<?xml version="1.0" encoding="utf-8"?>
<?xml-stylesheet type="text/xsl" href="prabandam.xsl"?>

<thirumozi>

<heading>
<author>ஸ்ரீ பேயாழ்வார் அருளிச்செய்த திருமொழி</author>
<title>திவ்யப் பிரபந்தம் (11/14)</title>
<number>11</number>
<total>1</total>
</heading>

<padiyam>
<number>1</number>
<title> மூன்றாம் திருவந்தாதி</title>

<verse>
<line> திருக் கண்டேன்; பொன் மேனி கண்டேன்; திகழும்</line>
<line> அருக்கன் அணி நிறமும் கண்டேன்; செருக் கிளரும்</line>
<line> பொன் ஆழி கண்டேன்; புரி சங்கம் கைக் கண்டேந்</line>
<line> என் ஆழி வண்ணன்பால், இன்று.</line>
</verse>

<verse>
<line> இன்றே கழல் கண்டேன்; ஏழ் பிறப்பும் யான் அறுத்தேந்</line>
<line> பொன் தோய் வரை மார்பில் பூந் துழாய், அன்று</line>
<line> திருக் கண்டு கொண்ட திருமாலே! உன்னை</line>
<line> மருக்கண்டுகொண்டு, என் மனம்.</line>
</verse>

<verse>
<line> மனத்து உள்ளாந்மா கடல் நீர் உள்ளான், மலராள்</line>
<line> தனத்து உள்ளான், தண் துழாய் மார்பன், சினத்துச்</line>
<line> செருநர் உகச் செற்று, உகந்த தேங்கு ஓத வண்ணன்,</line>
<line> வரு நரகம் தீர்க்கும் மருந்து.</line>
</verse>

<verse>
<line> மருந்தும் பொருளும் அமுதமும் தானே-</line>
<line> திருந்திய செங் கண் மால் ஆங்கே பொருந்தியும்</line>
<line> நின்று, உலகம் உண்டு, உமிழ்ந்து, நீர் ஏற்று, மூவடியால்</line>
<line> அன்று உலகம் தாயோன் அடி.</line>
</verse>

<verse>
<line> அடி வண்ணம் தாமரை; அன்று உலகம் தாயோன்</line>
<line> படி வண்ணம் பார்க் கடல் நீர் வண்ணம்; முடி வண்ணம்</line>
<line> ஓர் ஆழி வெய்யோன்; ஒளியும் அஃது அன்றே-</line>
<line> ஆர் ஆழி கொண்டாற்கு அழகு.</line>
</verse>

<verse>
<line> அழகு அன்றே ஆழியாற்கு ஆழி நீர் வண்ணம்?</line>
<line> அழகு அன்றே அண்டம் கடத்தல்? அழகு அன்றே-</line>
<line> அங்கை நீர் ஏற்றாற்கு, அலர் மேலோன் கால் கழுவ,</line>
<line> கங்கை நீர் கான்ற கழல்?</line>
</verse>

<verse>
<line> கழல் தொழுதும், வா, நெஞ்சே!-கார்க் கடல் நீர் வேலைப்</line>
<line> பொழில் அளந்த புள் ஊர்திச் செல்வன் எழில் அளந்து அங்கு</line>
<line> எண்ணற்கு அரியானை, எப் பொருட்கும் சேயானை,</line>
<line> நண்ணற்கு அரியானை, நாம்.</line>
</verse>

<verse>
<line> நாமம் பல சொல்லி நாராயணா என்று,</line>
<line> நாம் அங்கையால் தொழுதும், நல் நெஞ்சே! வா, மருவி;</line>
<line> மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த, வண்டு அறையும் தண் துழாய்,</line>
<line> கண்ணனையே காண்க, நம் கண்.</line>
</verse>

<verse>
<line> கண்ணும் கமலம்: கமலமே கைத்தலமும்;</line>
<line> மண் அளந்த பாதமும் மற்று அவையே; எண்ணில்-</line>
<line> கரு மா முகில் வண்ணன், கார்க் கடல் நீர் வண்ணன்,</line>
<line> திரு மா மணி வண்ணன் தேசு.</line>
</verse>

<verse>
<line> தேசும், திறலும், திருவும், உருவமும்,</line>
<line> மாசு இல் குடிப்பிறப்பும், மற்றவையும்-பேசில்</line>
<line> வலம் புரிந்த வான் சங்கம் கொண்டான் பேர் ஓத-</line>
<line> நலம் புரிந்து, சென்று அடையும், நன்கு.</line>
</verse>

<verse>
<line> நன்கு ஓதும் நால் வேதத்து உள்ளான்; நறவு இரியும்</line>
<line> பொங்கு ஓதருவிப் புனல் வண்ணன்; சங்கு ஓதப்</line>
<line> பாற்கடலான்; பாம்பு-அணையின் மேலான்; பயின்று உரைப்பார்</line>
<line> நூல்-கடலான்; நுண்-அறிவினான்.</line>
</verse>

