<?xml version="1.0" encoding="utf-8"?>
<?xml-stylesheet type="text/xsl" href="bharani.xsl"?>

<document>

<title>தக்கயாகப்பரணி</title>

	<verse>
		<title>காப்பு</title>
	</verse>
	
   <verse>
        <title> வைரவக் கடவுள் </title>
    </verse>
	
	<verse>
<line>உரககங்கணந் தருவன பணமணி </line>
<line>யுலகடங்கலுந் துயிலெழ வெயிலெழ </line>
<line>உடைதவிர்ந்ததன் றிருவரையுடைமணி </line>
<line>யுலவியொன்றொடொன் றலமரவிலகிய </line>
<line>கரதலந்தருந் தமருகசதிபொதி</line>
<line>கழல்புனைந்தசெம் பரிபுரவொலியொடு </line>
<line>கலகலன்கலன் கலனெனவருமொரு </line>
<line>கரியகஞ்சுகன் கழலிணைகருதுவாம்.</line>
	</verse>
	
<verse>
<title>1. கடவுள் வாழ்த்து</title>
</verse>

<verse>
<title>உமாபாகர்</title>
</verse>

<verse>
<title>வேறு</title>
</verse>

<verse>
<line>1. புயல்வாழ நெடிதூழி புவிவாழ முதலீறு புகல்வேதநூ</line>
<line>  லியல்வாழ வுமைவாழ்வ தொருபாக ரிருதாளி னிசைபாடுவாம்</line>
</verse>

<verse>
<line>2. குலநேமி ரவிபோல வலநேமி தனிகோலு குலதீபனே</line>
<line>  நிலநேமி பொலனேமி யளவாக வுககோடி நெடிதாளவே.</line>
</verse>

<verse>
<title>விநாயகக்கடவுள்</title>
</verse>

<verse>
<line>3. சதகோடி  வித்தாள சதிபாய முகபாகை குதிபாய்கடா</line>
<line>   மதகோடி யுலகேழு மணநாற வரும்யானை வலிபாடுவாம்.</line>
</verse>

<verse>
<line>4. நககோடி பலகோடி புலியேறு தனியேர நளினாலயன்</line>
<line>    உககோடி பலகோடி குலதீப னெழுதீவு முடனாளவே.</line>
</verse>

<verse>
<title>முருகக்கடவுள்</title>
</verse>

<verse>
<line>5. ஒருதோகை மிசையேறி யுழல்சூரு மலைமார்பு முடனூடுறப்</line>
<line>    யொருதோகை சுரராச புரமேற விடுகாளை புகழபாடுவாம்.</line>
</verse>

<verse>
<line>6. கடலாழி வரையாழி தரையாழி கதிராழி களிகூர்வதோ</line>
<line>    ரடலாழி தனியேவு குலதீப ந்ருபதீப னருள்கூரவே.</line>
</verse>

<verse>
<title>திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்</title>
</verse>

<verse>
<line>7. வழுவேறு குடகூடல் வடவாறு வழிமாற மனலாலொரோர்</line>
<line>   கழுவேறு மமண்மூகர் கருமான வருமீளி கழல்பாடுவாம்.</line>
</verse>

<verse>
<line>8. எருதோடு கலையோடு சிலையோட மலையோட விபமோடநேர்</line>
<line>    விருதோடு பொருதேறு புலிநேமி கிரிசூழ விளையாடவே.</line>
</verse>

<verse>
<line>9. இறைவாழி தரைவாழி நிரைவாழி யியல்வாழி யிசைவாழியே</line>
<line>  மறைவாழி மனுவாழி மதிவாழி ரவிவாழி மழைவாழியே.</line>
</verse>

<verse>
<title>2. கடைதிறப்பு</title>
</verse>

<verse>
<line>10. தார்மார்பமு முகவிம்பமு நும்காதலர் தரநீர்</line>
<line>   சேர்தாமரை யிறையானடி பணிவீர்கடை திறமின்.</line>
</verse>

<verse>
<line>11. கைவைக்கவு மடிதோயவு முடனின்று கவிக்குந்</line>
<line>   தெய்வக்கொடி திசைதைவர நிற்பீர்கடை திறமின்</line>
</verse>

<verse>
<line>12. வெல்லும்பொரு ளதிகார மலங்காரம் விளங்கச்</line>
<line>    சொல்லும்பொருள் பகருங்குழன் மடவீர்கடை திறமின்.</line>
</verse>

<verse>
<line>13. உருகுஞ்சுர ருயிருண்டன வுணர்வுண்டன வொழுகத்</line>
<line>   திருகுங்குழ லரமங்கையர் திறமின்கடை திறமின்.</line>
</verse>

<verse>
<line>14. வேல்போனிறை பொருதுண்பது மெய்யேயுயிர் பொய்யே</line>
<line>    சேல்போற்கடை பிறழுஞ்சில் கண்ணீர்கடை திறமின்.</line>
</verse>

<verse>
<line>15. வெங்கோல்வர நீர்பெற்ற தலைக்கோல்வர விறல்வெள்</line>
<line>    செங்கோல்வர வருவீருயர் செம்பொற்கடை திறமின்.</line>
</verse>

<verse>
<line>16. மூவராயவரின் முதல்வராயதிதி புதல்வராயமுப் பத்துமுத்</line>
<line>   தேவராயவர்தம் ராசராசபுரி வீதிமாதர்கடை திறமினோ.</line>
</verse>

<verse>
<line>17. உம்பராளுமம ராபுரந்தவிர லோகபாலரெயில் காவல்கூர்</line>
<line>   செம்பொன்மாடநிரை ராசராசபுரி வீதிமாதர்கடை திறமினோ.</line>
</verse>

<verse>
<line>18. யாவரும்பரவு மிந்த்ரரும்பழைய சந்த்ரசூரியரு மெண்டிசைத்</line>
<line>   தேவரும்புகுதும் ராசராசபுரி வீதிமாதர்கடை திறமினோ.</line>
</verse>

<verse>
<line>19. பாடியும்பணிந் தும்பரவியும் பண்டைநுங்கள்வட சேடிதென்</line>
<line>   சேடியுந்தவிர ராசராசபுரி புகுதுமாதர்கடை திறமினோ.</line>
</verse>

<verse>
<line>20. யாவர்தேவரிவர் தாமெனப்பெரிய விருவர்தேவரிவ ரெளிவருந்</line>
<line>   தேவர்தேவர்தமி ராசராசபுரி வீதிமாதர்கடை திறமினோ.</line>
</verse>

<verse>
<line>21. ஈருமதியமென முதியமதிவெருவி ராசராசநா யகர்முடிச்</line>
<line>   சேருமதியமென விளையமதியொடுற வுடையமகளிர்கடை திறமினோ.</line>
</verse>

<verse>
<line>22. போயபேரொளி யடைத்துவைத்தபல புண்டரிகமிகு பொற்குழைச்</line>
<line>   சேயபேரொளி மனீப்பெரும்ப்ரபை திறக்கவந்துகடை திறமினோ.</line>
</verse>

<verse>
<line>23. தாமவில்லுவெறு மொன்றுமுன்னமிவை சாமனார்கொடிகள் காமனார்</line>
<line>    கோமவில்லென விசும்புவில்வெருவு தெய்வமாதர்கடை திறமினோ.</line>
</verse>

<verse>
<line>24. மையவாயகுரு வெளியவாயசில கெண்டைபுண்டரிக மலரினுஞ்</line>
<line>   செய்யவாயுலக முறவுகோளழிய நறவுகொண்மகளிர் திறமினோ.</line>
</verse>

<verse>
<line>25. கலகமாரன்வெறு மொருவனாலுலகு களவுபோகவிரு காலமுந்</line>
<line>    திலகமாருநுத லளகபாரவிரு ளருளுமாதர்கடை திறமினோ.</line>
</verse>

<verse>
<line>26. எளிவருங்கொழுந் புயமுநுங்களிரு குயமுமண்டியெதி ரெதிர்விழுந்</line>
<line>   தெளிவருங்கலவி புலவிபோலியை தெய்வமாதர்கடை திறமினோ.</line>
</verse>

<verse>
<line>27. உலகபாடமனு வெனவுலாவுவன வொழுகுநீனயன முடையநீர்</line>
<line>   திலகபாடமிருள் பருகவந்துநிலை செறிகபாடநிரை திறமினோ</line>
</verse>

<verse>
<line>28. அரனுமேனியிமை யவருமுண்பரென வஞ்சிநஞ்சுமமு தமுடன்</line>
<line>   றிரைமகோததியை விடவிருந்தனைய தெய்வமாதர்கடை திறமினோ.</line>
</verse>

<verse>
<line>29. மிசையகன்றுயரு நகின்ம ருங்குல்குடி யடிபறிந்ததழ விடுமெனத்</line>
<line>    திசையகன்றளவு மகனிதம்பதட முடையமாதர்கடை திறமினோ.</line>
</verse>

<verse>
<line>30. மகரவாரிதி மறுகவாசுகி வளையமேருவில் வடமுகச்</line>
<line>    சிகரசீகர வருவிநீரர மகளிர்நீர்கடை திறமினோ.</line>
</verse>

<verse>
<line>31. வடபகீரதி குமரிகாவிரி யமுனைகெளதமை மகரமேய்</line>
<line>   தடமகோததி யிவைவிடாதுறை தருணமாதர்கடை திறமினோ.</line>
</verse>

<verse>
<line>32. உருகுவாருயிர் படுபடாமுலை யுழறுமேலுல கிறுமெனத்</line>
<line>   திருகுவார்முசி விசிவிடாதவர் திறமினோகடை திறமினோ.</line>
</verse>

<verse>
<line>33. மந்தமேசில நூபுராரவ மகிழ்நர்சேகர மதுகரஞ்</line>
<line>   சிந்தமேல்வரு மேகலாரவ முடையநீர்கடை திறமினோ.</line>
</verse>

<verse>
<line>34. நாவிமான மணங்கமழ்ந்திள நவ்விமான மலர்பெருந்</line>
<line>   தேவிமான விமானவாயில் புகுந்தரம்பையர் திறமினோ.</line>
</verse>

<verse>
<line>35. எளிவராமிர்த மதனனாள்படை யிறைவர்சீறினு மினியெனாத்</line>
<line>   தெளிவராமிர்த மதனனாள்வரு தெரிவைமீர்கடை திறமினோ.</line>
</verse>

<verse>
<title>வேறு</title>
</verse>

<verse>
<line>36. நெளியுமகரவிரு குழையுமிள வெயில்விட</line>
<line>		நிறையுமதியிரவு மழுகிநிலை கெடநகைத்</line>
<line>    தெளியுநிலவுபக லினுமுளரி கெடமலர்</line>
<line>திலகவதனசுர மகளிர்கடை திறமினோ.</line>
</verse>

<verse>
<line>37. அருகுதிசையருகு கடிதடமு மிசைவெளி</line>
<line>அகலமடையவளர் தனதடமு மவையவை</line>
<line>   திருகுசெருநினைய நினையநடு விடையிறு</line>
<line>திகிரிவரையிலர மகளிர்கடை திறமினோ.</line>
</verse>

<verse>
<line>38. உலருமுதுமர மிளமையும் வளமையு</line>
<line>முயிருநிலைபெற வொளிவிடுமிவருரு</line>
<line>     வுறுதியமுதினு மிளரிவர்பிறவியு</line>
<line>முததியிவர்கள் லொருமகடிருமக</line>
<line>   ளலகில்கரபதி மதனர்களரசிவ</line>
<line>ரவரதிகிரியு மனிகமுமகிலமு</line>
<line>மலகில்புவனமு மிவரிவரெனவரு</line>
<line>மமரர்வனிதைய ரணிகடை திறமினொ.</line>
</verse>

<verse>
<line>39. அடையவரியன கடையிருபுடையினும்</line>
<line>அளவுகெட நிமிர் விழிவிடமெடுதலின்</line>
<line>அமரரனைவரு முனிவரிலதிகழும்</line>
<line>அவனிதலமுற வீழபொழுதயீலெயீ</line>
<line>நுடையகளிரித ழுமிழ்நகையமிழ்துயிர்</line>
<line>உதவுமுதவியொ டுவமையிலிமையோ</line>
<line>டுரககுலபதி வரவவனுடன்வரு</line>
<line>முதிர்மையரிவய ருயர்கடை திறமினோ.</line>
</verse>

<verse>
<line>40. முடிதுமெனமறை முதலியபரவவும்</line>
<line>முறிதுமெனநிசி சரர்குலமிரியவும்</line>
<line>முரிதுமெனவௌ குலகிரிகுலையவும்</line>
<line>முளிதுமெனவெழு புணரிகண்மறுகவும்</line>
<line>   மடிதுமெனமகி தலநிலைதளரவும்</line>
<line>மறிதுமெனவடி சுரபதிவருடவும்</line>
<line>வரதனொருதமிழ் முனிவரன்வரஞ்</line>
<line>மலயவரையர மகளிர்கடிறமினோ.</line>
</verse>

<verse>
<line>41. அலகின்மரகத முறிகளும்வயிரமும்</line>
<line>அபரிமிதமெரி தமனியமடையவும்</line>
<line>அரியதரளமு மழகியபவளமும்</line>
<line>அரசவரவின மழகியவுமலைகொடு</line>
<line>   கலகமறிகடல் புகவிடுவனகதிர்</line>
<line>     கவடுவிடுவன விவருழையிழையினுமுள</line>
<line>ககனதருவன மிவர்களுமெனவரு</line>
<line>கனகவரையர மகளிர்கடிறமினோ.</line>
</verse>

<verse>
<line>42. அளகமுகிலீரு புடையீனுமதிரவும்</line>
<line>அகருமணமீர்க மதமொடுகமழவும்</line>
<line>அதிகமிடையிடை சிலகொடியலசவும்</line>
<line>அமிர்துபொதிவ்ன சிலகுவடசையவும்</line>
<line>  இளகுகலவைகொ டெழுதமைசமையவும்</line>
<line>எறீயுமிருகடை யினபிணையணையவும்</line>
<line>இறைவர்கயிலையி லீறைமகளுடன்வரும்</line>
<line>இமயவரையர மகளிர்கடிறமினோ.</line>
</verse>

<verse>
<line>43. எமதுமலையிறை யிகல்பொருசிலைமலை</line>
<line>ரவியுமதியமு முடன்வலம்வருமலை</line>
<line>யிருளுமிருள்கெட வெரிதமனியமலை</line>
<line>ரசதமலையிம மலையிலொர்சிறுகுவ</line>
<line>   டுமதுமலையென வுயர்கயிலையையிக</line>
<line>ழுரிமையுடைவட வரையரமகளிரை</line>
<line>யுலகுவெயில்கெட வளநிலவெழநகு</line>
<line>முதயவரையர மகளிர்கடிறமினோ.</line>
</verse>

<verse>
<line>44. மயிலா யிறக்கி னயிர்ப்பிக்கும் வறுங்க ணென்று வாசவனார்</line>
<line>   குயிலா யிறந்த கதைபாடக் கோலக் கபாடந் திறமினோ.</line>
</verse>

<verse>
<line>45. விண்ணிற் பகனார் தாந்துரக்கு மெல்லா விருளு மீண்டுந்தங்</line>
<line>   கண்ணிற் புகுந்த கதைபாடக் கனபொற் கபாடந் திறமினோ.</line>
</verse>

<verse>
<line>46. புக்கா வுதிகள் பலவேற்றும் போரி லேற்றுஞ் சிரமொருவர்</line>
<line>   முக்கா லீழந்த கதைபாட மூரிக் கபாடந் திறமினோ.</line>
</verse>

<verse>
<line>47. ஊத்தைத் தலைநீத் துய்ந்தொழிந்த</line>
<line>வொருமா மடிக ளொருமுருட்டு</line>
<line>மோத்தைத் தலைபெற் றமைபாட</line>
<line>மூரிக் கபாடந் திறமினோ.</line>
</verse>

<verse>
<title>3. காடு பாடியது</title>
</verse>

<verse>
<line>48. நெடுங்குன் றேழும் பிலமேழு நேமிக் கிரியுங் கடலேழும்</line>
<line>    ஓடுங்கும் பாகத் துறைமோடி யுறையுங் காடு பாடுவாம்.</line>
</verse>

<verse>
<line>49. பால்வறந்துகீழ் நின்றகள்ளியும்</line>
<line>பசைவறந்துபோய் மீமிசைச்</line>
<line>   சூல்வறந்துபோய் மாகமேகமுஞ்</line>
<line>சுண்டவீமவெரி மண்டவே.</line>
</verse>

<verse>
<line>50. பிணங்கடுங்கனலு மின்றிவெந்துநில</line>
<line>வாய்நிமிர்ந்துபில வாயபேய்</line>
<line>    நிணங்கரைந்துருக நெய்யைநீரென</line>
<line>நினைத்துநாவினை நனைக்குமே.</line>
</verse>

<verse>
<line>51. சிரந்தெரிந்தன வறிந்தறிந்துகுவை</line>
<line>செய்துபைரவர்கள் செந்நிலம்</line>
<line>   பரந்தெரிந்துபொடி செய்யமற்றவை</line>
<line>பரிக்கவந்தவர் சிரிப்பரே.</line>
</verse>

<verse>
<line>52. புற்றினின்றெழு புயங்கசூடிகை</line>
<line>	நெருப்புவிட்டசிறு பொறியெனப்</line>
<line>    பற்றிநின்றன வனந்தமின்மினி</line>
<line>யினந்தனித்தனி பரப்பவே.</line>
</verse>

<verse>
<line>53. பிணப்பறைக்குர லுவந்துவந்துசில</line>
<line>பேய்துணங்கையீடு தொறுமிடுங்</line>
<line>   கணப்பறைக்குரல் படப்படச்சிறிது</line>
<line>செவிடுபடுமமரர் கன்னமே.</line>
</verse>

<verse>
<line>54. பள்ளிவேலைவிடு கானநாடிபடை பாடிவீடுகொள் படங்கெனக்</line>
<line>   கள்ளிவேலிகளின் மீதெழப்பல சிலம்பிநூல்கொடு கவிக்குமே.</line>
</verse>

<verse>
<line>55. காதுமேயிறைவி திகிரிபூதமுங் கழுதுமேககன முழுதுமே</line>
<line>    போதுமேயிரவி புரவியூடு நடு புகுதுமேனகுது நகுதுமே.</line>
</verse>

<verse>
<line>56. யோகமுதலீறைவி கோயின்மிசைநிருதர்</line>
<line>		யூதம்வரவலகை யொட்டுமே</line>
<line>   மேகமுருமொடற வெற்புமிறகொடற</line>
<line>மேலையெயிறுகொடு வெட்டுமே.</line>
</verse>

<verse>
<line>57. நீலவரைநிரைகள் போலுமவுணர்தொகை</line>
<line>நிற்குமேயிறைவி கிற்குமே</line>
<line>   காலவிறுதியெரி போலமுகில்வயிறு</line>
<line>காயவருமுருமு கக்குமே.</line>
</verse>

<verse>
<line>58. ஈரல்சுருளமுளி பேய்களெரிதலையொ</line>
<line>டேறுசருகுட னெடுத்தெழுஞ்</line>
<line>   சூரனிரைகளெரி சூளைநிரைகளென</line>
<line>வானினிடையிடை சுழிக்குமே.</line>
</verse>

<verse>
<line>59. பூதமலரினை பொங்குகழுதிரத</line>
<line>மெங்குமெழநடுவு புதையவந்</line>
<line>   தோதமுகளிறுதி போதநடுநடுவு</line>
<line>முழுகுமெழுகிரியு மொக்குமே.</line>
</verse>

<verse>
<line>60. யாமுமிமையவர் தாமும்வெருவர வீமவெரியிர வெரிதொறுந்</line>
<line>   தாமுமெரிவன போலவெரிவன தாபமிலசில தீபமே.</line>
</verse>

<verse>
<line>61. ஈடுபடுமிறை மகள்பொறாமைகொ</line>
<line>லீதுபொறாமைகொ லிறைவர்தங்</line>
<line>   காடுபடுசடை யூடுமுருவு</line>
<line>கரந்துவருவது கங்கையே.</line>
</verse>

<verse>
<line>62. வெம்புகருநடர் வந்தவனமெனும்</line>
<line>விந்தவனமென வேளவுங்</line>
<line>   கொம்புவிடுவன கொங்குகமழ்வன</line>
<line>கொந்துசொரிவன கொன்றையே.</line>
</verse>

<verse>
<line>63. கண்டமலைவன சண்டதருநிரை கந்துளெழமிசை கதுவவுஞ்</line>
<line>   சண்டவெரியினு ணின்றுகுளிர்வது தங்களொருச்று திங்களே.</line>
</verse>

<verse>
<line>64. படப்படப்பொடி யாகவெங்குள பாதவாதிக ளாதவஞ்</line>
<line>   கடச்சுடப்பொடி யாயெழச்சுழல் சூறைபுகுவன பாறையே.</line>
</verse>

<verse>
<line>65. புறசோலை பூதங்க ளும்பேயும் யாவும் புகுஞ்சோலையே</line>
<line>   யறச்சோலை தானும் பிரானும் பயின்றாடு மச்சோலையே.</line>
</verse>

<verse>
<line>66. வெற்ப நேகசிக ரத்துடன் மிடைந்தனவென</line>
<line>   கற்ப கோடிவிழ நீடுவன கற்பதருவே.</line>
</verse>

<verse>
<line>67. வாரி சாலையனு மாலய நமக்கெனவரும்</line>
<line>   பாரி சாதமுள சாதகர் பராவுவனவே.</line>
</verse>

<verse>
<line>68. பாலை தாழமது மாரிசொரி யும்பருவநாண்</line>
<line>   மாலை தாழ்வன வநேகமுள மந்தாரமே.</line>
</verse>

<verse>
<line>69. மீதெ டுத்தபணை யாவையும் விமுங்கவெழுசெந்</line>
<line>   தாதெ டுத்தன வநேகமுள சந்தானமே.</line>
</verse>

<verse>
<line>70. சுவடு கொண்டபொழி லேழின்ஞிமி றுத்துறுமொரோர்</line>
<line>   சுவடு கொண்டவரி சந்தன வனங்கவினவே.</line>
</verse>

<verse>
<line>71. பூவைத் தாலும் புகுதற் கரும்பொலங்</line>
<line>   காவைத் தாலைந்து சோலை கவினவே.</line>
</verse>

<verse>
<line>72. மலைதருவன கடறருவன மணியணிபணி மகுடத்</line>
<line>   தலைதருவன புவுதருவன தருவனகர தருவே.</line>
</verse>

<verse>
<line>73. பொங்க மளிப்புண ரித்துயில் வல்லி புறங்கடையிற்</line>
<line>   சங்க மளிப்பன ரத்ன விதஞ்சத கோடியே.</line>
</verse>

<verse>
<line>74. பாகன கங்குழை வித்த பவித்ர பயோதரிதன்</line>
<line>   கோகன கங்கன கஞ்சத கோடி கொடுப்பனவே.</line>
</verse>

<verse>
<line>75. துதிக்கோடு கூர்கலை யுகைப்பான் விடாமுல்லை</line>
<line>நூறாயி ரங்கிளைகொ டேறா விசும்பிவர்</line>
<line>   மதிக்கொடு தைவர விழுத்தண் கொழுந்துகளை</line>
<line>வாயா வெனக்கொண்டு மேயாது மான்மதியே.</line>
</verse>

<verse>
<line>76. வாருஞ் சடாடவி முடித்தேவர் தந்தேவி</line>
<line>   		வன்மா னுகைத்தகொடி பொன்மா தவிக்கொடிகள்</line>
<line>   ஊரும் பகற்றேரை முட்டுவன கட்டுவன</line>
<line>வுருகா கொழுந்துமுகை கருகா செழுந்துணருமே.</line>
</verse>

<verse>
<line>77. பிரமற்கு மம்மனை பெறுங்கற்ப கக்கொடிகள்</line>
<line>   		பெருவான மேறுவன வருவான மாறுவன</line>
<line>   பரமற்கு மீதுமிடை சடையொக்கு மென்பதுகொல்</line>
<line>பறியா பெருஞ்சுழியு மெறியா தரங்கமுமே.</line>
</verse>

<verse>
<line>78. சூரியர்கள் பன்னிருவர் பன்னிரண் டாயிரஞ்</line>
<line>சுடரொடுஞ் சூழ்வருவரே</line>
<line>   தேரியர்க டிகிரியுந் திகிரியோ வவைதொறு</line>
<line>நிலாவர வுலாவருவதே.</line>
</verse>

<verse>
<line>79. சேவக முராரிகள் புராரிகள் தெரித்தன</line>
<line>சிவாகம விதந்தெரிவரே</line>
<line>   பூவகம் விடாதவர்க ளோதவுட னோதுவர்</line>
<line>பரம்பர புரத்தரகுமே.</line>
</verse>

<verse>
<line>80. கான நாடிதிரு முன்றில்கவி னக்கஞலுவர்</line>
<line>   வான நாடியர் வணங்கவரு மாதருளரே.</line>
</verse>

<verse>
<line>81. ஓலக் கடனெருப்பி னுலகேழு முருகங்</line>
<line>   கால கடையினுங் கொடியகட் கடைகளே.</line>
</verse>

<verse>
<line>82. புங்கப் படைவிழிக் கடையிலன் றிவர்புரூஉப்</line>
<line>   மங்கத் தகிலமும் படுகொலைப் படுவதே.</line>
</verse>

<verse>
<line>83. நச்சுக்கண் முலைமே லிடுதுநிற்கு நகுபொற்</line>
<line>   கச்சுக்கு மடையப் புடவிகை யடைகொலோ.</line>
</verse>

<verse>
<line>84. மின்போல்வ ரவரே யவர்மருங்கு லினிவே</line>
<line>   றென்போல்வ தெளவெண் ணுவதெனில்லை யிணையே.</line>
</verse>

<verse>
<line>85. நின்ன்ற கன்றவிடை தேடியவரை தேமியனவுஞ்</line>
<line>   சென்ன்ற கன்றன் நிதம்படு வில்லைதிசையே.</line>
</verse>

<verse>
<line>86. அங்ங்கண் முனரிமல ரன்மையது திங்களறியத்</line>
<line>   திங்ங்க ளன்மையர வறியவில சூத்திலகமே.</line>
</verse>

<verse>
<line>87. அடைய மோகினிக ளாயினர்கொ லவ்வுருநினை</line>
<line>   துடைய மோகினியை யொக்கவுளர் யோகிàΩிகளே.</line>
</verse>

<verse>
<line>88. சூழு மின்னொழ்லி நிவந்துசுர நாடியர்களுந்</line>
<line>   தாழு மின்மினிக ளாகவுளர் சர்மினிகளே.</line>
</verse>

<verse>
<line>89. தரவ ரும்புடவி குறையவுளர் சாகினிகளே</line>
<line>   பரவ ருந்தகைய நாயகிப தாகினிகளே.</line>
</verse>

<verse>
<line>90. நகுத குங்கடவு 󢠮Šύதகைய மாதர்நகைபோய்</line>
<line>   மொகுமொ கென்றகில லோகமு முழங்குவனவே.</line>
</verse>

<verse>
<line>91. தலைய ரிந்துவிடு வாருயிர் விடார்தலைவிமுன்</line>
<line>   னிலைய ருத்தமது மெய்யெரியி னின்றெரிவரே.</line>
</verse>

<verse>
<line>92. அகவனச முகவனச மவைமலர வரிவார்</line>
<line>  நகவனச மலர்குவிய வலம்வருவர் நகரே.</line>
</verse>

<verse>
<line>93. கொக்கொ ழுங்குபட வோடிமுகில் கூடியனையா</line>
<line>   ரக்கொ ழுங்குபடு கஞ்சுக மலம்பவுளரே.</line>
</verse>

<verse>
<line>94. இந்தி ராதியரு மெக்கமல யோனிகளுமே</line>
<line>   சந்தி ராதியரு மத்தலைவி சாதகர்களே.</line>
</verse>

<verse>
<line>95. அடையாள முளரித் தலைவியாதி மடவா</line>
<line>   ருடையா டிருவகம் படியில்யோ கினிகளே.</line>
</verse>

<verse>
<line>96. சுழல்வட்டத் துடிகொட்டத் துனைநட்டத் தினரே</line>
<line>   தழல்வட்டத் தனிநெற்றித் தறுகட்கொட் பினரே.</line>
</verse>

<verse>
<line>97. கழுவைப்புக் கறவெட்டிக் கவர்சுற்றத் தினரே</line>
<line>    யுழுவைச்சிற் றுரிவைப்பச் சுதிரப்பட் டினரே.</line>
</verse>

<verse>
<line>98. அகைமத்தத் தனிவர்க்கத் தளகக்கொத் தினரே</line>
<line>   பகைகுத்திப் பயில்சத்திப் பருமுக்கப் பினரே.</line>
</verse>

<verse>
<line>99. உகுநச்சுத் தலைநெட்டெட் டுரகக்கச் சினரே</line>
<line>   தகுபுத்தப் புதுமக்கட் டலைமக்கட் டினரே.</line>
</verse>

<verse>
<line>100. குடரட்டத் தொருசெக்கர்க் குருதிப்பொட் டினரே</line>
<line>    படர்பொற்கைச் செறியக்குச் சரிபப்பத் தினரே.</line>
</verse>

<verse>
<line>101. இருபக்கத் தொருபக்கத் தெறிவச்ரத் தினரே</line>
<line>    யெர்ருபக்கத் தொளிவட்டத் தொருபொற்றட் டினரே.</line>
</verse>

<verse>
<line>102. தழைவர்க்கக் கருவெப்புத் தடிசக்ரத் தினரே</line>
<line>    கழைமுத்துப் பொதிகக்கக் கிழிகட்கட் சியரே.</line>
</verse>

