்பா ரென்றியா னென்ன தென்றே</line>
<line>நீங்காதே நிற்குந் தானு மூன்றதாய் நிகழு மென்பர்</line>
<line>பாங்கார்பூ தாதி வைகா ரிகந்தைச தந்தா னென்றே.</line>
</verse>

<verse>
<line>மனமது தைச தத்தின் வந்தொரு பொருளை முந்தி</line>
<line>நினைவதுஞ் செய்தங் கைய நிலைமையி னிற்கு மாங்கே</line>
<line>யினமலி சோத்தி ராதி கன்மவிந் திரிய மெல்லா</line>
<line>முனமுரை செய்த வைகா ரிகந்தரு மென்பர் முன்னோர்.</line>
</verse>

<verse>
<line>நற்செவி துவக்குக் கண்ணா நாசியைந் தினையு நல்லோர்</line>
<line>புத்தியிந் திரிய மென்று புகன்றன ரிவைத மக்குச்</line>
<line>சத்தநற் பரிச ரூப விரதகந் தங்க ளைந்தும்</line>
<line>வைத்தனர் விடய மாக வடைவினின் மருவு மென்றே.</line>
</verse>

<verse>
<line>வாக்கொடு பாதம் பாணி பாயுவோ டுபத்த மைந்து</line>
<line>நீக்கினர் முன்னே கன்மேந் திரியங்க ளெனநி னைந்தே</line>
<line>யாக்கிய வசன கமன தானமும் விசாக்கா னந்த</line>
<line>மூர்க்கமா ரைந்து மைந்தின் றொழிலென வோதி னாரே.</line>
</verse>

<verse>
<line>வாயாதி சோத்தி ராதி புறத்துவாழ்  கருவி யாகு</line>
<line>மோயாத மனாதி காயத் துணருமுட் கருவி யாகு</line>
<line>மாய்வார்கட் கராக மாதி யவற்றினுட் கருவி யென்பர்</line>
<line>மாயாடன் வயிற்றி வற்றாற் றுடக்குண்டு வாழு மான்மா.</line>
</verse>

<verse>
<line>ஓசைநற் பரிச ரூப விரதகந் தங்க ளென்று</line>
<line>பேசுமாத் திரைக ளைந்தும் பிறக்கும்பூ தாதி கத்தி</line>
<line>னேசவிந் திரியங் கட்கு நிகழறி விதனாற் காண்டு</line>
<line>மாசைசேர் மனாதி தன்மாத் திரைபுரி யட்ட கந்தான்.</line>
</verse>

<verse>
<line>சாற்றிய பஞ்ச தன்மாத் திரைகளிற் சத்த முன்னாத்</line>
<line>தோற்றும்வான் வளிதீ நீர்மண்டொடக்கியே யொன்றுக்</line>
<line>								கொண்றங்</line>
<line>கேற்றமா மோசை யாதி யிருங்குண மியைந்து நிற்கு</line>
<line>மாற்றவே விடய பூத மங்காங்கி பாவத் தாமே.</line>
</verse>

<verse>
<line>இரந்தர மாகி வான்றா னிடங்கொடுத் திடுஞ்ச லித்துப்</line>
<line>பரந்தவை திரட்டுங் காறீச் சுட்டொன்று வித்தல் பண்ணு</line>
<line>நிரந்தரங் குளிர்ந்து நின்று பதஞ்செயு நீர்மண் டானு</line>
<line>முரந்தரு கடின மாகித் திரித்திடு முணர்ந்து கொள்ளே.</line>
</verse>

<verse>
<line>மண்புன லனல்கால் வான்பால் வடிவுநாற் கோண மாகுந்</line>
<line>தண்பிறை மூன்று கோணந் தகுமறு கோணம் வட்டம்</line>
<line>வண்பொன்மை வெண்மை செம்மை கறுப்பொடு தூம வன்ன</line>
<line>மெண்டரு மெழுத்துத் தானும் லவரய வவ்வு மாமே.</line>
</verse>

<verse>
<line>குறிகள்வச் சிரத்தி னோடு கோகந தஞ்சு வத்தி</line>
<line>யறுபுள்ளி யமுத விந்து வதிதெய்வ மயன்மா லாதி</line>
<line>செறிபுக ழீச னோடு சதாசிவம் பூத தெய்வ</line>
<line>நெறிதரு கலையைந் திற்கு நிகழ் த்துவ ரிந்த நீர்மை.</line>
</verse>

<verse>
<line>சுத்ததத் துவங்க ளென்று முன்னமே சொன்ன வைந்து</line>
<line>மித்தகை மையினி யம்பு மிவைமுப்பத் தொன்று மாகத்</line>
<line>தத்துவ முப்பத் தாறாஞ் சைதன்னி யங்க ளைந்து</line>
<line>சித்தசித் தான்மா வொன்று முப்பது மசித்தே செப்பில்.</line>
</verse>

<verse>
<line>ஐந்துசுத் தத்தின் கீழேழ்  சுத்தாசுத் தம்ம சுத்தந்</line>
<line>தந்திடும் புமான்கீ ழெண்மூன் றாயதத் துவஞ்சீ வர்க்கு</line>
<line>வந்திடும் பிரேர காண்ட மருவுபோ சயித் திரத்தோ</line>
<line>டந்தமி லணுக்க ளுக்குப் போக்கிய காண்ட மாமே.</line>
</verse>

<verse>
<line>தத்துவ ரூப மாகுந் தருமரு வுருவ மெல்லாந்</line>
<line>தத்துவந் தூல சூக்க பரங்களு மாகி நிற்குந்</line>
<line>தத்துவந் தன்னிற் சாரு மணுக்கள்சா தாக்கி யத்திற்</line>
<line>றத்துவ சத்தஞ் சாருஞ் சகலமுந் தத்து வங்காண்.</line>
</verse>

<verse>
<line>தத்துவ மெண்மூன் றுஞ்சென் றான்மதத் துவத்தொ டுங்கும்</line>
<line>வித்தையி னொடுங்கு மாறுஞ் சிவத்தினி னொடுங்கு மூன்று</line>
<line>நித்ததத் துவமிம் மூன்று மென்பர்க ளிரண்டு நின்ற</line>
<line>சுத்தமாஞ் சிவத்தொ டுங்குந் தோற்றமு மிதுபோ லாகும்.</line>
</verse>

<verse>
<p-title>நான்காமதிகரணம்</p-title>

<line>மொய்தரு பூத மாதி மோகினி யந்த மாகப்</line>
<line>பொய்தரு சமய மெல்லாம் புக்குநின் றிடும்பு கன்று</line>
<line>மெய்தரு சைவமாதி யிருமூன்றும் வித்தை யாதி</line>
<line>எய்துதத் துவங்க ளேயு மொன்றுமின் றெம்மி றைக்கே.</line>
</verse>

<verse>
<line>சிவஞ்சத்தி நாதம் விந்து சதாசிஅன் றிகழு மீச</line>
<line>னுவந்தரு ளுருத்து ரன்றான் மாலய னொன்றி னொன்றாய்ப்</line>
<line>பவந்தரு மருவ நாலிங் குருவநா லுபய மொன்றா</line>
<line>நவந்தரு பேத மேக நாதனே நடிப்ப னென்பர்.</line>
</verse>

<verse>
<line>சத்தியாய் விந்து சத்தி யாய்மனோன் மனிதா னாகி</line>
<line>யொத்துறு மகேசை யாகி யுமைதிரு வாணி யாகி</line>
<line>வைத்துறுஞ் சிவாதிக் கிங்ஙன் வருஞ்சத்தி யொருத்தி யாகு</line>
<line>மெத்திற் நின்றா னீச னத்திற மவளு நிற்பள்.</line>
</verse>

<verse>
<line>சத்திதா னாத மாதி தானாகுஞ் சிவமு மந்தச்</line>
<line>சத்திதா னாதி யாகுந் தரும்வடி வான வெல்லாஞ்</line>
<line>சத்தியுஞ் சிவமு மாகுந் சத்திதான் சத்த னுக்கோர்</line>
<line>சத்தியாஞ் சத்தன் வேண்டிற் றெல்லாமாஞ் சத்தி தானே.</line>
</verse>

<verse>
<line>சிவஞ்சத்தி தன்னை யீன்றுஞ் சத்திதான் சிவத்தை யீன்று</line>
<line>முவந்திரு வரும்பு ணர்ந்திங் குலகுயி ரெல்லா மீன்றும்</line>
<line>பவன்பிர மசாரி யாகும் பான்மொழி கன்னி யாகுந்</line>
<line>தவந்தரு ஞானத் தோர்க்கித் தன்மைதான் றெரியு மன்றே.</line>
</verse>

<verse>
<line>தனுகரண புவன போகந் தற்பரம் பந்தம் வீடென்</line>
<line>றணுவினோ டெல்லா மாகி யடைந்திடுந் தத்து வங்க</line>
<line>ளினிதறிந் திவைநி விர்த்தி முதற்கலை யிடத்தே நீக்கி</line>
<line>நனிபர முணர்ந்தோ னந்தத் தத்துவ ஞானி யாவன்.</line>
</verse>

<verse>
<line>எல்லாமாய்த் தத்து வங்க ளியைந்ததென் னணுவுக்</line>
<line>							[கென்னிற்</line>
<line>றொல்லாய கன்ம மெல்லாந் துய்ப்பித்துத் துடைத்தற் கும்பி</line>
<line>னில்லாமை முற்று வித்து நீக்கவுங் கூடி நின்ற</line>
<line>பொல்லாத வாண வந்தைப் போக்கவும் புகுந்த தன்றே.</line>
</verse>

<verse>
<line>ஒன்றதா யநேக சத்தி யுடையதா யுடனா யாதி</line>
<line>யன்றதா யான்மா வின்ற னறிவொடு தொழிலை யார்த்து</line>
<line>நின்றுபோத் திருத்து வத்தை நிகழ் த்திச்செம் பினிற்க</line>
<line>							[ளிம்பேய்ந்</line>
<line>தென்றுமஞ் ஞானங் கரட்டு மாணவ மியைந்து நின்றே.</line>
</verse>

<verse>
<line>மலமென வேறொன் றில்லை மாயாகா ரியம தென்னி</line>
<line>னிலகுயிர்க் கிச்சா ஞானக் கிரியைக ளெழுப்பு மாயை</line>
<line>விலகிடு மலமி வற்றை வேறுமன் றதுவே றாகி</line>
<line>யுலகுடல் கரண மாகி யுதித்திடு முணர்ந்து கொள்ளே.</line>
</verse>

<verse>
<line>மாயையே யான்ம ஞானக் கிரியையை மறைத்து நிற்குந்</line>
<line>தூயவப் பரிதி தன்னைச் சுடர்முகின் மறைத்தாற் போலப்</line>
<line>போய்முகி லகலச் சோதி புரிந்திடு மதுவே போலக்</line>
<line>காயமு மகல ஞானற் தொழில்பிர காச மாமே.</line>
</verse>

<verse>
<line>பரிதியை முகின்ம றைப்பப் பாயொளி பதுங்கி னாற்போ</line>
<line>லுருவுயிர் மறைக்கின் ஞானக் கிரியைக ளொலிக்கு மாகுங்</line>
<line>கருதிடு மிச்சா ஞான காரியங் காயம் பெற்றான்</line>
<line>மருவிடு முயிர்க்குக் காயம் வந்திடா விடின்ம றைப்போ.</line>
</verse>

<verse>
<line>போதகா ரியம றைத்து நின்றது புகன்ம லங்கா</line>
<line>ணோதலாங் குணமு மாக வுயிரினுள் விரவ லாலே</line>
<line>காதலா லவித்தை சிந்தத் தருங்கலை யாதி மாயை</line>
<line>யாதலா லிரண்டுஞ் சோதி யிருளென வேறா மன்றே.</line>
</verse>

<verse>
<line>புர்டன்றன் குணம வித்தை யெனிற்சடம் புருடனாகுங்</line>
<line>குருடன்றன் கண்ணின் குற்றங் கண்ணின்றன் குணமோ</line>
<line>							[கூறாய்</line>
<line>மருடன்றன் குணம தாகி மலமசித் தாகி நிற்குந்</line>
<line>தெருடன்றன் குணம தாகிச் சித்தென நிற்குஞ் சீவன்.</line>
</verse>

<verse>
<line>மும்மல நெல்லி னுக்கு முளையொடு தவிடு மிப்போன்</line>
<line>மம்மர்செய் தணுவி னுண்மை வடிவினை மறைத்து நின்று</line>
<line>பொய்ம்மைசெய் போக பந்த போத்திருத் துவங்கள் பண்ணு</line>
<line>மிம்மல மூன்றி நோடு மிருமல மிசைப்ப னின்னும்.</line>
</verse>

<verse>
<line>மாயையின் காரி யத்தை மாயேய மலம தென்று</line>
<line>மேயமும் மலங்க டத்தற் தொழிலினை யியற்ற வேவுந்</line>
<line>தூயவன் றனதோர் சத்தி திரோதான கரிய தென்று</line>
<line>மாய்வரிம் மலங்க ளைந்து மணுக்களை யணைந்து நிற்கும்.</line>
</verse>

<verse>
<line>மலமாயை கன்ம மாயே யந்திரோ தாயி மன்னிச்</line>
<line>சலமாரும் பிறப்பி றப்பிற் றங்கியித் தரைகீழ்  மேலு</line>
<line>நிலையாத கொள்ளி வட்டங் கறங்கென நிமிடத் தின்க</line>
<line>ணலமாரு மிறைவ னாணை யாலுயிர் நடக்கு மன்றே.</line>
</verse>