<verse>
<line> அறிவு என்னும் தாள் கொளுவி, ஐம்புலனும் தம்மில்</line>
<line> செறிவு என்னும் திண் கதவம் செம்மி, மறை என்றும்</line>
<line> நன்கு ஓதி, நன்கு உணர்வார் காண்பரே-நாள்தோறும்</line>
<line> பைங்கோத வண்ணன் படி.</line>
</verse>

<verse>
<line> படி-வட்டத் தாமரை, பண்டு உலகம் நீர் ஏற்று,</line>
<line> அடி-வட்டத்தால் அளப்ப, நீண்ட முடி-வட்டம்</line>
<line> ஆகாயம் ஊடறுத்து, அண்டம் போய் நீண்டதே-</line>
<line> மா காயமாய் நின்ற மாற்கு.</line>
</verse>

<verse>
<line> மால்பால் மனம் சுழிப்ப, மங்கையர் தோள் கைவிட்டு,</line>
<line> நூல்பால் மனம் வைக்க நொய்விது ஆம்-நால் பால</line>
<line> வேதத்தான், வேங்கடத்தான், விண்ணோர் முடி தோயும்</line>
<line> பாதத்தான் பாதம் பணிந்து.</line>
</verse>

<verse>
<line> பணிந்து உயர்ந்த பௌளவப் படு திரைகள் மோத,</line>
<line> பணிந்த பண மணிகளாலே அணிந்து அங்கு</line>
<line> அனந்தன் அணைக் கிடக்கும் அம்மாநடியேன்</line>
<line> மனம் தன் அணைக் கிடக்கும், வந்து.</line>
</verse>

<verse>
<line> வந்து உதைத்த வெண் திரைகள் செம் பவள வெண் முத்தம்</line>
<line> அந்தி விளக்கும் அணி விளக்கம்-எந்தை-</line>
<line> ஒரு அல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன்,</line>
<line> திருவல்லிக்கேணியான், சென்று.</line>
</verse>

<verse>
<line> சென்ற நாள், செல்லாத, செங்கண் மால் எங்கள் மால்</line>
<line> என்ற நாள், எந் நாளும் நாள் ஆகும்: என்றும்</line>
<line> இறவாத எந்தை இணை-அடிக்கே ஆளாய்,</line>
<line> மறவாது வாழ்த்துக-என் வாய்.</line>
</verse>

<verse>
<line> வாய் மொழிந்து வாமனனாய் மாவலிபால், மூவடி மண்</line>
<line> நீ அளந்து கொண்ட நெடுமாலே! தாவிய நின்</line>
<line> எஞ்சா இணை-அடிக்கே ஏழ் பிறப்பும் ஆளாகி,</line>
<line> அஞ்சாது இருக்க அருள்.</line>
</verse>

<verse>
<line> அருளாது ஒழியுமே-ஆல் இலைமேல் அன்று</line>
<line> தெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான், இருளாத</line>
<line> சிந்தையராய், சேவடிக்கே செம் மலர் தூய், கைதொழுது,</line>
<line> முந்தையராய் நிற்பார்க்கு முன்?</line>
</verse>

<verse>
<line> முன் உலகம் உண்டு உமிழ்ந்தாய்க்கு, அவ் உலகம் ஈர் அடியால்</line>
<line> பின் அளந்து கோடல் பெரிதொன்றே? என்னே-</line>
<line> திருமாலே! செங்கண் நெடியானே! எங்கள்</line>
<line> பெருமானே!-நீ இதனைப் பேசு!</line>
</verse>

<verse>
<line> பேசுவார் எவ்வளவு பேசுவார், அவ்வளவே-</line>
<line> வாச மலர்த் துழாய் மாலையான், தேசு உடைய</line>
<line> சக்கரத்தன், சங்கினான், சார்ங்கத்தன், பொங்கு அரவ</line>
<line> வக்கரனைக் கொன்றான் வடிவு.</line>
</verse>

<verse>
<line> வடிவு ஆர் முடி கோட்டி, வானவர்கள் நாளும்</line>
<line> கடி ஆர் மலர் தூவி, காணும் படியானை,</line>
<line> செம்மையால் உள் உருகி, செவ்வனே, நெஞ்சமே!</line>
<line> மெய்ம்மையே காண விரும்பு.</line>
</verse>

<verse>
<line> விரும்பி விண் மண் அளந்த, அஞ் சிறைய வண்டு ஆர்</line>
<line> சுரும்பு தொளையில் சென்று ஊத அரும்பும்</line>
<line> புனந் துழாய் மாலையான் பொன் அம் கழற்கே</line>
<line> மனம் துழாய், மாலாய் வரும்.</line>
</verse>

<verse>
<line> வருங்கால், இரு நிலனும், மால் விசும்பும், காற்றும்,</line>
<line> நெருங்கு தீ, நீர் உருவும் ஆனாந்பொருந்தும்</line>
<line> சுடர் ஆழி ஒன்று உடையாந்சூழ் கழலே, நாளும்,</line>
<line> தொடர், ஆழி நெஞ்சே! தொழுது.</line>
</verse>