<verse>
<title>4. தேவியைப் பாடியது</title>
</verse>

<verse>
<line>103. கவனமாவெர டீராறு கதிரும்வாரி யூடாடு</line>
<line>கனல்கடாவி யோரேழு கடலும்வாரு மாலால</line>
<line>    மவனிவேவ வான்வேவ வளறுவேவ வேவாம</line>
<line>லயிலுநாதன் மாதேவி யகிலலோக மாதாவேஎ.</line>
</verse>

<verse>
<line>104. அனகபூமி கோலோக மருகுநேமி பாதாள</line>
<line>மயனிவாச மேழ்தீவு மசலமேழு சேழ்காவு</line>
<line>    கனகலோக மேழாழி கஞலவீதி போதாத</line>
<line>கலகபூத வேதாள கடகமேய மாயோனே.</line>
</verse>

<verse>
<line>105. இரவையீரு மீர்வாள்கொ லெனவிடாது பாதாள</line>
<line>விருளைவேறு யோய்நூறி யெழிலியேழொ டேழாய</line>
<line>    பரவையோளி வாளேறு படநடாவி மீள்சோதி</line>
<line>படலசூடி காகோடி பணிமதாணி மார்பாளே.</line>
</verse>

<verse>
<line>106. நிகரவேறு வேறாய நிலவுவிசு பேரார</line>
<line>நிபுடமாலை மாலயாறு நிமிரவீழ்வ போல்வீழ</line>
<line>    மகரவேறு மீராளி மதுகையேறு மாறாடி</line>
<line>வதனபாக மேய்வாகு வலையமோது காதாளே.</line>
</verse>

<verse>
<line>107. தமரநூபு ராதார சரணியார ணாகாரி</line>
<line>தருணவாணி லாவீசு சடிலமோலி மாகாளி</line>
<line>    யமரர்வாழ்வு வாழ்வாக வவுணர்வாழ்வு பாழாக</line>
<line>வருளுமோகி னீயாகி யமுதபான மீவானே.</line>
</verse>

<verse>
<line>108. எறியவோவி மாவாத மிரியவீசி யூடாடு</line>
<line>மெழிலிபீறி மாமேரு விடையைநூறி யோராழி</line>
<line>முறியமோதி வான்யாறு முழுதுமாறி யாகாய</line>
<line>முடியவேறி மேலாய முகடுசாடு தாளாளே.</line>
</verse>

<verse>
<line>109. வழியுநீறு வேறார மகிழுமோரொ ரோர்கூறு</line>
<line>மறமறாத வாணாள மடமறாத மானாள</line>
<line>வொழியுமோரொ ரோர்கூறு மொருவராகி நேராகி</line>
<line>யுடையகேள்வ ரோர்பாதி யுருகுகாதல் கூர்வாளே.</line>
</verse>

<verse>
<line>110. அதரசோதி மீதாடு குமுதவாச வாயார</line>
<line>வமிழ்தமாக நேராக வகிலலோக மீரேழு</line>
<line>முதரசோபி தாநாபி கமலவாயி னான்மீள</line>
<line>வுமிழுநீலி மேலாய வுவணவூர்தி யூர்வாளே.</line>
</verse>

<verse>
<line>111. வலையவாள ராமீது துயில்விடாத தான்மான</line>
<line>மதியமூர்ச டாமோலி மகிணர்தாமு மீதோடி</line>
<line>யலையுமேக லாபார கடிதடாக மாநாக</line>
<line>வமளியேறி னாராக வழகுகூர நேர்வாளே.</line>
</verse>

<verse>
<line>112. போர்ப்பன தீம்புகையோ புராதனரோ மப்புகையே</line>
<line>ஆர்ப்பான பல்லியமோ வந்தரதுந் துமியுமே.</line>
</verse>

<verse>
<line>113. பரவுவன யாமளமோ பதினெட்டுப் புராணமுமே</line>
<line>விரவுவன பூதமோ விண்முதலைம் பூதமே.</line>
</verse>

<verse>
<line>114. ஆடுவன தோகையோ வயனுர்தி யன்னமுமே</line>
<line>பாடுவன பூவையோ கின்னரங்கள் பலவுமே.</line>
</verse>

<verse>
<line>115. வனமலரோ பூமாரி வானக்கற் பகமலரே</line>
<line>கனசலமோ வபிடேகங் கடவுட்கங் காசலமே.</line>
</verse>

<verse>
<line>116. வயங்குகுழை மதியமோ வாளிரவி மண்டலமே</line>
<line>தயங்குகவுத் துவமோபூண் டனிச்சோதிச் சக்கரமே.</line>
</verse>

<verse>
<line>117. சார்த்துவன கோசிகமோ தன்பேழைத் தமனியமே</line>
<line>ஆர்த்துவன வறுசுவையோ வந்தமிலா வமுதமுமே.</line>
</verse>

<verse>
<line>118. கொடும்புரிசை நேமியோ கொற்றப்போர் நேமியே</line>
<line>இடுந்திலக மான்மதமோ வெண்டிசைய மான்மதமே.</line>
</verse>

<verse>
<line>119. அடிச்சூட்டு நூபுரமோ வாரணங்க ளனைத்துமே</line>
<line>முடிச்சூட்டு முல்லையோ முதற் கற்பு முல்லையே.</line>
</verse>

<verse>
<line>120. எல்லைநான் மறைபரவு மிறைமகளைச் சிறிதுரைத்தாந்</line>
<line>தொல்லைநா யகியுடைய பேய்க்கணங்கள் சொல்லுவாம்.</line>
</verse>

<verse>
<line>121. வாயெழப் புகைந்துகீழ் வயிற்றெரிந்து மண்டுசெந்</line>
<line>தீயெழுக் கொளுந்தியன்ன குஞ்சிவெஞ் சிரத்தவே</line>
</verse>

<verse>
<line>122. புரண்டுபோத வேரிவாரி போனபோன பூமிபுக்</line>
<line>கிரண்டுபோது முண்டுமுண்டி லாதபோ லிருப்பவே.</line>
</verse>

<verse>
<line>123. பாதியிற் பிலந்துழாவு பாறுகால மாறுகால்</line>
<line>    ஓதியிற் செவித்துனைத் தினைக்குமுத் துடுப்பவே.</line>
</verse>

<verse>
<line>124. எழுங்கடற் பகைப்பிணத்தும் ரவிதிகந்த வெல்லைபோய்</line>
<line>விழுங்கடற் பகைப்பிணத்து மோடியுண்டு மீள்பவளே.</line>
</verse>

<verse>
<line>125. எயிறிரண்டு தட்டினு டுமிவ்விரண்டெ ழுந்துபாழ்</line>
<line>வயிறறிந்து தாழ்செறித்து வைத்தவொத்த வாயவே.</line>
</verse>

<verse>
<line>126. வயங்களிற் புறப்பொருப்பில் வேரிவாரி வந்துதிக்</line>
<line>கயங்களிற் கடாமிடா மடுத்தெடுத்த கையவே.</line>
</verse>

<verse>
<title>வேறு</title>
</verse>

<verse>
<line>127. உலரெலும்பொ டொசிநரம்பி னுடலினின்ற குடலைபோன்</line>
<line>றலர்சிலம்பி யிழைசுழன்று வெளியடங்க வணிவவே.</line>
</verse>

<verse>
<title>வேறு</title>
</verse>

<verse>
<line>128. குறிக்குமெக் கொழுக்களுக்கு மிக்கடிக்கொ டுக்கொடுத்</line>
<line>தெறிக்குமெப் பிறைக்குமெட்டி ரட்டிநெட்டெ யிற்றவே.</line>
</verse>

<verse>
<line>129. கதுப்பிறக் கழுக்களிற் பழுக்களைக் கடித்துழிப்</line>
<line>புதுப்பிணத் திரைப்புமிக் கடிப்பொருப் பொருப்பவே.</line>
</verse>

<verse>
<line>130. புரக்குமற் புதத்துயிர்க் கிழத்திபுக் குமிழ்தமக்</line>
<line>கிரக்கமற் றிருப்பதற் கெடுத்துளைத் திளைப்பவே.</line>
</verse>

<verse>
<title>வேறு</title>
</verse>

<verse>
<line>131. மதிதுரந்து வரவொழிந்த மதநினைந்து சதமகன்</line>
<line>பதிதுரந்து படையயின்று சிறதவிந்த பசியவே.</line>
</verse>

<verse>
<line>132. கருநிறங்கொ டுருவுகொம்பு வெருவுமும்பர் கழிவிடும்</line>
<line>பரிபிளந்து தசைமிசைந்து சிறிதவிந்த பசியவே.</line>
</verse>

<verse>
<line>133. இருவிசும்பு வறிதியம்ப விடிவிழுந்த தெனவிழும்</line>
<line>பெருவிலங்க லனபுயங்க பிசிதவுண்டு பெறுபவே.</line>
</verse>

<verse>
<line>134. வாரியுண்டு மேகவிந்த்ர வாகனங்கள் வாய்விடுஞ்</line>
<line>சோரியுண்டு  சூன்முதிர்ந்த போன்மிதந்த தோலவே.</line>
</verse>

<verse>
<title>வேறு</title>
</verse>

<verse>
<line>135. மிசைபெறாதுகுற ளானகூவிகளும்</line>
<line>விம்மி யுள்ளதிசை செம்மியே</line>
<line>திசைபெறாதுதடி யாதபாரிடமு</line>
<line>முடைய ளுலகுடைய செல்வியே.</line>
</verse>

<verse>
<line>6. கோயிலைப்பாடியது</line>
</verse>

<verse>
<line>136. இக்கணங்கள் வந்துசூழும் யோகயாமளத்தினாள்</line>
<line>மெய்க்கணங்க ளேவிரும்பு கோயில்யாம் விளம்புவாம்.</line>
</verse>

<verse>
<title>வேறு</title>
</verse>

<verse>
<line>137. கீழுமேழுநிலை மேலுமேழுநிலை கோயில்வாயிலிரு கிரியுமே</line>
<line>சூழுமேழ்கடலு மகழிசக்ரகிரி புரிசைகாவலொரு சூலமே.</line>
</verse>

<verse>
<line>138. பூதநாயகர் மகோதராதிகள் புரக்கவாயின்முறை புகுவார்</line>
<line>வேதநாயகி விமானபீடிகை யநேககோடிவட மேருவே.</line>
</verse>

<verse>
<title>ஆலமரம்</title>
</verse>

<verse>
<line>139. அப்பெரும்பழைய கோயிலூடகில லோகநாயகி யமர்ந்ததோர்</line>
<line>ஒப்பருங்கடவு ளாலமுண்டதனை யுள்ளவாசிறி துரைத்துமே.</line>
</verse>

<verse>
<title>வேறு</title>
</verse>

<verse>
<line>140. முடுகியபுறம்பு நீர்நலிய முகடுபடு மண்டகோளகையை</line>
<line>நெடுகியவரம்பி லாதபணை நிரைகொடுசு மந்தநேமியது.</line>
</verse>

<verse>
<line>141. விரிகடல்கொளுந்தி வேவவிழ வருமிகுபதங்க ராறிருவர்</line>
<line>எரிவிரிசுரங்க ளாறியெழ வெழுகுழையசைந்த சாகையது.</line>
</verse>

<verse>
<line>142. சதுமுகன்முடிந்த வூழியொரு சருகிலையுதிர்ந்து தூர்புனலி</line>
<line>னிதுமுதலவைந்து பூதமென விருநிலம்வழங்கு சோபையது.</line>
</verse>

<verse>
<line>143. இறுதியினெரிந்து பாருருக வெழுகனல்கரிந்து போயவிய</line>
<line>உறுதியினைந்த சாகைதொறு மொருதனிகுளிர்ந்த நீர்மையது.</line>
</verse>

<verse>
<line>144. படியடியெறிந்து கால்பொருது பலகுலவிலங்கன் நேருவொடு</line>
<line>குடியடிபறிந்த நாளுமொரு குழைசலனமின்றி நீடுவது.</line>
</verse>

<verse>
<line>145. மழையெனவுகங்க ளேழெழிலி வரவரவிசும்பின் மாறுவது</line>
<line>பழையனபொதும்பி லேழுமெழுப ரவையுமடங்கு கோளினது.</line>
</verse>

<verse>
<line>146. அரிதனிதுயின்ற தோரிலையி லரனவையிருந்த நீழலது</line>
<line>விரிசுடர்நிவந்த சாயைமதி மிசையிடைவிளங்கு சோபையது.</line>
<line></line>
<line>147. இசையனபிலங்க நேழுமத நிடையிடைவுழுந்த வேர்விவர</line>
<line>மிசையனபதங்க ளேழுமதன் விடுகவடுதந்த கோடரமே.</line>
</verse>

<verse>
<line>148. உரியபலவண்ட கோடிபுகு முதரமொடனந்த கோடியுகம்</line>
<line>அரிதனிதுயின்ற தோரிலையி லதனதளவியம்பு வாரெவரே.</line>
</verse>

<verse>
<line>149. கடநாகத் தீருரிவை யான்விரிப்பக் கடற்றிவலைப்</line>
<line>படநாகப் பெரும்பாய லரிவிரிக்கும் பணையதே.</line>
</verse>

<verse>
<line>150. கோழியான் மயிலதனிற் குலமயிலி லொருமயிலே</line>
<line>ஆழியா னேறுவது மதனுவணத் துவணமே.</line>
</verse>

<verse>
<line>151. அயனுடைய வூர்தியத னன்னத்தோ ரன்னமே</line>
<line>பயனுடைய கின்னரமும் மதிற்பிறந்த பறவையே.</line>
</verse>

<verse>
<line>152. பைந்தாக மிருநான்கு மதன்வேரிற் பயில்வனவே</line>
<line>கைந்நாக கிருநான்கு மதன்வீழிற் கட்டுபவே.</line>
</verse>

<verse>
<title>தேவியின் அமளியான அரவரசு</title>
</verse>

<verse>
<line>153. அப்படிய தொருகடவு ளாலின்கீ ழமளியா</line>
<line>யெப்படியுந் தனிதாங்கு மாவரசை யியம்புவாம்.</line>
</verse>

<verse>
<line>154. மாயிரும்பயோ ததித்தொகையென</line>
<line>வாள்விடுந்திவா கரத்திரளென</line>
<line>வாயிரம்பணா மிதப்பரவைய</line>
<line>தாயிரஞ்சிகா மணிப்ரபையதே.</line>
</verse>

<verse>
<line>155. வேலைநின்றெழா வுகக்கனலென</line>
<line>வேகநஞ்சறா மதிப்பிளவென</line>
<line>மாலையும்படா விழித்திரளது</line>
<line>வாய்தொறுங்குவா லெயிற்றணியதே.</line>
</verse>

<verse>
<line>156. நேரியன்பதா கையிற்புலியென</line>
<line>நேரியன்றரா தாப்புயமென</line>
<line>மேருவும்பொறா வயப்பொறையது</line>
<line>மேருவின்பரா ரையிற்பெரியதே.</line>
</verse>

<verse>
<title>தேவியின் விற்றிருக்கை</title>
</verse>

<verse>
<title>வேறு</title>
</verse>

<verse>
<line>157. திரண்டகலை கூடிநிறை திங்கள்குடை</line>
<line>யாகநிழல் செய்யமுறையால்</line>
<line>இரண்டருகும் வாடையொடு தென்றல்குளிர்</line>
<line>சாமரை யிரட்டிவரவே.</line>
</verse>

<verse>
<line>158. குறிக்குமிகு பாலுமுள தீபமென வேறுசில கூறவுனவோ</line>
<line>எறிக்குமதி யும்பருதி யுஞ்சுடரெடுப்பன விரண்டருகுமே.</line>
</verse>

<verse>
<title>வேறு</title>
</verse>

<verse>
<line>159. எளிதளித்தன சுரர்தருத்தொகை யிரவிபுற்கிட வெழிலியுந்</line>
<line>தளிதளித்திரு தனுவெடுத்தன தகனமாற்றது கனமே.</line>
</verse>

<verse>
<line>160. வட்டமொத்தன வண்ணமொத்தன</line>
<line>மதுகையொத்தன வானில்வந்</line>
<line>திட்டவிற்க வீரண்டுதங்க</line>
<line>ளிரண்டுவிற்களு மென்னவே.</line>
</verse>

<verse>
<title>தேவியின் பஞ்சாயுதங்கள்</title>
</verse>

<verse>
<title>தண்டாயுதம்</title>
</verse>

<verse>
<line>161. பொங்குதிரிபுரம் வெந்துபொடிபட</line>
<line>வந்துபொருமொரு பொருநர்கைத்</line>
<line>தங்குமலைசிலை கொண்டபொழுதுல</line>
<line>கங்கள் தகைவது தண்டமே.</line>
</verse>

<verse>
<title>கட்காயுதம்.</title>
</verse>

<verse>
<line>162. தடிந்ததுரக குலங்களுரக பிலங்கள்வயிறு தழங்குமா</line>
<line>வடிவுந்தகுருதி படிந்துபருதிகண் மட்கவருமொரு கட்கமே.</line>
</verse>

<verse>
<title>வில்</title>
</verse>

<verse>
<line>163. எறிப்பவெறிபடை நிசிசரன்சிர மொருபதுங்கர முருபதுந்</line>
<line>தறிப்பவொருசரம் விடுவதுங்கடல் சுடுவதுங்குனி சாபமே.</line>
</verse>

<verse>
<title>சங்கம்</title>
</verse>

<verse>
<line>164. இகலுநிசிசர கணமுமவுணரு மிடியின்மலையென மடியவெப்</line>
<line>பகலும் ரவியொளி யிரியநிலவொளி விரியவருமொரு பணிலமே.</line>
</verse>

<verse>
<line>சக்கராயுதம்.</line>
<line>165. இருவருதயமு முருளவொளிவிடு மெனையபலரிர ணியரெனும்</line>
<line>ஒருவருரமிரு பிளவுபடநடு முகிரிதனதொரு திகிரியே.</line>
</verse>

<verse>
<title>தேவிதிருமேனியின் மரகசோதி.</title>
</verse>

<verse>
<line>166. அரவினமளியி னகிலபணமணி</line>
<line>யடையமரகத மானவோர்</line>
<line>இரவிவெயிலிலன் மதியுநிலவில</line>
<line>னிறைவியொளிவெளி யெங்குமே.</line>
</verse>

<verse>
<title>வேறு</title>
</verse>

<verse>
<line>167. கோகனக னாள்பெறு கொடுங்கனக னாகமிரு கூறுபடுகூர்</line>
<line>	ஏகநக நாயகி யனந்தசய நத்தினி திருந்தருளியே.</line>
</verse>

<verse>
<title>வேறு</title>
</verse>

<verse>
<line>168. எறிபடை வல்லவிசயை யிசைகெழு தெய்வமகளி</line>
<line>ரெழுவரும் வெள்ளைமுளரி யினிதுறை செல்வமகளு</line>
<line>மறிகடல் வையமகளு மலர்கெழு செய்ய திருவும்</line>
<line>வரவிரு மெல்லவுரகன் மணியணி பள்ளியருகே.</line>
</verse>

<verse>
<title>ஆளுடைய பிள்ளையார் சமணரை வாதில் வென்ற கதை</title>
</verse>

<verse>
<line>169. வருகடை தெய்வமகளென் மருமகள் வன்னிவதுவை</line>
<line>மனமகிழ் பிள்ளைமுருகன் மதுரையில் வெல்லுமினிய</line>
<line>தொருகதை சொல்லுதவள வொளிவிரி செவ்விமுளரி</line>
<line>யொளிதிக ழல்லிகமழு மொருமனை வல்லியெனவே.</line>
</verse>

<verse>
<line>170. எழுமலை கொல்லுமசனி யிளமயில் வள்ளிகணவ</line>
<line>னிறைமலை வில்லிபுதல்வ னிகன்மக ளையைகளிறு</line>
<line>கழுமல முய்யவிரவு கலியுக வெல்லைபொருத</line>
<line>கதைகளி லுள்ளதமணர் கழுமிசை கொள்வதிதுவே.</line>
</verse>

<verse>
<title>வேறு</title>
</verse>

<verse>
<line>171. பொய்கைசூழ்புக லிப்பெருந்தகை</line>
<line>பொன்னிநாடு கடந்துபோய்</line>
<line>வைகைசூழ்மது ராபுரித்திரு</line>
<line>வாலவாயை வணங்கியே</line>
</verse>

<verse>
<line>172. ஞாயில்கொண்ட மதிற்புறம்பர</line>
<line>சமயகோளரி நண்ணியே</line>
<line>கோயில்கொண்ட மடத்தைவெங்கனல்</line>
<line>கொண்டுகுண்டர் கொளுத்தவே.</line>
</verse>

<verse>
<line>173. திருமடத்தெரி யிட்டகுண்டர் கிடக்கவவ்வெரி தென்னனிற்</line>
<line>பெருமடத்தர சைச்சுடத்திரு வாய்ம்லர்ந்தது பிள்ளையே.</line>
</verse>

<verse>
<line>174. பிள்ளைகொண்ட சினத்தொடக்கனல்</line>
<line>சென்றுதென்னர் பிரானுயிர்</line>
<line>கொள்ளைகொண்டுட லங்கிளர்ந்து</line>
<line>கொதிப்பவந்து கொளுந்தவே.</line>
</verse>

<verse>
<line>175. யந்திரங்கள் வரைந்துகட்டி விரைந்துகுண்ட ரெடுக்குமா</line>
<line>மந்திரங்களின் மிக்கபேரழல் மாதிரங்களின் மண்டவே</line>
</verse>

<verse>
<title>வேறு</title>
</verse>

<verse>
<line>176. ஆலிவெந்து  மந்த்ரம்வெந்தி யந்த்ரம்வெந்த மைந்ததோர்</line>
<line>பீலிவெந்து பாயும்வெந்து பிண்டியேற மண்டவே.</line>
</verse>

<verse>
<title>வேறு</title>
</verse>

<verse>
<line>177. ஒருவரும்பொரு வாததென்ன னிரண்டுகண்களு மொத்தபேர்</line>
<line>இருவரும்பெரி தஞ்சியாமினி யென்செய்வேமென வெண்ணியே.</line>
</verse>

<verse>
<line>178. விலங்கினாரிலர் வெம்மையெம்மையுமேன் முனிந்திடு வான்மிகக்</line>
<line>கலங்கினானிறை பிள்ளையாரை யழைத்துமே லிதுகாலமே.</line>
</verse>

<verse>
<line>179. என்றுபோயதி காரி வைதிக ராகசிங்க மிருந்துழிச்</line>
<line>சென்றுமுன்னர் விழுந்தபின்ன ரெழுந்துதங்குறை செப்புமே.</line>
</verse>

<verse>
<line>180. கச்சைக்கிரி நேரியர் பாவைதிருக்</line>
<line>காவற்கிறை வாவிது காலமெனக்</line>
<line>கொச்சைப்பெரு மானடி தன்முடியிற்</line>
<line>கொண்டானதி காரி குலச்சிறையே.</line>
</verse>

<verse>
<line>181. உவரிப்பரு முத்த நிரைத்ததிருப்</line>
<line>பள்ளிச்சிவி கைப்புடை யும்பர்வரக்</line>
<line>கவரிச்சிறு தென்ற லசைப்பமிசைக்</line>
<line>கொற்றக்குடை வந்து கவிப்பவுமே.</line>
</verse>

<verse>
<line>182. மேகத்தொரு பந்த ரெடுத்துடுவாம்</line>
<line>வெண்முத்த மொழுக்கி மினற்கொடியால்</line>
<line>மாகத்து நிரைத்து மழைச்சிலையால்</line>
<line>வழிதோரண மிட்டனன் வாசவனே.</line>
</verse>

<verse>
<line>183. சதுரா னனனுஞ் சக்ரா யுதனுஞ்</line>
<line>சந்த்ரா தவரு மிந்த்ரா தியரும்</line>
<line>மதுரா புரிவா தறிவா மெனமேல்</line>
<line>வரவந் தனன் வை திகவா ரணமே.</line>
</verse>

<verse>
<title>வேறு</title>
</verse>

<verse>
<line>184. ஆலயுங்கடி திற்புலர்ந்து கலந்துகுண்டர் துடைக்குமப்</line>
<line>பீலியுஞ் சுறு நாறியேறி யெரிந்துபோன பிரம்புமே.</line>
</verse>

<verse>
<title>வேறு</title>
</verse>

<verse>
<line>185. பொறைசூழ்வரை யிற்புலி யேறெழுதும்</line>
<line>பொன்மேரு வரைப்பெரு மான்மகளார்</line>
<line>மறைசூழ்திரு வெள்ளி மலைப்பெருமான்</line>
<line>மகனாரடி வந்து வணங்கியுமே.</line>
</verse>

<verse>
<line>186. மன்காதலி னுய்வதிவ் வையமெலா</line>
<line>மலையாண்முலை யாரமு துண்டவனே</line>
<line>என்காதல னெம்பெரு மானிவனுக்</line>
<line>கிதுவோதக வென்றன னென்றலுமே.</line>
</verse>

<verse>
<line>187. மாமான்மர பிற்பகன்மண்டிலமொத்</line>
<line>தெரிமண்டின னென்னு மகீபதிநின்</line>
<line>கோமான்மர பிற்சசி மண்டிலநேர்</line>
<line>குளிரும்படி காணுதி கோமளமே.</line>
</verse>

<verse>
<line>188. என்னக்களி கூரு மிளங்கொடியோ</line>
<line>டெதிர்கொண்டு புகுந்து குலச்சிறையார்</line>
<line>தென்னற்கரு கேயொரு பீடிகையிட்</line>
<line>டினிதேறி யிருந்தருள் செய்கெனவே.</line>
</verse>

<verse>
<line>189. ஏறிச்செழி யற்கரு கிட்டதிருப்</line>
<line>பள்ளித்தவி சின்க ணிருந்தருளச்</line>
<line>சீறிச்சமண் மூகர் குலச்சிறையார்</line>
<line>செவிவேவன சிற்சில செப்புவரே.</line>
</verse>

<verse>
<line>190. வருவானொரு சோழிய வைதிகனாம்</line>
<line>வந்தாலிவன் மாளிகை வாயிறனில்</line>
<line>வெருவாது புகுந்து தொடப்பெறுமோ</line>
<line>மீளச்செழி யன்றிரு மேனியையே.</line>
</verse>

<verse>
<line>191. தண்ணார்மதி யக்கவி கைச்செழியன்</line>
<line>றனிமந்திரி காண்முனி புங்கவரோ</line>
<line>ரெண்ணாயிர வர்க்கும் விடாதவெதுப்</line>
<line>பிவனால்விடு மென்ப திழித்தகவே.</line>
</verse>

<verse>
<line>192. என்றாரவ ரென்றலு மேகெடுவீ</line>
<line>		ரெரியாலர வாலிடி யான்முடியச்</line>
<line>	சென்றார்பவ மேழினு மிம்படியே</line>
<line>		செல்வாரிவர் முன்பு செயிர்த்தவரே.</line>
</verse>

<verse>
<line>193. நாணீரறி யீருறி வல்லமணீர்</line>
<line>மதுரேசனை யெங்குல நாயகனைக்</line>
<line>காணீரிவர் தந்திரு நீறிடவே</line>
<line>முகிலூர்தி பெறாத கவின்பெறவே.</line>
</verse>

<verse>
<line>194. ஏயேயிம வான்மக ளார்மகனே</line>
<line>யெந்தாய் சித்தாகுல வேரரியுஞ்</line>
<line>	சேயேவர சைவ சிகாமணியே</line>
<line>		திருநீறினி யிட்டருள் செய்கெனவே.</line>
</verse>

<verse>
<line>195. எப்புத்தரொ டெவ்வம ணுங்களைவார்</line>
<line>திருநீறிவ னெற்றியி லிட்டலுமே</line>
<line>	வெப்புத்தடை பட்டது பட்டளவே</line>
<line>		வேவாத வுடம்புடை மினவனே.</line>
</verse>

<verse>
<line>196. உய்யாவுண ராவிழி யாவருகே</line>
<line>		சரியாவொரு கேசரி யாசனமேல்</line>
<line>	வையாவதி காரிக ளும்பெருமாண்</line>
<line>		மகளாரும் வணங்க வணங்கினனே.</line>
</verse>

<verse>
<line>197. சுடுகின்ற மருங்கிரு பாலுமிருந்</line>
<line>		தனைவேமும் விடாது தொடத்தொடவே</line>
<line>	விடுகின்ற வெதுப்பை வெறும்பொடியால்</line>
<line>		விடுவித்தன னாமிவன் வேதியனே.</line>
</verse>

<verse>
<line>198. யாம்யாது மிதற்கு முயன்றிலமோ</line>
<line>		வெம்மந்த்ரமும் யந்த்ரமு மில்லைகொலோ</line>
<line>	கோமானிவ னைப்பணி கின்றதெனீ</line>
<line>		றணிகின்றதெ னென்று கொதித்தெழவே.</line>
</verse>

<verse>
<line>199. கெடுவீர் கெடுவீ ரிவைசொல் லுவதே</line>
<line>		கேட்டே னடிகள் விவர்கே வலரோ</line>
<line>	விடுவீர் விடுவீ ரினியென் னெதிர்நீர்</line>
<line>		வெங்கோ பமுமுங்கள்விவா தமுமே.</line>
</verse>

<verse>
<line>200. நீர்வந்து தொடத்தொட வெந்துருகா</line>
<line>		நெடுவேனில் சுடச்சுட நின்றுலறிக்</line>
<line>	கார்வந்து தொடத்தொட வுய்ந்திளகுங்</line>
<line>		காடொத்தனென் யானிவர் கைப்படவே.</line>
</verse>

<verse>
<line>201. ஒருநீயொரு மாணி யிடும்பொடியா</line>
<line>		லுய்ந்தேனுயி ரென்ப துரைத்தனையேல்</line>
<line>	வருநீரினு மிட்டு நெருப்பினுமிட்</line>
<line>		டறிவோமிரு மந்த்ரமும் யந்த்ரமுமே.</line>
</verse>

