pATal62
pATal61.html
pATal62.html
pATal63.html
ஏரெழுபது
மகாகவி கம்பர்
62. நெற்குவித்தற் சிறப்பு.
62. நெற்குவித்தற் சிறப்பு.
தன்னிகரொன் றொவ்வாத தலம்வளர்க்கும் பெருக்காளர்
மன்னுபெருங் களத்தினிடை மாருதத்திற் றூற்றியிடுஞ்
செந்நெல்லைப் பொலிவாலே செம்பொன்மலை யெனக்குவித்தே
அந்நெல்லின் பொலியாலே அவனியுயிர் வளர்ப்பாரே.
(இ—ள்.) தன் நிகர் — (தனக்கு) உவமையாக, ஒன்று — ஒரு பொருளும், ஒவ்வாத — இராத, தலம் — இந்நிலவுலகத்தை, வளர்க்கும் — (தம்முயற்சியால்) செழிப்போடு வளரச்செய்கின்ற, பெருக்கு ஆளர் — செல்வப் பெருக்கினை யுடைய வேளாளர், மன்னு — பொருந்திய, பெருங் களத்தினிடை — பெரிய நெற்களத்திலே, மாருதத்தில் — காற்றின் உதவியினால், தூற்றியிடும்—, செந்நெல்லை—, பொலிவால் — (தனது இனிய) தோற்றத்தினால், செம் பொன் மலை என — (இது) செம்பொன்னினாலியன்ற மேருமலை யென்று (கண்டோர்) சொல்லும்படி, குவித்து—, அ நெல்லின் பொலியாலே — அந்தநெற் குவியலால், அவனி — பூமியிலுள்ள பிராணிகளை, உயிர் வளர்ப் பார் — உயிர் வளரச்செய்வார்; (எ - று.)
“தன்னிகரொன்றொவ்வாத” என்பது — தலத்துக்கு அடைமொழி: பெருக்காளர் எனப்பன்மை வருதலால், அச்சொல்லுக்குக் கூட்டலாகாது; நெல்லைக் குவிப்பது உலகத் துயிர்களை வளர்ப்பதற்காகவே என வேளாளரின் தன்மையைக் கூறியவாறு. — (62)