<verse>
<line>அண்டஞ் சுவேத சங்க ளுற்பிச்சஞ் சராயு சத்தோ</line>
<line>டெண்டரு நாலெண் பத்து நான்குநூ றாயி ரத்தா</line>
<line>லுண்டுபல் யோனி யெல்லா மொழித்துமா னுடத்து தித்தல்</line>
<line>கண்டிடிற் கடலைக் கையா னீந்தினன் காரி யங்காண்.</line>
</verse>

<verse>
<line>நரர்பயி றேயந் தன்னி னான்மறை பயிலா நாட்டில்</line>
<line>விரவுத லொழிந்து தோன்றன் மிக்கபுண் ணியத்தா னாகுந்</line>
<line>தரையினிற் கீழை விட்டுத் தவஞ்செய்சா தியினில் வந்து</line>
<line>பரசம யங்கட் செல்லாப் பாக்கியம் பண்ணொ ணாதே.</line>
</verse>

<verse>
<line>வாழ் வெனு மையல் விட்டு வறுமையாஞ் சிறுமை தப்பித்</line>
<line>தாழ் வெனுந் தன்மை யோடுஞ் சைவமாஞ் சமயஞ் சாரு</line>
<line>மூழ் பெற லரிது சால யுயர்சிவ ஞானத் தாலே</line>
<line>போழிள மதியி னானைப் போற்றுவா ரருள்பெற் றாரே.</line>
</verse>

<verse>
<line>மானுடப் பிறவி தானும் வகுத்தது மனவாக் காய</line>
<line>மானிடத் தைந்து மாடு மரன்பணிக் காக வன்றோ</line>
<line>வானிடத் தவரு மண்மேல் வந்தரன் றனையர்ச் சிப்ப</line>
<line>ரூனெடுத் துழலு மூம ரொன்றையு முணரா ரந்தோ.</line>
</verse>

<verse>
<line>கருவினு ளழிவ தாயுங் கழிந்திடா தழிவ தாயும்</line>
<line>பரிணமித் தழிவ தாயும் பாலனா யழிவ தாயுந்</line>
<line>தருணனா யழிவ தாயுந் தானரைத் தழிவ தாயும்</line>
<line>உருவமே யழிவே யானா லுள்ளபோ தேபா ருய்ய.</line>
</verse>

<verse>
<line>ஒருபுல ணுகரும் போதங் கொன்றிலை யொன்றின் பாலும்</line>
<line>வருபயன் மாறி மாறி வந்திடு மெல்லா மாறு</line>
<line>மொருபொழு துணரி னுண்டா மல்லதிவ் வல்லல் வாழ் க்கை</line>
<line>மருள்கன வதுவும் போல மாயும்பின் மாயு மன்றே.</line>
</verse>

<verse>
<line>அரிசனம் பூசி மாலை யணிந்து பொன் னாடை சாத்திப்</line>
<line>பரிசனம் பின்பு செல்லப் பாரகர் பரிக்கக் கொட்ட</line>
<line>வரிசின்ன முதத் தொங்கல் வந்திட வுணர்வு மாண்டு</line>
<line>பெரியவர் பேச்சு மின்றிக் கிடத்தலாற் பிணத்தோ டொப்பர்</line>
</verse>

<verse>
<line>பிணத்தினை யொத்து வாழ் வோர் பின்னடைப் பிணங்கள்</line>
<line>								போல</line>
<line>வுணக்கியே யுழல்வீ ருங்க ளுடலுயி ருணர்வு மெல்லாங்</line>
<line>கணத்திடைத் தோன்றி மாயுங் காயமென் றறிந்தொ ருக்கால்</line>
<line>வணக்குறீ ரானை யென்றும் வானவர் வணங்க வைப்பன்.</line>
</verse>

<verse>
<p-title>மூன்றாஞ் சூத்திரம்</p-title>

<line>உயிரெனப் படுவ திந்த உடலின்வே றுளதா யுற்றுச்</line>
<line>செயிருறு மிச்சா ஞானச் செய்திக ளுடைய தாகிப்</line>
<line>பயில்வுறு மின்பத் துன்பப் பலங்களு நுகரும் பார்க்கிற்</line>
<line>றுயிலொடு மஞ்ச வத்தைப் படுமுண்மை துரியா தீதம்.</line>
</verse>

<verse>
<line>உடலின்வே றுயிரே னிந்த வுடலன்றோ வுணர்வ தென்னி</line>
<line>னுடல்சவ மான போது முடலினுக் குணர்வுண் டோதா</line>
<line>னுடலினின் வாயுப் போனா லுணர்ச்சியின் றுடலுக் கென்னி</line>
<line>னுடலினின் வாயுப் போகா துறக்கத்து முணர்வ தின்றே.</line>
</verse>

<verse>
<line>அறிவதைம் பொறியே யென்னி னுறக்கத்தி னறியா வாகு</line>
<line>மறிவது மொன்றொன் றாக வொன்றொன்றா யறியு மென்னி</line>
<line>னறிவுக ளொன்றை யொன்றங் கறிந்திடா வைந்தை</line>
<line>								யுங்கொண்</line>
<line>டறிவதொன் றுண்ட தான்மா வைம்பொறி யறிந்தி டாவே.</line>
</verse>

<verse>
<line>அறிந்திடும் பிராண வாயு வடங்குதல் விடுதல் செய்தா</line>
<line>லறிந்திடா துடலு றக்கத் தறிவின்மை கரண மின்மை</line>
<line>யறிந்திடு முதலி யாகி னதுநிற்கக் காரணம் போகா</line>
<line>அறிந்திடும் பிராணன் றன்னை யடக்கியும் விட்டு மான்மா.</line>
</verse>

<verse>
<p-title>இலக்கணவியல்</p-title>
<p-title>நான்காஞ் சூத்திரம்</p-title>

<line>உணர்வன கரண மென்னி லொன்றையொன் றுணரா</line>
<line>								வெவ்வே</line>
<line>றணைதருஞ் செய்லக ணான்கு மறிந்தவை யடக்கி யாக்கிப்</line>
<line>புணருமுட் கருவி யாக்கிப் புறக்கரு வியினும் போக்கி</line>
<line>யிணைதரு மிவற்றின் வேறா யானென தென்ப தான்மா.</line>
</verse>

<verse>
<p-title>முதலதிகரணம்</p-title>

<line>கருவியா மனமும் புத்தி யகங்காரஞ் சித்த நான்கு</line>
<line>மருவியான் மாவே யென்ன வருந்தீப மெனத்தெ ரிந்தங்</line>
<line>கொருவியான் மாவி னுண்மை யுணர்ந்தவர் தமையு</line>
<line>							ணர்ந்தோர்</line>
<line>தருமிது பசுஞா னம்பின் சிவஞானந் தனக்கு மேலாம்.</line>
</verse>

<verse>
<line>அவ்வுட னுவ்வு மவ்வு மனம்புத்தி யகங்கா ரங்கள்</line>
<line>செவ்விய விந்து நாதஞ் சித்தமோ டுள்ள மாகு</line>
<line>மொவ்வெனு மெழுத்தா மைந்து முணர்வுதித் தொடுங்கு</line>
<line>								மாறும்</line>
<line>பவ்வமுந் திரையும் போலும் பார்க்கிலிப் பண்புந் தோன்றும்.</line>
</verse>

<verse>
<line>அயனரி யரனு மீசர் சதாசிவ மதிதெய் வங்க</line>
<line>ளுயவரு மவ்வோ டுவ்வு மவ்விந்து நாதங் கட்குப்</line>
<line>பயனுறு மஞ்சி லான்மாப் பரவிடி லசித்தாம் பார்க்கிற்</line>
<line>சயமுறு வளியி ரண்டுந் தவிர்த்துறிற் றானுந் தோன்றும்.</line>
</verse>

<verse>
<line>ஆன்மாவின் வடிவு தானே யநேகார்த்தக் கூட்ட மென்னிற்</line>
<line>பார்ப்பார்கட் கான்மா வின்றாய்ப் பலபொரு ளுண்மை யாகுஞ்</line>
<line>சேர்ப்பாய பலவே யுண்மை யென்றிடிற் சென்றி வற்றை</line>
<line>யோர்ப்பான் வேறுணர் வோர்க்கெல்லா முணர் பொருள்</line>
<line>									வேறதாமே.</line>
</verse>

<verse>
<p-title>இரண்டாமதிகரணம்</p-title>

<line>அறிவிச்சை செயல்க ளெல்லா மடைந்தனல் வெம்மை</line>
<line>								யும்போற்</line>
<line>குறியுற்றங் கேகா நேக குணகுணி பாவ மாகி</line>
<line>நெறியுற்று நிற்கு மென்னி னிகழ் புலன் கரண மெல்லாஞ்</line>
<line>செறிவுற்றங் கறிவு கொள்ள வேண்டுமோ சீவ னார்க்கே.</line>
</verse>

<verse>
<line>குணங்களை யின்றி யொன்றாங் குறியுடைத் தான்மா வென்னி</line>
<line>னிணங்கிடா விச்சா ஞானக் கிரியைக ளிவையு டற்கட்</line>
<line>பிணங்கிடுஞ் சந்நி திக்க ணெனிற்பிணத் துறக்கத் தின்றா</line>
<line>முணங்கிடுங் கரண மென்னிற் சந்நிதி யொழிந்த தன்றே.</line>
</verse>

<verse>
<line>சந்நிதி குணம தாகுந் தானென்போ லென்னிற் காந்த</line>
<line>முன்னிரும் பென்றா யீர்க்கு முறைமையுண் டகற்ற லின்றா</line>
<line>முன்னுத லொடுங்க லோட லிருத்தலே கிடத்த னிற்ற</line>
<line>லென்னுமித் தொழில்கண் மற்று மியற்றுவ தான்மா</line>
<line>								வென்னே.</line>
</verse>

<verse>
<line>உருவுயி ரென்னி னிந்த வுடலினுட் காண வேண்டும்</line>
<line>வருவது பரிணா மத்தா யநித்தமாம் பூத மாகுங்</line>
<line>கருவினி னுழையு மாறுங் காட்டிட வேண்டுங் கண்ணின்</line>
<line>மருவிடா தென்னி னுன்றன் வாயினா லுருவன் றென்னே.</line>
</verse>

<verse>
<line>சூக்கும வுருவ தென்னிற் றூலகா ரமண தாகு</line>
<line>மாக்கிய மனாதி தன்மாத் திரைவடி வசேத னம்பி</line>
<line>னீக்கிய சூக்கு மத்தே நிற்பதோ ருருவுண் டென்னி</line>
<line>னாக்கிடு முருவ மெல்லா மசித்துமா யநித்த மாமே.</line>
</verse>

<verse>
<line>அருவுரு வென்னி லான்மா வருவுரு வாவ தின்றா</line>
<line>முருவரு வாகா தாகு மொருபொருட் கிரண்டு தன்மை</line>
<line>வருவது மில்லை காட்ட வன்னிபோன் மருவு மென்னி</line>
<line>னுருவமுங் காண வேண்டு முண்மையு மொழிந்து போமே.</line>
</verse>

<verse>
<line>சந்திரன் வடிவு போலத் தானரு வுருவ மென்னின்</line>
<line>வந்துநங் கண்ணிற் றோன்றும் வடிவுள தாமு யிர்க்கு</line>
<line>மிந்தவூ னுருவந் தானா யெழுவது முயிரே யென்னிற்</line>
<line>பந்தமா யசித்தா யான்மாப் பவுதிக மாகு மன்றே.</line>
</verse>

<verse>
<line>அருவவி காரி யான்மா வாகாயம் போல வென்னி</line>
<line>னுருவினைக் கட்டி யாட்டி யோட்டிமீட் டுலாவப் பண்ணி</line>
<line>மருவிநிற் பித்தி ருத்திக் கிடத்திமண் புரட்டி மற்றும்</line>
<line>பெருவிகா ரங்க ளெல்லாந் தருவதென் பேசி டாயே.</line>
</verse>

<verse>
<line>அசித்தெனி னுணரா தான்மா வசித்துச்சித் தாகு மென்னி</line>
<line>னசித்துச்சித் தாகா தாகுஞ் சித்தசித் தாவ தில்லை</line>
<line>யசித்தொரு புறமா யொன்றிற் சித்தொரு புறமாய் நில்லா</line>
<line>தசித்துறாச் சித்தே யென்னி னசித்தடைந் தறிவ தின்றாம்.</line>
</verse>

<verse>
<line>உயிரினை யணுவ தென்னி னுடல்பல துவார மோடும்</line>
<line>பயில்வுறக் கட்டு ணாது பாரமுந் தரித்துச் செல்லா</line>
<line>தயர்வுறு மசித்தாய்ப் பூத வணுக்களி னொன்ற தாகு</line>
<line>மியல்புறு மவய வத்தா லணுவுரு விறக்கு மன்றே.</line>
</verse>

<verse>
<line>உடலினி னேக தேசி யுயிரெனி னுருவாய் மரபும்</line>
<line>படர்வுறு மறிவின் றெங்குஞ் சுடரொளிப் பண்ப தென்னிற்</line>
<line>சுடர்தொடிற் சுடுவ தெங்குந் தொட்டிட மறிவுண் டாகு</line>
<line>மடர்புல னிடத்து மொக்க வறிவெழ வேண்டு மன்றே.</line>
</verse>

<verse>
<line>உருவினி னிறைந்து நின்றங் குணர்ந்திடு முயிர தென்னின்</line>
<line>மருவிடா துறக்கம் வாயி லறிவொக்க வழங்க வேண்டும்</line>
<line>பெருகிடுஞ் சுருங்கும் போதம் பேருடற் சிற்று டற்கண்</line>
<line>வருமுடற் குறைக்க வொக்கக் குறைந்துபின் மாயு மன்றே.</line>
</verse>