<verse>
<line>202. எரியாதன தீயி லிடிற்கொடுபோ</line>
<line>		யெறிவைகையி லேயிடில் வைகையுடன்</line>
<line>	சரியாதன வேடுடை யார்தவமே</line>
<line>		தவமாவது மேலிது சாதனமே.</line>
</verse>

<verse>
<line>203. வேமேடுடை யாரையும் வைகையிலே</line>
<line>		விட்டாலதன் மீது மிதந்தொழுகிப்</line>
<line>	போமேடுடை யாரையு நீகழுவிற்</line>
<line>		புகுவிப்பது தெக்கண பூபதியே.</line>
</verse>

<verse>
<line>204. என்னக்கடி தெண்பெரு வெற்பும்விடா</line>
<line>		வெண்ணாயிர மூகரு மிப்படியே</line>
<line>	பன்னப்பெரி தஞ்சிய வச்சமுடன்</line>
<line>		பகலோன்மர பிற்பெறு பைந்தொடியே.</line>
</verse>

<verse>
<line>205. மலைகொண்டெழு வார்கடல் கொண்டெழுவார்</line>
<line>		மிசைவந்து சிலாவரு டஞ்சொரிவார்</line>
<line>	நிலைகொண்டெழு வார்கொலை கொண்டெழுதற்</line>
<line>		கிவரிற்பிறர் யாவர் நிசாசரரே.</line>
</verse>

<verse>
<line>206. குழைதந்தனை செந்தமிழ் மண்டலமுங்</line>
<line>		கொடிமாஅக ருங்குன் றங்களிகூர்</line>
<line>	மழைதந்தென வந்தனை வாழியினிப்</line>
<line>		பிரமாபுர மேற மறித்தருளே.</line>
</verse>

<verse>
<line>207. கேள்பற்றி யமண்கெடு வாரொடுபோர்</line>
<line>		கெட்டேனடிகே ளொட்டே னெனவே</line>
<line>	தாள்பற்றி வணங்கி வணங்கிவிடாள்</line>
<line>		தவனன்குல வல்லி தடுத்தலுமே.</line>
</verse>

<verse>
<line>208. காதிற் கனகக்குழை நின்றிலகக்</line>
<line>கமழுங்குழன் முன்பு கலந்தசையச்</line>
<line>சோதித்திரு நெற்றியில் நீறிலகச்</line>
<line>சுட்டிக்கலன் மீது துலங்கவுமே.</line>
</verse>

<verse>
<line>209. கனலெங்கன லக்கன லால்விளையுங்</line>
<line>		கார்காரவை வந்து தருங்கலுழிப்</line>
<line>	புனலெம்புனல் யாமிடு மேடுசுடா</line>
<line>		போகாதிரி யக்கொடு போமெனவே.</line>
</verse>

<verse>
<line>210. நீரோடு நெருப்பிவை நும்மனவே</line>
<line>		யிதுநிச்சய மாகிலு நின்னெதிரிப்</line>
<line>	பாரோடு விசும்பு பனிப்பவினிப்</line>
<line>		பணிகொள்ளுதும் யாமிது பாரெனவே.</line>
</verse>

<verse>
<line>211. என்னுஞ்சமண் மூகருநான் மாறையோ</line>
<line>ரேறுந்தமிழ் நாடனும் ரகுமரபிற்</line>
<line>பொன்னும்பெரு நம்பி குலச்சிறையும்</line>
<line>போய்வைகையில் வாது களம்புகவே.</line>
</verse>

<verse>
<line>212. கனலிற்புகு மேடிறை கண்ணின்மதன்</line>
<line>		கையம்பென வெந்தன கையரிடப்</line>
<line>	புனலிற்புகு மேடிறை வைகையுடன்</line>
<line>		போகவிடி னுங்கடல் புக்கனவே.</line>
</verse>

<verse>
<line>213. பொற்பங்கன லிற்புகு மேடுறவும்</line>
<line>	புனலிற்புகு மேடெதிர் போகவுமேழ்</line>
<line>வெற்பும்பிள வோட வொலித்தனவால்</line>
<line>	வேதங்களு மைம் பூ தங்களுமே.</line>
</verse>

<verse>
<line>214. மேனின்ற சுராசுர ரார்த்தனரே</line>
<line>		திருமாலும் விருஞ்சனு மார்த்தனரே</line>
<line>	பானின்ற சராசர மார்த்தனவே</line>
<line>		பதினாஉல கங்களு மார்த்தனவே.</line>
</verse>

<verse>
<line>215. வாராயிவ ராகம துல்லபமும்</line>
<line>		வருமெங்கன் சிவாகம வல்லபமும்</line>
<line>	பாராய்வழு தீயிது பாருருவத்</line>
<line>		திருவிக்ரம மின்று படும்படியே.</line>
</verse>

<verse>
<line>216. ஒருகூன்மிசை வைத்த திருக்கைபுறத்</line>
<line>		தொருகூன்மிசை வைத்தனர் வைத்தலுமே</line>
<line>	இருகூனு நிமிர்த்தன தென்னவர்கோன்</line>
<line>		முதுகுந்தட மார்பு மிடம்பெறவே.</line>
</verse>

<verse>
<line>217. ஆதிச்செழி யற்கொரு கைம்மலர்பொன்</line>
<line>னடையப்புக லிக்கிறை வெப்பழலால்</line>
<line>	வேதிக்க வுடம்பொரு பொன்மயமா</line>
<line>		யொளிவிட்டு விளங்கினன் மீனவனே.</line>
</verse>

<verse>
<line>218. வேதப் பகைவர் தம்முடம்பு</line>
<line>		வீங்கத் தூங்கும் வெங்கழுவிற்</line>
<line>	கேதப் படுமெண் பெருங்குன்றத்</line>
<line>		தெல்லா வசோகு மெறிகெனவே.</line>
</verse>

<verse>
<line>219. மண்ணா வுடம்பு தங்குருதி</line>
<line>		மண்ணக் கழுவின் மிசைவைத்தார்</line>
<line>	எண்ணா யிரவர்க் கெளியரோ</line>
<line>		நாற்பத் தெண்ணா யிரவரே.</line>
</verse>

<verse>
<line>220. கொன்று பிள்ளை யூர்புக்கார்</line>
<line>		குண்டர்நரகக் குழிபுக்கார்</line>
<line>	என்று சொல்லி யகிலகலா</line>
<line>		வல்லி யிறைஞ்சி யிருத்தலுமே.</line>
</verse>

<verse>
<line>221. தெம்முன் சென்று நம்பிள்ளை</line>
<line>		செய்த தொருபோர் செப்பினையால்</line>
<line>	நம்முன் தவள முளரிமிசை</line>
<line>		யிருக்கப் பெறுதி நாமகளே.</line>
</verse>

<verse>
<line>பேய் முறைப்பாடு</line>
</verse>

<verse>
<line>222. என்றிறைவி நாமகட்குத் திருவுள்ளஞ்</line>
<line>		செய்யக் கேட்டிருந்த பேயில்</line>
<line>	ஒன்றிறையுங் கூசாதே யுறுபசிநோய்</line>
<line>		விண்ணப்பஞ் செய்ய லுற்றே.</line>
</verse>

<verse>
<title>வேறு</title>
</verse>

<verse>
<line>223. ஒற்றைத் தலைவெட் டுண்டதுகொண்</line>
<line>		டோடிச் சென்றான் சென்றாலென்</line>
<line>	மற்றைத் தலையுந் தானுமாய்</line>
<line>		வணங்கி நின்றான் மலரோனே.</line>
</verse>

<verse>
<line>224. உலகிற் பெரிய கபாலத்தே</line>
<line>		யொருவ ருதிர மேற்றூற்றி</line>
<line>	விலகிற் பிழையார் சூலத்தே கொண்டார்</line>
<line>		கணவர்  வெற்றுடலே.</line>
</verse>

<verse>
<line>225. கூறாக் குதற்கு வாளிலரோ குத்தி தூக்க வேலிலரோ</line>
<line>	பழம்படியே தசமுகனை விட்டார்தம் பாட்டறிவே.</line>
</verse>

<verse>
<title>வேறு</title>
</verse>

<verse>
<line>226. குழம்படியேம் புகவிழுந்து பொருப்படியிற்கொள்ளாமே</line>
<line>பழம்படியே தசமுகனை விடட்டார்தம் பாட்டறிவே.</line>
</verse>

<verse>
<line>227. வைய முண்ணோங் கடன்மடோ மற்றும் புவன முற்றும்போய்</line>
<line>	ஐய முண்ணோங் கடனஞ்சு குடியோமுங்க ளடியோமே.</line>
</verse>

<verse>
<title>வேறு</title>
</verse>

<verse>
<line>228. கார்மலையச் சந்தனமும் வடவிமயக் காரகிலும்</line>
<line>	போர்மலையக் கடவதொரு பிள்ளைக்குப் போக்குதியே.</line>
</verse>

<verse>
<line>229. எப்பயறு மெக்கனியு மெக்கிழங்கு மெத்தேனுந்</line>
<line>	தொப்பையொரு பெருவயிற்றுப் பிள்ளைக்குச் சுமத்துதியே.</line>
</verse>

<verse>
<line>230. மிக்கள்ளுங் கறியநந்த மிடாப்பலவுந் தடாப்பலவு</line>
<line>	மெக்கள்ளு மொருபிள்ளை மடுத்தாட வெடுத்துதியே.</line>
</verse>

<verse>
<line>231. சூரொடும்பொர வஞ்சிசூடிய பிள்ளையார்படை தொட்டநான்</line>
<line>	ஈருடம்பு மிசைந்திரண்டுதி ரப்பரப்பு மிறைத்தனம்.</line>
</verse>

<verse>
<line>232. அசும்புதூர்வயி றாரமுன்பவர் செற்றதானவ ரற்றநாள்</line>
<line>	விசும்புதூர விழும்பிணங்க ணிணங்களூற மிசைந்தனம்.</line>
</verse>

<verse>
<line>233. அறந்தவாமல யப்பொருப்பி லகத்தியற்கமு தாகநீர்</line>
<line>	வறந்தவாரிதி யேழின்மீனு மெடுத்துவாயின் மடுத்தனம்.</line>
</verse>

<verse>
<title>வேறு</title>
</verse>

<verse>
<line>234. மிடையப்போய் நரம்புடலும் வெறுந்தலையே தலையாகி</line>
<line>	அடையப்போ யடியோமு மாண்டலையா யற்றனமே.</line>
</verse>

<verse>
<line>235. வற்றியே யுடம்பிழிந்தோ மற்றொருமா னிடவுடம்பு</line>
<line>	பற்றியே நின்றடியோம் பணிசெய்யப் பணிவாழி.</line>
</verse>

<verse>
<line>236. வில்லவனைத் திறைகொண்ட வேற்றண்ட காபதியைப்</line>
<line>	பல்லவனைப் பாடாதார் பசியனைய பசியினமே.</line>
</verse>

<verse>
<line>237. கட்டரணம் வல்லவனை நடைகொண்டார் காவிரிப்பூம்</line>
<line>	பட்டினமும் பாடாதார் பசியன்ன பசியினமே.</line>
</verse>

<verse>
<title>பேய்களின் கனாக்காட்சி</title>
</verse>

<verse>
<title>வேறு</title>
</verse>

<verse>
<line>238. விரைந்திருந்து தின்பதற்கு முண்பதற்கு மேமிகக்</line>
<line>	கரைந்திருந்து கண்டுயின்று காணுநற்க னாவமே.</line>
</verse>

<verse>
<line>239. கடன்முகந்து தனியெழுந்த முகில்விழுந்த கனவுகண்</line>
<line>	டடன்முகந்த திகிரிமொய்ம்ப னமளிமண்டி யறிதுமே.</line>
</verse>

<verse>
<line>240. கடைபயின்ற பவனமண்ட முகடுகொண்ட கனவொடும்</line>
<line>	புடைபெயர்ந்து தனிவிரிஞ்சன் முளரிசென்று புகுதுமே.</line>
</verse>

<verse>
<title>வேறு</title>
</verse>

<verse>
<line>241. என்றுபேயடைய நின்றுபூசலிட</line>
<line>		விங்குநின்றுபடை போனபேய்</line>
<line>	ஒன்றுபேருவகை சென்று கூறுகெள</line>
<line>		வோடிமோடிகழல் சூடியே.</line>
</verse>

<verse>
<line>242. இரைத்தகூர்பசி யுழந்தபேய்களினி</line>
<line>		யென்பின்வாருமென முன்புசென்</line>
<line>	றுரைத்ததோவதுவு மில்லையோதிரிய</line>
<line>		யாகசாலைபுக வோடவே.</line>
</verse>

<verse>
<line>243. ஓடுகின்றதனை நின்றபேய்தொடர</line>
<line>		வோடியோடியுளை யப்பிடித்</line>
<line>	தாடுகின்றகொடி மாடமுன்றில்விட</line>
<line>		வையைகண்டருளி யதனையே.</line>
</verse>

<verse>
<line>244. அஞ்சலென்றுதிரு வாய்மலர்ந்தயனு</line>
<line>		மம்பரத்தவனு மும்பரும்</line>
<line>	எஞ்சலின்றியுட னின்றவிந்தபடி</line>
<line>		யெம்படைக்குரைசெய் கென்னவே.</line>
</verse>

<verse>
<line>8. காளிக்குக் கூளி கூறியது</line>
</verse>

<verse>
<line>245. பாவியார்சிறு தக்கனாரொரு பக்கமாய பரம்பரன்</line>
<line>	தேவியான்முனி வுண்டுபட்டது கேண்மினென்றது செப்புமே.</line>
</verse>

<verse>
<title>தக்கன் யாகம்</title>
</verse>

<verse>
<line>246. எல்லைநாயக ராசராச புரேசரீச ரிதற்கெனுந் [யே</line>
<line>	தொல்லைநான்மறை நிற்கமற்றொரு கேள்விவேள்வி தொடங்கி</line>
</verse>

<verse>
<line>247. கங்கைமாநதி வீழ்புறத்தது கனகலத்தொரு கனனிழைத்</line>
<line>	தங்கண்வானவர் வருகவென்றனன் முனிவர்தன்படை யாகவே.</line>
</verse>

<verse>
<line>248. அழைத்தவானவர் பயணமென்றலு</line>
<line>		மவுணர்நின்றில ராசையால்</line>
<line>	இழைத்தயாக விபாகமுற்பட</line>
<line>		வுண்ணலாமென வெண்ணியே.</line>
</verse>

<verse>
<title>தக்கன் யாகத்திற்குத் தேவர் முதலியோர் வருகை</title>
</verse>

<verse>
<title>திக்குப் பாலகர்.</title>
</verse>

<verse>
<line>249. பாவகாதிகள் லோகபாலர் பரந்துவந்து புரந்தரன்</line>
<line>	சேவகாத்கள் போலநாலிரு வேழமேறினர் சேரவே.</line>
</verse>

<verse>
<title>துவாதசாதித்தர்</title>
</verse>

<verse>
<line>250. திங்கள்வெண்குடை மேலெறிப்ப வருக்கர்பன்னிரு தேரினுந்</line>
<line>தங்கள்வெங்கதிர் நடுவெறித்தன ருடுவெறிப்பொளி தவிரவே.</line>
</verse>

<verse>
<title>ஏகாதசருத்திரர்</title>
</verse>

<verse>
<line>251. ஏறுகளிறென வேறியெரிவிழ யிசர்பதினொரு தேசருங்</line>
<line>	கூறுபடுபிறை யாறுசுழல்சடை யோடுமுடுகினர் கூடவே.</line>
</verse>

<verse>
<title>அச்சுவினி தேவர்கள்.</title>
</verse>

<verse>
<line>252. விண்மருங்கமரர் தம்முடன்பழகி வேள்வியாவுதி யுண்ணவோ</line>
<line>	புண்மருந்திட வெண்ணியோகடி தாயுள்வேதியர் போதவே.</line>
</verse>

<verse>
<title>மருத்துக்கள் முதலியோர்</title>
</verse>

<verse>
<line>253. மருக்கணங்களும் விசுவதேவரு மற்றையட்ட வசுக்களுங்</line>
<line>	குருக்களும்பிற ருங்கடாவு விமானகோடிகள் கூடவே.</line>
</verse>

<verse>
<title>இந்திரன்</title>
</verse>

<verse>
<line>254. சோதிநேமியும் வச்ரமாலையு மருளிநின்று துளும்பவே</line>
<line>	யாதுகற்பகம் யாதுமேரு வெனத்தெளிந்திலர் யாதுமே.</line>
</verse>

<verse>
<line>255. வேய்திரக்கட லேழுமம்புத மேழுமையல் விளைக்கவெம்</line>
<line>	மாதிரக்களி றெட்டுமாதி விலங்கலெட்டு மயங்கவே.</line>
</verse>

<verse>
<line>256. குரத்துரங்கமும் வெய்யகாலு மனத்தின்மையல் கொளுத்தவே</line>
<line>	அரக்கர்வெள்ளமு முள்லதீயு நிகர்ப்பயாரு மயர்ப்பவே.</line>
</verse>

<verse>
<line>257. மீதுபோநதி யும்பதாகையும் வேறுபட்டில விண்ணிலே</line>
<line>	ஆதபத்ரமு மண்டகோளமு மொத்துமம்ம ரளிக்கவே.</line>
</verse>

<verse>
<line>258. விட்டகார்முகில் யாவையாவர் சுரேசரென்று வியக்கவே</line>
<line>	இட்டகார்முகம் யாவையாவை யெடுத்தகார்முக மென்னவே.</line>
</verse>

<verse>
<line>259. அலங்கையிற்படை யுடையநம்பியொ</line>
<line>		டதிர் பட்யோததி யனையதோர்</line>
<line>	இலங்கெயிற்றயி ராபதத்தொடு</line>
<line>		கடிதுவந்தன னிந்திரன்.</line>
</verse>

<verse>
<title>பிரமதேவர் வருகை.</title>
</verse>

<verse>
<line>260. மைந்தரான சுரேசரோடசு ரேசர்முன்வர மதிமருண்</line>
<line>	டந்தணாளனு மலரில்வந்தனன் முனிவர்தன்புடை யாகவே.</line>
</verse>

<verse>
<title>திருமால்வருகை.</title>
</verse>

<verse>
<line>261. ஆதிநான்முக னொடுசுராசுரர் வரவுசொல்லி யமைந்ததோ</line>
<line>	சோதிநேமி வலத்தினானொரு பயணநின்றது சொல்லுவாம்.</line>
</verse>

<verse>
<title>குதிரைகள்</title>
</verse>

<verse>
<title>வேறு</title>
</verse>

<verse>
<line>262. மரகத மேயென லாய வனப்பின</line>
<line>	சூரகத மேபதி னாயிர கோடியே.</line>
</verse>

<verse>
<line>263. ஏறிய தாமிவை போகில மெனவே</line>
<line>	கூறிய கற்கிக னேசத கோடியே.</line>
</verse>

<verse>
<line>264. கவன முவப்பன கரிய வனப்பின</line>
<line>	பவனம் வியப்பன பற்பல கோடியே.</line>
</verse>

<verse>
<line>265. தரங்க நிரைத்தன தரள நிரைத்தன</line>
<line>	துரங்க மெனைப்பல கோடி தொகுத்தே.</line>
</verse>

<verse>
<line>266. வெய்யன செக்கர் விசும்பு வெளுக்கச்</line>
<line>	செய்யன வாயீர கோடி திரண்டே.</line>
</verse>

<verse>
<line>267. பைத்துர கங்கள் விசித்த படைப்பரி</line>
<line>	கைத்துர கங்கள் கலந்திடை யிட்டே.</line>
</verse>

<verse>
<title>தேர்கள்</title>
</verse>

<verse>
<title>வேறு</title>
</verse>

<verse>
<line>268. திரையைத்தோய்வன நாலிரு</line>
<line>		திசையைச் சூழ்வன சுழ்வரு</line>
<line>		சிலையைப்போல்வன தானவர்</line>
<line>		திரனைப்போழ்வன வேழ்குல</line>
</verse>

<verse>
<line>	வரையைப்பாய்வன சூன்முதிர்</line>
<line>		மழையைக்கீள்வன கால்கொடு</line>
<line>		மதியைக்காய்வன பேரொளி</line>
<line>		வயிரத்தேர்சத கோடியே.</line>
</verse>

<verse>
<line>269. பவனப்போர்விர வாதன</line>
<line>		பருவத்தீயுறை யாதன</line>
<line>		பரவைக்கால்குளி யாதன</line>
<line>		பறியப்பேரிடி போல்வன</line>
</verse>

<verse>
<line>	கவனத்தாலெழு வாரிதி</line>
<line>		கழியப்பாய்பரி மாவின</line>
<line>		கமலத்தோன்முடி தாழ்வன</line>
<line>		கனகத்தேர்சத கோடியே.</line>
</verse>

<verse>
<line>270. கடையிற்காயெரி போல்விரி</line>
<line>		கனலிக்கேகுளிர் கூர்வன</line>
<line>		கதுவிச்சீதக லாமதி</line>
<line>		கருகக்காயுநி லாவின</line>
</verse>

<verse>
<line>	சடையிற்பாய்புனல் வானவர்</line>
<line>		தறுகட்டீயொடு மூள்வன</line>
<line>		தமரச்சேனைய றாதன</line>
<line>		தரனத்தேர்சத கோடியே.</line>
</verse>

<verse>
<title>யானைகள்</title>
</verse>

<verse>
<title>வேறு</title>
</verse>

<verse>
<line>271. என்று மாதிர மெட்டினுஞ் சென்றுசென்</line>
<line>		றென்வெட் டாவண்டம் யாவுஞ் சுமப்பன</line>
<line>	சென்று தம்பிரான் சேக்கை விரும்பிய</line>
<line>		சேடன் றெவ்வைத் தனித்தனி தீர்ப்பன.</line>
</verse>

<verse>
<line>272. விலங்க லேழிற் றடத்துங் குலநதி</line>
<line>		வேலை யேழினு நீர்க்கு விடுவன</line>
<line>	பொலங்கன் மேரு கிரிச்சிக ரந்தொறும்</line>
<line>		போக விட்டசிந் தூரப் பொடியன.</line>
</verse>

<verse>
<line>273. மழவிற் பாற்கடல் மாந்தி வளர்ந்தன</line>
<line>		மதத்தி லக்கடற் பான்முடை மாற்றின</line>
<line>	முழவிற் பூரித்த கும்ப குடந்தொறு</line>
<line>		மூரி யேழ்கட லுந்தரு மூக்கின.</line>
</verse>

<verse>
<line>274. ஓடு நான்கு பரூஉத்தா ளுடையன</line>
<line>		வுருத்த னித்தனி பாற்கட லொப்பன</line>
<line>	கோடு நான்கின செக்கர் முகத்தின</line>
<line>		குஞ்ச ரம்பதி னாயிர கோடியே.</line>
</verse>

<verse>
<title>வீரர்கள்</title>
</verse>

<verse>
<line>275. அப்பெ ரும்புர வித்தொகை மேலுநீ</line>
<line>		டாட கக்கொடி யாடுபொற் றேரினும்</line>
<line>	எப்பெ ருங்களிற் றீட்டத்தின் மேலினு</line>
<line>		மெண்ணில் கோடிநா ராயண ரேறவே.</line>
</verse>

<verse>
<line>276. முகடு விண்ட பழவண்ட கோளமு</line>
<line>		முன்னை மேருவு மிட்டுருக் கிப்பெருந்</line>
<line>	தகடு செய்துகொண் டொப்பமு மிட்டன</line>
<line>		சாத்தும் பீதக வாடை தயங்கவே.</line>
</verse>

<verse>
<line>277. பொங்க லங்கல் வருண னுரம்புகப்</line>
<line>		பொருப்பு மத்தந் திரித்த பொழுதெழுஞ்</line>
<line>	செங்க லங்கல் பரந்தெனப் பாற்கடல்</line>
<line>		சேப்ப வந்த கவுத்தவஞ் சேர்த்தியே.</line>
</verse>

<verse>
<line>278. அரிசெய் நாட்டத் தரவிந்த வாணுத</line>
<line>		லம்ம ணிக்கெதி ராகவந் தாகத்தில்</line>
<line>	எரிசெய் தாமரைப் பூவிட் டிலையிலே</line>
<line>		யிருந்த தென்ன வெதிர்வீற் றிருப்பவே.</line>
</verse>

<verse>
<line>279. காலை சூழ்செங் கதிர்முத லாயின</line>
<line>		கமலக் காடன்ன கண்ணன் கமழ்துழாய்</line>
<line>	மாலை சூழ்முடி சூழ்வரு தற்கொளி</line>
<line>		மழுங்கி மேரு கிரிசூழ் வருவதே.</line>
</verse>

<verse>
<line>280. நதிக்குப் போத வொழுகுமுத் தாரமு</line>
<line>		நகைசெய் வச்சிர நாயக மாலையு</line>
<line>	மதிக்குப் புன்மறு வாய்த்தெனத் தன்றிரு</line>
<line>		மரக தப்பெருஞ் சோதிமெய் வாய்ப்பவே.</line>
</verse>

<verse>
<line>281. அந்திச் சேயொளி முச்சுடர் முக்கணு</line>
<line>		மாதிக் காதல்கூ ராயிரம் பேரிதழ்</line>
<line>	உந்திச் செந்தனித் தாமரை நாண்மல</line>
<line>	 	ரூடி ருந்த குருசிலோ டோங்கவே.</line>
</verse>

<verse>
<line>282. திறத்து மாலைத் திருமுடிப் பக்கமே</line>
<line>		சென்ற கன்ற பணங்களுஞ் சேடனும்</line>
<line>	புறத்து மாயிரம் வெள்ளித ழாலொரு</line>
<line>		புண்ட ரீகமு மண்ணலும் போலவே.</line>
</verse>

<verse>
<line>283. பெயர்த்த தோரடித் தாமரைத் தாள்விடப்</line>
<line>		பெரும்பொற் கோளகை பண்டு பிளந்ததற்</line>
<line>	குயர்த்த தோர்வெள்ளி யண்ட கபாலமொத்</line>
<line>		தொருத னிக்கொற்ற வெண்குடை யோங்கவே.</line>
</verse>

<verse>
<line>284. திரண்டு வந்த வராமிர்த சீகரஞ்</line>
<line>		சிதற வீசித் திருப்பாற் கடற்றிரை</line>
<line>	இரண்டு வந்தன வெங்கும் விடாவென</line>
<line>		விரும ருங்குங் கவரி யிரட்டவே.</line>
</verse>

<verse>
<line>285. வாளும் வில்லுந் திகிரியுந் தண்டமும்</line>
<line>		வளையு மென்ற கிளைபுறஞ் சூழ்வர</line>
<line>	ஆளு மைம்படை யும்புடை சூழவந்</line>
<line>		தம்ப ரப்பரப் பெங்கு மடைப்பவே.</line>
</verse>

<verse>
<line>286. வயங்கு மீருகு வண்ணக் கலுழன்மேல்</line>
<line>		வளரும் பாற்கடல் பாழ்பட வந்தனன்</line>
<line>	இயங்கு மேரு கிரிச்சிக ர்த்திலோ</line>
<line>		ரிந்த்ர நீல கிரிபோன் றிருப்பவே.</line>
</verse>

<verse>
<title>உமாதேவியார் செயல்</title>
</verse>

<verse>
<title>வேறு</title>
</verse>

<verse>
<line>287. இப்பரிசு வேள்விபுரி தாதைசெய லெல்லாம்</line>
<line>	ஒப்பரிய நாயகி யுணர்ந்தன ளுணர்த்தே.</line>
</verse>

<verse>
<line>288. எந்தைபுரி வேள்வியிடை யானும்விடை கொள்ளத்</line>
<line>	தந்தருளு கென்றனன் பணிந்திறைவர் தாளே.</line>
</verse>

<verse>
<line>289. விண்ணவர்கள் மேலுமயன் மேலுமரி மேலுங்</line>
<line>	கண்ணுதன் முதற்கடவு ளுங்கருணை வைத்தே.</line>
</verse>

<verse>
<line>290. அழைத்தில னதற்கல்வ தென்கொலென வையன்</line>
<line>	பிழைத்தன பொறுத்தருளு கென்றனன் பெயர்த்தே.</line>
</verse>

<verse>
<line>291. என்றலு முகிழ்த்தகுறு முறுவலொடும் ரசதக்</line>
<line>	குன்றவர் கெடுத்தனர் கொடுக்கவிடை கொண்டே.</line>
</verse>

<verse>
<line>292. பங்கனக லத்திறைவி வேள்விபழு தாகத்</line>
<line>	தங்கனக லத்தமர்செய் தாதைமனை புக்கே.</line>
</verse>

<verse>
<line>293. காதலனை விட்டவ னெழுந்தருள வுங்கண்</line>
<line>	டேதில ரெனத்தம ரிருத்தன ரிருத்தே.</line>
</verse>

<verse>
<line>294. தன்னையிகழ் தாதையொடு தங்கைய ரொடுந்தன்</line>
<line>	அன்னையை முனிந்துலகி னன்னையருள் செய்வாள்.</line>
</verse>

<verse>
<title>வேறு</title>
</verse>

<verse>
<line>295. பின்னோர் பெறுங்கண் பெறேஎன்</line>
<line>	என்னோ விவன்பட்ட தின்றே.</line>
</verse>

<verse>
<line>296. இழைப்பா யிழைப்பா யினியாகம்</line>
<line>	பிழைப்பாய் பிழைப்பாய் பிதாவே.</line>
</verse>

<verse>
<line>297. யாயுங் கொடியேற் கிரங்காய்</line>
<line>	நீயுங் கெடவோ நினைப்பே.</line>
</verse>

