﻿<?xml version="1.0" encoding="utf-8"?>
<?xml-stylesheet type="text/xsl" href="article.xsl"?>

<article>
<border>#6B8E23</border>

<title>
<line>எம்பிரானும் நீ இராமனே</line>
</title>

<author>டாக்டர் இரா.நாகசாமி</author>
<date>27-Mar-2007</date>

<para>
<text>
அறத்தின் மூர்த்தியாய இராமபிரானையே முழுமுதல் கடவுளாக வணங்குவது "இராம பக்தி". இராம பக்தியை படம் பிடித்துக் காட்டுவோரில் திருமழிசை ஆழ்வாரும் ஒருவர். இவ்வாழ்வார் ஏறக்குறைய வரலாற்றில் 600 ல் வாழ்ந்தவர். தமது திருச்சந்த விருத்தத்தில் ஒரு பாடலில் "இராமா நீயே எனது ஊணில் உயிராய் விளங்குகிறாய். எனது உணர்வு  முழுவதும் நீயே. நான் உறங்கும் போது உணர்வற்றுத்தான் இருக்கிறேன். ஆனால் உறக்கம் நீங்கி எழுந்ததும் என் நினவுகளெல்லாம் அற்றுவிடாமல் தொடர்ந்து வரும் உணர்வும் நீதான். தூய்மை என்றால் அதன் உருவமே பாசுவின் ஐந்தினைக் (பஞ்சகவ்யம் எனக்) குறிப்பர். அந்த ஆவின் ஐந்தும் நீயே. அதாவது உன்னை தூய்மையின் இருக்கையாகப் பார்க்கிறேன். இம்மண்ணுலகும், வானுலகும் நீயே. வளமான கடலும் நீயே. அக்கடல் அளிக்கும் மேகமும், மேகம் பொழியும் மழையும், மழையால் பெருகும் ஆறும், ஆற்றால் வரும் வளமும், வளத்தால் வரும் செல்வமும், உயிர்களும் நீயே. அவை அனைத்தும் நீயேதான். ஏன் நானாக இயங்குவதும் நீதான். அது மட்டுமல்ல பெருமானே என்னுடைய பெருமானும் நீதான் இராமனே" என்கிறார். நல்ல பாடல். இதைக் காட்டிலும் இராமபக்தியை சிறக்க கூற முடியமா? பாடலைப் பாருங்கள். 
</text>
</para>

<para>
<verse>
<line>ஊணில் மேய ஆவி நீ; உறக்கமோடு உணர்ச்சி நீ;</line>
<line>ஆனில் மேய ஐந்தும் நீ; அவற்றுள் நின்ற தூயமை நீ;</line>
<line>வானினோடு மண்ணும் நீ; வளங் கடற் பயனும் நீ;</line>
<line>யானும் நீ; அது அன்றி எம்பிரானும் நீ; இராமனே! (94)</line>
</verse>
</para>

</article>