<verse>
<line>எங்குந்தான் வியாபி யாய்நின் றுணருமிவ் வான்மா</line>
<line>						வென்னிற்</line>
<line>றங்கிடு மவத்தை போக்கு வரவுகள் சாற்றல் வேண்டும்</line>
<line>பங்கமார் புலனொன் றொன்றாப் பார்த்திடல் பகரல் வேண்டு</line>
<line>மிங்கெலா மொழிந்தா னிற்ப தெங்ஙன மியம்பல் வேண்டும்.</line>
</verse>

<verse>
<line>சுத்தமா மான்ம சித்தைத் துகளுடன் மறைத்த தென்னின்</line>
<line>வைத்துறா துடற்கண் வாயில் கரணங்கள் வழியான் ஞான</line>
<line>மொத்துறு மலமற் றாலு முறுமலம் வீடு மின்றாம்</line>
<line>பெத்தமு மடையான் முத்த னாய்ப்பிர காச னாமே.</line>
</verse>

<verse>
<line>அசித்தரு வியாப கம்போல் வியாபக மருவ மின்றாய்</line>
<line>வசித்திட வரும்வி யாபி யெனும்வழக் குடைய னாகி</line>
<line>நசித்திடா ஞானச் செய்தி யநாதியே மறைத்து நிற்கும்</line>
<line>பசுத்துவ முடைய னாகிப் பசுவென நிற்கு மான்மா</line>
</verse>

<verse>
<line>மாயையின் வயிற்றுண் மன்னி வருஞ்செயன் ஞான மிச்சை</line>
<line>யேயுமக் கலாதி மூன்றா லேகதே சத்தி னேய்ந்திங்</line>
<line>காயுமுக் குணங்க ளந்தக் கரணங்க ளாதி யெல்லாங்</line>
<line>காயபெத் தங்க ளாகிக் கலந்துட னிற்கு மான்மா.</line>
</verse>

<verse>
<line>சூக்கும தேகி யாகித் தூலரு பத்தின் மன்னிச்</line>
<line>சாக்கிர முதலா யுள்ள வவத்தையுட் டங்கி யெங்கும்</line>
<line>போக்கொடு வரவு மெல்லாம் புரிந்துபுண் ணியங்கள் பாவ</line>
<line>மாக்கியும் பலன்க ளெல்லா மருந்தியு நிற்கு மான்மா.</line>
</verse>

<verse>
<line>மருவா னந்தம் விஞ்ஞான மனோபி ராண னன்னமய</line>
<line>முருவாந் தன்மை யுண்டாய்மு னொன்றுக் கொன்று</line>
<line>							சூக்குமமாய்</line>
<line>வருமா மன்ன மயம்பற்றி மாயை முதற்கா ரணமாகு</line>
<line>மருவா யான்மா வைங்கோசத் தார்ப்புண் டவற்றி</line>
<line>							னகம்புறமாம்</line>
</verse>

<verse>
<line>தோற்பாவைக் கூத்துந் தொல்லை மரப்பாவை யியக்க</line>
<line>								முஞ்சீர்த்</line>
<line>தேர்ப்பாரிற் செலவும் வேறாய்ச் செலுத்துவோர் செய்தி</line>
<line>								தானும்</line>
<line>பார்ப்பாய வேடங் கட்டி யாடுவோர் பரிசு போலு</line>
<line>மார்ப்பாய காயந் தன்னை யான்மாநின் றாட்டு மாறே.</line>
</verse>

<verse>
<line>என்னுடல் பொறிபி ராணன் கரணமென் னுணர்வென்</line>
<line>							றக்காற்</line>
<line>றன்னின்வே றாகு நீயென் றன்மனை யென்ற வெல்லா</line>
<line>நின்னின்வே றாகு மென்னி னீங்கிடா விவையிங் கென்னி</line>
<line>னுன்னின வாகு நீயா முகர்மயி ருகவுங் காண்டி.</line>
</verse>

<verse>
<line>பொன்னணி யாடை மாலை போதுமே லான போதிங்</line>
<line>கென்னணி யானென் றுன்னி யிருந்தனை பிரிந்த போது</line>
<line>நின்னணி நீயு மல்ல வாயினை காய நின்னி</line>
<line>னன்னிய மாகு முன்னை யறிந்துநீ பிரிந்து பாரே.</line>
</verse>

<verse>
<line>உடலியா னல்லே னிந்த வுணர்வுயா னல்ல வான</line>
<line>கடனியா தென்னின் வேறு கண்டுணர் வென்ன தென்கை</line>
<line>யிடிரிலா வென்ற னான்மா வென்றபோ தான்மா வேறோ</line>
<line>திடனதா வுயிரை வேறு கண்டிடார் செப்ப லேகாண்.</line>
</verse>

<verse>
<line>புந்தியை மனம தென்று மனமது புந்தி யென்றுஞ்</line>
<line>சிந்தையைச் சீவ னென்றுஞ் சீவனைச் சிந்தை யென்று</line>
<line>முந்தனை யான்மா வென்று மான்மாவை முந்த னென்றும்</line>
<line>வந்திடு மென்ற னான்மா வென்றது மற்றொன் றைகாண்.</line>
</verse>

<verse>
<line>அறிவுடல் சிந்தை யான்மா வணைதலா லான்மா வென்ப</line>
<line>ரெறிசுடர் விளக்கி ருக்கு மிடத்தையும் விளக்கென்</line>
<line>							றாற்போற்</line>
<line>பொறிபுலன் கரண மெல்லாம் புலப்படு மபேத மாகிப்</line>
<line>பிறிதரா தறிவ தான்மா வறிபொருள் பின்ன மாமே.</line>
</verse>

<verse>
<line>கண்டுணர் புருடன் வேறு கனவுகண் டொடுங்கிக் காய</line>
<line>முண்டியும் வினையு மின்றிக் கிடந்துயிர்த் திடவு ணர்ந்து</line>
<line>கண்டிடுங் கனவுஞ் சொல்லி யொடுக்கமுங் கருதி வேறா</line>
<line>யுண்டியும் வினையு முற்றிங் குணர்த்திட வுணரா நிற்கும்.</line>
</verse>

<verse>
<line>புருடனே யறிவ னாகிற் பொறிபுல னாதி போதந்</line>
<line>தருவதெ னறிவு மாயா தனுகர ணாதி பற்றி</line>
<line>வருவதிங் கநரதி யாக மலத்தினின் மறைந்து நிற்ப</line>
<line>னருவனா யிவற்றோ டாளு மமைச்சரு மரசும் போல்வன்</line>
</verse>

<verse>
<p-title>மூன்றாமதிகரணம்</p-title>

<line>படைகொடு பவனி போதும் பார்மன்னன் புகும்போ தில்லிற்</line>
<line>கடைதொறும் விட்டு விட்டுக் காவலு மிட்டுப் பின்ன</line>
<line>ரடைதருந் தனியே யந்தப் புரத்தினி லதுபோ லான்மா</line>
<line>வடலினி லஞ்ச வத்தை யுறுமுயிர் காவ லாக</line>
</verse>

<verse>
<line>சாக்கிர முப்பத் தைந்து நுதலினிற் கனவு தன்னி</line>
<line>லாக்கிய விருபத் தைந்து களத்தினிற் சுழுனை மூன்று</line>
<line>நீக்கிய விதயந் தன்னிற் றுரியத்தி லிரண்டு நாபி</line>
<line>நோக்கிய துரியா தீத நுவலின்மு லத்தி னொன்றே.</line>
</verse>

<verse>
<line>இருவகை சாக்கி ராதி யவத்தைக ளியல்பு தானு</line>
<line>மொருவகை கீழே நூக்கி யுற்பவங் காட்டு மொன்று</line>
<line>பெருகமே னோக்கித் தீய பிறப்பறுத் திடுமி யோகிற்</line>
<line>றருவதோர் சமாதி தானுந் தாழ் ந்துபின் சன்னஞ் சாரும்.</line>
</verse>

<verse>
<line>அறிதரு முதல வத்தை யடைதரு மிடத்தே யைந்துஞ்</line>
<line>செறிதருங் கரணந் தன்னிற் செயறொறுங் கண்டு</line>
<line>							கொண்ணீ</line>
<line>பிறவிலா ஞானத் தோரும் பிறப்பற வருளா லாங்கே</line>
<line>குறியொடு மஞ்ச வத்தை கூடுவர் வீடு கூட.</line>
</verse>

<verse>
<line>ஐந்துசாக் கிரத்தி னான்கு கனவினிற் சுழுனை மூன்று</line>
<line>வந்திடுந் துரியந் தன்னி னிரண்டொன்று துரியா தீதந்</line>
<line>தந்திடுஞ் சாக்கி ராதி யவத்தைக டானந் தோறு</line>
<line>முந்திடுங் கரணந் தன்னிற் செயறொறு முணர்ந்து கொள்ளே</line>
</verse>

<verse>
<line>கேவல சகல சுத்த மென்றுமூன் றவத்தை யான்மா</line>
<line>மேவுவன் கேவ லந்தன் னுண்மைமெய் பொறிக ளெல்லாங்</line>
<line>காவலன் கொடுத்த போது சகலனா மலங்க ளெல்லாம்</line>
<line>மோவின போது சுத்த முடையனுற் பவந்து டைத்தே.</line>
</verse>

<verse>
<line>அறிவில னமூர்த்த னித்த னராகாதி குணங்க ளோடுஞ்</line>
<line>செறிவிலன் கலாதி யோடுஞ் சேர்விலன் செயல்க ளில்லான்</line>
<line>குறியிலன் கருத்தா வல்லன் போகத்திற் கொள்கை யில்லான்</line>
<line>பிறிவிலன் மலத்தி னோடும் வியாபிகே வலத்தி லான்மா.</line>
</verse>

<verse>
<line>உருவினைக் கொண்டு போக போக்கியத் துன்னல் செப்பல்</line>
<line>வருசெயன் மருவிச் சத்த மாதியாம் விடயந் தன்னிற்</line>
<line>புரிவதுஞ் செய்திங் கெல்லா யோனியும் புக்கு ழன்று</line>
<line>திரிதருஞ் சகல மான வவத்தையிற் சீவன் சென்றே.</line>
</verse>

<verse>
<line>இருவினைச் செயல்க ளொப்பி னீசன்றன் சத்தி தோயக்</line>
<line>குருவருள் பெற்று ஞான யோகத்தைக் குறுகி முன்னைத்</line>
<line>திரிமல மறுத்துப் பண்டைச் சிற்றறி வொழிந்து ஞானம்</line>
<line>பெருகிநா யகன்றன் பாதம் பெறுவது சுத்த மாமே.</line>
</verse>

<verse>

</verse>

<verse>
<p-title>ஐந்தாஞ் சூத்திரம்</p-title>
<line>பொறிபுலன் கரண மெல்லாம் புருடனா லறிந்தான் மாவை</line>
<line>யறிதரா வவையே போல வான்மாக்க ளனைத்து மெங்குஞ்</line>
<line>செறிதருஞ் சிவன்ற னாலே யறிந்திடுஞ் சிவனைக் காணா</line>
<line>அறிதருஞ் சிவனே யெல்லா மறிந்தறி வித்து நிற்பன்</line>
</verse>

<verse>
<p-title>இரண்டாமதிகரணம்</p-title>

<line>இறைவனே யறிவிப் பானே லீண்டறி வெவர்க்கு மொக்குங்</line>
<line>குறைவதி கங்க டத்தங் கன்மமேற் கோமான் வேண்டா</line>
<line>முறைதரு செயற்குப் பாரு முளரிகட் கிரவி யும்போ</line>
<line>லறைதரு தத்தங் கன்மத் தளவினுக் களிப்ப னாதி.</line>
</verse>

<verse>
<line>அறிந்திடு மான்மா வொன்றை யொன்றினா லறித லானு</line>
<line>மறித்தமை மறத்த லானு மறிவிக்க வறித லானு</line>
<line>மறிந்திடுந் தன்னை யுந்தா னறியாமை யானுந் தானே</line>
<line>யறிந்திடு மறிவ னன்றா மறிவிக்க வறிவ னன்றே.</line>
</verse>

<verse>
<line>கருவியாற் பொருளாற் காட்டாற் காலத்தாற் கருமந் தன்னா</line>
<line>லுருவினா லளவா னூலா லொருவரா லுணர்த்த லானு</line>
<line>மருவனா யுண்மை தன்னி லறியாது நிற்ற லானு</line>
<line>மொருவனே யெல்லாத் தானு முணர்த்துவ னருளி னாலே.</line>
</verse>

<verse>
<line>கருவியும் பொருளுங் காட்டுங் காலமுங் கருமந் தானு</line>
<line>முருவமு மளவு நாலு மொருவரு முணர்த்த லின்றி</line>
<line>யருவனா யுலக மெல்லா மறிந்தவை யாக்கி வேறா</line>
<line>யொருவனே யுயிர்கட் கெல்லா முயிருமா யுணர்த்தி நிற்பன்.</line>
</verse>

<verse>
<line>இறைவன்றன் சந்நி திக்க ணுலகின்றன் சேட்டை யென்னு</line>
<line>மறைகளு மறந்தாய் மாயை மருவிடான் சிவன வன்க</line>
<line>ணுறைதரா தசேத னத்தா லுருவுடை யுயிர்கட் கெல்லா</line>
<line>நிறைபரன் சந்நி திக்க ணீடுணர் வுதிக்கு மன்றே.</line>
</verse>

<verse>
<line>உலகமே யுருவமாக யோனிக ளுறுப்ப தாக</line>
<line>இலகு பே ரிச்சா ஞானக் கிரியையுட் கரண மாக</line>
<line>அலகிலா வுயிர்ப்பு லன்கட் கறிவினை யாக்கி யைந்து</line>
<line>நலமிகு தொழில்க ளோடு நாடக நடிப்ப னாதன்.</line>
</verse>