<verse>
<line> தொழுதால் பழுது உண்டே-தூ நீர் உலகம்</line>
<line> முழுது உண்டு, மொய் குழலாள் ஆய்ச்சி விழுது உண்ட</line>
<line> வாயானை, மால் விடை ஏழ் செற்றானை, வானவர்க்கும்</line>
<line> சேயானை, நெஞ்சே! சிறந்து?</line>
</verse>

<verse>
<line> சிறந்த என் சிந்தையும், செங்கண் அரவும்-</line>
<line> நிறைந்த சீர் நீள் கச்சியுள்ளும், உறைந்ததுவும்,</line>
<line> வேங்கடமும் வெஃகாவும் வேளுக்கைப்பாடியுமே-</line>
<line> தாம் கடவார் தண் துழாயார்.</line>
</verse>

<verse>
<line> ஆரே துயர் உழந்தார், துன்பு உற்றார் ஆண்டையார்-</line>
<line> காரே மலிந்த கருங் கடலை நேரே</line>
<line> கடைந்தானை, காரணனை, நீர் அணைமேல் பள்ளி</line>
<line> அடைந்தானை, நாளும் அடைந்து?</line>
</verse>

<verse>
<line> அடைந்தது அரவு-அணைமேல்; ஐவர்க்கு ஆய் அன்று</line>
<line> மிடைந்தது பாரத வெம் போர்; உடைந்துதுவும்</line>
<line> ஆய்ச்சிபால் மத்துக்கே-அம்மனே!-வாள் எயிற்றுப்</line>
<line> பேய்ச்சி பால் உண்ட பிரான்.</line>
</verse>

<verse>
<line> பேய்ச்சி பால் உண்ட பெருமானைப் பேர்ந்து எடுத்து,</line>
<line> ஆய்ச்சி முலைகொடுத்தாள், அஞ்சாதே-வாய்த்த</line>
<line> இருள் ஆர் திருமேனி இன் பவளச் செவ்வாய்த்</line>
<line> தெருளா மொழியானைச் சேர்ந்து.</line>
</verse>

<verse>
<line> சேர்ந்த திருமால்-கடல், குடந்தை, வேங்கடம்,</line>
<line> நேர்ந்த என் சிந்தை, நிறை விசும்பு, வாய்ந்த</line>
<line> மறை, பாடகம், அனந்தந்வண் துழாய்க் கண்ணி</line>
<line> இறைபாடி ஆய இவை.</line>
</verse>

<verse>
<line> இவை அவன் கோயில்-இரணியனது ஆகம்</line>
<line> அவைசெய்து அரி-உருவம் ஆனான், செவி தெரியா</line>
<line> நாகத்தான், நால் வேதத்து உள்ளான், நறவு ஏற்றான்</line>
<line> பாகத்தான், பாற்கடல் உளான்.</line>
</verse>

<verse>
<line> பாற்கடலும், வேங்கடமும், பாம்பும், பனி விசும்பும்,</line>
<line> நூல்-கடலும், நுண் நூல தாமரைமேல் பாற்பட்டு-</line>
<line> இருந்தார் மனமும் இடமாகக் கொண்டாந்</line>
<line> குருந்து ஓசித்த கோபாலகன்.</line>
</verse>

<verse>
<line> பாலகனாய் ஆல் இலைமேல், பைய உலகு எல்லாம்</line>
<line> மேல் ஒருநாள் உண்டவனே!-மொய்ம்மையே: மாலவனே!</line>
<line> மந்தரத்தால் மா நீர்க் கடல் கடைந்து, வான் அமுதம்</line>
<line> அந்தரத்தார்க்கு ஈந்தாய், நீ-அன்று.</line>
</verse>

<verse>
<line> அன்று இவ் உலகம் அளந்த அசைவேகொல்?</line>
<line> நின்று இருந்து வேளுக்கை, நீள் நகர்வாய் அன்று</line>
<line> கிடந்தானை, கேடு இல் சீரானை, முன் கஞ்சைக்</line>
<line> கடந்தானை, நெஞ்சமே!-காண்.</line>
</verse>

<verse>
<line> காண், காண் என விரும்பும் கண்கள்-கதிர் இலகு</line>
<line> புண் தார் அகலத்தான் பொன் மேனி: பாண்கண்</line>
<line> தொழில் பாடி வண்டு அறையும் தொங்கலான், செம்பொன்</line>
<line> கழல் பாடி, யாம் தொழுதும், கை.</line>
</verse>

<verse>
<line> கைய கனல் ஆழி, கார்க் கடல் வாய் வெண் சங்கம்,</line>
<line> வெய்ய கதை, சார்ங்கம், வெம் சுடர் வாள்-செய்ய</line>
<line> படை: பரவை பாழி-பனி நீர் உலகம்</line>
<line> அடி அளந்த மாயநவற்கு.</line>
</verse>

<verse>
<line> அவற்கு அடிமைப் பட்டேன்: அகத்தான், புறத்தான்,-</line>
<line> உவர்க்கும் கருங் கடல் நீர் உள்ளான், துவர்க்கும்</line>
<line> பவள வாய்ப் பூமகளும், பல் மணிப் பூண் ஆரம்,</line>
<line> திகழும் திருமார்பன் தான்.</line>
</verse>