<verse>
<line>298. எங்கை மீரே னென்கிலீர்</line>
<line>	நங்கைமீ ரீதோ நலனே.</line>
</verse>

<verse>
<line>299. எம்படைப்புத் தானும் யாயுங்</line>
<line>	கும்பிடப் போலுங் குறிப்பே.</line>
</verse>

<verse>
<line>300.  தந்தையார் தாயார் தலைவருக்</line>
<line>	கெந்தையார் யாயா ரெமக்கே.</line>
</verse>

<verse>
<line>301. எனக்கு மெவற்கு மிறைவன்</line>
<line>	தனக்கு மெவனோ தவறே.</line>
</verse>

<verse>
<line>302. இரையாசை யால்வந்த யஞ்ஞா</line>
<line>	உரையா யுறுமோநின் னுணே.</line>
</verse>

<verse>
<line>303. வான்வந்த மண்வந்த வேள்விக்</line>
<line>	கியான்வந்த வெளிவந்த வாறே.</line>
</verse>

<verse>
<line>304. தீக்குப் பிறந்தவில் லென்னும்</line>
<line>	வேய்க்குச் சிறப்பென்கொல் வேறே.</line>
</verse>

<verse>
<line>305. இவ்வா றுரைத்திங்கு நின்றுஞ்</line>
<line>	செவ்வாய் மடப்பாவை சென்றே.</line>
</verse>

<verse>
<line>306. விற்சாரு மேருப் பொருப்பின்</line>
<line>	பொற்சரால் சாரப் புகவே.</line>
</verse>

<verse>
<title>வேறு</title>
</verse>

<verse>
<line>307. விதிநன்கமைத்து வழிபாடுசெய்து மடவாயமாகி மிடையும்</line>
<line>	பதினெண்கணத்து மடவாருமன்னை முனிவாறுமாறு பகர்வார்.</line>
</verse>

<verse>
<title>வேறு</title>
</verse>

<verse>
<line>308. விழிவழிகருணைப் பச்சைவிளக்கே மின்னேநின்</line>
<line>	வழிவழியடியே நீரரமகளி ரோம்யாமே.</line>
</verse>

<verse>
<line>309. இது திருமலையிது திருவடிமலர்தோய் மலர்வாவி</line>
<line>	இதுதுறைவருமிவ டிருமகளிவள்பார் மகள்பாரே.</line>
</verse>

<verse>
<line>310. மேனிற்பன வுலகம்பொதி வெள்ளம்பொதி கள்ளச்</line>
<line>	சேனிற்பன விடுநீர்புனை தெண்ணீர்படு சுனையே.</line>
</verse>

<verse>
<line>311. அடையப் பில நதிகீழ்விழ வண்டத்தடி யிடைபோய்</line>
<line>	உடையப்புடை பெயர்வெள்ள முடைத்திக்குளிர் தடமே.</line>
</verse>

<verse>
<line>312. அலரோடளி தோயாதன விவ்வாவி யணங்கே</line>
<line>	மலரோனுல கடையப்புடை பெயர்கார்களின் வைப்பே.</line>
</verse>

<verse>
<line>313. மண்முழுவது மேல்வான்முழு வதுங்கொண்டது போல</line>
<line>	வெண்மதிதின பதிதாரகை விழவெழுசா யையதே.</line>
</verse>

<verse>
<line>314. நடுவேவரு நானாவித ரத்னங்களி னான்மேல்</line>
<line>	உடுவேய்தரு ககனாகர ரூரொத்துள வொளியே.</line>
</verse>

<verse>
<line>315. அந்திப்போ தனையானுட னாடுந்திரு வேநின்</line>
<line>	னுந்திப்போ திவ்வவியி னூடேயொரு மலரே.</line>
</verse>

<verse>
<line>316. படைக்குந்திரி புவனம்பின் பாழாக வெழுந்தங்</line>
<line>	குடைக்கும்பெரு வெள்ளங்களி னுற்பத்திய தீதே.</line>
</verse>

<verse>
<line>317. இவ்வாவியி லிவை செங்குவ ளைகளேயிவை யிவைநின்</line>
<line>	மைவார்திரு நயனங்களின் வலிபட்டன மிகவே.</line>
</verse>

<verse>
<line>318. நிரையேறிய குமுதங்களில் வெள்ளென்பன விவைநின்</line>
<line>	விரையேறிய திருவாய்மலர் மீதூர்வன வுறவே.</line>
</verse>

<verse>
<line>319. வேதங்கவர் கிளவித்திரு மின்னேவிரை கெழுநின்</line>
<line>	பாதங்கவர் செந்தாமரை வெண்டாமரை பண்டே.</line>
</verse>

<verse>
<line>320. குளிப்பாரில ரஞ்சாதிது கொண்டோதி முடிக்கட்</line>
<line>	டெளிப்பார்கலை மகள்பார்மக டிருவென்பவ ரிவரே.</line>
</verse>

<verse>
<line>321. அலம்வந்தன வேதங்க ளரற்றத்திரு மலையே</line>
<line>	வலம்வந்தனண் மழுவார்திரு நெடுமங்கல மகளே.</line>
</verse>

<verse>
<line>தேவி கைலைக்குச் செல்லுதல்.</line>
</verse>

<verse>
<line>322. என்றென்று வணங்கி வணங்கிவிடா</line>
<line>		தெல்லாரு மிரப்ப விரப்பவதற்</line>
<line>	கொன்றுந்தணி வின்றி விரைந்துபிரா</line>
<line>		னுறைகோநகர் புக்கன லொண்ணுதலே.</line>
</verse>

<verse>
<title>தேவி விண்ணப்பஞ்செய்தல்</title>
</verse>

<verse>
<line>323. புக்குப்பெரு மானடி சேவடியிற்</line>
<line>		பொன்மாமலர் கொண்டு புனைந்துபொலஞ்</line>
<line>	செக்கர்ச்சடை யானெதிர் நின்றருளிச்</line>
<line>		செய்தாளடை யத்தமர் செய்தனவே.</line>
</verse>

<verse>
<title>தேவியின் சினம்</title>
</verse>

<verse>
<line>324. தாய்தந்தை யெனத்தடை செய்வளினித்</line>
<line>		தானேயென வேள்வி தகர்ப்பதுமேல்</line>
<line>	நாதன்றிரு வுள்ள மெடுத்திலன்மற்</line>
<line>		றதுகண்டு முனிந்தன ணாயகியே.</line>
</verse>

<verse>
<line>325. வேலெடுத்தில ரம்புதொட்டிலர் முயலகன்பெரு வெரிந்மிசைக்</line>
<line>	காலெடுத்தில ரகிலமுஞ்சுடு கையெடுத்தில ரையரே.</line>
</verse>

<verse>
<line>326. விழித்ததில்லை நுதற்றிருக்கண் மிடற்றிலாலமு மேலெழக்</line>
<line>கொழித்ததில்லை யிருந்தவாவிது வென்றுநாயகி கூசியே.</line>
</verse>

<verse>
<line>தேவி பிரிந்துசெல்லல்.</line>
</verse>

<verse>
<line>327. கரந்தபாகமு நின்றபாகமும் வேறுகொண்டமை காதலாள்</line>
<line>	புரந்தபாகமு மவற்குவிட்டிம யம்புகத்தனி போகவே.</line>
</verse>

<verse>
<title>சிவபெருமானுடைய சினம்.</title>
</verse>

<verse>
<line>328. விட்டபாகம் வலிந்துகண்டனர் வேறுகண்டிலர் மெய்ப்படப்</line>
<line>பட்டபாக மிரண்டுமங்கள ரில்லையன்று படாதவே.</line>
</verse>

<verse>
<line>329. இத்தனாடவி முன்சிவக்க வெரிந்தவொத்த திருண்டதண்</line>
<line>	சந்தனாடவி வேறுபட்டது தம்மலைக்குளிர் சாரலே.</line>
</verse>

<verse>
<line>330. பைத்தபூணு முயிர்ப்பழன்றன பண்டையுண்டியு மவ்வழிக்</line>
<line>	கைத்ததூழியி லாடுமஞ்சன முங்கிளர்ந்து கனன்றதே.</line>
</verse>

<verse>
<line>331. மதியுமன்றொரு தீவிளைந்து வளைந்துகொண்டது கங்கைமா</line>
<line>	நதியும்வீசிய சீகரங்களின் வந்துவந்து நலித்ததே.</line>
</verse>

<verse>
<line>332. சூடுமஞ்சன வாறுசுட்டது கண்ணிசுட்டது பண்டுதாம்</line>
<line>	ஆடுமஞ்சன முங்கொதித்த திருப்பரோதனி பையரே.</line>
</verse>

<verse>
<title>வீரபத்திரதேவர் தோற்றம்.</title>
</verse>

<verse>
<line>333. அன்றுவானவ ருய்யவையர் மிடற்றடக்கிய வாலமே [வே</line>
<line>	சென்றுவானவ ருயிர்கொளத்திரு வுள்ளம்வைத்தமை தெரிய</line>
</verse>

<verse>
<line>334. காலைநெற்றியி னகிலமுஞ்சுடு கனலிகுறைபட விறைவர்தம்</line>
<line>	மேலைநெற்றி விழிக்கவந்து பணிந்துநின்றனன் வீரனே.</line>
</verse>

<verse>
<title>சிவபெருமான் கட்டளை</title>
</verse>

<verse>
<line>335. நின்றவீரனை மாமன்வேள்வி தகர்க்கவென்று நெடுஞ்சிலைக்</line>
<line>	குன்றவீரர் பணித்தலும்பணி யாமல்வந்தன கூளியே.</line>
</verse>

<verse>
<title>வீரபத்திரதேவர் புறப்பாடு</title>
</verse>

<verse>
<line>336. திரண்டபூத பசாசமாயிர கோடிகோடி திறத்தவாய்</line>
<line>	இரண்டுபாலு முடன்செலத்திரு மலைவலஞ்செய் திறைஞ்சியே.</line>
</verse>

<verse>
<line>337. உலகு மூழுயுங் கொண்ட மைந்ததோர்</line>
<line>	இலகு வைதிகத் தேரி லேறியே.</line>
</verse>

<verse>
<line>338. மாக சந்த்ரமண் டலமழுங்கநின்</line>
<line>	றேக சந்த்ரமண் டலமெறிப்பவே.</line>
</verse>

<verse>
<line>339. மழைத்த தென்றலால் வாடையால்வகுத்</line>
<line>	திழைத்த திவ்யசா மரையிரட்டவே.</line>
</verse>

<verse>
<line>340. கொள்ளையிற்படுங் குலவராகமான்</line>
<line>வெள்ளெயிற்றுமுத் தாரமின்னவே.</line>
</verse>

<verse>
<line>341. காத்தவாமையோ டுங்கபாலமுங்</line>
<line>	கோத்தசன்ன வீரங்குலாவவே.</line>
</verse>

<verse>
<line>342. வந்தவந்தமா யவர்கண் மாய்தொறுந்</line>
<line>	தந்ததந்தசங் கந்தழங்கவே.</line>
</verse>

<verse>
<line>343. திருக்கொண் மார்பன் றிரிவிக் ரமஞ்செய்த</line>
<line>உருக்கொ ணீள்குரற் காள மூதவே.</line>
</verse>

<verse>
<line>344. செய்த வேள்விவா யஞ்ஞர் தஞ்சிரம்</line>
<line>	பெய்த சிங்கசின் னம்பி டிக்கவே.</line>
</verse>

<verse>
<line>345. ஓடி யோடிவீழ் தரும ரூர்தியின்</line>
<line>	கோடி கோடிகொம் புகள்கு றிக்கவே.</line>
</verse>

<verse>
<line>346. கொண்ட சூலவேல் விடுபொ றிக்குழாம்</line>
<line>	மண்ட வானமீ னிரைம யங்கவே.</line>
</verse>

<verse>
<line>347. அற்ற வில்லின்வா னடைய வுந்திருக்</line>
<line>	கொற்ற வில்லினாண் விழிகொ ளுத்தவே.</line>
</verse>

<verse>
<line>பூதகணங்களின் செயல்கள்</line>
</verse>

<verse>
<line>348. பூத நெற்றியிற் புண்ட ரம்புகுந்</line>
<line>	தியாது தானர்நெய்த் தோரி ழிக்கவே.</line>
</verse>

<verse>
<line>349. கூடி நாயகக் குலம்வி டுந்திருத்</line>
<line>	தூளி சாகரா திகள்சு வற்றவே.</line>
</verse>

<verse>
<line>350. ஏனை யோரிருந் தினைய தென்னவே</line>
<line>சேனை வல்லபஞ் செய்த செய்தியே.</line>
</verse>

<verse>
<line>351. கொம்மை முலைமருங் கெழுவர் குமரிமார்</line>
<line>	தம்மை யிடுகபே யென்று சாடியே.</line>
</verse>

<verse>
<line>352. படை விடாவிசும் பாள ரைப்பறித்</line>
<line>	திடை விடாவிமா னங்க ளேறியே.</line>
</verse>

<verse>
<line>353. இடியி ருந்தகட் பதினொ ரீசர்தங்</line>
<line>	குடியி ருத்தவூ ரெரிகொ ளுத்தியே.</line>
</verse>

<verse>
<line>354. அகலி டந்தொழுந் துவாத சாதித்தர்</line>
<line>	புகலி டம்பொடி செய்து போகியே.</line>
</verse>

<verse>
<line>355. போழு மின்னின்முன் புகுந்தே ழுந்துகீழ்</line>
<line>	வீழு முன்பிடித் திடிவி ழுங்கியே.</line>
</verse>

<verse>
<line>356. பூதம்யாவையும் புகவிழுங்குமா</line>
<line>	ஓதம்யாவையுந் தேயோடியே.</line>
</verse>

<verse>
<title>வேறு</title>
</verse>

<verse>
<line>357. இந்துகாந்தக் கிரியை யிடக்கணால்</line>
<line>	வந்துகாந்தக் கடல்செய்து மாந்தியே.</line>
</verse>

<verse>
<title>வேறு</title>
</verse>

<verse>
<line>358. முதியவானமீன் வாரிமுக்கிவான்</line>
<line>	நதியவானமீன் முழுகிநாடியே.</line>
</verse>

<verse>
<line>359. கடவுணீலியூர் யாளிகைப்படுத்</line>
<line>தடவிவாரிமால் யானைவாரியே.</line>
</verse>

<verse>
<line>360. செலல்விலங்குதேன் மடைதெவிட்டியேழ்</line>
<line>	குலவிலங்கலும் பாதிகுன்றவே.</line>
</verse>

<verse>
<line>361. கார்கிழித்தமரர் நாடுகண்டுடன்</line>
<line>	பார்கிழித்துரகர் பூமிபற்றியே</line>
</verse>

<verse>
<line>362. குடத்தெடுத்துநல் லமுதுகொண்டவர்</line>
<line>	படத்தெடுத்தசூ டிகைபறித்துமே.</line>
</verse>

<verse>
<line>363. கடித்துமென்றுரகர் நஞ்சுகருதியோ</line>
<line>	குடித்துமென்றமிழ்து கொண்டுபோயுமே.</line>
</verse>

<verse>
<title>வேறு</title>
</verse>

<verse>
<line>364. எழாதவாறு மெழுந்த சுராசுரர்</line>
<line>	விழாதவாறும் விசும்பற வீசியே.</line>
</verse>

<verse>
<line>365. பேர்த்துநின்ற வயிற்றின் பெருவெளித்</line>
<line>	தூர்த்துநின்ற விசும்பெதிர் தோன்றவே.</line>
</verse>

<verse>
<line>366. வருதரைக்குன்று வாழுங் குழிவழி</line>
<line>	நிருதரைப்புக நூக்கி நிரப்பியே.</line>
</verse>

<verse>
<title>வேறு</title>
</verse>

<verse>
<line>367. ஓதமும் பொருப்புமண்ணூம் விண்ணுமற்று முள்ளவெப்</line>
<line>	பூதமுந்த்ரி சூலமிட் டுடன்கலந்து போதவே.</line>
</verse>

<verse>
<line>368. வெம்மையே புரித்தபே ரலாயுதத்தர் வெள்ளையோர்</line>
<line>	தம்மையே யுரித்தமைத்த சட்டைமெய் தயங்கவே.</line>
</verse>

<verse>
<line>369. துற்றெழுத்த பேய்நிரை துளங்குதம் முடம்புவிட்</line>
<line>	டற்றெழுத்த தோன்முழுச் சனம்பமீ தலம்பவே.</line>
</verse>

<verse>
<line>370. மலைப்படித்த சீயவே றுடன்பிணைத்து வாரிநீர்</line>
<line>	அலைப்பிடித்த மீனவேறு பெய்தகா தலைப்பவே.</line>
</verse>

<verse>
<line>371. பள்ளிவெற்பின் மாறுகோள் பெறாதுவிஞ்சை மன்னர்பாழ்</line>
<line>	வெள்ளிவெற் பெடுத்திடுங் குதம்பைகாதின் மின்னவே.</line>
</verse>

<verse>
<line>372. குஞ்சிவேர் பறித்தகுண்டர் செம்பொனிற் குயின்றபேர்</line>
<line>	இஞ்சிவே ரகழ்ந்துகாதி லிட்டதோ டெறிப்பவே.</line>
</verse>

<verse>
<line>373. பாரிடக் குலங்கள்பேய் நெடுங்கைகால்க விற்படக்</line>
<line>	காருடற் சமண்குழா மநேககோடி கட்டியே.</line>
</verse>

<verse>
<line>374. படர்ந்தபார மேகவர்ந்து தின்றுபாழ் படுத்தின</line>
<line>	கிடந்தகுண்டர் மெய்ந்நரம்பு மென்புமே கிடப்பவே.</line>
</verse>

<verse>
<line>375. ஏறுநாலு திக்கிலும் புதுப்புலால் மகழ்ந்தெழுந்</line>
<line>	தாறுநா லமண்பிணங் கிடந்தெயிற் றலைப்பவே.</line>
</verse>

<verse>
<line>376. தாழியிற் பிணங்களுந் தலைப்படா வெறுந்தவப்</line>
<line>	பாழியிற் பிணங்களுந் துளப்பெழப் படுத்தியே.</line>
</verse>

<verse>
<line>377. பாலெழுங்கொல் பண்டுபோல வன்றியே பசும்புணீர்</line>
<line>	மேலெழுங்கொ லென்றுதேரர் தேவடங்க வெட்டியே.</line>
</verse>

<verse>
<line>378. தடந்தொறும் படிந்துகைத்ரி தண்டுமேக தண்டுமாய்</line>
<line>	மடந்தொறுங் கிடந்தசோரர் கொத்தடங்க வாரியே.</line>
</verse>

<verse>
<line>379. வேலைவா யரக்கர்தம்மை மேருவில்லி மஞ்சனச்</line>
<line>	சாலைவாய் வெதுப்பிவா ளெயிற்றினிற் சவட்டியே.</line>
</verse>

<verse>
<line>380. காவிவண்ண னூர்தியுந்த்ரி வேதபோத காரணன்</line>
<line>	தூவியன்ன முங்கலந்து சுட்டுவாயி லிட்டுமே.</line>
</verse>

<verse>
<line>381. சங்கெடுத் துடைத்தயின்று தன்றுதணைத் தனிப்பெருங்</line>
<line>	கொங்குசடைச் சரோருகக் கிழங்ககழந்து கொண்டுமே.</line>
</verse>

<verse>
<line>382. கைவழிக் குலப்பொருப்பொ ரெட்டுடன் கலந்துகொண்</line>
<line>	டவ்வழிப்  புயங்கமெட்டு மம்புயத் திருத்தியே.</line>
</verse>

<verse>
<line>383. நீர்கலக்கி மீனவே றெடுத்தயின்று நீனிறக்</line>
<line>	கார்கலக்கி வானவேறு செவ்வியோடு கவ்வியே.</line>
</verse>

<verse>
<line>384. ஆழிமால் வரைப்புறத் திறைத்துவாரி யற்றபின்</line>
<line>	பாழிமால் கடற்பெருந் திமிங்கிலங்கள் பற்றியே.</line>
</verse>

<verse>
<line>385. அடவிமுற்று மசலமுற்று மவனிமுற்று மதிர்படத்</line>
<line>	தடவிமுற்று முயிர்தொலைச்சி வயிறுவேட்கை தணியவே.</line>
</verse>

<verse>
<line>386. பிடிப்பிடித் துணித்துணிப் பிணிக்கெனப் பெயற்புலத்</line>
<line>	திடிப்பிடித் தெருத்திறத் தெயிற்றரைத் திறக்கியே.</line>
</verse>

<verse>
<line>387. வாலெடுத்து நாகர்தங்கள் திவ்யபானம் வைத்தபொற்</line>
<line>	சாலெடுத்து வாய்மடுத்து வெவ்விடாய் தணித்துமே.</line>
</verse>

<verse>
<line>388. கொண்டல்கோ லறுத்துவான யாறுகோ ளறுத்துமேல்</line>
<line>	அண்டகோள கைப்புறத் தறாதநீ ரறுத்துமே.</line>
</verse>

<verse>
<title>வேறு</title>
<line>389. மண்ணிற்செந்தீ யடுப்பவுடுப்பல மாய்ந்தன</line>
<line>	கண்ணிற்காய்ச்சிக் குடித்தனநாற்பாற் கடலுமே.</line>
</verse>

<verse>
<line>390. உயிர்ப்பெரும்பசி தீர்ந்தகொலில்லைகொ லுண்டுவெண்</line>
<line>	தயிர்ப்பெருங்கடன் மாய்ந்தனபூதமே தாளமே.</line>
</verse>

<verse>
<line>391. அப்புளித்தயிர்க் கடலினுப்புக்கட லடையவே</line>
<line>	கொப்புளித்தவை யிரண்டு மொன்றக்கிக் குடித்தவே.</line>
</verse>

<verse>
<line>392. பொய்க்கடற்புறத் தெய்வங்களைப்பொரித் துத்தினா</line>
<line>	நெய்க்கடற்பசை யற்ற்தெங்குண் டினிநெய்யே.</line>
</verse>

<verse>
<line>393. வடியவாங்கி மடுக்கவெங்கேயுள வந்துதாம்</line>
<line>	படியவன்றன றாயினதண்ணீர்ப் பரவையே.</line>
</verse>

<verse>
<line>394. கருப்புச்சாற்றுக் கடலன்றுபிழைத்ததோ கழுது</line>
<line>	விருப்புச்சாற்றிற் குடித்தனகிடந்தன வெடித்தே.</line>
</verse>

<verse>
<line>395. மட்பெரும்பழங் கலத்தொடுமடுத்தன வெடுத்துக்</line>
<line>	கட்பெருங்கடல் குடித்தனதடித்தன கழுதே.</line>
</verse>

<verse>
<title>வேறு</title>
</verse>

<verse>
<line>396. வேலின்மாயன்மாய் வுறவிடும்பலி</line>
<line>	மேவுநாயகன் விடுபடைக்</line>
<line>	காலின்மாய்வன வல்லவோவொரு</line>
<line>		கையின்மாய்வன கடலுமே.</line>
</verse>

<verse>
<title>வேறு</title>
</verse>

<verse>
<line>397. நதிக ளேழினு முதற்கிரிக னேழினுமறா</line>
<line>	நளினி யேழினும் வலம்புரிய நல்லனமகோ</line>
<line>ததித ளேழினு மெடுத்தடைய வுள்ளனவெனுஞ்</line>
<line>		சங்க கோடிகள் குறித்தகில முந்தகாவே.</line>
</verse>

<verse>
<line>398. சக்க ரக்கிரியு மெக்கிரியு மெம்புடவியுஞ்</line>
<line>		சமைய வந்துதக ரத்தழுவி னுந்தழுவுநின்</line>
<line>	றக்க ரத்துலகு டைக்கினு முடைக்கு மிதிலோ</line>
<line>		ரலகை யேயென விரிஞ்சனலம் வந்தலறவே.</line>
</verse>

<verse>
<line>399. ஒரே யிற்றினும் வயிற்றினொரு பாலுமிடவே</line>
<line>		யுள்ள தெவ்வுலகு மல்லதொரு பூதமொருபேய்</line>
<line>	ஈரெ யிற்றினும் வயிற்றினிரு பாலுமிடவே</line>
<line>		றில்லை யேயென வெறித்தயன் மறித்திரியவே.</line>
</verse>

<verse>
<line>400. சுடர்கிளைத்னைய செய்யசுரி யங்கிவிரியச்</line>
<line>		சுழல்விழிப்புகை பரந்துதிசை சூழவருபேய்</line>
<line>	கடல்குடித்தவனி தின்றுலகு மண்டமுமெழக்</line>
<line>		கதுவுமூழிமுடி விற்கன லெனக்கடுகவே.</line>
</verse>

<verse>
<line>401. யானை யானசில பாய்புரவி யானசிலவா</line>
<line>		ளடவி யானசில தேரசல மானசிலநேர்</line>
<line>	சேனை யானசில நிற்பவெவ னிற்பதெனவிச்</line>
<line>		செல்லு நாலணியி லுந்தலைவ ரானசிலவே.</line>
</verse>

<verse>
<line>402. அங்க ணாரணர் பயோததியு மில்லைமகனா</line>
<line>		ரம்பு யாலயமு மில்லையவர் கட்கரியாம்</line>
<line>	எங்க ணாயகர் திருக்கயிலை வெற்புமுளதோ</line>
<line>		வில்லை யோபிற புலங்களை யியம்புகிலமே.</line>
</verse>

<verse>
<line>403. காலெ ழுந்தபொழு தோகட லெழுந்தபொழுதோ</line>
<line>		கனலே ழுந்தபொழு தோகயிலை யாளிகடகம்</line>
<line>	மேலெ ழுந்தபொழு தும்பிரம ரண்டகடகம்</line>
<line>		விண்டு டைந்தில பெருந்திகிரி வெற்புடையவே.</line>
</verse>

<verse>
<line>404. புத்தர் போதியரு கந்தர்க ளசோகுதிருமால்</line>
<line>		புகுது மால்சத மகன்சுர தருக்கன்பொருளோ</line>
<line>	எத்த ராதலமு நீழலிடு மேழ்பொழிதலுநே</line>
<line>		ரெழுவி லங்கல்களு நேரடி யெழுந்திடறவே.</line>
</verse>

<verse>
<line>405. விண்ணில் வந்தமழை யும்பணியு மெவ்வடவியு</line>
<line>		மிடைய வந்தகளி ருந்துணரும் வெற்பினடுவேழ்</line>
<line>	மண்ணில் வந்தமண லும்பொடியும் வீரனவனோர்</line>
<line>		வடிவின் வந்தகழு துங்குறளு மானபரிசே.</line>
</verse>

<verse>
<line>406. பூத மும்பழைய வாமனன் வளர்ந்ததனையும்</line>
<line>		புடைபெ யர்ந்தெழ வளர்ந்துபெயர் போனகழுதின்</line>
<line>	சாத முங்கழு தெனும்பெயர் தவிர்ந்தனநிணத்</line>
<line>		தசைமி சைந்துடல் விசும்புபுதை யத்தணியவே.</line>
</verse>

<verse>
<line>407. கார டங்கியன தாரகை யடங்கியனகோள்</line>
<line>		கதிய டங்கியன மூவர்சிலர் தேவர்ககனத்</line>
<line>	தூர டங்கியன பின்னுமெழு கின்றவனிகத்</line>
<line>		துள்ள டங்கியன வுள்ளபதி னாலுகுமே.</line>
</verse>

<verse>
<line>408. வானு மின்றிமக ராலயமு மின்றிநடுவேழ்</line>
<line>		மண்ணு மின்றிவட வானலமு மின்றியனிலந்</line>
<line>	தானு மின்றியற நின்றதனி மூலமுதல்வன்</line>
<line>		றன்னை யொத்ததினி யென்னையிது தானைநிலையே.</line>
</verse>

<verse>
<title>வேறு</title>
</verse>

<verse>
<line>409. கொண்டகோடிசத கோடிகூளிகள்</line>
<line>		குளிக்கவன்றவை தெளிக்கவே</line>
<line>	அண்டகோடிக ளநேககோடிகளு</line>
<line>		முடையநீர்சுவறு மடையவே.</line>
</verse>

<verse>
<line>410. மலைகள்வாரியன வேழுமுக்கியவை</line>
<line>		விக்கியுடுவொடு மடுத்தெடுத்</line>
<line>	தலைகொள்வாரிதிக ளேழுநக்கிநட</line>
<line>		மாடியையைகழல் பாடியே.</line>
</verse>

<verse>
<line>411. எயிறுவெட்டுவன சக்ரவாச்னமுத</line>
<line>		லேழ்பொருப்புமெட் டெண்பணிக்</line>
<line>	கயிறுகட்டுவன வண்டகோடிபுனை</line>
<line>		கையகாலன கழுத்தவே.</line>
</verse>

<verse>
<line>412. படம்பெறாமணி விசும்பிழந்துலகு</line>
<line>		பகல்பெறாபவன மடையவோர்</line>
<line>	இடம்பெறாவெளி யிழந்துநடுவுடு</line>
<line>		வெழப்பெறாககன மெங்குமே.</line>
</verse>

<verse>
<line>413. இடுமிடும்பத யுகத்துவீழ்கதியி</line>
<line>		லேழ்பிலங்களு மிறங்கவே</line>
<line>	விடும்விடுங்கர தலத்தெழுந்துகிரி</line>
<line>		சக்ரகிரிகிழிய வீழவே.</line>
</verse>

<verse>
<line>414. விட்டகுலகிரிக ளெட்டுமும்பர்திசை</line>
<line>		யானையெட்டும்விழ வீழவே</line>
<line>	சுட்டவிழியிலெழு கடலும்வற்றியெழு</line>
<line>		தீவுமொக்கநிலை சுவறவே.</line>
</verse>

