pATal61
pATal60.html
pATal61.html
pATal62.html
ஏரெழுபது
மகாகவி கம்பர்
61. நெற்பொலிச் சிறப்பு.
61. நெற்பொலிச் சிறப்பு.
விற்பொலியும் பெருங்கீர்த்தி வேளாளர் விளைவயலில்
நெற்பொலியுண் டாமாகில் நிலமகளும் பொலிவுண்டாம்
பொற்பொலிவுண் டாமுலகம் புகப்பொலிவுண் டாம்புலவோர்
சொற்பொலிவுண் டாங்கலியின் துயர்பொலிய மாட்டாதே.
(இ—ள்.) வில் பொலியும் — ஒளியோடு விளங்குகின்ற, பெருங் கீர்த்தி — மிக்கசீர்த்தியையுடைய, வேளாளர் — வேளாளரின், விளை வயலில் — (நெற்பயிர்) விளைகின்ற வயலிலே, நெல் பொலி — நெல்லின் குப்பை, உண்டாம்ஆகில் — உளதாகுமானால், நிலம் மகளும் — பூமி - தேவிக்கும், பொலிவு — விளக்கமானது, உண்டாம்—; பொன் பொலிவு — பொன்னின்விளக்கமும், உண்டாம்—; உலகம் — உலகத்தில், புக — உணவின், பொலிவு—, உண்டாம்—; புலவோர் — வித்துவான்களின், சொல் —சொல்லுக்கும்[கவிக்கும்], பொலிவு—, உண்டாம்—; கலியின் — வறுமையின், துயர் — தொந்தரவு, பொலிய மாட்டாது — தோன்றாது; (எ - று.)
வயலில் பொலிநெல் உண்டாமாயின், உண்டாமாயின், நிலமகட்பொலிவு முதலிய பொலிவுண்டாக, வறுமைக்குமாத்திரம் பொலிவு உண்டாகா தென்க: பொலி நெல் உண்டாகக் கலிதொலையு மென்றவாறு. பொலி — தூற்றாத நெற்றிரள். உணவு என்னும் பொரு ளுள்ள புகா என்னுஞ்சொல் குறியதன்கீழ் ஆக்குறுகி, “புக” என வந்ததென்க. புக என்பதற்கு — எங்கும் எனினுமாம். “புகழ்ப் பொலிவு” எனவும் பாடம். — (61)