<verse>
<line>தெரிந்துகொண் டொரோவொன் றாகச் சென்றைந்து புலனும்</line>
<line>									பற்றிப்</line>
<line>புரிந்திடு முணர்வி னோடும் போகமும் கொடுத்தி யோனி</line>
<line>திரிந்திடு மதுவுஞ் செய்து செய்திகண் டுயிர்கட் கெல்லாம்</line>
<line>விரிந்திடு மறிவுங் காட்டி வீட்டையு மளிப்பன் மேலோன்.</line>
</verse>

<verse>
<line>அருளது சத்தி யாகு மரன்றனக் கருளை யின்றித்</line>
<line>தெருள்சிவ மில்லை யந்தச் சிவமின்றிச் சத்தி யில்லை</line>
<line>மருளினை யருளால் வாட்டி மன்னுயிர்க் களிப்பன் கண்கட்</line>
<line>கிருளினை யொளியா லோட்டு மிரவியைப் போல வீசன்.</line>
</verse>

<verse>

</verse>

<verse>
<p-title>ஆறாஞ் சூத்திரம்</p-title>
<line>அறிவுறும் பொருளோ வீச னறிவுறா தவனோ வென்னி</line>
<line>னறிபொரு ளசித்த சத்தா மறியாத தின்றா மெங்குஞ்</line>
<line>செறிசிவ மிரண்டு மின்றிச் சித்தொடு சத்தாய் நிற்கு</line>
<line>நெறிதரு சத்தின் முன்ன ரசத்தெலா நின்றி டாவே.</line>
</verse>

<verse>
<p-title>முதலதிகரணம்</p-title>

<line>ஆவதா யழிவ தாகி வருதலா லறிவு தானுந்</line>
<line>தாவலா லுலகு போகந் தனுகர ணாதி யாகி</line>
<line>மேவலான் மலங்க ளாகி விரவலான் வேறு மாகி</line>
<line>யோவலா லசத்தாஞ் சுட்டி யுணர்பொரு ளான வெல்லாம்</line>
</verse>

<verse>
<line>மண்டனில் வாழ் வும் வானத் தரசயன் மாலார் வாழ் வு</line>
<line>மெண்டரு பூத பேத யோனிக ளியாவு மெல்லாங்</line>
<line>கண்டவிந் திரமா சாலங் கனாக்கழு திரதங் காட்டி</line>
<line>யுண்டுபோ லின்றாம் பண்பி லுலகினை யசத்து மென்பர்.</line>
</verse>

<verse>
<p-title>இரண்டாமதிகரணம்</p-title>

<line>உணராத பொருள்சத் தென்னி னொருபய னில்லை தானும்</line>
<line>புணராது நாமுஞ் சென்று பொருந்துவ தின்றா மென்றுந்</line>
<line>தணவாத கரும மொன்றுந் தருவது மில்லை வானத்</line>
<line>திணரார்பூந் தொடையுமி யாமைக் கெழுமயிர்க் கயிறும்</line>
<line>								போலும்.</line>
</verse>

<verse>
<p-title>மூன்றாமதிகரணம்</p-title>

<line>தத்துவஞ் சத்த சத்துச் சதசத்து மன்றென் றாலெ</line>
<line>னுய்த்துணர்ந் துண்டோ வின்றோ வென்றவர்க் குண்டென்</line>
<line>வைத்திடுஞ் சத்தே யாகு மனத்தொடு வாக்கி றந்த [றோதில்</line>
<line>சித்துரு வதுவ சித்தா மனத்தினாற் றேர்வ தெல்லாம்.</line>
</verse>

<verse>
<line>அறிபொரு ளசித்தாய் வேறா மறிவுறாப் பொருள் சத்தென்னி</line>
<line>னறிபவ னறியா னாகி லதுவின்று பயனு மில்லை</line>
<line>யறிபவ னருளி னாலே யநநிய மாகக் காண்ப</line>
<line>னறிபொரு ளறிவாய் வேறா யறிவரு ளுருவாய் நிற்கும்</line>
</verse>

<verse>
<line>பாவிப்ப தென்னிற் பாவம் பாவகங் கடக்கிற் பாவம்</line>
<line>பாவிக்கு மதுநா னென்னிற் பாவகம் பாவங் கெட்டுப்</line>
<line>பாவிப்ப தென்னிற் பாவம் பாவனை யிறந்து நின்று</line>
<line>பாவிக்கப் படுவ தாகும் பரம்பர னருளி னாலே.</line>
</verse>

<verse>
<line>அன்னிய மிலாமை யானு மறிவினு ணிற்ற லானு</line>
<line>முன்னிய வெல்லா முண்ணின் றுணர்த்துவ னாத லானு</line>
<line>மென்னதி யானென் றோது மிருஞ்செருக் கறுத்த லானுந்</line>
<line>தன்னறி வதனாற் காணுந் தகைமைய னல்ல னீசன்</line>
</verse>

<verse>
<line>ஒன்றெனு மதனா லொன்றேன் றுரைப்பதுண் டாகை யாலே</line>
<line>நின்றனன் வேறாய்த் தன்னி னீங்கிடா நிலைமை யாலே</line>
<line>பின்றிய வுணர்வுக் கெட்டாப் பெருமைய னறிவி னுள்ளே</line>
<line>யென்றுநின் றிடுத லாலே யிவனவ னென்ன லாமே.</line>
</verse>

<verse>

</verse>

<verse>

</verse>

<verse>
<p-title>சாதனவியல்</p-title>
<p-title>ஏழாஞ் சூத்திரம்</p-title>
<line>அனைத்துஞ்சத் தென்னி னொன்றை யறிந்திடா தசத்தா</line>
<line>								லென்னின்</line>
<line>முனைத்திடா தசத்துச் சத்தின் முன்னிரு ளிரவி முன்போ</line>
<line>னினைப்பதிங் கசத்தே யென்னிற் சத்தின்முன் னிலாமை</line>
<line>								யானுந்</line>
<line>தனைக்கொடொன் றுணர்த லானுந் தானசத் துணரா தன்றே.</line>
</verse>

<verse>
<p-title>மூன்றாமதிகரணம்</p-title>

<line>சத்தசத் தறிவ தான்மாத் தான்சத்து மசத்து மன்று</line>
<line>நித்தனாய்ச் சதசத் தாகி நின்றிடு மிரண்டன் பாலு</line>
<line>மொத்துட னுதித்து நில்லா துதியாது நின்றி டாது</line>
<line>வைத்திடுந் தோற்ற நாற்ற மலரினில் வருதல் போலும்</line>
</verse>

<verse>
<line>சுத்தமெய்ஞ் ஞான மேனிச் சோதிபா லசத்தஞ் ஞான</line>
<line>மொத்துறா குற்றா மெல்லா முற்றிடு முயிரின் கண்ணே</line>
<line>சத்துள போதே வேறாஞ் சதசத்து மசத்து மெல்லாம்</line>
<line>வைத்திடு மநாதி யாக வாரிநீர் லவணம் போலும்.</line>
</verse>

<verse>
<line>அறிவிக்க வறித லானு மழிவின்றி நிற்ற லானுங்</line>
<line>குறிபெற்ற சித்துஞ் சத்துங் கூறுவ துயிருக் கீசன்</line>
<line>நெறிநித்த முத்த சுத்த சித்தென நிற்ப னன்றே</line>
<line>பிறிவிப்பன் மலங்க ளெல்லாம் பின்னுயிர்க் கருளி னாலே.</line>
</verse>

<verse>

</verse>

<verse>
<p-title>எட்டாஞ்சூத்திரம்</p-title>
<line>மன்னவன்றன் மகன்வேட ரிடத்தே தங்கி</line>
<line>	வளர்ந்தவனை யறியாது மயங்கி நிற்பப்</line>
<line>பின்னவனு மென்மகனீ யென்றவரிற் பிரித்துப்</line>
<line>	பெருமையொடுந் தானாக்கிப் பேணு மாபோற்</line>
<line>றுன்னியவைம் புலவேடர் சுழலிற் பட்டுத்</line>
<line>	துணைவனையு மறியாது துயருறுந்தொல் லுயிரை</line>
<line>மன்னுமருட் குருவாகி வந்தவரி னீக்கி</line>
<line>	மலமகற்றித் தானாக்கி மலரடிக்கீழ்  வைப்பன்.</line>
</verse>

<verse>
<p-title>முதலதிகரணம்</p-title>

<line>உரைதருமிப் பசுவர்க்க முணரின் மூன்றா</line>
<line>	முயரும்விஞ் ஞானகலர் பிரளயாகலர் சகலர்</line>
<line>நிரையின்மல மலங்கன்ம மலங்கன்ம மாயை</line>
<line>	நிற்குமுத லிருவர்க்கு நிராதார மாகிக்</line>
<line>கரையிலருட் பரன்றுவிதா சத்திநிபா தத்தாற்</line>
<line>	கழிப்பன்மலஞ் சகலர்க்குக் கன்ம வொப்பிற்</line>
<line>றரையிலா சான்மூர்த்தி யாதார மாகித்</line>
<line>	தரித்தொழிப்பன் மலஞ்சதுர்த்தா சத்திநிபா</line>
<line>							தத்தால்.</line>
</verse>

<verse>
<line>பலவிதமா சான்பாச மோசனந்தான் பண்ணும்</line>
<line>	படிநயனத் தருள்பரிசம் வாசகமா னதமு</line>
<line>மலகில்சாத் திரம்யோக மவுத்தி ராதி</line>
<line>	யநேகமுள வவற்றினவுத் திரியிரண்டு திறனா</line>
<line>மிலகுஞானங் கிரியை யெனஞான மனத்தா</line>
<line>	லியற்றுவது கிரியையெழிற் குண்டமண் டலாதி</line>
<line>நிலவுவித்துச் செய்தல்கிரி யாவதிதா னின்னும்</line>
<line>	நீர்ப்பீசஞ் சபீசமென விரண்டாகி நிகழும்.</line>
</verse>

<verse>
<line>பாலரொடு வாலீசர் விருத்தர்பணி மொழியார்</line>
<line>	பலபோகத் தவர்வியாதிப் பட்டவர்க்குப்</line>
<line>சீலமது நிர்ப்பீசஞ் சமயா சாரந்		[பண்ணுஞ்</line>
<line>	திகழ் சுத்தி சமயிபுத் திரர்க்கு நித்தத்</line>
<line>தேலுமதி காரத்தை யியற்றித் தானு</line>
<line>	மெழினிரதி காரையென நின்றிரண்டாய் விளங்குஞ்</line>
<line>சாலநிகழ்  தேகபா தத்தி னோடு</line>
<line>	சத்தியநிர் வாணமெனச் சாற்றுங் காலே.</line>
</verse>

<verse>
<line>ஓதியணர்ந் தொழுக்கநெறி யிழுக்கா நல்ல</line>
<line>	வுத்தமர்க்குச் செய்வதுயர் பீசமிவர் தம்மை</line>
<line>நீதியினா னித்தியநை மித்திககா மியத்தி</line>
<line>	னிறுத்திநிரம் பதிகார நிகழ் த்துவதுஞ் செய்து</line>
<line>சாதகா சாரியரு மாக்கி வீடு</line>
<line>	தருவிக்கு முலோகசிவ தருமிணியென் றிரண்டா</line>
<line>மாதலினா னதிகாரை யாஞ்சமய விசேட</line>
<line>	நிருவாண மபிடேக மிவற்றடங்கு மன்றே</line>
</verse>

<verse>
<line>அழிவிலாக் கிரியையினா னாதல்சத்தி மத்தா</line>
<line>	னாதலத்து வாசுத்தி பண்ணிமல மகற்றி</line>
<line>யொழிவிலாச் சிவம்பிரகா சித்தற்கு ஞான</line>
<line>	முதிப்பித்துற் பவந்துடைப்ப னரனொருமூ</line>
<line>வழுவிலா வழியாறா மந்திரங்கள் பதங்கள் [வர்க்கும்</line>
<line>	வன்னங்கள் புவனங்க டத்துவங்கல் கலைகள்</line>
<line>கழிவிலா துரைத்தமுறை யொன்றினொன்று வியாத்தி</line>
<line>	கருதுகலை சத்தியின்கண் சத்திசிவன் கண்ணாம்.</line>
</verse>

<verse>
<line>மந்திரங்கண் முதலைந்துங் கலையைந்தின் வியாத்தி</line>
<line>	மருவுமந் திரமிரண்டு பதங்க ணாலே</line>
<line>ழந்தநிலை யெழுத்தொன்று புவன நூற்றெட்</line>
<line>	டவனிதத் துவமொன்று நிவிர்த்தியயன் றெய்வம்</line>
<line>வந்திடுமந் திரமிண்டு பதங்கண் மூவேழ் </line>
<line>	வன்னங்க ணாலாறு புரமைம்பத் தாறு</line>
<line>தந்திடுந்தத் துவங்களிரு பத்து மூன்று</line>
<line>	தரும்பிரதிட் டாகலைமா லதிதெய்வந் தானாம்.</line>
</verse>

<verse>
<line>வித்தையின்மந் திரமிரண்டு பதநா லைந்து</line>
<line>	விரவுமெழுத் தேழுபிர மிருபத் தேழு</line>
<line>தத்துவமு மோரேழு தங்குமதி தெய்வந்</line>
<line>	தாவிலுருத் திரனாகுஞ் சாந்தி தன்னின்</line>
<line>னைத்தனமந் திரமிரண்டு பதங்கள்பதி னொன்று</line>
<line>	வன்னமொரு மூன்றுபுரம் பதினெட் டாகு</line>
<line>முத்தமமாந் தத்துவமு மொருமூன் றாகு</line>
<line>	முணரிலதி தேவதையு முயரீச னாமே.</line>
</verse>