<verse>
<line>415. சங்குநேமியொ டுறங்குமேகழு</line>
<line>		மிறங்குமேகழுந் தப்புமே</line>
<line>	பொங்குநேமியுடன் வேவவெந்துபொரு</line>
<line>		பொரியுமேசகல கிரியுமே.</line>
</verse>

<verse>
<line>416. விழும்விழுஞ்சிலா தலநிலம்பகிர்ந்</line>
<line>		துரகர்விடர்நடுவு வீழவே</line>
<line>	எழுமெழும்பணா மணிகளவ்வழியி</line>
<line>		னிரவிகள்வருவ தென்னவே.</line>
</verse>

<verse>
<line>417. கரங்களால்ரவிகள் யாவரும்பெரிய</line>
<line>		கால்களாலுரிய கங்கையுஞ்</line>
<line>	சிரங்களாலரசு பணியுமாகிமுதல்</line>
<line>		பூதநாதர்பலர் செல்லவே.</line>
</verse>

<verse>
<line>418. விழவிடுங்கிரிகள் கீமுமுள்ளபில</line>
<line>		மேழுமூடுருவ வீழவே</line>
<line>	எழவிடுங்கிரிகள் சூழுமண்டமுக</line>
<line>		டேழுமூடுருவ வேறவே.</line>
</verse>

<verse>
<line>419. ஓமகூடகிரி நின்றெடுத்தெறிய</line>
<line>		வண்டகூடமுரு விப்புறத்</line>
<line>	தேமகூடமொடு சித்ரகூடமெரி</line>
<line>		கனககூடமென வெரியவே.</line>
</verse>

<verse>
<line>420. எயிறிரண்டருகு வெண்பிறைக்கிவை</line>
<line>		யிரண்டுடுத்தொடைகொ லென்னலாய்</line>
<line>	அயிறிரண்டனைய பல்லொழுங்குக</line>
<line>		ளலங்குசோதியொ டிலங்கவே.</line>
</verse>

<verse>
<line>421. மாகமேயனையர் தம்மகோதரமு</line>
<line>		மெம்மகோததியு மாயமேய்</line>
<line>	மேகமேயனைய ராகமேகடவுண்</line>
<line>		மேருவேயனைய ரூருவே.</line>
</verse>

<verse>
<line>422. உடுத்தநேமிகிரி நெரியவொருவர்நக</line>
<line>		முருவுமேயுலகு வெருவுமே</line>
<line>	எடுத்தசூலமொடு காலபாசமினி</line>
<line>		வீசயாதும்வெளி யில்லையே.</line>
</verse>

<verse>
<line>423. ஒருவரேயகில லோகமும்புதைய</line>
<line>		வேறுவேறுடம் புடையரே</line>
<line>	இருவரேதெரிய வரியர்தாமிவரை</line>
<line>		யெங்ஙனேதருவ ரென்னவே.</line>
</verse>

<verse>
<line>424. கொண்டகோலமிவை யாகவண்டசத</line>
<line>		கோடிகோடிநிரை தானையின்</line>
<line>	வண்டகோளகை வளாகமொன்றினு</line>
<line>		ளடங்கிநின்றன மடங்கியே.</line>
</verse>

<verse>
<line>425. எங்ஙனேயிறைவ ருலகுபொதிவடிவ</line>
<line>		மெவ்வுடம்பினு மடங்குமா</line>
<line>	றங்ஙனேயவர்கள் விசுவரூபமு</line>
<line>		மடங்கிநின்றபடி யதனிலே.</line>
</verse>

<verse>
<line>426. சாய்வதின்மையி னெருக்கிமேருமுத</line>
<line>		றாமுநின்றவர் தாணிலந்</line>
<line>	தோய்வதின்மையி னிடங்கிடந்தபடி</line>
<line>		தோயுமேலவையு மாயுமே.</line>
</verse>

<verse>
<line>427. நிலத்தினும்பல பிலத்தினுஞ்சுரபி</line>
<line>		நிலையினுந்திகிரி மலையினுஞ்</line>
<line>	சலத்தினுங்கன கலத்தினும்புடை</line>
<line>		யடங்கிநின்றதுயர் தானையே.</line>
</verse>

<verse>
<title>வேறு</title>
</verse>

<verse>
<line>428. ஊழியேறுகட னீரண்ட கோளகையுடைத்</line>
<line>		தும்பர்நீரொடு கலந்தனைய தொக்குமுடனே</line>
<line>	பாழியேறுதிணி தோள்வீர பத்ரகணமும்</line>
<line>		பத்ரகாளிகண மும்படை யெழுந்தபடியே.</line>
</verse>

<verse>
<line>தேவியின் படைச் செயல்கள்</line>
<line>429. கார்முகக்குமிர வென்னவிருள் குஞ்சிவிரிவார்</line>
<line>		கடன்முகக்குமகல் வாயன கபாலமுடையார்</line>
<line>	பார்முகக்குமுரு முக்கழு நிரைத்தபடையார்</line>
<line>		பலமுகக்குமுத வாயிறைவி பைரவர்களே.</line>
</verse>

<verse>
<title>வேறு</title>
</verse>

<verse>
<line>430. பாரப் பணைமுலைக் கொலையினுஞ் சிலபுரூஉப்</line>
<line>		பங்கத் தினுமடுப் பனவடுப்பகவினுங்</line>
<line>	கூரப் புறவமுல் லைம்முகை நகையினுங்</line>
<line>		கொல்லுகை தவிரா விறைவிசா கினிகளே.</line>
</verse>

<verse>
<title>வேறு</title>
</verse>

<verse>
<line>431. வெளிபடப்பட முகிழ்த்தெயி றெறிக்குநீலவார்</line>
<line>		விழிபடக் குழை சுடச்சுட ரெறிக்கும்வெயிலார்</line>
<line>	அளிவளர்த்தன வெறிக் குழ லெறிக்குமிருளா</line>
<line>		ரறுமுகத்ரிபுர பயிரவி யகம்படியரே.</line>
</verse>

<verse>
<line>432. அடவியாகிவரு வாரசல மாகிவருவா</line>
<line>		ரமரராகிவரு வாரவுண ராகிவருவார்</line>
<line>	புடவியாகிவரு வார்புணரி யாகிவருவார்</line>
<line>		புவனநாயகிதன் யாமள புராதனர்களே.</line>
</verse>

<verse>
<line>433. இடிபொறாமலொரு பாலதிர்வர் சாகினிகளே</line>
<line>		யெரிபொறாமலொரு பானகுவர் டாகினிகளே</line>
<line>	படிபொறாமலொரு பால்வருவர் யோகினிகளே</line>
<line>		பகருமாறரியர் நாயகி பதாகினிகளே.</line>
</verse>

<verse>
<line>தேவர்கள் இந்திரனுக்குத் தெரிவித்தல்</line>
</verse>

<verse>
<title>வேறு</title>
</verse>

<verse>
<line>434. இப்படையோடுமையன் மகராலயத்தில்</line>
<line>		ரவிபோலெழுந் தருளுமென்</line>
<line>	றப்படையோடுநின்ற சுரர்சென்றுதங்க</line>
<line>		ளரசற்கிசைத்த பொழுதே.</line>
</verse>

<verse>
<title>இந்திரன் கூற்று</title>
</verse>

<verse>
<line>435. ஆவபுகுந்தப்ரத்த மறியாதடுப்ப</line>
<line>		தறியாததேவ ரெதிர்தன்</line>
<line>	பாவமனங்கவற்றா வறிவின்மைகொண்டு</line>
<line>		சிலவச்ரபாணி பகர்வான்.</line>
</verse>

<verse>
<line>436. பேதைமணந்தகெளரி யழையாமலிங்கு</line>
<line>		வருவாளிகழ்ந்து பெரிதுந்</line>
<line>	தாதைமுகங்கொடாது விடுவானமக்கு</line>
<line>		முலகுக்குமென்கொ றவறே.</line>
</verse>

<verse>
<line>437. முகடுநகர்ந்துசித்த முரிசக்ரவாள</line>
<line>		கிரியேபிடித்து முகிலென்</line>
<line>	பகடுமெழுந்துபெய்யு மகராலயங்க</line>
<line>		ளவைசெய்வதியாவர் பணியே.</line>
</verse>

<verse>
<line>438. தரையையகழ்ந்துதின்று கடலேழுநக்கி</line>
<line>		வடமேருவாதி தடமால்</line>
<line>	வரையைவளைந்துதின்னும் வடவானலத்தின்</line>
<line>		வலியேநமக்கு வலியே.</line>
</verse>

<verse>
<line>439. அடியடையப்பறித்த குலபூதரங்க</line>
<line>		ளழியாகவூழி யறையும்</line>
<line>	படியடையப்பிதிர்கு மொருவாதராஅ</line>
<line>		னவனிற்கயாது பகையே.</line>
</verse>

<verse>
<line>440. மாயிரநேமியாதி மலைசுட்டுவேலை</line>
<line>		நிலைசுட்டயின்று மடியா</line>
<line>	ஆயிரமானவெய்ய கதிராறிரண்டு</line>
<line>		மெவனேவசெய்வ தவரே.</line>
</verse>

<verse>
<line>441. உம்பருமேனையோரு மலைமத்திலிட்ட</line>
<line>		வுரகம்பிடிக்கு மமுதத்</line>
<line>	தம்பமமைந்துடம்பு சலியாதுநின்ற</line>
<line>		தனிமன்னன்யாவர் தமரே.</line>
</verse>

<verse>
<line>442. பருதிபடப்பரந்து புகைகண்டகப்ப</line>
<line>		வுலகங்கண்மூடு பகுவாய்</line>
<line>	நிருதிசெருக்குறிக்கி னுளரேதெரிக்கி</line>
<line>		னினியென்படைக்கு நிகரே.</line>
</verse>

<verse>
<line>443. மதுநுரைவார்கடுக்கை யொருகண்ணிசூடி</line>
<line>		மழுவாள்வலத்து வரநம்</line>
<line>	பதினொரு தேவரேறு பதினொன்றுமேறி</line>
<line>		னுலகங்கள்யாவர் பரமே.</line>
</verse>

<verse>
<line>444. சொற்பலசொல்லியென்கொ லுயிர்வீசுபாசம்</line>
<line>		விடுகாலன்யாவர் துணையே</line>
<line>	பற்பலகோடியண்ட மொருதண்டிலெற்றும்</line>
<line>		யமராசன்யாவர் படையே.</line>
</verse>

<verse>
<line>445. கருடரியக்கர்சித்தர் கடிபூதநாதர்</line>
<line>		நிசிசரர்தான வர்கள்கிம்</line>
<line>	புருடர்முதற்குலத்த பதினெண்பதாதி</line>
<line>		புடையேபரந்த படையே.</line>
</verse>

<verse>
<line>446. முனிவருமாழியானு மிமையோரும்யானு</line>
<line>		மினையோனுநிற்க ரவிமுன்</line>
<line>	பனிவருமென்னவிங்கு வருகின்றதென்கொ</line>
<line>		லொருசூலபாணி படையே.</line>
</verse>

<verse>
<line>447. வறுமையெவன்கொலென்க ணொருதன்படைக்கு</line>
<line>		வலியாவதென்கொ லிமையோர்</line>
<line>	சிறுமையெவன்கொலென்னை மதியாதுசேனை</line>
<line>		விடுவானெவன்கொல் சிவனே.</line>
</verse>

<verse>
<title>வேறு</title>
</verse>

<verse>
<line>448. யானாள்பதி யமராபதி யீமந்தன தெனதேழ்</line>
<line>	கானாள்சூல கிரிதன்மலை கயிலைச்சிறு கறடே.</line>
</verse>

<verse>
<line>449. குலவெண்பணி யானேபணி கொள்வேனணி கொள்ளும்</line>
<line>	பலவெண்பணி யவையுஞ்சிலர் வித்தந்தன பண்டே.</line>
</verse>

<verse>
<line>450. கரும்பூத விழும்பேயொடு சூழ்பத மவற்கைம்</line>
<line>	பெரும்பூதமு மெல்லீரு மெனக்கேபடை பெரிதே.</line>
</verse>

<verse>
<line>451. கோலந்தரு தருவின்குளிர் குழைநீழல் விடேன்யான்</line>
<line>	ஆலந்தரு வறுநீழலி னிடைவைகுவ தவனே.</line>
</verse>

<verse>
<line>452. எண்கூறவ னொருபேருரு வதனிற்கனன் முதலேழ்</line>
<line>	திண்கூறு மெனக்கேபடை யென்கொண்டுகொல் செருவே.</line>
</verse>

<verse>
<line>453. வானேறுரு மெனதாயுத மவனாயுத மழுவாள்</line>
<line>	யானேறுவ தயிராபத மவனேறுவ தெருதே.</line>
</verse>

<verse>
<line>454. என்கண்ணினி லிவையாயிர மெதிராய்வரு மீசன்</line>
<line>	தன்கண்ணினின் முக்கண்ணினி யார்கண்ணதுதாழ்வே.</line>
</verse>

<verse>
<line>455. எம்மின்னுயி ரȨயீர்படை யெல்லாமுடன் வரநீர்</line>
<line>	வம்மின்னென விடைநல்கின னிதுவாசவன் வகையே.</line>
</verse>

<verse>
<title>தேவர்கள் படையெழுச்சி</title>
</verse>

<verse>
<title>வேறு</title>
</verse>

<verse>
<line>456. சிகரக்குலக்கிரிகள் சிதரத்தகர்க்குமெறி திரையாலொரோர்</line>
<line>	மகரக்களிக்களிறு மறுகக்கடற்கரசன் வரவாரவே.</line>
</verse>

<verse>
<line>457. கலகக்கனற்கொடிகள் ககனப்பரப்பிலெரி கதிரூடுபோய்</line>
<line>	உலகக்கவிப்படைய வுருகக்கடைக்கனலு முடனேறவே.</line>
</verse>

<verse>
<line>458. பலவெற்பெடுத்தடவி பறியப்பறித்துநதி பலவாரிநீர்</line>
<line>	விலகிப்புடைப்பவிட விவைகைப்படுத்தனிலன் விளையாடவே.</line>
</verse>

<verse>
<line>459. தொழின்மிக்கசெக்கரெரி சுடரிட்டெரித்துலகுசுடுவார்கள்போல்</line>
<line>	எழின்மிக்கிரட்டியறு வருமொக்கவர்க்கர்தம ரதமேறவே.</line>
</verse>

<verse>
<line>460. குமுதப்பரப்புமிதழ் குவியப்பனிப்பதொரு குளிர்கூருமால்</line>
<line>	அமுதக்கதிர்க்கடவுள் ரவிகட்கிரட்டிதனி யறைகூறவே.</line>
</verse>

<verse>
<line>461. எரிகக்குமுக்கணின ரிடியொக்குமுக்குடுமி யெறிவேலினோர்</line>
<line>	செருவிற்குருத்தெதிர்வர் சிலமுத்தெருத்தர்பதினொருதேவரே.</line>
</verse>

<verse>
<line>462. மறவைத்தனித்திகிரி வளையொத்திரட்டைநிதி வரவானிலே</line>
<line>	பறவைக்கழுத்தில்வரு மரியொத் தியக்கர்குல பதிபோதனே.</line>
</verse>

<verse>
<line>463. அரிகட்குவைத்தவெழு நரகக்குலப்பகுதி யணியேழினோ</line>
<line>	டெரிகட்பணைத்தபட  ரெருமைப்பகட்டின்மிசை யமனேறவே.</line>
</verse>

<verse>
<line>464. முடியிட்டுமுட்டவரு முதுகற்குவட்டுமலை முதல்காறும்வீழ்</line>
<line>	இடியிட்டுவெட்டுவன வெரியிட்டுருக்குவன வினமேகமே.</line>
</verse>

<verse>
<line>465. கரியைத்தொகுத்துழுவை கஞலப்பெருக்கியுயிர் கவர்யாளியோ</line>
<line>	டரியைப்பரப்பியது ரருவிக்குலக்கிரிக ளணிகூரவே.</line>
</verse>

<verse>
<title>வேறு</title>
</verse>

<verse>
<line>466. தொக்கமேக மாகவெளி சுற்றுமோடி மூடிவன</line>
<line>		துர்க்கம்யாவும் வெனெவெரி துற்றுவெறு மேறுகொடு</line>
<line>	மிக்ககோடு கோடிபல வெற்பநேக பாகைபட</line>
<line>		வெட்டிவாரி வாரிவர விட்டுவீசி மேல்விழவே.</line>
</verse>

<verse>
<line>467. பைத்தசோதி யாறிருப திற்றுநூறு காயவிரை</line>
<line>		பச்சைவாசி நாலிருப திற்றுமேலு நாலுறழ</line>
<line>	அத்தசால மீரருகு மத்ரசாலம் வீசிவர</line>
<line>		வர்க்கத்வாத சாதிபரி ரட்டியாறு தேர்விடவே.</line>
</verse>

<verse>
<line>468. சுத்தஞான போதர்கழல் சுட்டியானை தோறுமிடு</line>
<line>		தொட்டிதோறு மேறியிடை தொட்டகார்மு காசனியர்</line>
<line>	அத்தசாம கோடியென நிற்பராவ நாழிகையி</line>
<line>		லப்புமாரி தூவிவரு மட்டலோக பாலகரே.</line>
</verse>

<verse>
<line>469. முற்றுமேரு வாதிகளை முக்கவாரி யூழியெரி</line>
<line>		முததனீல மோலியென முட்டவோத மீதெரிய</line>
<line>	மற்றையால காலவெரி வர்க்கலோக கோடிசுடு</line>
<line>		மத்தசாக ரேசனொடு மச்சராசன் மேல்வரவே.</line>
</verse>

<verse>
<line>470. தக்கன்யாக சாலைவினை தப்பமாடு சாமரைகள்</line>
<line>		தைப்பவீசி மீதுவிரி சத்ரசாயை தோயவுடன்</line>
<line>	மக்கள்யானை சூழவர மற்றைநாலு கோடுடைய</line>
<line>		மத்தயானை யேறிவரும் வச்ரபாணி வாசவனே.</line>
</verse>

<verse>
<title>வேறு</title>
</verse>

<verse>
<line>471. அங்கண்வாசவற் கிளையவாசவற்</line>
<line>		காகவாகஞ் செய்கபோயெனத்</line>
<line>     தங்கள் சேனையின் பின்புநின்றதன்</line>
<line>		றானையேவினன் சக்ரபாணியே.</line>
</verse>

<verse>
<line>472.  சக்ரபாணியுட னேசகத்ரயந்</line>
<line>		தருதசப்பிதா மகர்கடம்மொடும்</line>
<line>	பக்கமாமுனி கணத்தர்தம்மொடுங்</line>
<line>		கூடிநின்றனன் பத்மயோனியே.</line>
</verse>

<verse>
<title>வீரபத்திர தேவருடைய படைகளின் செயல்</title>
</verse>

<verse>
<line>473.  உம்பரும்பெரும் படையுமிப்படி</line>
<line>		யுடன்றுநிற்கமற் றவரையூடறுத்</line>
<line>	தெம்பெரும்படைத் தலைவராகும்</line>
<line>		போதராதிக ளிரைந்துமண்டியே.</line>
</verse>

<verse>
<title>வேறு</title>
</verse>

<verse>
<line>474.  அருக்ககனப் பரப்படையப் புயத்துறவிட் டடைத்தே</line>
<line>	உருக்குமெரிப் பிழப்பொளிபுக் குழிப்புகவிட் டுளைத்தே.</line>
</verse>

<verse>
<line>475.  தனித்துரகத் தடத்தெரியைத் தழைத்தெரியச் சமைத்தே</line>
<line>	பனிப்பரவைப் பரப்பினிடைக் கடைக்கனலைப் பழித்தே.</line>
</verse>

<verse>
<line>476.  செயிர்த்துதரத் தெரிச்சுரர்பொற் சிகைக்கதுவச் சிரித்தே</line>
<line>	உயிர்ப்பிலிணைக் குருக்களையிட் டுருக்கிநகத் துரைத்தே.</line>
</verse>

<verse>
<line>477.  திறத்தவுணக் கணத்துருவச் செறித்துகிரைப் பறித்தே</line>
<line>	புறத்திகிரிப் புகக்குருதிப் புதுப்புனல்கொப் புளித்தே.</line>
</verse>

<verse>
<line>478.  கொதித்துவணக் கொழுப்பரிபொற் கொடிக்குமுறக்குமைத்தே</line>
<line>	கதித்துரகக் கழுத்தின்முடிக் கவர்படையக் கழித்தே.</line>
</verse>

<verse>
<line>479.  கலத்தமிர்தப் பரப்படையக் கவுட்புடையிற் கவிழ்த்தேழ்</line>
<line>	பிலத்துருவப் பிளப்பிடியப் பிடித்துதிரப் பிதிர்த்தே.</line>
</verse>

<verse>
<line>480.  அரக்கருரத் தரத்தமடுத் தழுக்கையெயிற் றரைத்தே</line>
<line>	புரக்ககனப் பொருப்பர்களைப் பொடித்தெரிகட் பொரித்தே.</line>
</verse>

<verse>
<line>481.  கனத்தகளக் கொளுத்திலறக் கவிற்றணியைக கடித்தே</line>
<line>	இனத்தகுறைப் பிறக்கமெயிற் றெதிர்ப்பவயீற் றெடுத்தே.</line>
</verse>

<verse>
<line>482.  அழித்தமதிக் கதர்க்குளிரிட் டருக்கருருப் பவித்தே</line>
<line>	விழித்தவெயிற் ப்ரபைக்கனலைப் பனிப்ரபையிட் டவித்தே.</line>
</verse>

<verse>
<line>483.  தகட்டுமுடிப் பசுக்கள்வசுக் களைத்தழுவிச் சமைத்தே</line>
<line>	பகட்டினொடித் துருத்திரரைத் திருக்கைமுடப் படுத்தே.</line>
</verse>

<verse>
<line>484.  தடுத்தகுலப் பொருப்பைமுடித் தடத்துடையத் தகர்த்தே[தே</line>
<line>	உடுத்தொடையற் றழைத்துநிலத் துழைப்பவுதைத் துகைத்</line>
</verse>

<verse>
<line>485.  குனித்தகளத் தளக்குதிரைக் குளப்படியைக் குறைத்தே</line>
<line>	பனிப்பகையைப் பனிச்சுடர்விட் டெறிப்பனபற் பறித்தே.</line>
</verse>

<verse>
<line>486.  சுமப்பனதிக் கயத்துடனத் திசைச்சுரரைத் துணித்தே</line>
<line>	தமப்பனடிக் கழுத்தடையத் தனிப்பகழித் தறித்தே.</line>
</verse>

<verse>
<line>487.  நிழற்கடவுட் சுடர்த்தொகையைத் திரைத்துநிலத் தரைத்தே</line>
<line>	தழற்கடவுட் டடக்கைகளைத் தறித்துமழுப் பொறித்தே.</line>
</verse>

<verse>
<line>488.  இனத்தமரர்க் கிறைக்குயிலைப் பிடித்திறகைப் பறித்தே</line>
<line>	பனத்தியைவிட் டசட்டுவசிட் டனைப்பசுவைப் பறித்தே.</line>
</verse>

<verse>
<line>489.  அகத்தியனைத் தமிழ்ப்பொதியிற் குகைப்புகவிட் டடைத்தே</line>
<line>	இகத்தியெனப் புல்த்தியனைத் துடிக்கவடித் திழுத்தே.</line>
</verse>

<verse>
<line>490.  இகற்றருமற் கெடுத்தகொடித் தடுத்திறைவற் கொடுத்தே</line>
<line>	பகற்சுடரிற் பகற்குருகட் பரப்பிருளைப் படுத்தே.</line>
</verse>

<verse>
<line>491.  சலத்தரசைக் கயிற்றிலிணைத் தடக்கைகளைத் தளைத்தே</line>
<line>	கலக்கலமுத் துகுப்பவடற் கடற்சுறவைக் கடித்தே.</line>
</verse>

<verse>
<line>492.  அடுத்தகுலப் பொருப்பையிருப் புலக்கைபிடித் தடித்தே</line>
<line>	எடுத்தனகற் பகப்பொழில்கட் கடைக்கனலிட் டெரித்தே.</line>
</verse>

<verse>
<line>493.  குலப்பிரவைப் பரப்படையக் கடைக்கனலிற் குடித்தே</line>
<line>	சிலப்பரசைத் திருப்பரசுக் களிற்சிதையத் துடைத்தே.</line>
</verse>

<verse>
<title>வேறு</title>
</verse>

<verse>
<line>494.  வேவினுள்வயின் வேவதீதெனப்</line>
<line>	பாவகன்றகர் சுடாதுபற்றியே.</line>
</verse>

<verse>
<line>495.  ஏழுமானையும் ரவியிழக்கவுள்</line>
<line>	வாழுமானையு மதியிழக்கவே.</line>
</verse>

<verse>
<line>496.  செம்பொடிப்புரத் திக்கயங்களைக்</line>
<line>	கொம்பொடித்தடிக் குருகுதுற்றியே.</line>
</verse>

<verse>
<line>497.  தருமனோளியோ டிவுளையைத்தகர்த்</line>
<line>	தெருமையோரொரோ புகழ்கெடுத்துமே.</line>
</verse>

<verse>
<line>498.  வருதியென்றுபே யூர்திவெளவியே</line>
<line>	நிருதிதன்னையே நிலைநிறுத்தியே.</line>
</verse>

<verse>
<line>499.  இருள்கடற்கடைக் கனலிலிட்டெடா</line>
<line>	வருணன்வாகனங் களைமடக்கியே.</line>
</verse>

<verse>
<line>500.  ஆர்வமாளுநா ரணரநேகர்தம்</line>
<line>	மார்வமாளுமா நெளவிவவ்வியே.</line>
</verse>

<verse>
<line>501.  நாமராசியை யுதிர்த்துரோணிதன்</line>
<line>	சோமராசியள கஞ்சுலாவியே.</line>
</verse>

<verse>
<line>502.  சேயமாதிரத் தேவர்தேவிமார்</line>
<line>	மாயமேகலா பாரம்வாரியே.</line>
</verse>

<verse>
<line>503.  மையலான்மிகுந் தக்கன்மக்களாந்</line>
<line>	தையலாரையுந் தாளிவாரியே.</line>
</verse>

<verse>
<line>504.  என்னமாமியென் றியாகபன்னியைக்</line>
<line>	கன்னபூரமுங் காதுமள்ளியே.</line>
</verse>

<verse>
<line>505.  பாபதண்டிதன் பசுவைவிட்டதன்</line>
<line>	யூபதண்டுகொண் டோடவெற்றியே.</line>
</verse>

<verse>
<line>506.  விவிதமுத்தழன் மீதுவெய்யநெய்</line>
<line>	அவிதவிர்த்துநீர் பெய்தவித்துமே.</line>
</verse>

<verse>
<line>507.  பொய்ப்பருந்துகா லொடுபறந்துபோய்</line>
<line>	மெய்ப்பருந்துடன் விண்ணிலாடவே.</line>
</verse>

<verse>
<line>508.  எடுமடாநமக் கென்றுசென்றுபுக்</line>
<line>	கடுமடாவெலா மறவருந்தியே,</line>
</verse>

<verse>
<line>509.  புக்கபூதவே தாளயூதமே</line>
<line>	தக்கன்யாகமிப் படிசமைக்கவே.</line>
</verse>

<verse>
<title>வேறு</title>
</verse>

<verse>
<line>510.  மாலைநாக மார்பர்மேக மாகிநின் றிடிப்பவான்</line>
<line>	மேலைநாகர் கீழைநாகர் போன்மயங்கி வீழவே.</line>
</verse>

<verse>
<line>வீரபத்திர தேவர்</line>
</verse>

<verse>
<title>இறந்தவர்களை உயிர்ப்பித்து மீட்டும் பொரச்செய்வித்தல்.</title>
</verse>

<verse>
<line>511.  விழுந்தநார ணாதிகட்கு மீளவாழு நாள்கொடுத்</line>
<line>	தெழுந்துபோர் தொடங்குகென்று குன்றவில்லி யேவவே.</line>
</verse>

<verse>
<title>யுத்தம்</title>
</verse>

<verse>
<title>வேறு</title>
</verse>

<verse>
<line>512.  சிரமுஞ் சிரமுஞ் செறிந்தன</line>
<line>	சரமுஞ் சரமுந் தறிப்பவே.</line>
</verse>

<verse>
<line>513.  கனமுங் கனமுங் கனைத்தன</line>
<line>	சினமுஞ் சினமுஞ் சிறக்கவே.</line>
</verse>

<verse>
<line>514.  கடையுங் கடையுங் கலித்தன</line>
<line>	தொடையுந் தொடையுந் துரப்பவே.</line>
</verse>

<verse>
<line>515.  தாருந் தாருந் தழைத்தன</line>
<line>	தேருந் தேருந் திளைப்பவே.</line>
</verse>

<verse>
<line>516.  தோலுந் தோலுந் துவைத்தன</line>
<line>	கோலுங் கோலுங் குளிப்பவே.</line>
</verse>

<verse>
<line>517.  தோளுந் தோளுந் தொடங்கின</line>
<line>	தாளுந் தாளுந் தரிப்பவே.</line>
</verse>

<verse>
<line>518.  கிரியுங் கிரியுங் கிடைத்தன</line>
<line>	கரியுங் கரியுங் கடுப்பவே.</line>
</verse>

<verse>
<line>519.  தலையுந் தலையுந் தகர்த்தன</line>
<line>	சிலையுஞ் சிலையுஞ் சிலைப்பவே.</line>
</verse>

<verse>
<line>520.  குடையுங் குடையுங் கொழித்தன</line>
<line>	படையும் படையும் பகைப்பவே.</line>
</verse>

<verse>
<title>வேறு</title>
</verse>

<verse>
<line>521.  மடிந்தன குவலய வலயமே</line>
<line>	இடிந்தன குலகிரி யெவையுமே.</line>
</verse>