<verse>
<line> தானே தனக்கு உவமந்தன் உருவே எவ் உருவும்;</line>
<line> தானே தவ உருவும் தாரகையும்; தனே</line>
<line> எரி சுடரும், மால் வரையும், எண் திசையும், அண்டத்து</line>
<line> இரு சுடரும் ஆய இறை.</line>
</verse>

<verse>
<line> இறை ஆய், நிலன் ஆகி, எண் திசையும் தான் ஆய்,</line>
<line> மறை ஆய், மறைப் பொருள் ஆய், வான் ஆய், பிறை வாய்ந்த</line>
<line> வெள்ளத்து அருவி விளங்கு ஒலி நீர் வேங்கடத்தான்</line>
<line> உள்ளத்தின் உள்ளே உளன்.</line>
</verse>

<verse>
<line> உளன் கண்டாய், நல் நெஞ்சே! உத்தமன்; என்றும்</line>
<line> உளன் கண்டாய்; உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்-</line>
<line> விண் ஒடுங்கக் கோடு உயரும் வீங்கு அருவி வேங்கடத்தான்</line>
<line> மண் ஒடுங்க, தான், அளந்த மன்.</line>
</verse>

<verse>
<line> மன்னு மணி முடி நீண்டு, அண்டம் போய், எண் திசையும்,</line>
<line> துன்னு பொழில் அனைத்தும் சூழ் கழலே, மின்னை</line>
<line> உடையாகக் கொண்டு, அன்று உலகு அளந்தாந்குன்றம்</line>
<line> குடையாக ஆ காத்த கோ.</line>
</verse>

<verse>
<line> கோவலனாய் ஆ-நிரைகள் மேய்த்து, குழல் ஊதி,</line>
<line> மா வலனாய்க் கீண்ட மணி வண்ணன் மேவி,</line>
<line> அரி-உருவம் ஆகி, இரணியனது ஆகம்-</line>
<line> தெரி-உகிரால் கீண்டான் சினம்.</line>
</verse>

<verse>
<line> சின மா மத களிற்றின் திண் மருப்பைச் சாய்த்து,</line>
<line> புனம் மேய பூமி-அதனைத் தனமாக,</line>
<line> பேர் அகலத்துள் ஒடுக்கும் பேர் ஆர மார்வனார்</line>
<line> ஓர் அகலத்து உள்ளது-உலகு.</line>
</verse>

<verse>
<line> உலகமும், ஊழியும், ஆழியும், ஒண் கேழ்</line>
<line> அலர் கதிரும், செந்தீயும் ஆவாந்பல கதிர்கள்</line>
<line> பாரித்த பைம் பொன் முடியாநடி-இணைக்கே</line>
<line> பூரித்து, என் நெஞ்சே! புரி.</line>
</verse>

<verse>
<line> புரிந்து மத வேழம் மாப் பிடியோடு, ஊடி,</line>
<line> திரிந்து, சினத்தால் பொருது, விரிந்த சீர்</line>
<line> வெண் கோட்டு முத்து உதிர்க்கும் வேங்கடமே-மேல் ஒரு நாள்,</line>
<line> மண் கோட்டுக் கொண்டான் மலை.</line>
</verse>

<verse>
<line> மலை முகடு மேல் வைத்து, வாசுகியைச் சுற்றி,</line>
<line> தலை முகடு தான் ஒரு கை பற்றி, அலை முகட்டு</line>
<line> அண்டம் போய் நீர் தெறிப்ப, அன்று கடல் கடைந்தாந்</line>
<line> பிண்டமாய் நின்ற பிரான்.</line>
</verse>

<verse>
<line> நின்ற பெருமானே, நீர் ஏற்று! உலகு எல்லாம்</line>
<line> சென்ற பெருமானே! செங்கண்ணா! அன்று</line>
<line> துரக வாய் கீண்ட துழாய் முடியாய்!-நங்கள்</line>
<line> நரக வாய் கீண்டாயும் நீ.</line>
</verse>

<verse>
<line> நீ அன்றே-நீர் ஏற்று, உலகம் அடி அளந்தாய்?</line>
<line> நீ அன்றே-நின்று, நிரை மேய்த்தாய்? நீ அன்றே-</line>
<line> மா வாய் உரம் பிளந்து, மா மருதின் உடு போய்,</line>
<line> தேவாசுரம் பொருதாய், செற்று?</line>
</verse>

<verse>
<line> செற்றதுவும் சேரா இரணியனை; சென்று ஏற்றுப்</line>
<line> பெற்றதுவும் மா நிலம்: பின்னைக்கு ஆய், முற்றல்</line>
<line> முரி ஏற்றின் முன் நின்று, மொய்ம்பு ஒழித்தாய்! மூரிச்</line>
<line> சுரி ஏறு சங்கினாய்!-சூழ்ந்து.</line>
</verse>