<verse>
<line>சாந்தியா தீதகலை தன்னின்மந் திரங்க</line>
<line>	டாமூன்று பதமொன்றக் கரங்கள்பதி னாறு</line>
<line>வாய்ந்தபுர மூவைந்து தத்துவங்க ளிரண்டு</line>
<line>	மருவுமதி தேவதையு மன்னுசதா சிவரா</line>
<line>மேய்ந்தமுறை மந்திரங்கள் பதினொன்று பதங்க</line>
<line>	ளெண்பத்தொன் றக்கரங்க ளைம்பத்தொன் றாகு</line>
<line>மாய்ந்தபுர மிருநூற்றோ டிருபத்து நாலா</line>
<line>	மறிதருதத் துவமுப்பத் தாறுகலை யைந்தே.</line>
</verse>

<verse>
<line>மூன்றுதிறத் தணுக்கள் செயுங் கன்மங் கட்கு</line>
<line>	முன்னிலையா மூவிரண்டா மத்து வாவி</line>
<line>னான்றமுறை யவையருத்தி யறுத்துமல முதிர்வித்</line>
<line>	தரும்பருவ மடைதலுமே யாசா னாகித்</line>
<line>தோன்றிநுக ராதவகை முற்செய் கன்மத்</line>
<line>	துகள றுத்தங் கத்துவாத் துடக்கறவே சோதித்</line>
<line>தேன்றவுடற் கன்மமனு பவத்தினா லறுத்திங்</line>
<line>	கினிச்செய்கன்ம மூலமல ஞானத்தா ல்லிடிப்பன்.</line>
</verse>

<verse>
<p-title>இரண்டாமதிகரணம்</p-title>

<line>புறச்சமய நெறிநின்று மகச்சமயம் புக்கும்</line>
<line>	புகன்மிருதி வழியுழன்றும் புகலுமாச் சிரம</line>
<line>அறத்துறைக ளவையடைந்து மருந்தவங்கள் புரிந்து</line>
<line>	மருங்கலைகள் பலதெரிந்து மாரணங்கள் படித்துஞ்</line>
<line>சிறப்புடைய புராணங்க ளுணர்ந்தும் வேத</line>
<line>	சிரப்பொருளை மிகத்தெளிந்துஞ் சென்றாற் சைவத்</line>
<line>திறத்தடைவ ரிதிற்சரியை கிரியா யோகஞ்</line>
<line>	செலுத்தியபின் ஞானத்தாற் சிவனடியைச் சேர்வர்.</line>
</verse>

<verse>
<line>இம்மையே யீரெட்டாண் டெய்தியெழி லாரு</line>
<line>	மேந்திழையார் முத்தியென்று மிருஞ்சுவர்க்க முத்தி</line>
<line>யம்மையே யென்றுமுத்தி யைந்து கந்த</line>
<line>	மறக்கெடுகை யென்றுமட்ட குணமுத்தி யென்று</line>
<line>மெய்ம்மையே பாடாணம் போல்கைமுத்தி யென்றும்</line>
<line>	விவேகமுத்தி யென்றுந்தன் மெய்வடிவாஞ் சிவத்தைச்</line>
<line>செம்மையே பெறுகைமுத்தி யென்றுஞ்செப் புவர்கள்</line>
<line>	சிவனடியைச் சேருமுத்தி செப்புவதிங்கி யாமே.</line>
</verse>

<verse>
<line>ஓதுசம யங்கள்பொரு ளுணரு நூல்க</line>
<line>	ளொன்றோடொன் றொவ்வாம லுளபலவு மிவற்றுள்</line>
<line>யாதுசம யம்பொருணூல் யாதிங் கென்னி</line>
<line>	னிதுவாகு மதுவல்ல தெனும்பிணக்க தின்றி</line>
<line>நீதியினா னிவையெல்லா மோரிடத்தே காண</line>
<line>	நின்றதியா தொருசமய மதுசமயம் பொருணூ</line>
<line>லாதலினா னிவையெல்லா மருமறையா கமத்தே</line>
<line>	யடங்கியிடு மவையிரண்டு மரனடிக்கீ ழடங்கும்.</line>
</verse>

<verse>
<line>அருமறையா கமமுதனூ லனைத்துமுரைக் கையினா</line>
<line>	னளப்பரிதா மப்பொருளை யரனருளா லணுக்க</line>
<line>டருவர்கள்பின் றனித்தனியே தாமறிந்த வளவிற்</line>
<line>	றர்க்கமொடுத் தரங்களினாற் சமயஞ்சா தித்து</line>
<line>மிருதிபுரா ணங்கலைகண் மற்று மெல்லா</line>
<line>	மெய்ந்நூலின் வழிபுடையா மங்கம்வே தாங்கஞ்</line>
<line>சுருதிசிவா கமமொழியச் சொல்லுவதொன் றில்லை</line>
<line>	சொல்லுவார் தமக்கறையோ சொல்லொ ணாதே.</line>
</verse>

<verse>
<line>வேதநூல் சைவநூ லென்றிரண்டே நூல்கள்</line>
<line>	வேறுரைக்கு நூலிவற்றின் விரிந்த நூல்க</line>
<line>ளாதிநூ லநாதியம லன்றருநூ லிரண்டு</line>
<line>	மாரணநூல் பொதுசைவ மருஞ்சிறப்பு நூலாம்</line>
<line>நீதியினா னுலகர்க்குஞ் சத்திநிபா தர்க்கு</line>
<line>	நிகழ் த்தியது நீண்மறையி னொழிபொருள்வே தாந்தத்</line>
<line>தீதில்பொருள் கொண்டுரைக்கு நூல்சைவம் பிறநூ</line>
<line>	றிகழ் பூர்வஞ் சிவாகமங்கள் சித்தாந்த மாகும்.</line>
</verse>

<verse>
<line>சித்தாந்தத் தேசிவன்றன் றிருக்கடைக்கண் சேர்த்திச்</line>
<line>	சென்னமொன்றி லேசீவன் முத்த ராக</line>
<line>வைத்தாண்டு மலங்கழுவி ஞான வாரி</line>
<line>	மடுத்தானந் தம்பொழிந்து வரும்பிறப்பை யறுத்து</line>
<line>முத்தாந்தப் பாதமலர்க் கீழ் வைப்ப னென்று</line>
<line>	மொழிந்திடவு முலகரெல்லா மூர்க்க ராகிப்</line>
<line>பித்தாந்தப் பெறும்பிதற்றுப் பிதற்றிப் பாவப்</line>
<line>	பெருங்குழியில் வீழ் ந்திடுவ ரிதுவென்ன பிராந்தி.</line>
</verse>

<verse>
<line>இறைவனா வான்ஞான மெல்லா மெல்லா</line>
<line>	முதன்மையனுக் கிரகமெல்லா மியல்புடையா னியம்பு</line>
<line>மறைகளா கமங்களினா னறிவெல்லாந் தோற்று</line>
<line>	மரபின்வழி வருவோர்க்கும் வாரா தோர்க்கு</line>
<line>முறைமையினா லின்பத்துன் பங்கொடுத்த லாலே</line>
<line>	முதன்மையெலா மறிதுமுயங் கிரண்டு போகத்</line>
<line>திறமதனால் வினையறுக்குஞ் செய்தியாலே</line>
<line>	சேருமனுக் கிரகமெலாங் காணுதுநாஞ் சிவற்கே.</line>
</verse>

<verse>
<line>சன்மார்க்கஞ் சகமார்க்கஞ் சற்புத்ர மார்க்கந்</line>
<line>	தாதமார்க் கம்மென்றுஞ் சங்கரனை யடையு</line>
<line>நன்மார்க்க நாலவைதா ஞான யோக</line>
<line>	நற்கிரியா சரியையென நவிற்றுவதுஞ் செய்வர்</line>
<line>சன்மார்க்க முத்திகள்சா லோக்கியசா மீப்ய</line>
<line>	சாரூப்ய சாயுச்ய மென்றுசதுர் விதமா</line>
<line>முன்மார்க்க ஞானத்தா லெய்து முத்தி</line>
<line>	முடிவென்பர் மூன்றினுக்கு முத்திபதமென்பர்.</line>
</verse>

<verse>
<line>தாதமார்க் கஞ்சாற்றிற் சங்கரன்றன் கோயிற்</line>
<line>	றலமலகிட் டிலகுதிரு மெழுக்குஞ் சார்த்திப்</line>
<line>போதுகளுங் கொய்துபூந் தார்மாலை கண்ணி</line>
<line>	புனிதற்குப் பலசமைத்துப் புகழ் ந்து பாடித்</line>
<line>தீதிறிரு விளக்கிட்டுத் திருநந்த வனமுஞ்</line>
<line>	செய்துதிரு வேடங்கண் டாலடியேன் செய்வதி</line>
<line>யாதுபணி யீரென்று ப்பணிந்தவர்தம் பணியு</line>
<line>	மியற்றுவதிச் சரியைசெய்வோ ரீசனுல கிருப்பர்.</line>
</verse>

<verse>
<line>புத்திரமார்க் கம்புகலிற் புதியவிரைப் போது</line>
<line>	புகையொளிமஞ் சனமமுது முதல்கொண் டைந்து</line>
<line>சுத்திசெய்தா சனமூர்த்தி மானுஞ்</line>
<line>	சோதியையும் பாவித்தா வாகித்துச் சுத்த</line>
<line>பத்தியினா லருச்சித்துப் பரவிப் போற்றிப்</line>
<line>	பரிவினொடு மெரியில்வரு காரியமும் பண்ணல்</line>
<line>நித்தலுமிக் கிரியையினை யியற்று வோர்க</line>
<line>	ணின்மலன்ற னருகிருப்பர் நினையுங் காலே</line>
</verse>

<verse>
<line>சகமார்க்கம் புலனொடுக்கித் தடுத்தவளி யிரண்டுஞ்</line>
<line>	சலிப்பற்று முச்சதுர முதலாதா ரங்க</line>
<line>ளகமார்க்க மறிந்தவற்றி னரும்பொருள்க ளுணர்ந்தங்</line>
<line>	கணைந்துபோய் மேலேறி யலர்மதிமண் டலத்தின்</line>
<line>முகமார்க்க வமுதுடல முட்டத் தேக்கி</line>
<line>	முழுச்சோதி நினைந்திருத்தன் முதலாக வினைக</line>
<line>ளுகமார்க்க வட்டாங்க யோக முற்று</line>
<line>	முழத்தலுழந் தவர்சிவன்ற னுருவத்தைப் பெறுவர்</line>
</verse>

<verse>
<line>சன்மார்க்கஞ் சகலகலை புராண வேத</line>
<line>	சாத்திரங்கள் சமயங்க டாம்பலவு முணர்ந்து</line>
<line>பன்மார்க்கப் பொருள்பலவுங் கீழாக மேலாம்</line>
<line>	பதிபசுபா சந்தெரித்துப் பரசிவனைக் காட்டு</line>
<line>நன்மார்க்க ஞானத்தை நாடி ஞான</line>
<line>	ஞேயமொடு ஞாதிருவு நாடா வண்ணம்</line>
<line>பின்மார்க்கச் சிவனுடனாம் பெற்றி ஞானப்</line>
<line>	பெருமையுடை யோர்சிவனைப் பெறுவர் காணே.</line>
</verse>

<verse>
<line>ஞானநூ றனையோத லோதுவித்த</line>
<line>	னற்பொருளைக் கேட்பித்த றான்கேட்ட னன்றா</line>
<line>ஈனமிலாப் பொருளதனைச் சிந்தித்த லைந்து</line>
<line>	மிறைவனடி யடைவிக்கு மெழின்ஞான பூசை</line>
<line>யூனமிலாக் கன்மங்க டபஞ்செபங்க டியான</line>
<line>	மொன்றுக்கொன் றுயருமிவை யூட்டுவது போக</line>
<line>மானமையான் மேலான ஞானத்தா லரனை</line>
<line>	யருச்சிப்பர் வீடெய்த வறிந்தோ ரெல்லாம்.</line>
</verse>

<verse>
<line>கேட்டலுடன் சிந்தித்த றெளித னிட்டை</line>
<line>	கிளத்தலென வீரிரண்டாங் கிளக்கின் ஞானம்</line>
<line>வீட்டையடைந் திடுவர் நிட்டை மேவினோர்கண்</line>
<line>	மேவாது தப்பினவர் மேலாய பதங்கட்</line>
<line>கீட்டியயுண் ணியநாத ராகி யின்ப</line>
<line>	மினிதுநுகர்ந் தரனருளா லிந்தப் பார்மே</line>
<line>னாட்டியநற் குலத்தினில்வந் தவதரித்துக் குருவான்</line>
<line>	ஞானநிட்டை யடைந்தடைவர் நாதன் றாளே.</line>
</verse>

<verse>
<line>தானமியா கந்தீர்த்த மாச்சிரமந் தவங்கள்</line>
<line>	சாந்திவிர தங்கன்ம யோகங்கள் சரித்தோ</line>
<line>ரீனமிலாச் சுவர்க்கம்பெற் றிமைப்பளவின் மீள்வ</line>
<line>	ரீசனியோ கக்கிரியா சரியையினி னின்றோ</line>
<line>ரூனமிலா முத்திபதம் பெற்றுலக மெல்லா</line>
<line>	மொடுங்கும்போ தரன்முனிலா தொழியினுற்ப</line>
<line>ஞானநெறி யடைந்தடைவர் சிவனை யங்கு [வித்து</line>
<line>	நாதனே முன்னிற்கி னணுகுவர்நற் றாளே.</line>
</verse>