<verse>
<line>522.  அற்றன வெழிலியொ டசனியே</line>
<line>	வற்றின வெழுபெரு வாரியே.</line>
</verse>

<verse>
<line>523.  உதிர்வன வெழிலியு முடுவுமே</line>
<line>	அதிர்வன புடவிக ளடையவே.</line>
</verse>

<verse>
<line>524.  நெரித்தன மாசுண் நெற்றியே</line>
<line>	இரிந்தன மாசுண மெவையுமே.</line>
</verse>

<verse>
<line>525.  அழுந்தின குலகிரி யடையவே</line>
<line>	விழுந்தன திசைபல மிதியிலே.</line>
</verse>

<verse>
<line>526.  சிதைவது சூழ்வரு திகிரியே</line>
<line>	புதைவது சிலைகொல் பொருப்புமே.</line>
</verse>

<verse>
<line>527.  பறிந்தன வடவிகள் பலவுமே</line>
<line>	மறிந்தன பலகுல மலையுமே.</line>
</verse>

<verse>
<line>528.  பெருத்தன வமரர் பிணங்களே</line>
<line>	பருத்தன பூத பசாசமே.</line>
</verse>

<verse>
<line>529.  அயின்றன வெருவையொ டலகையே</line>
<line>	பயின்றன பிணமவை பலவுமே</line>
</verse>

<verse>
<line>530.  முழங்கின முகிலென முரசமே</line>
<line>	தழங்கின வெதிரெதிர் சங்கமே.</line>
</verse>

<verse>
<title>வேறு</title>
</verse>

<verse>
<line>531.  மாகலக்கமூன் வாரணங்கண்முன்</line>
<line>	பாகலப்பசா சுகள்பரக்கவே.</line>
</verse>

<verse>
<line>532.  வெள்ளிவாய்மதிக் குடைவிளித்தவோர்</line>
<line>	கொள்ளிவாய்நெடும் பேய்கொளுத்தவே.</line>
</verse>

<verse>
<line>533.  விரவிவெள்ளியிற் றெரிவிபஞ்சியிற்</line>
<line>	புரவிவெள்ளமுற் றும்புரட்டவே.</line>
</verse>

<verse>
<line>534.  மாக்கணங்கொள்படை வானநாடரைத்</line>
<line>	தாக்கணங்குக டரைப்படுப்பவே.</line>
</verse>

<verse>
<title>இறந்த தேவர்களைப் பிரமா மீட்டும்படைத்தல்.</title>
</verse>

<verse>
<line>535.  அடப்படப்பொறா தமரர்தம்படை</line>
<line>	படப்படப்ரசா பதிபடைக்கவே.</line>
</verse>

<verse>
<title>பூதகணங்களின் செயல்.</title>
</verse>

<verse>
<title>மலைகளையழித்தல்.</title>
</verse>

<verse>
<title>வேறு</title>
</verse>

<verse>
<line>536.  பள்ளசிக் குன்றும்விற் குன்றுமொழி யச்சிறகறுப் புண்டுபாழி</line>
<line>	வெள்ளிக் குன்றுபொற் குன்றுகற் குன்றடைய வீழவே.</line>
</verse>

<verse>
<line>வேறு.</line>
</verse>

<verse>
<line>537.  வெள்ளிக் குலக்குன்று பொற்குன்று கல்லின்</line>
<line>		விழுக்குன் றெனப்பட்ட குன்றியாவும் வீழக்</line>
<line>	கிள்ளிச் சிறைப்பார முகிரிற் கிடப்பக்</line>
<line>		கிளர்ந்தும்பர் கோமானை மாங்க் கெடுத்தே.</line>
</verse>

<verse>
<line>538.  பொற்பூ டறக்கற்ப கக்காடு சாடிப்</line>
<line>		புகுந்தும்பர் கோன்முன்பு பூதப் பிரான்மார்</line>
<line>	வெற்பூ டறப்போய் வெறுங்கைக ளாலே</line>
<line>		விழுத்தோகை யான்வாகை வென்வேலை வென்றே.</line>
</verse>

<verse>
<line>539.  குமிழ்க்குங் குவட்டேழு குன்றும் பிலத்தே</line>
<line>		குளிப்பக் குறும்பூத மொன்றே குமைத்துத்</line>
<line>	தமிழ்க்குன்றின் வாழுஞ் சடாதாரி பேர்யாழ்</line>
<line>		தழங்குந் திருக்கைத் தருக்கைத் தவிர்த்தே.</line>
</verse>

<verse>
<line>540.  கட்டிக் குறங்கைக் குறங்காலு மோதிக்</line>
<line>		காதுஞ் சிறைக்கை களைக்கைக ளாலே</line>
<line>	மட்டித்து வெற்போடு மற்போர்செய் பூத</line>
<line>		மல்லர்க் கடந்தானை மானங் கெடுத்தே.</line>
</verse>

<verse>
<line>541.  அலங்கற் பணைத்தோ ளிணைக்குன்றி னொன்றா</line>
<line>		லடற்பூத மொன்றேழை யாகண்ட லன்றன்</line>
<line>	விலங்கற் குழாமாரி போய்நீறு நீறாய்</line>
<line>		விழப்பண்டு கன்மாரி வென்றானை வென்றே.</line>
</verse>

<verse>
<line>542.  புடைக்கால மற்றொத் துருக்குண்ண வேழ்பொற்</line>
<line>		பொருப்புங் கனற்கட் கடைச்சுட்ட பூதங்</line>
<line>	கடைக்கால மெக்குன்ற முஞ்சுட் டுருக்குங்</line>
<line>		கடுங்கோள்க ளீராறு நாணக் கலித்தே.</line>
</verse>

<verse>
<line>543.  கைந்நாக மேமேயு மாநாக நாகக்</line>
<line>		கணங்கூட வாரிக் கவுட்கொண்ட பூதம்</line>
<line>	மைந்நாக வெற்பொன்றை யுந்தன் வயிற்றே</line>
<line>		மறைக்குங் கடற்கோனை மானங் கெடுத்தே.</line>
</verse>

<verse>
<line>544.  சோரிக் கடற்சாடி யிற்குன்ற மொன்றைச்</line>
<line>		சுழற்றித் துழாய்வெண் ணிணந்துய்த்த பூதம்</line>
<line>	பாரித்த பெளவங் கடைந்தார்க ளென்னும்</line>
<line>		பராவின்மை தேவா சுரர்க்குப் பணித்தே.</line>
</verse>

<verse>
<line>545.  மேலாழி யார்வெள்ளி வேதண்ட லோகம்</line>
<line>		விழிக்கே யுருக்குண்ண வெள்ளஞ்செய் பூதம்</line>
<line>	பாலாழி யுந்தாழ வவ்வாழி வைகும்</line>
<line>		பரந்தாம னுந்தாழ வுட்பள்ளி கொண்டே.</line>
</verse>

<verse>
<line>546.  சென்றெட்டு வெற்பும் பணிப்பத் துணிப்பச்</line>
<line>		செயிர்த்தெண்மர் கணநாத ரினமிண்டு சிகரக்</line>
<line>	குன்றெட்டு மிட்டெண் டிசாதேவ ரேறுங்</line>
<line>		கொல்யானை யெட்டும் விழக்குஹ்து வித்தே.</line>
</verse>

<verse>
<line>547.  தம்பூத ராதிக ளொடுங்கூடி யாடித்</line>
<line>		தயிராக வயிறா கரக்குன் றிளக்கிக்</line>
<line>	கும்போத ராதிகள் குடித்துத் தடித்துக்</line>
<line>		கொள்ளாத வச்ரகா யங்கொண்டு கொண்டே.</line>
</verse>

<verse>
<line>548.  தீவாய் வயிற்றிண்பொருப்பிட் டுருக்கிச்</line>
<line>		செவ்வாய் தொறுங்கொண்டு கொண்டும்பர் சென்மார்</line>
<line>	வாய்வாய் தொறுங்கொப்பு விப்பார் களிப்பார்</line>
<line>		மழுவாளி யார்சார மாணியென வந்தே.</line>
</verse>

<verse>
<line>549.  அலைகொன்று வருகங்கை வாராமன் மேன்மே</line>
<line>		லடைக்கின்ற குன்றூ டறுக்கின்ற பூதம்</line>
<line>	மலைகொன்று பொன்னிக்கு வழிகண்ட கண்டன்</line>
<line>		வரராச ராசன்கை வாளென்ன வந்தே.</line>
</verse>

<verse>
<line>550.  மின்வெள்ளி பொன்கொல் லெனச்சொல்லு முப்போர்</line>
<line>		விலங்கற் குழாமோர் விழிச்சுட்ட பூதம்</line>
<line>	பொன்வெள்ளி யெஃகென்ன வானத் துலாமுப்</line>
<line>		புரஞ்சுட்ட வீரர்க்கு மேலே பொலிந்தே.</line>
</verse>

<verse>
<title>பூதகணங்களின் பிற செயல்கள்.</title>
</verse>

<verse>
<line>551.  பொங்கக் களிற்றீ ருரிப்போர்வை கொண்டும்</line>
<line>		புலித்தோ லுடுத்தும் படுத்தும் புயத்தே</line>
<line>	சிங்கப் பசுந்தோல்கொ டேகாச மிட்டுஞ்</line>
<line>		செய்யப் பெறாவல்ல பஞ்செய்து சென்றே.</line>
</verse>

<verse>
<line>552.  சங்கும் பொலன்கற்ப கக்காவு மாவுஞ்</line>
<line>		சதுர்த்தந்தி யுஞ்சர்வ முந்தேரும் வாரிப்</line>
<line>	பொங்குங் கடற்கே புகப்போக வீசும்</line>
<line>		பூதந் தபோவாரி கோதம் புரைத்தே.</line>
</verse>

<verse>
<line>553.  நீரின்றி யேசென் னெருப்புண் டறுத்தும்</line>
<line>		நெருப்பின்றி யேநீரை நேரே குடித்துங்</line>
<line>	காரின்றி யேநின் றிடிக்கின்ற பூதங்</line>
<line>		கடற்குங் கனற்குங் கடுங்கெளவை கண்டே.</line>
</verse>

<verse>
<line>554.  மஞ்சூடு வேவக் கொளுத்துங் கனற்கண்</line>
<line>		மாநாக மோரெட்டு மட்டித் தவற்றின்</line>
<line>	செஞ்சூடி காகோடி சிந்தப் பறித்துச்</line>
<line>		சிறைப்புட் குலங்காவ லன்சீர் சிதைத்தே.</line>
</verse>

<verse>
<line>555.  கட்டுக்கொள் பொற்றேரின் ஞாயிற்றை யுந்தண்</line>
<line>		கதிர்க்கோளை யும்பரி டஞ்சென்று கெளவிச்</line>
<line>	சுட்டுக்கொல் கூசிக்கொல் விட்டும் பிடித்துந்</line>
<line>		தொடர்ந்திராகு கேதுக்கள் சீலந் தொலைத்தே.</line>
</verse>

<verse>
<line>556.  மக்கா ணுமக்கம்ம தாய்காணும் யாநீர்</line>
<line>		மறந்தீர்க ளென்றென்னு வஞ்சப்பெ ணங்குப்</line>
<line>	புக்காண் முலைக்கண்க ளாலாவி யுண்டப்</line>
<line>		பொய்ம்மாய னார்செய்தி போகப் புணர்த்தே.</line>
</verse>

<verse>
<title>வேறு</title>
</verse>

<verse>
<line>557.  எயிறார வாயார மிடறார வொருகாலு மெரிதீயறா</line>
<line>	வயிறார வாறாத வடவாற விமையோரை வரவாரியே.</line>
</verse>

<verse>
<line>558.  அரிதின்று போரென்று கோனஞ்ச வமிர்தோடு மமிர்துண்டெழுங்</line>
<line>	கரிதின்று பரிதின்று தேர்தின்று முளிகூளி களிகூரவே.</line>
</verse>

<verse>
<title>தேவர்கள் இறந்து பேய்களாதல்.</title>
</verse>

<verse>
<line>559.  தேரில்லை கரியில்லை பரியில்லை யிவைநிற்க தேவென்பதோர்</line>
<line>	பேரில்லை சுரராசன் விடுசேனை பேய்தின்று பேயாகியே.</line>
</verse>

<verse>
<title>வேறு</title>
</verse>

<verse>
<line>560.  பரந்தர னார்படை யூழியி லாழியை யொத்தது</line>
<line>		பாயெரி கொன்று படுங்கடல் போற்குறை பட்டது</line>
<line>	புரந்தர னார்படை வந்து படும்படு மும்பர்கள்</line>
<line>		பூதமும் வேதா ளங்களு மாயே புகுதவே.</line>
</verse>

<verse>
<line>561.  தந்தடி தின்றனர் தந்தலை மூளை விழுங்கினர்</line>
<line>		தத்த முரத்துகு மாறு தடுத்து மடுத்தனர்</line>
<line>	சிந்தடி வன்குற ளாலல கைக்குல மாகிய</line>
<line>		தேவர் பிறப்பு மிறப்பு மிலாதவர் செத்தே.</line>
</verse>

<verse>
<line>562.  ஆடாவிழியிணை காகமிருந்து பறிப்பன</line>
<line>		வடிபடி தோயா தனகத நாய்க ளலைப்பன</line>
<line>	வாடா மிஞிறிமி ராமுடி மாலை துகைப்பன</line>
<line>		வல்வா யெருவைகள் வானோர் பொருமிதம் வாழியே.</line>
</verse>

<verse>
<title>வேறு</title>
</verse>

<verse>
<line>563.  போர்த்தே ரிவுளி தின்றாளும் பாகு மிசைந்து பூட்டழித்தே</line>
<line>	தேர்த்தே ரென்ன வரும்பேய்த்தேர் தேவ ருலகிற்றிரியுமால்.</line>
</verse>

<verse>
<line>564.  அமையோ மென்னு மலகையினந் தின்றுவிடாய் பண்டமிர்துண்ட</line>
<line>	இமையோ ரிமையாப் பேயாகி யிந்த்ர லோகத் தீண்டுவரால்.</line>
</verse>

<verse>
<title>வேறு</title>
</verse>

<verse>
<line>565.  முடைகமழ்ந்து தசையிழந்து முதுநரம்பொ டென்புமாய்</line>
<line>	அடையவிந்த்ர லோகமும் பசாசலோக மாகவே.</line>
</verse>

<verse>
<line>566.  முடையழுங்கி யமிர்தநாறி யழகமைந்த மொய்ம்பினால்</line>
<line>	அடையவும் பசாசலோக மிந்த்ரலோக மாகவே.</line>
</verse>

<verse>
<title>பிரமா பின்னும் படைத்தலும் அமர்மூளுதலும்.</title>
</verse>

<verse>
<title>வேறு</title>
</verse>

<verse>
<line>567.  பின்னையும் பிதாமகன் படைக்கப் பேரமர்</line>
<line>	முன்னையி னெழுமடி முடுகி மூளவே.</line>
</verse>

<verse>
<line>568.  பித்த வானவ ரெங்கே பிழைப்பது</line>
<line>	மொய்த்த பூதம் வயிற்றெரி மூண்டவே.</line>
</verse>

<verse>
<line>569.  மேலுங் கீழும் வெளிப்பட வான்விடுங்</line>
<line>	கோலுங் குந்தமு மேவிளை கொள்ளியே.</line>
</verse>

<verse>
<line>570.  விட்ட தேரெலாம் வாரி விழுங்கவோ</line>
<line>	இட்ட பேருத ரத்தீ யெரிவதே.</line>
</verse>

<verse>
<line>571.  புக்க வேழும் பொரியப் புகைபுறங்</line>
<line>	கக்க வேழு பொழிலுங் கதுவவே.</line>
</verse>

<verse>
<line>572.  இரிந்த தப்புற மிந்திர னேவலால்</line>
<line>	விரிந்த தீயடை யச்சென்று விம்மவே.</line>
</verse>

<verse>
<line>573.  சேனை யெல்லாந் திரிய விழுந்தன</line>
<line>	ஆனை யெல்லா மணியணி யாகவே.</line>
</verse>

<verse>
<line>574.  ஆழமெட்டுங்கொ ல்வ்வயி றெண்டிசை</line>
<line>	வேழ மெட்டும் புகப்புக வீழவே.</line>
</verse>

<verse>
<line>575.  விழ்ந்த வேழங்கள் வெந்து வயிற்றுவீழ்ந்</line>
<line>	தாழ்ந்த தண்ண லயிரா பதமுமே.</line>
</verse>

<verse>
<line>576.  மெய்ய டங்கவெந் தார்சிலர் விண்ணவர்</line>
<line>	கைய டங்கிய செந்தீக் கதுவவே.</line>
</verse>

<verse>
<line>577.  சோற்றுப்ப் பாவகன் வெந்தனன் சூழ்திசை</line>
<line>	வேற்றுத் தேவ ரெழுவரும் வேவவே.</line>
</verse>

<verse>
<line>578.  சாலத் தீயி லரக்க ருபாதிகள்</line>
<line>	ஆலத் தீயி லறவெந் தவியவே.</line>
</verse>

<verse>
<line>579.  அடைய வெந்தனர் துவாதசா தித்தரும்</line>
<line>	உடைய வெங்கதிர் தம்மை யுருக்கவே.</line>
</verse>

<verse>
<line>580.  தடஞ்செ யேகா தசரைத் தனித்தனி</line>
<line>	முடஞ்செய் தேயவர் முத்தெருத் தெற்றியே.</line>
</verse>

<verse>
<line>581.  திங்க டண்மையிற் றேரோ னவிந்தனன்</line>
<line>	தங்கள் வெம்மையிற் றண்மதி வேவவே.</line>
</verse>

<verse>
<line>582.  கால்கொ ளுத்துமச் செந்தீக் கடவுளும்</line>
<line>	மேல்கொ ளுந்தகர் வீழ்ந்துழி வீழவே.</line>
</verse>

<verse>
<line>583.  ஏறு தூக்கு மிடியெரி தீந்தவர்</line>
<line>	ஆறு தூக்குமம் மேக மடங்கவே.</line>
</verse>

<verse>
<line>584.  காந்த மூளத் திருக்கட் கதிர்க்கெதிர்</line>
<line>	போந்த வெல்லாப் பொருப்பும் பொரியவே.</line>
</verse>

<verse>
<line>585.  எப்புத் தேளு மிடிமெப் பணிகளும்</line>
<line>	வெப்புத் தீயில் விரவி யெரியவே.</line>
</verse>

<verse>
<line>586.  அனிக மாய்வரு மாகண்ட லன்விடு</line>
<line>	முனிக ணத்தர்த முத்தழல் மூழ்கவே.</line>
</verse>

<verse>
<line>587.  விரிமு கக்கட லேழ்பெரு வெள்ளமும்</line>
<line>	பரிமு கத்தொரு செந்தீப் பருகவே.</line>
</verse>

<verse>
<line>588.  வேட்டுத் தீவர விட்டன காட்டுவெங்</line>
<line>	காட்டுத் தீயின மூண்டு கதுவவே.</line>
</verse>

<verse>
<line>589.  பெருக வெந்தன செந்தீப் பிழம்பெழ</line>
<line>	உருக வெந்தன தாரகா லோகமே.</line>
</verse>

<verse>
<line>590.  முன்ன முன்ன வடைய முளியுமால்</line>
<line>	பின்னை யாரவர் கையிற் பிழைப்பரே.</line>
</verse>

<verse>
<line>தேவர்களைப்பத்துப்பிரமரும் மீளப்படைத்தல்</line>
</verse>

<verse>
<line>591.  பாவ காரப் பதின்மரும் யாவரும்</line>
<line>	வேவ வேவப் படைத்தனர் மீளவே.</line>
</verse>

<verse>
<line>பத்திரகாளியினது படையெழுச்சி</line>
<title>வேறு</title>
</verse>

<verse>
<line>592.  படைத்துவிட்டசுரர் சேனையைத்தலைவி</line>
<line>		பத்ரகாளிபடை கண்டுபண்</line>
<line>	டடைத்துவிட்டபடி யன்றியேயிறைவர்</line>
<line>		முன்புநின்றனபின் பாகவே.</line>
</verse>

<verse>
<line>593.  மோகமோகினிகள் யோகயோகினிகள்</line>
<line>		யாகசம்மினிகண் முலைவிடா</line>
<line>	நாகசாகினிகள் வீரபைரவிக</line>
<line>		ணாதசாதகர்க ணண்ணியே.</line>
</verse>

<verse>
<line>594.  யானையாளிபரி யேதிதேர்களென</line>
<line>		வெண்ணில்கோடிபல பண்ணியிச்</line>
<line>	சேனையாளென வநேகபூதமொடு</line>
<line>		செய்தபேய்களொடு செல்லவே.</line>
</verse>

<verse>
<title>வேறு</title>
</verse>

<verse>
<line>595.  கொண்டதிருக்கோ லங்களிருக்கும்</line>
<line>		படியடியோமே கூறவிருப்பேம்</line>
<line>	அண்டமனைத்துஞ் சூழவரும்பே</line>
<line>		ராழிகளாமே யாழியவர்க்கே.</line>
</verse>

<verse>
<line>596.  உலகுவகுப்பா ருலகுதொகுப்பா</line>
<line>		ருலகுபடைப்பா ருலகுதுடைப்பார்</line>
<line>	அலகுவகுப்பா ரகிலகலைக்கூ</line>
<line>		றடையவிடுப்பா ரவளடியாரே.</line>
</verse>

<verse>
<line>பத்திரகாளியின் படைகள் தேவசேனைகளோடு பொருதல்.</line>
</verse>

<verse>
<title>வேறு</title>
</verse>

<verse>
<line>597.  மொய்யானையு மாளு முடன்றுபொரா</line>
<line>	மொய்யானையு மாளும் விழுங்கினவே.</line>
</verse>

<verse>
<line>598.  பொய்யாளியி லாளிடு மெஃகிடைபோய்</line>
<line>	மெய்யாளியொ டிற்றனர் விஞ்சையரே.</line>
</verse>

<verse>
<line>599.  பொய்த்தேரணி முட்ட வெறும்பொடியாய்</line>
<line>	மெய்த்தேரணி யற்றனர் விண்ணவரே.</line>
</verse>

<verse>
<line>600.  பொய்வாரி பரந்து புகப்புரளும்</line>
<line>	மெய்வாரி பிறங்கி விசும்புறவே.</line>
</verse>

<verse>
<line>601. பொய்வந்த பதாதியு ளாவி புகா</line>
<line>	மெய்வந்த பதாதி விழுந்தறவே.</line>
</verse>

<verse>
<line>602. பொய்யாயுத வாயுமிழ் பொங்கழலால்</line>
<line>	மெய்யாயுதம் யாவையும் வெந்தறவே.</line>
</verse>

<verse>
<line>603. பொய்ந்நின்ற பதாகினி தந்ததுபோய்</line>
<line>	மெய்ந்நின்ற பதாகினி மெய்கெடவே.</line>
</verse>

<verse>
<title>பட்சிசாதிகணங்களின் செயல்.</title>
</verse>

<verse>
<title>வேறு</title>
</verse>

<verse>
<line>604. நுங்கள் கூறுகொன் றிரினி நொய்யகூ</line>
<line>	றெங்கள் கூறெமக் கேவிடு மென்னவே.</line>
</verse>

<verse>
<line>605. பானி லாவைப் பசுங்கதிர்க் கொத்தொடு</line>
<line>	மேனிலாவுஞ் சகோரங்கண் மேயவே.</line>
</verse>

<verse>
<line>606. கோனம் போதரங் கும்போ நரம்புக</line>
<line>	வானம் பாடியே கூடி மடுப்பவே.</line>
</verse>

<verse>
<line>607. ஏறு மேறு மலைகளெல் லாம்புக</line>
<line>	வேறு வேறு கபோதங்கண் மேயவே.</line>
</verse>

<verse>
<line>608. பதங்கர் வெங்கதிர் பன்னிரண்டாயிரங்</line>
<line>	கதங்கொ ணீலிகைக் கிள்ளை கவரவே.</line>
</verse>

<verse>
<line>609. யூத் நாயக ரோடுர கேசரை</line>
<line>	வேத நாயகி தோகை விழுங்கவே.</line>
</verse>

<verse>
<line>610. முன்ன ரம்பினு முத்தர் மிடற்றினுங்</line>
<line>	கின்ன ரஞ்சுரர் நெஞ்சங் கிழிக்கவே.</line>
</verse>

<verse>
<line>611. சக்ர மாய்ச்சென்று சக்ரவா கங்களே</line>
<line>	விக்ர மாயுத வெள்ளத்தை வெட்டவே.</line>
</verse>

<verse>
<line>612. திருட னிந்திர னுய்ந்து திரியுமோ</line>
<line>	கருட னாயிரங் கண்ணுங் கவரவே.</line>
</verse>

<verse>
<title>பத்திரகாளி வாளியேவுதல் முதலியன.</title>
</verse>

<verse>
<line>613. ஆளி யேறி யகிலாண்ட நாயகி</line>
<line>	வாளி யேவி யுலகை வளைப்பவே.</line>
</verse>

<verse>
<line>614. எக்க வந்தமு மெப்பிண முங்கிரி</line>
<line>	ஒக்க வந்தொரு வாளிக் குதவவே.</line>
</verse>

<verse>
<line>615. பூமிவட்டமும் போரொளி வட்டமு</line>
<line>	நேமி வட்டமு தேரொத்து நிற்கவே.</line>
</verse>

<verse>
<line>616. கொன்ற தன்றிவை யோர்பிணங் கூளிகள்</line>
<line>	தின்ற சீர்தந் திருவுள்ளஞ் சேர்த்தியே.</line>
</verse>

<verse>
<title>வேறு</title>
</verse>

<verse>
<line>617. புங்கவாளி யொன்றினாற் புரத்ரயஞ் சகத்ரயஞ்</line>
<line>	சிங்கவாளி யொன்றினா லிருவருஞ் சிதைப்பவே.</line>
</verse>

<verse>
<title>வீரபத்திரதேவர் அருளிச்செய்தல்</title>
</verse>

<verse>
<title>வேறு</title>
</verse>

<verse>
<line>618. இப்படிப் பட்ட பின்னு மிமையவர் படைகண் டையர்</line>
<line>	அப்படை யின்ன நின்ற தென்கொலென் றருளிச் செய்ய.</line>
</verse>

<verse>
<title>கணநாதர் விண்ணப்பஞ் செய்தல்</title>
</verse>

<verse>
<line>619. படப்பட வயனு மக்கள் பதின்மரும் படையா நின்றார்</line>
<line>	விடப்பட வணியோயென்று விண்ணப்பஞ் செய்யக் கேட்டே.</line>
</verse>

<verse>
<title>வீரபந்திரதேவர் செயல்</title>
</verse>

<verse>
<line>620. சீறிய சினத்தீ யுண்ணத் திரிபுர மெரித்த நாளில்</line>
<line>	ஏறின திருத்தேர் நின்று மிழிந்தன னெங்கள் வீரன்.</line>
</verse>

<verse>
<title>வேறு</title>
</verse>

<verse>
<line>621. மாணெனெண்மரு நான்முகத்தன மூகைசூழ வமைந்ததோர்</line>
<line>	ஞாணென் மஞ்சன மென்கொல்காரண நாரணாதித ணுசமே.</line>
</verse>

<verse>
<line>622. காடுபோகு சடாமுடிக்கபி டேகமண்ட கபாலமே</line>
<line>	ஊடுபோக வநந்தகோடி சகத்ரதாரை யொழுக்கவே.</line>
</verse>

<verse>
<line>623. செய்யகைத்திரு நாணணிந்தருள் செய்கெனத்திரு மங்கலத்</line>
<line>	துய்யதும்புரு நாரதாதிகள் வேதவீணை தொடங்கவே.</line>
</verse>

<verse>
<title>வீராத்திரதேவர் போர்க்கோலம் கொள்ளுதல்.</title>
</verse>

<verse>
<line>624. பொதியில்வாழ்முனி புங்கவன்றிரு வாய்மலர்ந்த புராணநூல்</line>
<line>	வீதியினால்வரு தும்பைமாலை விசும்புதூர மிலைச்சியே.</line>
</verse>

<verse>
<line>625. கச்சியிற்சுர சூதசீதன பல்லவங்கன லிற்கலித்</line>
<line>	துச்சியிற்பனி வீசுகண்ணியின் வெண்ணிலாவை யொதுக்கவே.</line>
</verse>

<verse>
<line>626. மாறில்பேரொளி வட்டமிட்டு வரம்பிலாமறை மாநிறுத்</line>
<line>	தீதில் காழை ஞாலமுங்கொடு செய்ததேர்மிசை யேறியே.</line>
</verse>

<verse>
<line>627. கால்பிடித்து நிவந்ததேர்கம காணியாய்வழி வந்துமுட்</line>
<line>	கோபிடித்து வலஞ்செய்தேறி விரிஞ்சனேகுசை கொள்ளவே.</line>
</verse>

<verse>
<line>628. மாகமேவரு மூரிறக்க விளைந்தநாளில் வளைந்ததோர்</line>
<line>	நாகமேகொல் பினாகமேகொ லிடத்திருக்கையி னண்ணவே.</line>
</verse>

<verse>
<line>629. புரங்கொலம்புகொல் வந்துவந்திடை</line>
<line>		போனபோன புராணர்பொற்</line>
<line>	சிரங்கொ லம்புகொ லென்கொலொன்று</line>
<line>		வலத்திருக்கை திரிக்கவே.</line>
</verse>

<verse>
<line>630. ஏனமெய்தன சிங்கமெய்தன கற்கியெய்தன வெண்ணிலா</line>
<line>	மீனமெய்தன வாழையெய்தன வாவநாழிகை விம்மவே.</line>
</verse>