<verse>
<line> சூழ்ந்த துழாய் அலங்கல் சோதி மணி முடி மால்</line>
<line> தாழ்ந்த அருவித் தட வரைவாய் ஆழ்ந்த</line>
<line> மணி நீர்ச் சுனை வளர்ந்த மா முதலை கொன்றாந்</line>
<line> அணி நீல வண்ணத்தவன்.</line>
</verse>

<verse>
<line> அவனே அரு வரையால் ஆ-நிரைகள் காத்தான்;</line>
<line> அவனே அணி மருதம் சாய்த்தான்; அவனே</line>
<line> கலங்காப் பெரு நகரம் காட்டுவான் கண்டீர்-</line>
<line> இலங்காபுரம் எரித்தான், எய்து.</line>
</verse>

<verse>
<line> எய்தான் மராமரம் ஏழும் இராமனாய்;</line>
<line> எய்தான் அம் மான் மறியை ஏந்திழைக்கு ஆய்; எய்ததுவும்</line>
<line> தென் இலங்கைக் கோன் வீழ; சென்று குறள் உரு ஆய்</line>
<line> முன் நிலம் கைக்கொண்டான், முயன்று.</line>
</verse>

<verse>
<line> முயன்று தொழு,நெஞ்சே!-மூரி நீர் வேலை</line>
<line> இயன்ற மரத்து ஆல் இலையின் மேலால் பயின்று, அங்கு ஓர்</line>
<line> மண் நலம் கொள் வெள்ளத்து மாயக் குழவியாய்,</line>
<line> தண் அலங்கல் மாலையான் தாள்.</line>
</verse>

<verse>
<line> தாளால் சகடம் உதைத்து, பகடு, உந்தி,</line>
<line> கீளா மருது இடை போய், கேழல் ஆய் மீளாது</line>
<line> மண் அகலம் கீண்டு, அங்கு ஓர் மாது உகந்த மார்வற்குப்</line>
<line> பெண் அகலம் காதல் பெரிது.</line>
</verse>

<verse>
<line> பெரிய வரை மார்பில் பேர் ஆரம் பூண்டு,</line>
<line> கரிய முகிலிடை மின் போல, தெரியுங்கால்,</line>
<line> பாண் ஒடுங்க வண்டு அறையும் பங்கயாமே மற்று அவந்தன்</line>
<line> நீள் நெடுங் கண் காட்டும் நிறம்.</line>
</verse>

<verse>
<line> நிறம் வெளிது, செய்து, பசிது, கரிது என்று</line>
<line> இறை உருவம் யாம் அறியோம், எண்ணில்; நிறைவு உடைய</line>
<line> நா-மங்கை-தானும் நலம் புகழ் வல்லளே-</line>
<line> பூ-மங்கை கேள்வன்பொலிவு?</line>
</verse>

<verse>
<line> பொலிந்து இருண்ட கார் வானில் மின்னேபோல் தோன்றி,</line>
<line> மலிந்து, திரு இருந்த மார்வன், பொலிந்த</line>
<line> கருடன்மேல் கொண்ட கரியான் கழலே</line>
<line> தெருள்-தன்மேல் கண்டாய் தெளி.</line>
</verse>

<verse>
<line> தெளிந்த சிலாதலத்தின்மேல் இருந்த மந்தி</line>
<line> அளிந்த கடுவனையே நோக்கி, விளங்கிய</line>
<line> வெண் மதியம் தா என்னும் வேங்கடமே-மேல் ஒரு நாள்</line>
<line> மண் மதியில் கொண்டு உகந்தான்வாழ்வு.</line>
</verse>

<verse>
<line> வாழும் வகை அறிந்தேந்மை போல் நெடு வரைவாய்த்</line>
<line> தாழும் அருவி போல் தார் கிடப்ப, சூழும்</line>
<line> திரு மா மணி வண்ணன், செங்கண் மால், எங்கள்</line>
<line> பெருமான் அடி சேரப்பெற்று.</line>
</verse>

<verse>
<line> பெற்றம், பிணை மருதம், பேய் முலை, மாச் சகடம்,</line>
<line> முற்றக் காத்து, ஊடு போய், உண்டு, உதைத்து, கற்றுக்</line>
<line> குணிலை விளங் கனிக்குக் கொண்டு எறிந்தான்; வெற்றிப்</line>
<line> பணிலம் வாய் வைத்து உகந்தாந்பண்டு.</line>
</verse>

<verse>
<line> பண்டு எல்லாம், வேங்கடம், பாற்கடல்-வைகுந்தம்</line>
<line> கொண்டு அங்கு உறைவர்க்கு, கோயில்போல்-வண்டு</line>
<line> வளம் கிளரும் நீள் சோலை வண் பூங் கடிகை,</line>
<line> இளங் குமரந்தன் விண்ணகர்.</line>
</verse>

<verse>
<line> விண்ணகரம், வெஃகா, விரி திரை நீர் வேங்கடம்,</line>
<line> மண் நகரம் மா மாட வேளுக்கை, மண்ணகத்த</line>
<line> தென் குடந்தை, தேன் ஆர் திருவரங்கம், தென்கோட்டி-</line>
<line> தன் குடங்கை நீர் ஏற்றான் தாழ்வு.</line>
</verse>