<verse>
<line>சிவஞானச் செயலுடையோர் கையிற் றானந்</line>
<line>	திலமளவே செய்திடினு நிலமலைபோற் றிகழ் ந்து</line>
<line>பவமாயக் கடலினழுந் தாதவகை யெடுத்துப்</line>
<line>	பரபோகந் துய்ப்பித்துப் பாசத்தை யறுக்கத்</line>
<line>தவாம்ரும் பிறப்பொன்னிற் சாரப் பண்ணிச்</line>
<line>	சரியைகிரி யாயோகந் தன்னினுஞ்சா ராமே</line>
<line>நவமாகுந் தத்துவஞா நத்தை நல்கி</line>
<line>	நாதனடிக் கமலங்க ணணுகுவிக்குந் தானே.</line>
</verse>

<verse>
<line>ஞானத்தால் வீடென்றே நான்மறைகள் புராண</line>
<line>	நல்லவா கமஞ்சொல்ல வல்லவா மென்னு</line>
<line>மூனத்தா ரென்கடவ ரஞ்ஞா னத்தா</line>
<line>	லுறுவதுதான் பந்தமுயர் மெய்ஞ்ஞா னந்தா</line>
<line>னானத்தா லதுபோவ தலர்கதிர்முன் னிருள்போ</line>
<line>	லஞ்ஞானம் விடப்பந்த மறுமுத்தி யாகு</line>
<line>மீனத்தார் ஞானங்க ளல்லா ஞான</line>
<line>	மிறைவனடி ஞானமே ஞான மென்பர்.</line>
</verse>

<verse>
<line>சூரியகாந் தக்கல்லி னிடத்தே செய்ய</line>
<line>	சுடர்தோன்றி யிடச்சோதி சோன்று மாபோ</line>
<line>லாரியனா மாசான்வந் தருளாற் றோன்ற</line>
<line>	வடிஞான மான்மாவிற் றோன்றுந் தோன்றத்</line>
<line>தூரியனாஞ் சிவன்றோன்றுந் தானுந் தோன்றுந்</line>
<line>	தொல்லுலக மெல்லாந்தன் னுள்ளே தோன்று</line>
<line>நேரியனாய்ப் பரியனுமா யுயிர்க்குயிரா யெங்கு</line>
<line>	நின்றநிலை யெல்லாமுன் னிகழ் ந்து தோன்றும்.</line>
</verse>

<verse>
<line>மிக்கதொரு பக்குவத்தின் மிகுசத்தி நிபாத</line>
<line>	மேவுதலு ஞானம்விளைந் தோர்குருவி னருளாற்</line>
<line>புக்கநுட்டித் தேநிட்டை புரிந்து ளோர்கள்</line>
<line>	பூதலத்திற் புகழ் சீவன் முத்த ராகித்</line>
<line>தக்கபிரி யாப்பிரிய மின்றி யோட்டிற்</line>
<line>	றபநியத்திற் சமபுத்தி பண்ணிச்சங் கரனோ</line>
<line>டொக்கவுறைந் திவரவனை யவனிவரை விடாதே</line>
<line>	யுடைந்தையாய்ச் சிவன்றோற்ற மொன்றுமே</line>
<line>							காண்பர்.</line>
</verse>

<verse>
<line>அறியாமை யறிவகற்றி யறிவி னுள்ளே</line>
<line>	யறிவுதனை யருளினா னறியாதே யறிந்து</line>
<line>குறியாதே குறித்தந்தக் கரணங்க ளோடுங்</line>
<line>	கூடாதே வாடாதே குழைந்திருப்பை யாயிற்</line>
<line>பிறியாத சிவன்றானே பிறிந்து தோன்றிப்</line>
<line>	பிரபஞ்ச பேதமெல்லாந் தானாய்த் தோன்றி</line>
<line>நெறியாலே யிவையெல்லா மல்ல வாகி</line>
<line>	நின்றென்றுந் தோன்றிடுவ னிராதார னாயே.</line>
</verse>

<verse>
<line>புண்ணியமே னோக்குவிக்கும் பாவங்கீழ்  நூக்கும்</line>
<line>	புண்ணியனைப் பூசித்த புண்ணியத் தினாலே</line>
<line>நண்ணியஞா னத்தினா லிரண்டினையு மறுத்து</line>
<line>	ஞாலமொடு கீழ் மேலு நண்ணா னாகி</line>
<line>யெண்ணுமிக லோகத்தே முத்திபெறு மிவன்றா</line>
<line>	னெங்கெழிலென் ஞாயிறெமக் கென்றுகுறை வின்றிக்</line>
<line>கண்ணுதற னிறைவதனிற் கலந்து காயங்</line>
<line>	கழிந்தக்கா லெங்குமாய்க் கருதரன்போ னிற்பன்.</line>
</verse>

<verse>
<line>ஞாலமதின் ஞானநிட்டை யுடையோ ருக்கு</line>
<line>	நன்மையொடு தீமையிலை நாடுவதொன் றில்லை</line>
<line>சீலமிலை தவமில்லை விரதமொடாச் சிரமச்</line>
<line>	செயலில்லை தியானமிலை சித்தமல மில்லை</line>
<line>கோலமிலை புலனில்லை கரண மில்லை</line>
<line>	குணமில்லை குறியில்லை குலமு மில்லை</line>
<line>பாலருட னுன்மத்தர் பிசாசர்குண மருவிப்</line>
<line>	பாடலினொ டாடலிவை பயின்றிடினும் பயில்வர்.</line>
</verse>

<verse>
<line>தேசமிடங் காலந்திக் காசனங்க ளின்றிச்</line>
<line>	செய்வதொன்று போற்செய்யாச் செயலதனைச் செய்தங்</line>
<line>கூசல்படு மனமின்றி யுலாவ னிற்ற</line>
<line>	லுறக்கமுணர் வுண்டிபட் டினியிருத்தல் கிடத்தன்</line>
<line>மாசதனிற் றூய்மையினின் வறுமை வாழ் வின்</line>
<line>	வருத்தத்திற் றிருத்தத்தின் மைதுனத்திற் சினத்தி</line>
<line>னாசையினின் வெறுப்பினிவை யல்லாது மெல்லா</line>
<line>	மடைந்தாலு ஞானிகடா மரனடியை யகலார்</line>
</verse>

<verse>
<line>இந்நிலை தானில்லையே லெல்லா மீச</line>
<line>	னிடத்தினினு மீசனெல்லா விடத்தினினு நின்ற</line>
<line>அந்நிலையை யறிந்தந்தக் கரணங்க ளடக்கி</line>
<line>	யறிவதொரு குறிகுருவி னருளினா லறிந்து</line>
<line>மன்னுசிவன் றனையடைந்து நின்றவன்ற னாலே</line>
<line>	மருவுபசு கரணங்கள் சிவகரண மாகத்</line>
<line>துன்னியசாக் கிரமதனிற் றுரியா தீதந்</line>
<line>	தோன்றமுயல் சிவாநுபவஞ் சுவாநுபூ திகமாம்</line>
</verse>

<verse>
<line>சாக்கிரத்தே யதீதத்தைப் புரிந்தவர்க ளுலகிற்</line>
<line>	சருவசங்க நிவிர்த்திவந்த தபோதனர்க ளிவர்கள்</line>
<line>பாக்கியத்தைப் பகர்வதுவெ னிம்மையிலே யுயிரின்</line>
<line>	பற்றறுத்துப் பரத்தையடை பராவுசிவ ரன்றோ</line>
<line>ஆக்குமுடி கவித்தரசாண் டவர்களரி வையரோ</line>
<line>	டனுபவித்தங் கிருந்திடினு மகப்பற்றற் றிருப்பர்</line>
<line>நோக்கியிது புரியாதோர் புறப்பற்றற் றாலு</line>
<line>	நுழைவர்பிறப் பினின்வினைக ணுங்கி டாவே.</line>
</verse>

<verse>
<p-title>மூன்றாமதிகரணம்</p-title>

<line>கரிவிகழிந் தாற்காணா ரொன்றுமெனிற் காணார்</line>
<line>	காணாதார் கன்னிகைதான் காமரசங் காணாள்</line>
<line>மருவியிரு வரும்புணர வந்த வின்பம்</line>
<line>	வாயினாற் பேசரிது மணந்தவர்தா முணர்வர்</line>
<line>உருவினுயிர் வடிவதுவு முணர்ந்திலர்காண் சிவனை</line>
<line>	யுணராதா ருணர்வினா லுணர்வதுகற் பனைகாண்</line>
<line>அருள்பெறினவ் விருவரையு மறிவிறந்தங் கறிவ</line>
<line>	ரறியாரேற் பிறப்பும்விடா தாணவமு மறாதே.</line>
</verse>

<verse>
<p-title>நான்காமதிகரணம்</p-title>

<line>பன்னிறங்க ளவைகாட்டும் படிகம்போ லுள்ளம்</line>
<line>	பலபுலன்க ணிறங்காட்டும் பரிச பார்த்திட்</line>
<line>டிந்நிறங்க ளென்னிறமன் றென்று தன்ற</line>
<line>	னெழினிறங்கண் டருளினா லிந்நிறத்தின் வேறாய்ப்</line>
<line>பொய்ந்நிறவைம் புலநிறங்கள் பொய்யெனமெய் கண்டான்</line>
<line>	பொருந்திடுவன் சிவத்தினொடும் போதான் பின்னை</line>
<line>முன்னிறைநீர் சிறைமுறிய முடுகி யோடி</line>
<line>	முந்நீர்சேர்ந் தந்நீராய்ப் பின்னீங்கா முறைபோல்</line>
</verse>

<verse>
<line>எங்குந்தா னென்னினா மெய்த வேண்டா</line>
<line>	வெங்குமில னென்னின்வே றிறையு மல்லன்</line>
<line>அங்கஞ்சே ருயிர்போல்வ னென்னி னங்கத்</line>
<line>	தவயவங்கள் கண்போலக் காணா வான்மா</line>
<line>இங்குநா மியம்புந்தத் துவங்களின்வைத் தறிவ</line>
<line>	திறைஞானந் தந்துதா ளீதல்சுட ரிழந்த</line>
<line>துங்கவிழிச் சோதியுமுட் சோதியும்பெற் றாற்போற்</line>
<line>	சோதிக்குட் சோதியாய்த் தோன்றிடுவன் காணே.</line>
</verse>

<verse>
<line>பாசிபடு குட்டத்திற் கல்லினைவிட் டெறியப்</line>
<line>	படும்பொழுது நீங்கியது விடும்பொழுதிற் பரக்கும்</line>
<line>ஆசுபடு மலமாயை யருங்கன்ம மனைத்தும்</line>
<line>	அரனடியை யுணரும்போ தகலும்பின் னணுகும்</line>
<line>நேசமொடுந் திருவடிக்கீழ்  நீங்காதே தூங்கும்</line>
<line>	நினைவுடையோர் நின்றிடுவர் நிலையதுவே யாகி</line>
<line>யாசையொடு மங்குமிங்கு மாகியல மருவோ</line>
<line>	ரரும்பாச மறுக்கும்வகை யருளின்வழி யுரைப்பாம்.</line>
</verse>

<verse>

</verse>

<verse>
<p-title>ஒன்பதாஞ் சூத்திரம்</p-title>
<line>பாசஞா னத்தாலும் பசுஞானத் தாலும்</line>
<line>	பார்ப்பரிய பரம்பரனைப் பதிஞானத் தாலே</line>
<line>நேசமொடு முள்ளத்தே நாடிப் பாத</line>
<line>	நீழற்கீழ்  நில்லாதே நீங்கிப் போதி</line>
<line>னாசைதரு முலகமெலா மலகைத்தே ராமென்</line>
<line>	றறிந்தகல வந்நிலையே யாகும் பின்னு</line>
<line>மோசைதரு மஞ்செழுத்தை விதிப்படியுச் சரிக்க</line>
<line>	வுள்ளத்தே புகுந்தளிப்ப னூனமெலா மோட.</line>
</verse>

<verse>

</verse>

<verse>
<p-title>முதலதிகரணம்</p-title>
<line>வேதசாத் திரமிருதி புராணகலை ஞானம்</line>
<line>	விரும்பசபை வைகரியா தித்திறங்கண் மேலா</line>
<line>நாதமுடி வானவெல்லாம் பாச ஞானம்</line>
<line>	நணுகியான் மாவிவைகீழ்  நாட லாலே</line>
<line>காதலினா னான்பிரம மென்னு ஞாங்</line>
<line>	கருதுபசு ஞானமிவ னுடலிற் கட்டுண்</line>
<line>டோதியுணர்ந் தொன்றொன்றா வுணர்த்திடலாற் பசுவா</line>
<line>	மொன்றாகச் சிவனியல்பி னுணர்ந்திடுவன் காணே</line>
<line>கரணங்கள் கெடவிருக்கை முத்தியா மென்னிற்</line>
<line>	கதியாகுஞ் சினைமுட்டை கருமரத்தி னுயிர்கண்</line>
<line>மரணங்கொண் டிடவுறங்க மயங்கிமூர்ச் சிக்க</line>
<line>	வாயுத்தம் பனைபண்ண வல்விடத்தை யடையச்</line>
<line>சரணங்கள் புகுநிழல்போற் றனையடையுஞ் சமாதி</line>
<line>	தவிராது மலமிதுவும் பசுஞான மாகு</line>
<line>மரணங்க ளெரித்தவன்ற னடியையறி விறந்தங்</line>
<line>	கறிந்திடீர் செறிந்ததுக ளகற்றி டீரே.</line>
</verse>

<verse>
<line>சிவனையவன் றிருவடிஞா னத்தாற் சேரச்</line>
<line>	செப்புவது செயல்வாக்குச் சிந்தை யெல்லா</line>
<line>மவனையணு காவென்று மாத லானு</line>
<line>	மவனடியவ் வொளிஞான மாத லானு</line>
<line>மிவனுமியான் றுவக்குதிர மிறைச்சி மேதை</line>
<line>	யென்புமச்சை சுக்கிலமோ விந்திரியக் கொத்தோ</line>
<line>அவமகல வெனையறியே னெனுமைய மகல</line>
<line>	வடிகாட்டி யான்மாவைக் காட்டலானும்.</line>
</verse>