<verse>
<line>631. பிடித்த வில்லி னெறிந்த நாணொலி</line>
<line>		யண்ட பித்தி பிளந்துபோய்</line>
<line>	வெடித்த வோசையி லப்பு றத்வனி</line>
<line>		போல மேலெழ விம்மவே.</line>
</verse>

<verse>
<line>632. சூல மோபுவ னங்க ளுக்கு</line>
<line>		முகுந்த னாதி சுரர்க்குமாய்</line>
<line>	கால மோவென வந்த தந்தில்</line>
<line>		கணிச்சி யுங்கனல் காலவே.</line>
</verse>

<verse>
<line>633. புனைந்து வந்த மதிக்கு முன்பு</line>
<line>		பயந்த வேலை பொறாமையால்</line>
<line>	நினைந்து வந்தமு தஞ்சொ ரிந்தென</line>
<line>		மாலை வெண்குடை நிற்பவே.</line>
</verse>

<verse>
<line>634. அமைய நிற்கு மலங்க லேறு</line>
<line>		பிறங்க வெண்கொடி யாடுமால்</line>
<line>	இமைய வெற்பு மதன்க ணின்று</line>
<line>		மெடுத்த கங்கையு மென்னவே.</line>
</verse>

<verse>
<title>தேவர்கள் வலியழிதல்</title>
</verse>

<verse>
<line>635. வாச வன்றச நூறு கண்ணு</line>
<line>		மறைந்து பேரிருண் மண்டவே</line>
<line>	கேச வன்றகை மெளலி போயிருள்</line>
<line>		கெட்ட கேடு கிடக்கவே.</line>
</verse>

<verse>
<line>636. சடைகொல் வெம்மழு வாய்கொ லுண்டு</line>
<line>		புனற்பெ ருந்தகை சாயவே</line>
<line>	கடைகொ றிகொள் கரங்கொல் வவ்வி</line>
<line>		யிருந்த னத்தி கரிந்தவே.</line>
</verse>

<verse>
<line>637. திங்கண் மண்டில மேற வெந்து</line>
<line>		களங்க மல்லது தீயவே</line>
<line>	வெங்கண் மண்டிலம் ராகு முற்ற</line>
<line>		ளிழுங்கி யொத்து மழுங்கவே.</line>
</verse>

<verse>
<line>638. சூட வென்று வகுத்த தும்பை</line>
<line>		புராரி சேவடி தோயவே</line>
<line>	வீட வென்று வகுத்த தும்பை</line>
<line>		சுரேசர் மெளலி மிலைச்சவே.</line>
</verse>

<verse>
<line>639.  சூட வென்று வகுத்த தும்பை</line>
<line>		புராரி சேவடி தோயவே</line>
<line>	வீட வென்று வகுத்த தும்பை</line>
<line>		சுரேசர் மெளலி மிலைச்சவே.</line>
</verse>

<verse>
<line>640. வீட்ட வூர்தி யனைத்து மும்பரை</line>
<line>		வீசி வந்தன விம்மவே</line>
<line>	தொட்ட வாயுத முற்று மற்றவர்</line>
<line>		கைது றந்தடி சூழவே.</line>
</verse>

<verse>
<line>641. போகை யேயென வைன தேயனு</line>
<line>		மன்ன முங்குடி போகவே</line>
<line>	கூகை யேமிடை காக மேயவர்</line>
<line>		கொடி மிசைக்குடி கொள்ளவே.</line>
</verse>

<verse>
<title>இந்திரன் போர்தொடங்கல்.</title>
</verse>

<verse>
<line>642. பின்ன ருஞ்சுட ராழி யானடு</line>
<line>		வாக மீதுபர தானராய்</line>
<line>	முன்ன ருஞ்சுர ரோடு மிந்திரன்</line>
<line>		வந்து தோமர முட்டவே.</line>
</verse>

<verse>
<title>வேறு</title>
</verse>

<verse>
<line>643. புரண்டு மின்னுநெடு நாணு டங்குவன</line>
<line>		மேக ராசிபொழி யப்புறத்</line>
<line>	திரண்டு வில்லுமென விந்த்ர சாபமுடன்</line>
<line>		யந்த்ர சாபமு மிறங்கவே.</line>
</verse>

<verse>
<title>திருமாலின் போர்.</title>
</verse>

<verse>
<line>644. சேய கண்கனன் முராரி தங்கள்கடல்</line>
<line>		செல்க வென்னவது சென்றதால்</line>
<line>	நாய கன்பரசு பாணி வேணியொரு</line>
<line>		நாக நாவினை நனைத்ததால்</line>
</verse>

<verse>
<line>645. படப்ப டப்பெரும் பரவை யாயிரம்</line>
<line>		பளி மாலெதிர் பரப்பினான்</line>
<line>	விடக்க ருங்கணின தையர் கைத்தொடி</line>
<line>		விழித்த தன்றவையும் வேவவே.</line>
</verse>

<verse>
<line>646. வைய முண்டுதனி துஞ்சு மாலைவர</line>
<line>		மாய னார்விலக நாயனார்</line>
<line>	ஜெய முண்டுதரு மம்ப ணித்தருளு</line>
<line>		மாதி யால்பொரு தழித்ததால்.</line>
</verse>

<verse>
<line>647. ஆழி மாயன்விட வாதி வானவன்மு</line>
<line>		னாட கச்சிறகி னருகுபுக்</line>
<line>	கூழி மாருத மிரண்டு பாடும்வர</line>
<line>		வூடு சென்றதவ னுவணமே.</line>
</verse>

<verse>
<line>648. இறகு தீயவுயிர் தீய வீயுமதன்</line>
<line>		வெற்று டம்புலகி னெல்லையின்</line>
<line>	பிறகு தீயென வெழுந்து வீழ்ந்திட</line>
<line>		வுயிர்த்த தையர்விடு பெற்றமே.</line>
</verse>

<verse>
<line>649. சக்க ரப்படை முகுந்த னேவவது</line>
<line>		தானு மெங்களிரை தானெனா</line>
<line>	நக்க ரப்படை சடாட விப்புடையி</line>
<line>		லுண்ட றுத்ததொரு நாகமே.</line>
</verse>

<verse>
<line>650. ஆல மொன்றுமமு தென்று பண்டமுது</line>
<line>		செய்யு மையர்பணி யன்றியே</line>
<line>	சூல மொன்றுதனி சென்று மற்றவன்</line>
<line>		மணித்து ழாய்முடி துணித்ததே.</line>
</verse>

<verse>
<title>இந்திரன் படையேவுதலும் அவை அழிதலும்.</title>
</verse>

<verse>
<line>651. வளையு மாழியு மருங்கு பற்றியதொ</line>
<line>		ரிந்த்ர நீலகிரி மறிவதொத்</line>
<line>	திளைய வாசவன் விசும்பி னின்றும்விழ</line>
<line>		வெரிசி னந்திருகி யிந்த்ரனே.</line>
</verse>

<verse>
<line>652. மேக வெள்ளநதி வெள்ள நூறுகென</line>
<line>		வும்பர் நாயகன் விளம்பினான்</line>
<line>	மாக வெள்ளநதி கொண்ட தோர்சடை</line>
<line>		வளைந்து கொண்டதவை வற்றவே.</line>
</verse>

<verse>
<line>653. மெத்து வேலைகளை வச்ர பாணிவர</line>
<line>		விட்ட போதரி விரிஞ்சரைக்</line>
<line>	குத்தும் வேல்கொறலை வெட்டும் வாள்கொலெயி</line>
<line>		லெய்யு மம்புகோல் குடித்ததே.</line>
</verse>

<verse>
<line>654. வளைத்து வந்தன புரந்த ரன்குல</line>
<line>		வலங்க லைப்பணி மதாணியோன்</line>
<line>	விளைந்து வந்தன வெறும்பொ டித்தனது</line>
<line>		கைப்பொ டிச்சிறிது வீசவே.</line>
</verse>

<verse>
<line>655. காடு கொண்டபடை கொண்டு வந்தகர</line>
<line>		ரீசன் விட்டதொரு கற்பகக்</line>
<line>	கோடு கொண்டதனை யும்ப டைப்பையு</line>
<line>		மடக்கி நின்றதவர் கொன்றையே.</line>
</verse>

<verse>
<line>656. இடிப்பெரும்படை யெரிந்து மண்டிவர</line>
<line>		விண்ட லத்தரச னேவினான்</line>
<line>	அடிப்பெருங்கடவு ளூழி யீறுதொறு</line>
<line>		மாடு மஞ்சன மவித்ததால்.</line>
</verse>

<verse>
<line>657. வச்சி ரப்படையு மிந்தி ரன்படையில்</line>
<line>		வந்த தாலதனை வல்லவன்</line>
<line>	முச்சி ரப்படையும் வேறு செய்திலது</line>
<line>		நீறு செய்ததெதிர் முட்டியே.</line>
</verse>

<verse>
<line>658. நிலத்தை யேவ நிசித்தனு மோரடித்</line>
<line>	தலத்தை யேவினன் முற்றுத் தகரவே.</line>
</verse>

<verse>
<line>659. ஓத மேவ வொருகுறும் பூதத்தை</line>
<line>	நாத னேவின னாவை நனைக்கவே.</line>
</verse>

<verse>
<line>660. தீயை யேவச் சிரித்தொரு கொள்ளிவாய்ப்</line>
<line>	பேயை யேவின னெங்கள் பிரானுமே.</line>
</verse>

<verse>
<line>661. காற்றை யேவ வுயிர்ப்பதொர் கட்செவிக்</line>
<line>	கூற்றை யேவின னைய குறனனே.</line>
</verse>

<verse>
<line>662. வானை யேவ வயப்புய மாம்பெருஞ்</line>
<line>	சேனை யேவின னெங்கணுஞ் செம்மலே.</line>
</verse>

<verse>
<title>தேவர்களும் பிறரும் அழிதல்.</title>
</verse>

<verse>
<line>663. அண்டர் யாவரு மாழி கடைந்துபண்</line>
<line>	டுண்ட வாரமு தோடு மொருங்கவே.</line>
</verse>

<verse>
<line>664. அமுதில் வந்த வயிரா பதமவர்</line>
<line>	குமுத வாயுமிழ் நஞ்சிற் குளிப்பவே.</line>
</verse>

<verse>
<line>665. பாற்க டற்படு பாய்மாப் படுபுனற்</line>
<line>	காற்க டற்கழி யுள்ளே கரப்பவே.</line>
</verse>

<verse>
<line>666. அங்க ணாயகி யங்கியி லுள்ளன</line>
<line>	தங்கள் காறங்கை தாங்கண்ட வண்ணமே.</line>
</verse>

<verse>
<line>667. வேற்றுக் கோட்டிப் பதினொரு விண்ணவர்</line>
<line>	ஏற்றுக் கோட்டி னுயிர்க்கழு வேற்றவே.</line>
</verse>

<verse>
<line>668. உக்கு நின்றன ரும்ப ருடம்புதாம்</line>
<line>	புக்கு நின்ற நிலைவிடப் போகவே.</line>
</verse>

<verse>
<title>பின்னும் பிரமன் சேனையை வகுத்தல்.</title>
</verse>

<verse>
<line>669. உய்ய லாமென வும்பர் பிதாமகன்</line>
<line>	மய்ய லாற்பின்னுஞ் சேனை வகுக்கவே.</line>
</verse>

<verse>
<title>மீள அமர் தொடங்கல்.</title>
</verse>

<verse>
<line>670. வகுத்துச் சேனையை வானவர் கோமகன்</line>
<line>	தொகுத்து விட்டமர் மீளத் தொடங்கவே.</line>
</verse>

<verse>
<title>இந்திரன்விட்ட படைகள் அஞ்சியோடல்.</title>
</verse>

<verse>
<line>671. தேர்த்தட் டாயன் றுடைந்தது தேர்ந்துகொல்</line>
<line>	பார்புத் தேன்பயத் தோடு பறந்ததே.</line>
</verse>

<verse>
<line>672. பண்டு மாண்மகன் றன்செயல் பார்த்தவோ</line>
<line>	மண்டு மாழிக ளென்கொன் மறிந்தவே.</line>
</verse>

<verse>
<line>673. ஊழித் தீயுவந் தாடுவ தோர்ந்ததோ</line>
<line>	மாழித் தீதடு வென்கொல் பனிப்பதே.</line>
</verse>

<verse>
<line>674. உயிர்ப்ப வர்க்குநா மென்பதை யுள்ளியோ</line>
<line>	செயிர்ப்பு மாருதம் பேர்ந்து திரிந்ததே.</line>
</verse>

<verse>
<line>675. தம்மை மாய்க்குத் தழற்பிழம் பென்பதோ</line>
<line>	வெம்மை மாறி விசும்பின்மின் மீண்டவே.</line>
</verse>

<verse>
<line>676. ஐயர் வேணி யரவமங் காப்பவோ</line>
<line>	வெய்ய நாயிறுந் திங்களு மீண்டவே.</line>
</verse>

<verse>
<line>677. உழைக்கும் பண்டை யுதைநினைந் துட்கியோ</line>
<line>	இழைக்குங் கூற்ற மெதிரா திரிவதே.</line>
</verse>

<verse>
<line>678. வெம்பு தானவர் மூவெயில் வேவித்த</line>
<line>	அம்பு தானுள தென்றோ னகன்றதே.</line>
</verse>

<verse>
<line>679. அரிய வீழ்ந்த வருஞ்சிறை யுள்ளியோ</line>
<line>	திரிய வீழ்ந்தன வெல்லாச் சிலம்புமே.</line>
</verse>

<verse>
<line>680. அருந்து மாழியி லாலமுண் டாரென்றோ</line>
<line>	பொருந்து மேகங்கள் போர்விடப் போவதே.</line>
</verse>

<verse>
<line>681. எட்ட நிற்கி னுரிப்பரென் றெண்ணியோ</line>
<line>	விட்ட மாதிர வேழங்கண் மீண்டவே.</line>
</verse>

<verse>
<title>இந்திரன் முதலியவர்கள் படல்</title>
</verse>

<verse>
<line>682. கூறு மேகக் குலிசா யுதன்பட</line>
<line>	ஏறு மேகத் துருமே றெறியவே.</line>
</verse>

<verse>
<line>683. காய்ந்தி ரண்டு கதுப்பினுந் தன்கடாய்</line>
<line>	பாய்ந்து பாவகப் பாவி பதைக்கவே.</line>
</verse>

<verse>
<line>684. சட்டத் தென்னவன் றன்கடா வேந்தனை</line>
<line>	வெட்டிக் கூறிரண் டாய்விழ வீழ்த்தவே.</line>
</verse>

<verse>
<line>685. குருதி யூற்றிக் குடித்திடு கூளியால்</line>
<line>	நிருதி யூற்ற மிழந்துயிர் நீங்கவே.</line>
</verse>

<verse>
<line>686. முகர வாயன் வருணன் முதியவன்</line>
<line>	மகர போசன மாயுடன் மாயவே.</line>
</verse>

<verse>
<line>687. மலைம ருப்பெறி மாருத மார்புதன்</line>
<line>	கலைம ருப்பிற் கழியக் கிழியவே.</line>
</verse>

<verse>
<line>688. பாழி வாய்மதி தன்னைப் பரிப்பதோர்</line>
<line>	ஆழி யீரப் பிறையிறண் டாகவே.</line>
</verse>

<verse>
<line>689. மாறு கூர்வட கீழ்த்திசை வானவன்</line>
<line>	ஏறுமார்பத் திறப்ப விறப்பவே.</line>
</verse>

<verse>
<title>வேறு</title>
</verse>

<verse>
<line>690. அங்கிகண் மூவரூநே ரட்ட வசுக்களுநேர்</line>
<line>	எங்குள தேவருநேர் கின்னரர் யாவருநேர்.</line>
</verse>

<verse>
<line>691. இந்த்ர முராரிகணேர் யாமவரு ணாதிகணேர்</line>
<line>	சந்த்ர திவாகரர்நேர் தாரகை யாவையுநேர்.</line>
</verse>

<verse>
<line>692. மண்டல மடியிடநேர் தோளிட மாதிரநேர்</line>
<line>	விண்டல முடியிடநேர் விண்ணவ ரேயினிநேர்.</line>
</verse>

<verse>
<title>திருமால் பொர வருதல்.</title>
</verse>

<verse>
<title>வேறு</title>
</verse>

<verse>
<line>693. பொக்கந் தவிர்வியாழன் சுக்ரன் போல்வீழப்</line>
<line>		பூகண் டகர்கோவோ டாகண் டலன்மாயத்</line>
<line>	தக்கன் றலையானார் பக்கம் படைபோதச்</line>
<line>		சதுரா னனவெள்ளஞ் சூழத் தான்வந்தே.</line>
</verse>

<verse>

<line>694. காயிற் றுவியாலோ ரசனி கதழேறுங்</line>
<line>		கடலிற் றிரையாலோர் வடவைக் கனன்மாவும்</line>
<line>	பாயிற் றுகளாலோர் படநா கமுமாகப்</line>
<line>		பரமன் பூரிக்கப் பிரமன் பாரித்தே.</line>
</verse>

<verse>
<line>695. சதுரா னனவெள்ளஞ் சூழத் தான்முற்றுந்</line>
<line>		தந்த்ரங் களுமெல்லா யந்த்ரங் களுமுட்கொண்</line>
<line>	டெதிரா யவியக்கண் டீரை வரையுங்கொண்</line>
<line>		டிறையோ னெதிர்சென்றான் மறையோ ரிறையோனே.</line>
</verse>

<verse>
<line>696. சாதித் தழலாமுத் தொகையு முக்குடுமிச்</line>
<line>		சத்திப் பிழையாமே குத்தித் தனிநெற்றிச்</line>
<line>	சோதித் தழலிற்பண் டெரிமுப் புரமொப்பச்</line>
<line>		சுட்டுக் ககனத்தே விட்டுத் துகள்செய்தே.</line>
</verse>

<verse>
<title>பிரமர்கள் அழிதல்</title>
</verse>

<verse>
<line>697. பத்துத் தலையோடும் பதின்மர்க் குந்தத்தம்</line>
<line>		பறியா வுயிர்போகப் பதுமத் திறைவற்குங்</line>
<line>	கொத்துத் தலைநாலுங் கலனா கியமுன்னைக்</line>
<line>		குறளைத் தலையாகக் கொளைவிற் குனிவித்தே.</line>
</verse>

<verse>
<title>திருமால் வீரபத்திரதேவரெதிர் செல்லுதல்</title>
</verse>

<verse>
<line>698. செந்தா மரையோனைக் கிளையோ டுயிர்வவ்வித்</line>
<line>		திருமால் வருகென்றம் பெருமா னறைகூவத்</line>
<line>	தந்தா மரையுந்திப் புதல்வன் கொலையுண்ணத்</line>
<line>		தரியா ரின்ரென்னக் கரியா ரெதிர்சென்றே.</line>
</verse>

<verse>
<title>வேறு</title>
</verse>

<verse>
<line>699. பொருதரங்கம் வீங்குசி லம்படை சேவடிப்</line>
<line>		புரையடங்க வூன்றவி ழுந்தது மேதினி</line>
<line>	இருவிசும்பு தூர்ந்தற வுந்திய மோலியி</line>
<line>		னிடைகழிந்து கூம்பின தண்டக பாலமே.</line>
</verse>

<verse>
<title>வேறு</title>
</verse>

<verse>
<line>700. தம்பொன் மகுட மண்ட கோளகை</line>
<line>		சங்கு திகிரி சந்த்ர சூரியர்</line>
<line>	செம்பொ னறுவை குன்ற வேதிகை</line>
<line>		சென்ற திரும னின்ற கோலமே.</line>
</verse>

<verse>
<line>701. எங்கு முலகு நுங்கு தீயென</line>
<line>		வின்று கனல நின்ற நீரொரு</line>
<line>	பங்கு பெறுக விங்கு தானிது</line>
<line>		பண்டு மறையி லுண்டு பார்மினே.</line>
</verse>

<verse>
<title>திருமாலுக்கும் வீரபத்திரதேவருக்கும் யுத்தம்.</title>
</verse>

<verse>
<line>702. என்று போதுமொரு புட்கொடி யெடுத்துமொருபே</line>
<line>		ரிடப நற்கொடி யெடுத்துமிகு வர்க்குமிருதேர்</line>
<line>	குன்று போல்வன விசும்புகெட மேல்வருபெருங்</line>
<line>		கொண்டல் போல்வன புகுந்தன கொடிபடையொடே.</line>
</verse>

<verse>
<title>வேறு</title>
</verse>

<verse>
<line>703. தண்டுழாய் மார்பர்சங் கொன்றுமே யூதவுந்</line>
<line>		தமனியக் கொன்றையார் தந்திருத் தேர்ம்சைப்</line>
<line>	பண்டுமால் வரவரக் கொண்டநா ளிடுமிடும்</line>
<line>		படைவிடா வலகில்சங் கிடைவிடா தூதவே.</line>
</verse>

<verse>
<title>வேறு</title>
</verse>

<verse>
<line>704. நின்ற வில்லிகொடி யிற்கருட னார்த்தபொழுதே</line>
<line>		நிமிர்சி றைக்கருட லோகமுட னார்த்ததெழவே</line>
<line>	குன்ற வில்லிகொடி மேலிடப மொன்றுகுமுறக்</line>
<line>		கோவு லோகமக லோகமடை யக்குமுறவே.</line>
</verse>

<verse>
<line>705. நேமி யங்கிரி நெரிந்தது முரிந்ததிடையே</line>
<line>		நின்ற மேருகிரி யெக்கிரியு மெக்கடலுநேர்</line>
<line>	பூமி கம்பமு மெதிர்ந்தன வுதிர்ந்தனவுடுப்</line>
<line>		பொருபுராரியு முராரியு முடன்றபொழுதே.</line>
</verse>

<verse>
<line>706. சந்தி ராதிகளொன் பதின்மரிரு பத்தெட்டுநா</line>
<line>		டார காகணித ராசிசோ திச்சக்ரமென்</line>
<line>	றிந்தி ராதிகள் விமானமொரு முப்பத்துநா</line>
<line>		லுருவர் தேரினு மடிந்தனகொ லெங்குமிலவே.</line>
</verse>

<verse>
<line>707. ஞால நேமிதிரை நேமிவரை நேமியிவையே</line>
<line>		நடைசுழன் றிறைசுழன் றனசுழன் றிலதுதங்</line>
<line>	கால நேமிரத நேமியிரு காலுமுடுகக்</line>
<line>		கடவுள் வீதியில் விசும்பிடை படக்கடுகியெ.</line>
</verse>

<verse>
<line>708. வேற நேகவித தாரகை யநேகமிடையே</line>
<line>		வீசு மாருத மநேகமினன் மேககுலமே</line>
<line>	ஆற நேகமிர தங்களு மநேகமவஎதா</line>
<line>		மார்ப தங்களெதிர் நீறுபட வேறுபடவே.</line>
</verse>

<verse>
<line>709. எம்ம் பாய்புரவி யிற்றெமது தேருமிறுமே</line>
<line>		லிடப மாய்வர வெழுந்துசும வீரெங்களுக்</line>
<line>	கம்ம் பாய்வருகி லீர்சிலை புகுந்துபிடியீ</line>
<line>		ரஃது போலுமினி யெம்மொடுறு மும்மதுறவே.</line>
</verse>

<verse>
<line>710. புனலன் மேனியி னிசிந்தன்விடு மம்படையவும்</line>
<line>		புரைய டங்குமினி யப்பரசு பாணிபுரைதீர்</line>
<line>	அனலன் மேனியின் முகுந்தன்விடு மம்படையவே</line>
<line>		மாத லாலவர் வலத்தெரிவ தம்மவரிதே.</line>
</verse>

<verse>
<line>711. மாயோன் விடும்விடும் பகழி செய்யவெரிமேல்</line>
<line>		வந்து வந்தடைய வெந்துபொடி யாய்மடியவே</line>
<line>	சேயோன் விடும்விடும் பகழி மாயனுதகத்</line>
<line>		திருவு டம்புபுக மூழ்கியுரு வச்செருகவே.</line>
</verse>

<verse>
<line>712. அறும றும்பிரமர் நாரணர்க பாலநிரைபே</line>
<line>		ரார மார்புடையவ வீரர்திரு மேனியருகே</line>
<line>	யுறுமு றும்பகழ்ழ்ழி வெந்துபொடி யானபடிகண்</line>
<line>		டுள்ள பஞ்சவா யுதங்களை மொக்கவிடவே.</line>
</verse>

<verse>
<title>வீரபத்திரதேவர் அருளிச்செய்தல்</title>
</verse>

<verse>
<line>713. தண்டு தோள்வளை கழுத்துநுதல் சாபம் வழிவாள்</line>
<line>		சக்ர மானன மெனத்தேவர் தானவர்களைப்</line>
<line>	பண்டு நீரமு தருத்துமுரு வத்திலிவையே.</line>
<line>		பஞ்ச வாயுதமு மல்லதிவை யென்னபடையே.</line>
</verse>

<verse>
<line>714. சங்க மெங்கள்குழை வில்லெமது சக்ரமெமதே</line>
<line>		தண்ட மெங்கள்யாம தண்டமழு வின்சாதிவாள்</line>
<line>	பொங்கு கண்ணவிவை யைம்படையு மெங்களுடனே</line>
<line>		போது மெங்ஙன மினிப்பொருவ தென்றபொழுதே.</line>
</verse>

<verse>
<title>திருமால் அருளிச் செய்தல்.</title>
</verse>

<verse>
<title>வேறு</title>
</verse>

<verse>
<line>715. பொருமம்பு சிலைகொள்வ தில்லையிவ் வுலகையும்</line>
<line>		பொருபினா கத்தையு மொருபெரும் பன்றியாய்</line>
<line>	இருகொம்பி னொருகொம்பி னுதியினான் மறியவிட்</line>
<line>		டிறமிதிப் பனின்மதிப் பொழிகவென் றிகலவே.</line>
</verse>

<verse>
<line>யுத்தம்</line>
<title>வேறு</title>
</verse>

<verse>
<line>716. கொம்பி ரண்டுமுக மொன்றுநடை நாலுமுதுகுங்</line>
<line>		கூறி ரண்டுபட வீழ்புடவி நீறுபடவோர்</line>
<line>	அம்பி ரண்டெயிறு மின்றிவெறு மோரெயிறு கொண்</line>
<line>		டடைய வெட்டுதலு மாதியுரு வெய்தியரியே.</line>
</verse>

<verse>
<line>717. மண்ணு நீபுனது நீயனது மாருதமுநீ</line>
<line>		மதியு நீரவியு தீயவை யனைத்தும் வழிபோம்</line>
<line>	விண்ணு நீயென வகண்டமும் விழுங்க வரிவாய்</line>
<line>		விட்ட விட்டவவ னைம்படையு மீளவிடவே.</line>
</verse>

<verse>
<line>718. நின்று நின்றுபடை யைந்துமவை யைந்தின்வழியெ</line>
<line>		நெடிய மாயன்விட நாயகன் விலக்கிவிடலுஞ்</line>
<line>	சென்று சென்றுபதி னாலுலக மும்புகவிழச்</line>
<line>		செய்ய வாயுமிட றும்புரை யறச்செருகவே.</line>
</verse>

<verse>
<title>வேறு</title>
<line>719. சிங்கமுங் கற்கியும் பன்றியுஞ் செற்றவன்</line>
<line>		றிரியநீர் செல்கெனச் சென்றுமால் சினவெரிச்</line>
<line>	சங்கமுஞ் சக்ரமுந் தண்டமுங் கட்கமுஞ்</line>
<line>		சாபமுன் பொடிபடத் தகனமே ககனமே.</line>
</verse>

<verse>
<line>720. பாரெழுந் நதியெழும் மலையெழும் மலைவயிற்</line>
<line>		படுவெழுந் நடுவெழுங் கடலெழும் பகுவிதக்</line>
<line>	காரெழும் மினலெழும் மெனவருங் கனலெழக்</line>
<line>		கண்டுமே ருவரையிற் கடவுள்கங் கைவிடவே.</line>
</verse>

<verse>
<line>721. மேல்விசும் புடையவுங் கீணிலங் கரையவு</line>
<line>		மிடைவிலங்கலிறவுங் குலவிலங்கலெவையுங்</line>
<line>	கால்பறிந் திளகவுங் கடல்சுரந் தொழுகவுங்</line>
<line>		கடவுள்யாறுபதினா லுலகமுங் கவ்வவே.</line>
</verse>

<verse>
<title>வேறு</title>
</verse>

<verse>
<line>722. அப்பெரும்புனலி லிவ்வரி வராகவுருவிட்</line>
<line>		டாமை யாயுல களந்தவாடி வாயதுவும்விட்</line>
<line>	டொப்பரும்பழைய சேல்வடிவு கொள்ளவிறையோ</line>
<line>		னொருசுறாவடிவு கொண்டெதி ருடன்றுகளவே.</line>
</verse>

<verse>
<line>723. பூத மைந்துமிரு கோளும்யய மானனுமெனப்'</line>
<line>		புகலு மெங்களை விழுங்குக புகுந்துனதுடற்</line>
<line>	பேத மைந்தமளி யுந்தெளியு மோதமுமுடன்</line>
<line>		பின்னு மன்னுயிரு முண்டுயி ருயப்பெறுதுமே.</line>
</verse>

<verse>
<line>724. கொண்டு வாபொர விறப்பன பிறப்பினிவிடவாய்</line>
<line>		கொய்த கொய்தநின் முடிப்பழைய கோவைகுறியாய்</line>
<line>	தண்டு வாள்வளை தனுத்திகிரி யென்னுமொருநிற்</line>
<line>		றவிரு மைம்படையு மையதிரி யத்தருதுமே.</line>
</verse>