<verse>
<line> தாழ் சடையும் நீள் முடியும், ஒண் மழுவும் சக்கரமும்,</line>
<line> சூழ் அரவும் பொன் நாணும் தோன்றுமால்-சூழும்</line>
<line> திரண்டு அருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு,</line>
<line> இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து!</line>
</verse>

<verse>
<line> இசைந்த அரவமும் வெற்பும் கடலும்</line>
<line> பசைந்து, அங்கு அமுது படுப்ப, அசைந்து</line>
<line> கடைந்த வருத்தமோ-கச்சி வெஃகாவில்</line>
<line> கிடந்து, இருந்து, நின்றதுவும், அங்கு?</line>
</verse>

<verse>
<line> அங்கற்கு இடர் இன்றி, அந்திப் பொழுதத்து,</line>
<line> மங்க இரணியனது ஆகத்தை, பொங்கி,</line>
<line> அரி உருவமாய்ப் பிளந்த அம்மாநவனே</line>
<line> கரி உருவம் கொம்பு ஓசித்தாந்காய்ந்து.</line>
</verse>

<verse>
<line> காய்ந்து, இருளை மாற்றி, கதிர் இலகு மா மணிகள்</line>
<line> ஏய்ந்த பணக் கதிர்மேல் வெவ்வுயிர்ப்ப, வாய்ந்த</line>
<line> மது-கைடபரும் வயிறு உருகி மாண்டார்-</line>
<line> அது கேடு அவர்க்கு இறுதி, ஆங்கு.</line>
</verse>

<verse>
<line> ஆங்கு மலரும், குவியுமால்-உந்திவாய்</line>
<line> ஓங்கு கமலத்தின் ஒண் போது-ஆம் கைத்</line>
<line> திகிரி சுடர் என்றும், வெண் சங்கம் வானில்</line>
<line> பகரும் மதி என்றும் பார்த்து!</line>
</verse>

<verse>
<line> பார்த்த கடுவன் சுனை நீர் நிழல் கண்டு</line>
<line> பேர்த்து ஓர் கடுவன் எனப் பேர்ந்து, கார்த்த</line>
<line> களங் கனிக்குக் கை நீட்டும் வேங்கடமே-மேல் நாள்</line>
<line> விளங் கனிக்குக் கன்று எறிந்தான் வெற்பு.</line>
</verse>

<verse>
<line> வெற்பு என்று வேங்கடம் பாடும், வியந்துழாய்</line>
<line> கற்பு என்று சூடும் கருங் குழல்மேல்; மல் பொன்ற</line>
<line> நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீர் ஆடுவான்,</line>
<line> பூண்ட நாள் எல்லாம் புகும்.</line>
</verse>

<verse>
<line> புகு மதத்தால் வாய் பூசி, கீழ் தாழ்ந்து, அருவி</line>
<line> உகு மதத்தால் கால் கழுவி, கையால் மிகு மதத் தேன்</line>
<line> விண்ட மலர் கொண்டு, விறல் வேங்கடவனையே.</line>
<line> கண்டு, வணங்கும்-களிறு.</line>
</verse>

<verse>
<line> களிறு முகில் குத்த, கை எடுத்து ஓடி,</line>
<line> ஒளிறு மருப்பு ஒசி கை யாளி, பிளிறி</line>
<line> விழ, கொன்று, நின்று அதிரும் வேங்கடமே-மேல் நாள்</line>
<line> குழக் கன்று கொண்டு எறிந்தான் குன்று.</line>
</verse>

<verse>
<line> குன்று ஒன்றின் ஆய குற மகளிர் கோல் வளைக் கை</line>
<line> சென்று விளையாடும் தீம் கழை போய், வென்று</line>
<line> விளங்கு மதி கோள் விடுக்கும் வேங்கடமே-மேலை</line>
<line> இளங்குமரர் கோமான் இடம்.</line>
</verse>

<verse>
<line> இடம் வலம் ஏழ் பூண்ட இரவித் தேர் ஓட்டி,</line>
<line> வட முக வேங்கடத்து மன்னும் குடம் நயந்த</line>
<line> கூத்தனாய் நின்றான் குரை கழலே கூறுவதே-</line>
<line> நாத்தன்னால் உள்ள நலம்.</line>
</verse>

<verse>
<line> நலமே வலிதுகொல்-நஞ்சு ஊட்டு வன் பேய்</line>
<line> நிலமே புரண்டு போய வீழ, சலமே தான்,</line>
<line> வெம் கொங்கை உண்டானை, மீட்டு ஆய்ச்சி ஊட்டுவான்,</line>
<line> தன் கொங்கை வாய் வைத்தாள், சார்ந்து?</line>
</verse>

<verse>
<line> சார்ந்து, அகடு தேய்ப்பத் தடாவிய கோட்டு உச்சிவாய்,</line>
<line> ஊர்ந்து இயங்கும் வெண் மதியின் ஒண் முயலைச் சேர்ந்து,</line>
<line> சின வேங்கை பார்க்கும் திருமலையே-ஆயன்</line>
<line> புன வேங்கை நாறும் பொருப்பு.</line>
</verse>