<verse>
<line>கண்டிடுங்கண் டனைக்காணா கரணங்காணா</line>
<line>	கரணங்க டமைகாணா வுயிருங் காணா</line>
<line>வுண்டியம ருயிர்தானுந் தன்னைக் காணா</line>
<line>	துயிர்க்குயிரா மொருவனையுங் காணா தாகுங்</line>
<line>கண்டசிவன் றனைக்காட்டி யுயிருங் காட்டிக்</line>
<line>	கண்ணாகிக் கரணங்கள் காணாம னிற்பன்</line>
<line>கொண்டரனை யுளத்திற்கண் டடிகூடிற் பாசங்</line>
<line>	கூடாது கூடிடினுங் குறித்தடியி னிறுத்தே.</line>
</verse>

<verse>
<p-title>இரண்டாமதிகரணம்</p-title>

<line>குறித்தடியி னின்றட்ட குணமெட்டுச் சித்தி</line>
<line>	கோகநதன் முதல்வாழ் வு குலவுபத மெல்லாம்</line>
<line>வெறுத்துநெறி யறுவகையு மேலொடுகீ ழடங்க</line>
<line>	வெறும்பொயென நினைந்திருக்க மேலொடுகீ ழில்லா</line>
<line>னிறுத்துவதோர் குணமில்லான் றன்னையொரு வர்க்கு</line>
<line>	நினைப்பரியா னொன்றுமிலா னேர்படவந் துள்ளே</line>
<line>பொறுப்பரிய பேரன்பை யருளியதன் வழியே</line>
<line>	புகுந்திடுவ னெங்குமிலாப் போகத்தைப் புரிந்தே.</line>
</verse>

<verse>

</verse>

<verse>
<p-title>மூன்றாமதிகரணம்</p-title>
<line>கண்டவிவை யல்லேனா னென்றகன்று காணாக்</line>
<line>	கழிபரமு நானல்லே னெனக்கருதிக் கசிந்த</line>
<line>தொண்டினொடு முளத்தவன்றா னின்றகலப் பாலே</line>
<line>	சோகமெனப் பாவிக்கத் தோன்றுவன்வே றின்றி</line>
<line>விண்டகலு மலங்களெல்லாங் கருடதியா னத்தால்</line>
<line>	விடமொழியு மதுபோல விமலதையு மடையும்</line>
<line>பண்டைமறை களுமதுநா னானே னென்று</line>
<line>	பாவிக்கச் சொல்லுவதிப் பாவகத்தைக் காணே.</line>
</verse>

<verse>
<line>அஞ்செழுத்தா லான்மாவை யரனுடைய பரிசு</line>
<line>	மரனுருவு மஞ்செழுத்தா லமைந்தமையு மறிந்திட்</line>
<line>டஞ்செழுத்தா லங்ககர நியாசம் பண்ணி</line>
<line>	யான்மாவி னஞ்செழுத்தா லிதயத் தர்ச்சித்</line>
<line>தஞ்செழுத்தாற் குண்டலியி னனலை யோம்பி</line>
<line>	யணைவரிய கோதண்ட மணைந்தருளின் வழிநின்</line>
<line>றஞ்செழுத்தை விதிப்படியுச் சரிக்கமதி யருக்க</line>
<line>	னணையரவம் போற்றோன்று மான்மாவி லரனே.</line>
</verse>

<verse>
<line>நாட்டுமித யந்தானு நாபியினி லடியாய்</line>
<line>	ஞாலமுத றத்துவத்தா லெண்விர னாளத்தாய்</line>
<line>மூட்டுமோ கிநிசுத்த வித்தைமல ரெட்டாய்</line>
<line>	முழுவிதழெட் டக்கரங்கண் முறைமையினி லுடைத்</line>
<line>காட்டுகம லாசனமே சீசர்சதர சிவமுங்		[தாய்க்</line>
<line>	கலாமூர்த்த மாமிவற்றின் கண்ணாகுஞ் சத்தி</line>
<line>வீட்டையருள் சிவன்மூர்த்தி மானாகிச் சத்தி</line>
<line>	மேலாகி நிற்பனிந்த விளைவறிந்து போற்றே.</line>
</verse>

<verse>
<line>அந்தரி யாகந்தன்னை முத்திசா தனமா</line>
<line>	வறைந்திடுவ ரதுதானு மான்மசுத்தி யாகுங்</line>
<line>கந்தமலர் புகையொளிமஞ் சனமமுது முதலாக்</line>
<line>	கண்டனவெ லாமனத்தாற் கருதிக்கொண்டு</line>
<line>சிந்தைதனை லாச்சிக்கச் சிவனைஞா னத்தாற்</line>
<line>	சிந்திக்கச் சிந்திக்கத் தர்ப்பணத்தை விளக்க</line>
<line>வந்திடுமவ் வொளிபோல மருவியர னுளத்தே</line>
<line>	வரவரவந் திடுவன்பின் மலமான தறுமே.</line>
</verse>

<verse>
<line>புறம்பேயு மரன்கழல்கள் பூசிக்க வேண்டிற்</line>
<line>	பூமரத்தின் கீழுதிர்ந்த போதுகளுங் கொண்டு</line>
<line>சிறந்தாருஞ் சீர்ச்சிவனை ஞானத்தா லங்குச்</line>
<line>	சிந்திக்கும் படியிங்குச் சிந்தித்துப் போற்றி</line>
<line>யறம்பாவங் கட்குநா மென்கடவே மென்று</line>
<line>	மாண்டவனைக் கண்டக்கா லகம்புறமென் னாதே</line>
<line>திறம்பாதே பணிசெய்து நிற்கை யன்றோ</line>
<line>	சீரடியார் தம்முடைய செய்தி தானே.</line>
</verse>

<verse>
<line>இந்தனத்தி னெரிபாலி னெய்பழத்தி னிரத [னிறைவன்</line>
<line>	மெள்ளின்க ணெண்ணெயும்போ லெங்குமுள</line>
<line>வந்தனைசெய் தெவ்விடத்தும் வழிபடவே யருளு</line>
<line>	மலமறுப்போ ரான்மாவின் மலரடிஞா னத்தாற்</line>
<line>சிந்தனைசெய் தர்ச்சிக்கச் சிவனுளத்தே தோன்றித்</line>
<line>	தீயிரும்பைச் செய்வதுபோற் சீவன் றன்னைப்</line>
<line>பந்தனையை யறுத்துத்தா னாக்கித்தன் னுருவப்</line>
<line>	பரப்பெல்லாங் கொடுபோந்து பதிப்பனிவன் பாலே.</line>
</verse>

<verse>
<p-title>பயனியல்</p-title>
<p-title>பத்தாஞ் சூத்திரம்</p-title>

<line>இவனுலகி லிதமகிதஞ் செய்த வெல்லா</line>
<line>	மிதமகித மிவனுக்குக் செய்தார்பா லிசையு</line>
<line>மவனிவனாய் நின்றமுறை யேக னாகி</line>
<line>	யரன்பணியி னின்றிடவு மகலுங் குற்றஞ்</line>
<line>சிவனுமிவன் செய்தியெல்லா மென்செய்தி யென்றுஞ்</line>
<line>	செய்ததெனக் சிவனுக்குச் செய்த தென்றும்</line>
<line>பவமகல வுடனாகி நின்றுகொள்வன் பரிவாற்</line>
<line>	பாதகத்தைச் செய்திடினும் பணியாக்கி விடுமே.</line>
</verse>

<verse>
<p-title>முதலதிகரணம்</p-title>

<line>யான்செய்தேன் பிறர்செய்தா ரென்னதியா னென்னு</line>
<line>	மிக்கோணை ஞானவெரி யால்வெதுப்பி நிமிர்த்துத்</line>
<line>தான்செவ்வே நின்றிடவத் தத்துவன்றா னேரே</line>
<line>	தனையளித்து முன்னிற்கும் வினையொளித் திட்டோடும்</line>
<line>நான்செய்தே னெனுமவர்க்குத் தானங் கின்றி</line>
<line>	நண்ணுவிக்கும் போகத்தைப் பண்ணுவிக்குங் கன்மம்</line>
<line>ஊன்செய்யா ஞானந்தா னுதிப்பி னல்லா</line>
<line>	லொருவருக்கும் யானெனதிங் கொழியா தன்றே.</line>
</verse>

<verse>
<p-title>இரண்டாமதிகரணம்</p-title>

<line>இந்திரிய மெனைப்பற்றி நின்றேயென் வசத்தி</line>
<line>	னிசையாதே தன்வசத்தே யெனையீர்ப்ப திவற்றைத்</line>
<line>தந்தவன்ற னாணைவழி நின்றிடலா லென்றுந்</line>
<line>	தானறிந்திட் டிவற்றினொடுந் தனையுடையான் றாள்கள்</line>
<line>வந்தனைசெய் திவற்றின்வலி யருளினால் வாட்டி</line>
<line>	வட்டமின்றி யிருந்திடவும் வருஞ்செயல்க ளுண்டேன்</line>
<line>முந்தனுடைச் செயலன்று முடித்தொழுக வினைகண்</line>
<line>	மூளவாங் காளாகி மீளா னன்றே.</line>
</verse>

<verse>
<line>சலமிலனாய் ஞானத்தாற் றனையடைந்தார் தம்மைத்</line>
<line>	தானாக்கித் தலைவனவர் தாஞ்செய்வினை தன்னால்</line>
<line>நலமுடனே பிறர்செய்வினை யூட்டி யொழிப் பானாய்</line>
<line>	நணுகாமல் வினையவரை நாடிக் காப்பன்</line>
<line>உலகினி லென்செயலெல்லா முன்விதியே நீயே</line>
<line>	யுண்ணின்றுஞ் செய்வித்துஞ் செய்கின்றா யென்றும்</line>
<line>நிலவுவதோர் செயலெனக்கின் றுன்செயலே யென்றும்</line>
<line>	நினைவார்க்கு வினைகளெல்லாம் நீங்குந் தானே.</line>
</verse>

<verse>
<line>நாடுகளிற் புக்குழன்றுங் காடுகளிற் சரித்து</line>
<line>	நாகமுழை புக்கிருந்துந் தாகமுத றவிர்ந்தும்</line>
<line>நீடுபல காலங்க ணித்தரா யிருந்தும்</line>
<line>	நின்மலஞா னத்தையில்லார் நிகழ் ந்திடுவர் பிறப்பிஒ</line>
<line>ஏடுதரு மலர்க்குழலார் முலைத்தலைக்கே யிடைக்கே</line>
<line>	யெறிவிழியின் படுகடைக்கே கிடந்துமிறை ஞானங்</line>
<line>கூடுமவர் கூடரிய வீடுங் கூடிக்</line>
<line>	குஞ்சித்த சேவடியுங் கும்பிட்டே யிருப்பர்.</line>
</verse>

<verse>
<line>அங்கித்தம் பனைவல்லார்க் கனல்சுடா தாகு</line>
<line>	மெளடதமந் திரமுடையார்க் கருவிடங்க ளேறா</line>
<line>எங்கித்தைக் கன்மமெலாஞ் செய்தாலும் ஞானிக்</line>
<line>	கிருவினைகள் சென்றணையா முற்செய்வினை யிங்குத்</line>
<line>தங்கிப்போம் பாத்திரமுங் குலாலன்வினை தவிர்ந்த</line>
<line>	சக்கரமுங் கந்தித்துச் சுழலு மாபோன்</line>
<line>மங்கிப்போய் வாதனையா லுழல்விக்கு மெல்லா</line>
<line>	மலங்களும்பின் காயமொடு மாயு மன்றே.</line>
</verse>

<verse>

</verse>

<verse>
<p-title>பதினொன்றாஞ் சூத்திரம்</p-title>
<line>காயமொழிந் தாற்சுத்த னாகி யான்மாக்</line>
<line>	காட்டக்கண் டிடுந்தன்மை யுடைய(ன்) கண்ணுக்</line>
<line>கேயுமுயிர் காட்டிக்கண் டிடுமா போல</line>
<line>	வீசனுயிர்க் குக்காட்டிக் கண்டிடுவ னித்தை</line>
<line>யாயுமறி வுடையனா யன்பு செய்ய</line>
<line>	வந்நிலைமை யிந்நிலையி லடைந்தமுரை யாலே</line>
<line>மாயமெலா நீங்கியரன் மலரடிக்கீ ழிருப்பன்</line>
<line>	மாறாத சிவாநுபவ மருவிக் கொண்டே.</line>
</verse>

<verse>
<line>பரஞானத் தாற்பரத்தைத் தரிசித்தோர் பரமே</line>
<line>	பார்த்திருப்பர் பதார்த்தங்கள் பாரார் பார்க்க</line>
<line>வருஞானம் பலஞான மஞ்ஞான விகற்பம்</line>
<line>	வாச்சியவா சகஞானம் வயிந்தவத்தின் கலக்கந்</line>
<line>தருஞானம் போகஞா திருஞான ஞேயந்</line>
<line>	தங்கியஞா னஞ்சங்கற் பனைஞான மாகுந்</line>
<line>திருஞான மிவையெல்லாங் கடந்தசிவ ஞான</line>
<line>	மாதலாற் சீவன்முத்தர் சிவமேகண் டிருப்பர்.</line>
</verse>