<verse>
<line>725. என்று மேருதர னைம்படையு மீயநெடியோ</line>
<line>		னெறிய வூதைவிழ மோதிவர வெய்யமழுவாள்</line>
<line>	ஒன்று மேயவை யனைத்தையு மொருக்கநெடியோ</line>
<line>		னுள்ள ழித்துதலை யைச்சிலையில் வைத்துளையவே.</line>
</verse>

<verse>
<line>726. விதைக்கு மப்பகழி விற்பொருநன் வைத்தமுடியான்</line>
<line>		மிகவ ளைந்துருகை போய்நெகிழ விண்ணுறநிமிர்ந்</line>
<line>	துதைக்கு மத்தலை யெழுந்துருகை கவ்வியதுவா</line>
<line>		னுற்ற சந்த்ரனையும் ராகுவையு மொக்குமெனவே.</line>
</verse>

<verse>
<line>727. இன்ன வாறமரர் யாகபல முண்டபடியென்</line>
<line>		றிரைவி யைத்தொழு திருந்தழுத பேய்க்கிதனைநீ</line>
<line>	சொன்ன வாறழகி தென்றருளி வென்றருளுமத்</line>
<line>		தொல்லை நாயகனை நாயகி நினைந்துதொழுதே.</line>
</verse>

<verse>
<title>9. கூழடுதலும் இடுதலும்</title>
</verse>

<verse>
<line>728. எண்ணு தற்கரிய கூளிபுடை சூழவிடையோன்</line>
<line>		யாக சாலைபுக வான்மிசை யெழுந்தருளியெங்</line>
<line>	கண்ணு தற்கடவுள் வெண்றகள மென்றுமுடியக்</line>
<line>		கட்டு ரைப்பதென நின்றிறைவி கண்டருளியே.</line>
</verse>

<verse>
<line>729. சுமக்கு நாகநம தாதலி னதற்கினிமுதற்</line>
<line>		சுரர்பி ணத்தொகை சுமப்பத்ரி தாகுமவைகொண்</line>
<line>	டெமக்கு நீர்கடிது கூழமிடு நென்றலுமகிழ்ந்</line>
<line>		தியாளி யூர்திமுது கூளிக ளெனைப்பலவுமே.</line>
</verse>

<verse>
<title>கூழடுதல்</title>
</verse>

<verse>
<line>730. மலைகளுண் மறுவே றுண்ட</line>
<line>		மலைகளும் வான யானைத்</line>
<line>	தலைகளு மடுப்புக் கொள்ளீர்</line>
<line>		கடுப்பிலத் தாழி யேற்றீர்.</line>
</verse>

<verse>
<line>731. அழித்தன கற்பந் தோறுந்</line>
<line>		தொடுத்தன நகுசி ரத்திற்</line>
<line>	கழிந்தன கபால மாலை</line>
<line>		குருதியிற் கழுவிக் கொள்ளீர்.</line>
</verse>

<verse>
<line>732. இரவிகள் பல்லுந் தத்த</line>
<line>		மீரறு தேரி லவ்வேழ்</line>
<line>	புரவிகள் பல்லுங் குத்திக்</line>
<line>		துகளறப் படைத்துக் கொள்ளீர்.</line>
</verse>

<verse>
<line>733. வானவர்  பல்லும் வானோர்</line>
<line>		மன்னவர் பல்லு மெல்லாத்</line>
<line>	தானவர் பல்லுந் தீட்டி</line>
<line>		யரிசியாச் சமைத்துக் கொள்வீர்.</line>
</verse>

<verse>
<line>734. செருமுடி சுரேச ரோடு</line>
<line>		த்ரிவிக்ரமன் வீழ வீழ்ந்த</line>
<line>	பெருமுடி யுரல்க ளாகப்</line>
<line>		பிறங்கிய விரிசி பெய்யீர்.</line>
</verse>

<verse>
<line>735. அசலமே யனைஅய திக்கி</line>
<line>		லானைக்கோ டனைத்தும் பொற்பூண்</line>
<line>	முசலமே யாக முப்பத்</line>
<line>		திரண்டையு முறித்துக் குத்தீர்.</line>
</verse>

<verse>
<line>736. எத்திசை யானை யீரெண்</line>
<line>		செவிகளுஞ் சுளகா யிண்டக்</line>
<line>	குத்திய வரிசி யெல்லா</line>
<line>		முரியறக் கொழிக்க வாரீர்.</line>
</verse>

<verse>
<line>737. இற்றைநா ளமரர் சோரி</line>
<line>		திணுங்கிய தின்னம் பெய்ய</line>
<line>	அற்றைநாட் குருதி பெய்த</line>
<line>		முகில்களை யழைத்துக் கொள்வீர்.</line>
</verse>

<verse>
<line>738. தனித்தனி வயிறு வீங்கக்</line>
<line>		குடித்துட றடித்தீர் நீரும்</line>
<line>	இனித்தனித் திங்கு மெங்கும்</line>
<line>		பிணமலை யருவி பெய்யீர்.</line>
</verse>

<verse>
<line>739. தாங்குகைக் குரிய வானைத்</line>
<line>		தடவரை யருவிச் சோரி</line>
<line>	வாங்குகைத் துருத்தி கொண்டம்</line>
<line>		மிடாக்களிற் சொரிய வாரீர்.</line>
</verse>

<verse>
<line>740. துளிபடு கடாயா னைக்கைத்</line>
<line>		துணிபடு சோரி வாரி</line>
<line>	முளிபடு முடம்பின் முன்னைப்</line>
<line>		பொரிவற மூழ்கி யேறீர்.</line>
</verse>

<verse>
<line>741. தேனிண ரலங்கன் மெளலித்</line>
<line>		தேவர்தா னவரு டம்பிற்</line>
<line>	றூநிண வெள்ளைக் கோவை</line>
<line>		யெடுத்தெடுத் தரையிற் சுற்றீர்.</line>
</verse>

<verse>
<line>742. கருதியுந் தவிர யாகத்</line>
<line>		தொடங்கிய சுரேசர் தங்கள்</line>
<line>	குருதியின் குழம்பு கொண்டு</line>
<line>		குங்குமச் செச்சை கொட்டீர்.</line>
</verse>

<verse>
<line>743. குடர்முடிசெறியக் கட்டிக்</line>
<line>		கோவையாச் சேர்த்துத் தேவர்</line>
<line>	சுடர்முடி கடக சூத்ர முடம்பெலாந்</line>
<line>		தொடக்கிக் கொள்வீர்.</line>
</verse>

<verse>
<line>744. யாமினி யுண்ணுங் கூழிற்</line>
<line>		கீரலை யிட்டு வைத்துத்</line>
<line>	தாமரை மொட்டிற் செய்த</line>
<line>		தனிப்பெருஞ் சூட்டுக் கட்டீர்.</line>
</verse>

<verse>
<line>745. அரகள வநந்த கோடி</line>
<line>		யசோருள வமர ரிட்ட</line>
<line>	முரகள முகுந்தன் மூங்கிற்</line>
<line>		சார்ங்கமுண் டவற்றின் முட்டீர்.</line>
</verse>

<verse>
<line>746. எள்ளிவாய் மடங்கிக் கைக</line>
<line>		விழந்தெரி கரிந்து போன</line>
<line>	கெரள்ளிவாய்ப் பேயை மாட்டி</line>
<line>		யவற்றிலே கொளுத்திக் கொள்வீர்.</line>
</verse>

<verse>
<line>747. இருந்தலை யுலைக ளெல்லாம்</line>
<line>		பொங்கின துங்க யானைப்</line>
<line>	பெருந்தலை வாரி வைத்த</line>
<line>		வரிசிகள் பெய்ய வாரீர்.</line>
</verse>

<verse>
<line>748. எருவையும் பருந்து மோச்சித்</line>
<line>		தக்கனார் யாக சாலைச்</line>
<line>	கருவையுந் தோளுங் கொண்டு</line>
<line>		துடுப்பெனத் துழாவிக் கொள்வீர்</line>
</verse>

<verse>
<line>749. மாறின மடுத்த செந்தீ</line>
<line>		மலைச்சிற கடுத்துப் பற்றி</line>
<line>	யேறின மிடாக்கள் வெந்து</line>
<line>		சமைத்தன விழியப் பற்றீர்.</line>
</verse>

<verse>
<line>750. சேத்தன துர்தி கொண்டான்</line>
<line>		றிருநெற்றிக் கண்ணில் வெந்து</line>
<line>	பூத்தன மலைகள் வாங்கிப்</line>
<line>		புண்டரம் புடையிற் றிட்டீர்.</line>
</verse>

<verse>
<title>பேய்கள் காளிக்குக் கூழ் படைத்தல்</title>
</verse>

<verse>
<line>751. எரிகல னிமைக்குங் கோலத்</line>
<line>		திறைமக ளமுது செய்யப்</line>
<line>	பரிகலம் பண்டை யண்ட</line>
<line>		கபாலமாம் பற்றி வாரீர்.</line>
</verse>

<verse>
<line>752. பிரமனைப் பண்டு பெற்ற</line>
<line>		பெருந்திரு வழுது செய்யப்</line>
<line>	பரமனைப் பாடிப் பாடிப்</line>
<line>		போனகம் படைக்க வாரீர்.</line>
</verse>

<verse>
<line>753. சாகினி கணமு முள்ள</line>
<line>		சம்மினி கணமு மெல்லாம்</line>
<line>	யோகினி கணமும் பக்கத்</line>
<line>		துண்பன வூட்ட வாரீர்.</line>
</verse>

<verse>
<line>754. கொடுத்தத னமுதந் தானுங்</line>
<line>		கொண்டன ளிறைவி யிண்டுப்</line>
<line>	படுத்த பாவாடை யோடும்</line>
<line>		பரிகலம் பேரப் பற்றீர்.</line>
</verse>

<verse>
<line>755. கமலத்தோன் கையில் வீழ்ந்த</line>
<line>		கமண்டல நிறைந்த தண்ணீர்</line>
<line>	அமலைக்குத் தூய தெண்ணீ</line>
<line>		ராரமு தாக்கி வாரீர்.</line>
</verse>

<verse>
<line>756. கதக்களி றெட்டும் பட்ட</line>
<line>		களந்தொறுங் கும்பஞ் சாய்ந்த</line>
<line>	மதப்புதுத் தயிலந் தோய்ந்த</line>
<line>		மணிமுத்துப் பிளவுங் கொள்வீர்.</line>
</verse>

<verse>
<line>757. உந்தியின் முகுந்தன் முன்னா</line>
<line>		ளுயிர்த்ததா மரையு மீரைந்</line>
<line>	திந்திர தருவுந் தந்த</line>
<line>		விலைச்சுரு ளெடுத்துக் கட்டீர்.</line>
</verse>

<verse>
<line>758. மாயவன் சங்கு சுட்டு</line>
<line>		வடித்தநீ றடைக்கா யோடு</line>
<line>	நாயகி யமுது செய்ய</line>
<line>		நாமினிப் படைக்க வாரீர்.</line>
</verse>

<verse>
<line>759. என்றுகொண் டலகை யெல்லா</line>
<line>		மிமையவர் பிணங்கொண் டீண்டக்</line>
<line>	குன்றுகொண் டட்ட கூழ்தங்</line>
<line>		குடிமுறை பகுக்க வாரீர்.</line>
</verse>

<verse>
<title>கூழிடுதல்</title>
</verse>

<verse>
<line>760. அண்டர் பொன்னெயில் வட்டமுட்ட</line>
<line>		நெருங்கு பேய்பெற வட்டகூழ்</line>
<line>	குண்டர் பொன்னெயில் வட்டமுட்ட</line>
<line>		குகந்த ளந்து கொடுக்கவே.</line>
</verse>

<verse>
<line>761. மைந்து கூர்நில நீர்நெ ருப்பு</line>
<line>		வழங்கு மாருத மாகமென்</line>
<line>	றைந்து பூதமு முண்ண வுண்ண</line>
<line>		வடுங்க ளோடு மிடுங்களே.</line>
</verse>

<verse>
<line>762. நீல முண்ட முகிற்கு ழாமென</line>
<line>		நின்ற பேயிது நிற்பதோர்</line>
<line>	ஞால முண்ட வயிற்றி ரைப்பை</line>
<line>		யடக்கு மின்க ண்டக்கவே.</line>
</verse>

<verse>
<line>763. நின்ற லைப்பன நான்மு கத்தொரு</line>
<line>		பேய் மடுப்ப நிணம்பெய்கூழ்</line>
<line>	தன்ற லைப்பொலி மண்டை யிற்சாத</line>
<line>		கோடி சாடிகள் சாய்மினே.</line>
</verse>

<verse>
<line>764. பேயி ரங்க விரந்து வந்த</line>
<line>		திருந்த கூழது பெய்ம்மினோ</line>
<line>	ஆயி ரங்க ணிழந்த பேயை</line>
<line>		யருத்தி தீர விருத்தியே.</line>
</verse>

<verse>
<line>765. எயிறி ழந்து நிலாவி ழந்தும்</line>
<line>		விலாவி ழந்து மமர்ந்தபேய்</line>
<line>	வயிறி ழந்தில வின்ன மின்ன</line>
<line>		மருந்து கூழ்புக வார்மினோ.</line>
</verse>

<verse>
<line>766. இழந்த வான்விழி போன பின்னை</line>
<line>		யிறந்து வந்து பிறந்தபேய்</line>
<line>	அழுந்த வாயி லநந்த கோடி</line>
<line>		மடாவெ டுத்து மடுக்கவே.</line>
</verse>

<verse>
<line>767. நெய்யி ழந்தது பாலி ழந்தது</line>
<line>		நீள்பெரும்பசி தீருமோ</line>
<line>	கையிழந்து பிறந்த பேயிது</line>
<line>		கோடி சாடி கவிழ்க்கவே.</line>
</verse>

<verse>
<line>768. மாய்கு டிக்கு நிமித்த மாக</line>
<line>		மகட்பெ றுந்திரு மாமடிப்</line>
<line>	பேய்கு டிக்க வநேக கோடி</line>
<line>		மடாவெ டுத்தவை பெய்ம்மினோ.</line>
</verse>

<verse>
<title>வேறு</title>
</verse>

<verse>
<line>769. இதுபகு வாய்த்து வயிற்றினி</line>
<line>		லிப்பே குலகு விழங்குபேய்</line>
<line>	மதுவொடு மண்ட கடத்தடா</line>
<line>		மடுக்க வெடுக்க வெடுக்கவே.</line>
</verse>

<verse>
<title>வேறு</title>
</verse>

<verse>
<line>770. அடிக்க வடிக்கவெழு மருகப் பேய்கட்கும்</line>
<line>		புத்தப் பேய்கட்கு மண்ட கபாடக்கூழ்</line>
<line>	பிடிக்கப் பிடிக்கவுற்ம் வயிறு பழம்ப்படியே</line>
<line>		பெருருக பெருகுகுகவாய் பருகுக பருகுகவே.</line>
</verse>

<verse>
<title>வேறு</title>
</verse>

<verse>
<line>771.	இப்படிக் கழுத்தே கிட்ட</line>
<line>		விரைந்தபுத் தப்பேய் மண்டை</line>
<line>	கைப்பிடி பெறும்பே யோடு</line>
<line>		கலந்தொரு கலந்தி லூண்டே.</line>
</verse>

<verse>
<line>பேய்கள் கூழ்குடித்து வாழ்த்தல்</line>
<title>வேறு</title>
</verse>

<verse>
<line>772. தாராக வண்டத் தொடுத்தணிந்தார்</line>
<line>		தமக்கிடம் போதத் தமனியந்தாற்</line>
<line>	சீராச ராசீச் சரஞ்சமைத்த</line>
<line>		தெய்வப் பெருமாளை வாழ்த்தினவே.</line>
</verse>

<verse>
<line>773. நீடிய வெண்டிசை நிழல்வாய்ப்பு</line>
<line>		நேரிய தெக்கிண மேருவென்னப்</line>
<line>	பீடிகை தில்லை வனத்தமைத்த</line>
<line>		பெரிய பெருமாளை வாழ்த்தினவே.</line>
</verse>

<verse>
<line>774. பிரட்டனை யேபட்டங்கட்டழித்துப்</line>
<line>		பேரே ழரையிலக் கம்புரக்க</line>
<line>	இரட்டனை யேயட்டங் கட்டிவிட்ட</line>
<line>		விராசகம் பீரனை வாழ்த்தினவே.</line>
</verse>

<verse>
<line>775. அழிவந்த வேதத்தழிவுமாற்றி</line>
<line>		யவனி திருமகட் காமன்னர்</line>
<line>	வழிவந்த சுங்கத் தவிர்த்தபிரான்</line>
<line>		மகன்மகன் மைந்தனை வாழ்த்தினவே.</line>
</verse>

<verse>
<line>776. செருத்தந் தரித்துக் கலிங்கரோடத்</line>
<line>		தென்றமிழ்ழ்த் தெய்வப் பரணிகொண்டு</line>
<line>	வருத்தந் தவிர்த்துல காண்டபிரான்</line>
<line>		மைந்தற்கு மைந்தனை வாழ்த்தினவே.</line>
</verse>

<verse>
<line>777. முன்றிற் கிடந்த தடங்கடல்போய்</line>
<line>		முன்னைக் கடம்புகப் பின்னைத்தில்லை</line>
<line>	மன்றிற் கிடங்கண்ட கொண்டன்மைந்தன்</line>
<line>		மரகத மேருவை வாழ்த்தினவே.</line>
</verse>

<verse>
<title>10. களங்காட்டல்</title>
</verse>

<verse>
<line>778. ஒருமருங்குடைய மூலநாயகியொ</line>
<line>		டொற்றை வெள்ளைவிடை யூர்திமேல்</line>
<line>	இருமருங்குமறை தொழவெழுந்தருளி</line>
<line>		யிராசராசபுரி யிசரே.</line>
</verse>

<verse>
<line>779. யாக நாயகரொ டேனை வானவ</line>
<line>		ரிறந்து பேயொடு பிறந்தவா</line>
<line>	றாக நாயகி தனக்குணர்த்திவர</line>
<line>		வன்னை முன்னைமுனி வாறியே.</line>
</verse>

<verse>
<line>சிவபெருமான் தேவிக்குப் பேய்களைக்காட்டல்.</line>
</verse>

<verse>
<line>வேறு</line>
</verse>

<verse>
<line>780. நெடுநில மளந்து கொள்ள</line>
<line>		வளர்ந்துதா ணீட்டு நாளில்</line>
<line>	இடுநிழல் போல் நின்ற</line>
<line>		விப்பெரும் பேயைப் பாராய்.</line>
</verse>

<verse>
<line>781. பொன்முக மொன்று பண்டு</line>
<line>		போனது புகுதப் பொன்றிந்</line>
<line>	தன்முக மைந்தும் பெற்ற</line>
<line>		சதுமுகப் பேயைப் பாராய்.</line>
</verse>

<verse>
<line>782. அங்குநின் றேவல் செய்யு</line>
<line>		மாமரரே யலகை யாக</line>
<line>	விங்குநின் றரசு செய்யு</line>
<line>		மிந்திரப் பேயைப் பாராய்.</line>
</verse>

<verse>
<line>783. விடுபுகை புயிரா தேங்கி</line>
<line>		வெங்கன லுயிர்ப்ப வென்றும்</line>
<line>	படுபுகை வடிவங் கொண்ட</line>
<line>		பாவகப் பேயைப் பாராய்.</line>
</verse>

<verse>
<line>784. விசும்பினு நிலத்து முள்ள</line>
<line>		வுயிர்பண்டு விழுங்கி யின்று</line>
<line>	பசுந்தசை மிசையா நின்ற</line>
<line>		தென்றிசைப் பேயைப் பாராய்.</line>
</verse>

<verse>
<line>785. தன்னகத் தங்கி யிங்கு</line>
<line>		வயிற்றுத்தீ யாகத் தாங்கும்</line>
<line>	பன்னகப் பாசம் வீசுங்</line>
<line>		குடதிசைப் பேயைப் பாராய்.</line>
</verse>

<verse>
<line>786. தன்னகத் தங்கி யிங்கு</line>
<line>		வயிற்றுத்தீ யாகத் தாங்கும்</line>
<line>	பன்னகப் பாசம் வீசுங்</line>
<line>		குடதிசைப் பேயைப் பாராய்.</line>
</verse>

<verse>
<line>787. வாயுவே யாய பண்டை</line>
<line>		வடிவுற மாய்ந்து பெற்ற</line>
<line>	ஆயுவே வடிவ மான</line>
<line>		வழிபசிப் பேயைப் பாராய்.</line>
</verse>

<verse>
<line>788. வளரிளங் கொங்கை மங்கை</line>
<line>		நங்கையர் வனப்புக் கேற்ற</line>
<line>	கிளரொளி வனப்புத் தீர்ந்த</line>
<line>		கெடுமதிப் பேயைப் பாராய்.</line>
</verse>

<verse>
<line>789. கருத்துப்பே யேற வேறுங்</line>
<line>		கழிபசி யுழப்ப தோர்முத்</line>
<line>	தெருத்துபே யேறி நின்ற</line>
<line>		விப்பெரும் பேயைப் பாராய்.</line>
</verse>

<verse>
<line>790. விடைவல னேந்தி வந்து</line>
<line>		வெண்பிறை மலைந்து சூலப்</line>
<line>	படைவல னேந்தி மாய்ந்த</line>
<line>		பதினொரு பேயைப் பாராய்.</line>
</verse>

<verse>
<line>791. ஓரிரு சுடரு மன்ன</line>
<line>		யோகமே போகப் போகா</line>
<line>	ஈரிரு மறையுந் தேடு</line>
<line>		மெண்பெரும் பேயைப் பாராய்.</line>
</verse>

<verse>
<line>792. ஆயுநூ லாயும் பண்டென்</line>
<line>		றரும்பசி நோய்க்குத் தங்கள்</line>
<line>	பேயுநூல் கேட்க நின்ற</line>
<line>		மருத்துவப் பேயைப் பாராய்.</line>
</verse>

<verse>
<line>793. அண்ங்குதீ வணங்கா யாக</line>
<line>		வன்றிகழ்ந் ததற்குத் தானே</line>
<line>	வணங்கியே நன்று நிற்கு</line>
<line>		மாமடிப் பேயைப் பாராய்.</line>
</verse>

<verse>
<title>தேவி முனிவுதீர்ந்து அருளிச்செய்தல்</title>
</verse>

<verse>
<line>794. அவ்வகை யிறைவர் காட்ட</line>
<line>		வமரர்மேன் முனிவு தீர்ந்து</line>
<line>	மைவகை நெறிந்த கூந்தன்</line>
<line>		மலைமக ளருளிச் செய்வாள்.</line>
</verse>

<verse>
<line>795. நின்முத லாகத் தோன்று</line>
<line>		நெடியமான் முதலா வுள்ளோர்</line>
<line>	என்முத லாக மாய்தற்</line>
<line>		குறுவதெ னிறைவ வென்றே.</line>
</verse>

<verse>
<line>796. தணிந்தரு ளிறைவ யானுந்</line>
<line>		தணிந்தன னென்று தாவிற்</line>
<line>	பணிந்தன விறைவி நிற்கப்</line>
<line>		பரனும்புன் முறுவல் செய்தே.</line>
</verse>

<verse>
<title>சிவபெருமான் தக்கனுக்கு மோத்தைத்தலையருளல்</title>
</verse>

<verse>
<line>797. மிக்கன பேசித் தம்மை</line>
<line>		வேள்வியி லிகழ்ச்சி செய்த</line>
<line>	தக்கனை முதிஅ மோத்தைத்</line>
<line>		தலைபெற வருளிச் செய்தே.</line>
</verse>

<verse>
<title>தேவர்கட்கு உயிருமுடம்பும் அவர்கள் பதவிகளும் அருளல்</title>
</verse>

<verse>
<line>798. ஒழித்தவா நவர்கட் கெல்லா</line>
<line>		முயிருந்தம் முடம்பு நல்கி</line>
<line>	அழித்தவா னுலகுத் தங்கள்</line>
<line>		பதங்களு மளிப்பக் கொண்டே.</line>
</verse>

<verse>
<title>தேவர்கள் வாழ்த்தி விடைபெற்றுச் செல்லுதல்</title>
</verse>

<verse>
<line>799. குலங்கொண்ட வமர ரெல்லாங்</line>
<line>		குனிசிலை வீரன் றன்னை</line>
<line>	வலங்கொண்டு விடையுங் கொண்டு</line>
<line>		போயினார் வாழ்த்தி வாழ்த்தி.</line>
</verse>

<verse>
<title>11. வாழ்த்து</title>
</verse>

<verse>
<line>800. இஞ்சியின் வல்லுரு மேறு கிடந்த</line>
<line>	வஞ்சியின் வாகை புனைந்தவன் வாழியே.</line>
</verse>

<verse>
<line>801. வில்லவன் வில்லமர் கோதை விடாதவோர்</line>
<line>	வல்லவன் வல பிரான்மகன் வாழியே.</line>
</verse>

<verse>
<line>802. குறுகு முடுக்கு மிலங்கு பொலன்கொடி</line>
<line>	மறுகும்வகுத்த பிரான்மகள் வாழியே.</line>
</verse>

<verse>
<line>803. தென்னவர் தென்மது ராபுரி சீறிய</line>
<line>	மன்னவர் மன்னன் வரோதயன் வாழியே.</line>
</verse>

<verse>
<line>804. தில்லை வனங்கட வுள்செறி கற்பக</line>
<line>	வல்ல வனம்பெற வந்தவன் வாழியே.</line>
</verse>

<verse>
<line>805. மீனவன் மீனவ ரேக விடுபடை</line>
<line>	மானதன் மான பராயணன் வாழியே.</line>
</verse>

<verse>
<line>806. ஆனிரை தந்ததி லைம்மடி மும்மத</line>
<line>	மானிரை தந்த பிரான்மகன் வாழியே.</line>
</verse>

<verse>
<line>807. பார்தரு வார்பெற மாறில் பசும்பொற்</line>
<line>	றேர்தரு மாபா கேசரி வாழியே.</line>
</verse>

<verse>
<line>808. கூட மெடுத்த குளத்தொடு கோபுர</line>
<line>	மாட மெடுத்த பிரான்மகன் வாழியே.</line>
</verse>

<verse>
<line>809. கோயின்மு னேழ்நிலை கொண்டதோர் கோபுர</line>
<line>	வாயில் வகுத்த பிரான்மகன் வாழியே.</line>
</verse>

<verse>
<line>810. எண்டரு திக்கினிற் றில்லையி னெல்லையின்</line>
<line>	மண்டபம் வைத்த பிரான்மகன் வாழியே.</line>
</verse>

<verse>
<line>811. இறையவ விராச புரந்தர னேத்தும்</line>
<line>	மறையவர் வாழி மகத்தவர் வாழியே.</line>
</verse>

<verse>
<title>வேறு</title>
</verse>

<verse>
<line>812. வாழிய மண்டல மால்வரை</line>
<line>		வாழி குடக்கோழி மாநகர்</line>
<line>	வாழிய வற்றாத காவிரி</line>
<line>		வாழி வரராச ராசனே.</line>
</verse>

<verse>
<title>வேறு</title>
</verse>

<verse>
<line>813. ஆக்கம் பெருக்கு மடந்தை வாழியே</line>
<line>		ஆற்றங் கரைச்சொற் கிழத்தி வாழியே</line>
<line>	கோக்குத் தமிழ்க்கொத் தனைத்தும் வாழியே.</line>
<line>		கூத்தன் கவிச்சக்ர வர்த்தி வாழியே.</line>
</verse>

<verse>
<line>814. வாழி தமிழ்ச்சொற் றெரிந்த நூற்றுறை</line>
<line>		வாழி தமிழ்க்கொத் தனைத்து மார்க்கமும்</line>
<line>	வாழி திசைக்கப் புறத்து நாற்கவி</line>
<line>		வாழி கவிச்சக் ரவர்த்தி கூத்தனே.</line>
</verse>

<verse>
<line>***********</line>
</verse>

<verse>
<line>சீர்குரோ தனவருடம் புரட்டாசி முதற்றேதித்</line>
<line>	திங்க டன்னிற்</line>
<line>காருலவுஞ் சீகாழிச் சிதம்பரநா தம்முனிவன்</line>
<line>	கருணை யாலே</line>
<line>பார்புகழுந் தெட்சயா கப்பரணி தனைமுகித்துப்</line>
<line>		பதியி னன்றாய்</line>
<line>ஏர்பெறுந்தா ழிசைகளையு முரைதனையும் பெரியதம்பி</line>
<line>	யெழுதி னானே.</line>
</verse>

<verse>
<title>மூலமட்டும் உள்ள ஏட்டுச்சுவடிகளில் அதிகமாகக் காணப்பட்ட தாழிசைகள்.</title>
</verse>

<verse>
<line>1. அருண்ஞான குருபீட மடிவாழி யடியார்க</line>
<line>	ளடிவாழியென்</line>
<line>  இருளான பழிமாற விகலான வழிமாற</line>
<line>	விசைவாழியே.</line>
</verse>

<verse>
<line>2. எரிபுக் கனவே டிறைவன் சடையிற்</line>
<line>	பிறையொத்தன வைகையிலிட்டனவுங்</line>
<line>   கிரிபுக் கனவக் கிரிசூ ழருவி</line>
<line>	கிழியாத கடங்கள் கிழித்தறவே.</line>
</verse>

<verse>
<line>3. குடந்தையம் பதியிற் கோதிலாப் பெரிய</line>
<line>   மடந்தனில் வாழ்வீர மயேச்சுரர் வாழியே.</line>
</verse>

<verse>
<line>4. மலையாழி கடந்த பெரும்புகழ்</line>
<line>	மகட்காயவன் வஞ்சியன் மனுமுறை</line>
<line>   தலையாழி கடந்த பெருந்தகை</line>
<line>		தவிராத புரந்தரன் வாழியே.</line>
</verse>

</document>