<verse>
<line> பொருப்பிடையே நின்றும், புனல் குளித்தும், ஐந்து</line>
<line> நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா; விருப்பு உடைய</line>
<line> வெஃகாவே சேர்ந்தானை மெய்ம் மலர் தூய்க் கைதொழுதால்,</line>
<line> அஃகாவே தீவினைகள், ஆய்ந்து?</line>
</verse>

<verse>
<line> ஆய்ந்த அரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில்</line>
<line> வாய்ந்த குழவியாய், வாள் அரக்கன் ஏய்ந்த</line>
<line> முடிப் போது மூன்று, ஏழ் என்று எண்ணினான் ஆர்ந்த</line>
<line> அடிப் போது நங்கட்கு அரண்.</line>
</verse>

<verse>
<line> அரண் ஆம் நமக்கு என்றும்-ஆழி வலவன்,</line>
<line> முரன் நாள் வலம் சுழிந்த மொய்ம்பன் சரண் ஆமேல்,</line>
<line> ஏது கதி? ஏது நிலை? ஏது பிறப்பு? என்னாதே:</line>
<line> ஓது-கதி-மாயனையே, ஓர்த்து.</line>
</verse>

<verse>
<line> ஓர்த்த மனத்தராய், ஐந்து அடக்கி, ஆராய்ந்து,</line>
<line> பேர்த்தால், பிறப்பு ஏழும் பேர்க்கலாம்-கார்த்த</line>
<line> விரை ஆர் நறும் துழாய் வீங்கு ஓத மேனி</line>
<line> நிரை ஆர மார்வனையே, நின்று.</line>
</verse>

<verse>
<line> நின்று எதிராய நிரை மணித் தேர் வாணன் தோள்,</line>
<line> ஒன்றிய ஈர் ஐஞ்ஞூறு, உடன் துணிய, வென்று இலங்கும்</line>
<line> ஆர் படு வான் நேமி அரவு-அணையான் சேவடிக்கே</line>
<line> நேர்படுவான், தான் முயலும்-நெஞ்சு.</line>
</verse>

<verse>
<line> நெஞ்சால் நினைப்பு-அரியனேலும், நிலைப்பெற்று, என்</line>
<line> நெஞ்சமே! பேசாய்; நினைக்குங்கால், நெஞ்சத்துப்</line>
<line> பேராது நிற்கும் பெருமானை என்கொலோ-</line>
<line> ஓராது நிற்பது உணர்வு?</line>
</verse>

<verse>
<line> உணரில், உணர்வு-அரியன்; உள்ளம் புகுந்து</line>
<line> புணரிலும், காண்பு-அரியன் உண்மை; இணர் அணைய;</line>
<line> கொங்கு அணைந்து, வண்டு அறையும் தண் துழாய்க் கோமானை</line>
<line> எங்கு அணைந்து காண்டும், இனி?</line>
</verse>

<verse>
<line> இனி, அவன் மாயன் என உரைப்பரேலும்,</line>
<line> இனி, அவன் காண்பு-அரியனேலும், இனியவன்,</line>
<line> கள்ளத்தால் மண் கொண்டு விண் கடந்த பைங் கழலான்,</line>
<line> உள்ளத்தின் உள்ளே உளன்.</line>
</verse>

<verse>
<line> உளனாய நான்மறையின் உட்பொருளை, உள்ளத்து</line>
<line> உளனாகத் தேர்ந்து உணர்வரேலும், உளனாய</line>
<line> வண் தாமரை நெடுங் கண் மாயவனை யாவரே</line>
<line> கண்டார்?-உகப்பர் கவி.</line>
</verse>

<verse>
<line> கவியினார் கை புனைந்து, கண் ஆர் கழல் போய்,</line>
<line> செவியின் ஆர் கேள்வியராய்ச் சேர்ந்தார் புவியினார்</line>
<line> போற்றி உரைக்க, பொலியுமே-பின்னைக்கு ஆய்</line>
<line> ஏற்று உயிரை அட்டான் எழில்?</line>
</verse>

<verse>
<line> எழில் கொண்ட மின்னுக் கொடி எடுத்து, வேகத்</line>
<line> தொழில்கொண்டு, தான் முழங்கித் தோன்றும்-எழில்கொண்ட</line>
<line> நீர் மேகம் அன்ன நெடு மால் நிறம் போல-</line>
<line> கார் வானம் காட்டும், கலந்து.</line>
</verse>

<verse>
<line> கலந்து மணி இமைக்கும் கண்ணா! நின் மேனி</line>
<line> மலர்ந்து மரதகமே காட்டும்; நலம் திகழும்</line>
<line> கொந்தின்வாய் வண்டு அறையும் தண் துழாய்க் கோமானை</line>
<line> அந்தி வான் காட்டும் அது.</line>
</verse>