<verse>
<line>அநாதியுட லொன்றினைவிட் டொன்றுபற்றிக் கன்மா</line>
<line>	லாயழிந்து வருதலா லந்த மில்லை</line>
<line>பினாதியருள் பெற்றவர்க ணித்தவுரு வத்தைப்</line>
<line>	பெற்றிருக்கை முத்தியெனிற் பெறும்பதமே</line>
<line>							[யிதுவும்</line>
<line>இனாதுநிலை யிதுதானுங் காய முண்டே</line>
<line>	லிருங்கன்ம மாயைமல மெல்லா முண்டாம்</line>
<line>மனாதிதரு முடலாதி காரியத்தா லநாதி</line>
<line>	மலமறுக்கு மருந்தற்றா லுடல்மாயுங் காணே.</line>
</verse>

<verse>
<line>தெரிவரிய மெய்ஞ்ஞானஞ் சேர்ந்த வாறே</line>
<line>	சிவம்பிரகா சிக்குமிங்கே சீவன்முத்த னாகு</line>
<line>முரியமல மெளடதத்தாற் றடுப்புண்ட விடமு</line>
<line>	மொள்ளெரியி னொளிமுன்ன ரிருளுந் தேற்றின்</line>
<line>வருபரல்சேர் நீர்மருவு கலங்கலும்போ லாகி</line>
<line>	மாயாதே தன்சத்தி மாய்ந்து காயந்</line>
<line>திரியுமள வும்முளதாய்ப் பின்பு காயஞ்</line>
<line>	சேராத வகைதானுந் தேயு மன்றே.</line>
</verse>

<verse>
<line>ஆணவந்தா னநாதியந்த மடையா தாகு</line>
<line>	மடையினந்த வான்மாவு மழியுமெனிற் செம்பிற்</line>
<line>காணலுறுங் களிம்பிரத குளிகைபரி சிக்கக்</line>
<line>	கழியுஞ்செம் புருநிற்கக் கண்டோ மன்றே</line>
<line>தாணுவின்றன் கழலணையத் தவிருமலந் தவிர்ந்தாற்</line>
<line>	றான்சுத்த னாயிருக்கை முத்தியரன் றாளைப்</line>
<line>பூணவேண் டுவதொன்று மில்லையெனி னருக்கன்</line>
<line>	புகுதவிருள் போமடியிற் பொருந்தமலம் போமே.</line>
</verse>

<verse>
<line>நெல்லினுக்குத் தவிடுமிக ளநாதி யாயே</line>
<line>	நெல்லைவிட்டு நீங்கும்வகை நின்றநிலை நிகழ் த்தீர்</line>
<line>சொல்லியிடிற் றுகளற்ற வரிசியின்பா லில்லை</line>
<line>	தொக்கிருந்து மற்றொருநெற் றோன்றி டாவாம்</line>
<line>மெல்லவிவை விடுமறவே யிவைபோல வணுவை</line>
<line>	மேவுமல முடல்கன்ம மநாதிவிட்டே நீங்கும்</line>
<line>நல்லசிவ முத்தியின்கட் பெத்தான் மாவை</line>
<line>	நணுகிநிற்கு மாதலா னாசமுமின் றாமே.</line>
</verse>

<verse>
<p-title>முதலதிகரணம்</p-title>

<line>எவ்விடத்து மிறையடியை யின்றியமைந் தொன்றை</line>
<line>	யறிந்தியற்றி யிடாவுயிர்க ளீசன் றானுஞ்</line>
<line>செவ்விதினி லுளம்புகுந்து செய்தியெலா முணர்ந்து</line>
<line>	சேட்டிப்பித் தெங்குமாய்ச் செறிந்து நிற்ப</line>
<line>னிவ்வுயிர்க டோற்றும்போ தவனையின்றித் தோற்றா</line>
<line>	விவற்றினுக்கம் முதலெழுத்துக் கெல்லாமாய் நிற்கு</line>
<line>மவ்வுயிர்போ னின்றிடுவ னாத லானா</line>
<line>	மரனடியை யகன்றுநிற்ப தெங்கே யாமே.</line>
</verse>

<verse>
<p-title>இரண்டாமதிகரணம்</p-title>

<line>எங்குந்தா னிறைந்துசிவ னின்றா னாகி</line>
<line>	லெல்லாருங் காணவே வேண்டுந்தா னென்னி</line>
<line>லிங்குந்தா னந்தகருக் கிரவியிரு ளாகு</line>
<line>	மீசனருட் கண்ணில்லார்க் கொளியாயே யிருளாம்</line>
<line>பங்கந்தா னெழும்பதுமம் பக்குவத்தை யடையப்</line>
<line>	பரிதியலர்த் திடுவதுபோற் பருவஞ்சே ருயிர்க்குத்</line>
<line>துங்கவரன் ஞானக்கண் கொடுத்தருளி னாலே</line>
<line>	சோதிக்குட் சோதியாய்த் தோன்றிடுவன் காணே.</line>
</verse>

<verse>
<line>சென்றணையு நிழல்போலச் சிவனிற்ப னென்னிற்</line>
<line>	சென்றணையு மவன்முதலி சிவத்தையணைந் தொன்றாய்</line>
<line>நின்றதுயிர் கெட்டென்னிற் கெட்டதணை வின்றா</line>
<line>	நின்றதேற் கேடில்லை யணைந்து கெட்ட தென்னிற்</line>
<line>பொன்றினதேன் முத்தியினைப் பெற்றவரார் புகனீ</line>
<line>	பொன்றுகையே முத்தியெனிற் புருடனித்த னன்றா</line>
<line>மொன்றியிடு நீரொடுநீர் சேர்த்தாற்போ லென்னி</line>
<line>	னொரு பொருளா மதிபதியோ டுயிர்பொருளொன் றன்றே.</line>
</verse>

<verse>
<line>செம்பிரத குளிகையினாற் களிம்பற்றுப் பொன்னாய்ச்</line>
<line>	செம்பொனுடன் சேருமலஞ் சிதைந்தாற் சிவன்</line>
<line>நம்பனுடன் கூடுமெனிற் பொன்போ லல்லன்</line>
<line>	நற்குளிகை போலவர னணுகுமலம் போக்கி</line>
<line>யம்பொனடிக் கீழ் வைப்ப னருங்களங்க மறுக்கு</line>
<line>	மக்குளிகை தானும்பொன் னாகா தாகும்</line>
<line>உம்பர்பிரா னுற்பத்தி யாதிகளுக் குரிய</line>
<line>	னுயிர்தானுஞ் சிவாநுபவ மொன்றினுக்கு முரித்தே.</line>
</verse>

<verse>
<line>சிவன்சீவ னென்றிரண்டுஞ் சித்தொன்றா மென்னிற்</line>
<line>	சிவனருட்சித் திவனருளைச் சேருஞ்சித் தவன்றான்</line>
<line>பவங்கேடு புத்திமுத்தி பண்ணுஞ்சித் தவற்றிற்</line>
<line>	படியுஞ்சித் தறிவிக்கப் படுஞ்சித்து மிவன்றா</line>
<line>னவன்றானே யறியுஞ்சித் தாதலினா லிரண்டு</line>
<line>	மணைந்தாலு மொன்றாகா தநந்நியமா யிருக்கு</line>
<line>மிவன்றானும் புத்தியுஞ்சித் திவனாமோ புத்தி</line>
<line>	யிதுவசித்தென் றிடிலவனுக் கிவனுமசித் தாமே.</line>
</verse>

<verse>
<line>இரும்பைக்காந் தம்வலித்தாற் போலியைந்தங் குயிரை</line>
<line>	பெரியிரும்பைச் செய்வதுபோ லிவனைத்தா னாக்கி</line>
<line>யரும்பித்தீ யிந்தனத்தை யழிப்பதுபோன் மலத்தை</line>
<line>	யறுத்தமல னப்பணைந்த வுப்பேபோ லணைந்து</line>
<line>விரும்பிப்பொன் னினைக்குளிகை யொளிப்பதுபோ லடக்கி</line>
<line>	மேளித்துத் தானெல்லாம் வேதிப்பா னாகிக்</line>
<line>கரும்பைத்தே னைப்பாலைக் கனியமுதைக் கண்டைக்</line>
<line>	கட்டியையொத் திருப்பனந்த முத்தியினிற் கலந்தே.</line>
</verse>

<verse>

</verse>

<verse>
<p-title>பன்னிரண்டாஞ் சூத்திரம்</p-title>
<line>செங்கமலத் தாளிணைகள் சேரல் ஒட்டாத்</line>
<line>	திரிமலங்க ளறுத்தீச னேசரோடுஞ் செறிந்திட்</line>
<line>டங்கவர்தந் திருவேட மாலயங்க ளெல்லா</line>
<line>	மரனெனவே தொழுதிறைஞ்சி யாடிப் பாடி</line>
<line>யெங்குமியா மொருவர்க்கு மெளியோ மல்லோம்</line>
<line>	யாவர்க்கு மேலானோ மென்றிருமாப் பெய்தித்</line>
<line>திங்கண்முடி யாரடியா ரடியோ மென்று</line>
<line>	திரிந்திடுவர் சிவஞானச் செய்தியுடை யோரே.</line>
</verse>

<verse>
<p-title>இரண்டாமதிகரணம்</p-title>

<line>ஈசனுக்கன் பில்லா ரடியவர்க்கன் பில்லா</line>
<line>	ரெவ்வுயிர்க்கு மன்பில்லார் தமக்குமன் பில்லார்</line>
<line>பேசுவதென் னறிவில்லாப் பிணங்களைநா மிணங்கிற்</line>
<line>	பிறப்பினிலு மிறப்பினிலும் பிணங்கிடுவர் விடுநீ</line>
<line>யாசையொடு மரனடியா ரடியாரை யடைந்திட்</line>
<line>	டவர்கரும முன்கரும மாகச் செய்து</line>
<line>கூசிமொழிந் தருண்ஞானக் குறியி னின்று</line>
<line>	கும்பிட்டுத் தட்டமிட்டுக் கூத்தாடித் திரியே.</line>
</verse>

<verse>
<p-title>மூன்றாமதிகரணம்</p-title>

<line>அறிவரியான் றனையறிய யாக்கை யாக்கி</line>
<line>	யங்கங்கே யுயிர்க்குயிரா யறிவுகொடுத் தருளாற்</line>
<line>செறிதலினாற் றிருவேடஞ் சிவனுருவே யாகுஞ்</line>
<line>	சிவோகம்பா விக்குமத்தாற் சிவனு மாவர்</line>
<line>குறியதனா லிதயத்தே யரனைக் கூடுங்</line>
<line>	கொள்கையினா லரனாவர் குறியொடுதா மழியு</line>
<line>நெறியதனாற் சிவமேயாய் நின்றிடுவ ரென்றா</line>
<line>	னேசத்தார்த் தொழுதிடுநீ பாசத்தார் விடவே.</line>
</verse>

<verse>
<line>திருக்கோயி லுள்ளிருக்குந் திருமேனி தன்னைச்</line>
<line>	சிவனெனவே கண்டவர்க்குச் சிவனுறைவன் அங்கே</line>
<line>யுருக்கோலி மந்திரத்தா லெனநினையு மவர்க்கு</line>
<line>	முளனெங்கு மிலனிங்கு முளளென் பார்க்கும்</line>
<line>விருப்பாய வடிவாகி யிந்தனத்தி னெரிபோன்</line>
<line>	மந்திரத்தில் வந்துதித்து மிகும்சுரபிக் கெங்கு</line>
<line>முருக்காண வொண்ணாத பால்முலைப்பால் விம்மி</line>
<line>	யொழுகுவது போல்வெளிப்பட் டருளுவனன் பர்க்கே</line>
</verse>

<verse>
<line>ஞானயோ கக்கிரியா சரியை நான்கு</line>
<line>	நாதன்றன் பணிஞானி நாலினுக்கு முரிய</line>
<line>னூனமிலா யோகமுதன் மூன்றினுக்கு முரியன்</line>
<line>	யோகிகிரி யாவான்றா னொண்கிரியை யாதி</line>
<line>யானவிரண் டினுக்குரியன் சரியையினி னின்றோ</line>
<line>	னச்சரியைக் கேயுரிய னாகலினால் யார்க்கு</line>
<line>மீனமிலான் ஞானகுரு வேகுருவு மிவனே</line>
<line>	யீசனிவன் றானென்று மிறைஞ்சி யேத்தே.</line>
</verse>

<verse>
<line>மந்திரத்தான் மருந்துகளால் வாய்த்தவியோ கத்தான்</line>
<line>	மணியிரத குளைகையினான் மற்று மற்றுந்</line>
<line>தந்திரத்தே சொன்னமுறை செய்ய வேத</line>
<line>	சகலகலை ஞானங்க டிரிகால ஞான</line>
<line>மந்தமிலா மணிமாதி ஞானங்க ளெல்லா</line>
<line>	மடைந்திடுமா சானருளா லடிசேர் ஞானம்</line>
<line>வந்திடுமற் றொன்றாலும் வாரா தாகு</line>
<line>	மற்றவையு மவனருளான் மருவு மன்றே.</line>
</verse>

<verse>
<line>பரம்பிரம மிவனென்றும் பரசிவன்றா னென்றும்</line>
<line>	பரஞான மிவனென்றும் பராபரன்றா னென்று</line>
<line>மரன்றருஞ்சீர் நிலையெல்லா மிவனே யென்று</line>
<line>	மருட்குருவை வழிபடவே யவனிவன்றா னாயே</line>
<line>யிரங்கியவா ரணம்யாமை மீனகண்டஞ் சினையை</line>
<line>	யியல்பினொடும் பரிசித்தும் நினைந்தும் பார்த்தும்</line>
<line>பரிந்திவைதா மாக்குமா போற்சிவமே யாக்கும்</line>
<line>	பரிசித்துஞ் சிந்தித்தும் பார்த்துந் தானே.</line>
</verse>

<verse>
<p-title>அருணந்தி தேவநாயனார் அருளிய</p-title>
<line>சிவஞானசித்தியார் சுபக்கம்</line>
<line>முற்றிற்று.</line>
</verse>

</document>