<verse>
<line> அது நன்று, இது தீது, என்று ஐயப்படாதே,</line>
<line> மது நின்ற தண் துழாய் மார்வன் பொது நின்ற</line>
<line> பொன் அம் கழலே தொழுமின்; முழுவினைகள்</line>
<line> முன்னம் கழலும், முடிந்து.</line>
</verse>

<verse>
<line> முடிந்த பொழுதில் குற வாணர், ஏனம்</line>
<line> படிந்து உழு சால் பைந் தினைகள் வித்த, தடிந்து எழுந்த</line>
<line> வேய்ங் கழை போய் விண் திறக்கும் வேங்கடமே-மேல் ஒரு நாள்</line>
<line> தீம் குழல் வாய் வைத்தான் சிலம்பு.</line>
</verse>

<verse>
<line> சிலம்பும் செறி கழலும் சென்று இசைப்ப, விண் ஆறு.</line>
<line> அலம்பிய சேவடி போய் அண்டம், புலம்பிய தோள்</line>
<line> எண் திசையும் சூழ, இடம் போதாது-என்கொலோ</line>
<line> வண் துழாய் மால் அளந்த மண்?</line>
</verse>

<verse>
<line> மண் உண்டும், பேய்ச்சி முலை உண்டும் ஆற்றாதாய்,</line>
<line> வெண்ணெய் விழுங்க, வெகுண்டு, ஆய்ச்சி கண்ணிக்</line>
<line> கயிற்றினால் கட்ட, தான் கட்டுண்டிருந்தாந்</line>
<line> வயிற்றினோடு ஆற்றா மகன்.</line>
</verse>

<verse>
<line> மகன் ஒருவர்க்கு அல்லாத மா மேனி மாயன்</line>
<line> மகன் ஆம்; அவன் மகந்தன் காதல் மகனைச்</line>
<line> சிறைசெய்த வாணன் தோள் செற்றான் கழலே,</line>
<line> நிறைசெய்து, என் நெஞ்சே! நினை.</line>
</verse>

<verse>
<line> நினைத்து, உலகில் ஆர் தெளிவார் நீண்ட திருமால்?</line>
<line> அனைத்து உலகும் உள் ஒடுக்கி, ஆல்மேல், கனைத்து உலவு.</line>
<line> வெள்ளத்து, ஓர் பிள்ளையாய், மெள்ளத் துயின்றானை</line>
<line> உள்ளத்தே வை, நெஞ்சமே! உய்த்து.</line>
</verse>

<verse>
<line> உய்த்து, உணர்வு என்னும் ஒளி கொள் விளக்கு ஏற்றி,</line>
<line> வைத்து, அவனை நாடி வலைப்படுத்தேன், மெத்தெனவே</line>
<line> நின்றான், இருந்தான், கிடந்தாநென் நெஞ்சத்து,</line>
<line> பொன்றாமை, மாயன் புகுந்து.</line>
</verse>

<verse>
<line> (95 பாடல் நொத் ச்லெஅர்)</line>
</verse>

<verse>
<line> வாழ்த்திய வாயராய், வானோர் மணி மகுடம்</line>
<line> தாழ்த்தி வணங்கத் தழும்பாமே-கேழ்த்த</line>
<line> அடித் தாமரை மலர்மேல் மங்கை மணாளன்</line>
<line> அடித் தாமரை ஆம் அலர்!</line>
</verse>

<verse>
<line> அலர் எடுத்த உந்தியான், ஆங்கு எழில் ஆய</line>
<line> மலர் எடுத்த மா மேனி மாயன், அலர் எடுத்த</line>
<line> வண்ணத்தான், மா மலரான், வார் சடையான் என்று இவர்கட்கு</line>
<line> எண்ணத்தான் ஆமோ, இமை?</line>
</verse>

<verse>
<line> இமம் சூழ் மலையும், இரு விசும்பும், காற்றும்</line>
<line> அமம் சூழ்ந்து அற விளங்கித் தோன்றும்-நமன் சூழ்</line>
<line> நரகத்து நம்மை நணுகாமல் காப்பாந்</line>
<line> துரகத்தை வாய் பிளந்தான், தொட்டு.</line>
</verse>

<verse>
<line> தொட்ட படை எட்டும் தோலாத வென்றியன்,</line>
<line> அட்டபுயகரத்தான், அஞ்ஞான்று, குட்டத்துக்</line>
<line> கோள் முதலை துஞ்ச, குறித்து எறிந்த சக்கரத்தான்</line>
<line> தாள் முதலே நங்கட்குச் சார்வு.</line>
</verse>

<verse>
<line> சார்வு நமக்கு என்றும்-சக்கரத்தான், தண் துழாய்த்</line>
<line> தார் வாழ் வரை மார்பந்தான் முயங்கும் கார் ஆர்ந்த</line>
<line> வான் அமரும் மின் இமைக்கும், வண் தாமரை நெடுங் கண்,</line>
<line> தேன் அமரும் பூமேல் திரு.</line>
<line> மூன்றாம் திருவந்தாதி முற்றும்.</line>
</verse>

</padiyam>

</thirumozi>

