◀ Prev📑 Contents📖 3D Flipbook
இரா. நாகசாமி பொம்மை பழைய பொம்மை தமிழர் பண்பாட்டில்
காந்தாரப் பண்பாட்டில் | பொருளடக்கம் | அகெடமி

உருட்டு சட்டி பொம்மையிது உருண்டு உருண்டு ஆடுமிது தஞ்சாவூர் ரயிலிடியில் தம்பி பாப்பா அழுதபோது சின்ன அத்தான் வாங்கி தந்த சீரான பொம்மையிது
நவராத்திரி கொலு
நவராத்திரி கொலு
நவராத்திரி கொலு
நவராத்திரி கொலு
நவராத்திரி கொலு
நவராத்திரி கொலு
என்று நம் தமிழ் நாட்டில் குழந்தைகள் அனைவருக்கும் ஒரு பாட்டுத் தெரியும். ஏன் நம் தமிழ் நாட்டில்தான் பொம்மைக்கென்று ஒரு தனி விழாவே கொண்டாடுகிறோமே! இதுபோல் வேறு எங்கேயும் கிடையாது. ஒன்பது நாள் பொம்மைகளை அழகு அழகாகப் படிப்படியாக வைத்து அவைகளை அலங்கரித்து மகிழகிறோம். இவற்றிற்கு நவராத்திரி விழா என்று பெயர். தொட்டி கட்டி அதில் தண்ணீர் விட்டு மீன், நண்டு பொம்மைகளை எல்லாம் போட்டு விளையாடுவோம். சிறுமியர்கள் விசேஷமாக தினந்தினம் ஒரு வேஷம் போட்டுக் கொண்டு மற்றவர்களை அழைத்து வந்து தம் வீட்டுப் பொம்மைகளைக் காண்பிப்பார்கள். கடைசி நாளன்று கலைமளான சரஸ்வதியைப் பூஜித்போம். எவ்வளவு உற்சாகமான விழா. இது தமிழ் நாட்டுக்கே தனிப்பெருமை தரும் விழா. பழங்காலத் தமிழ் இலக்கியங்களைச் சங்க இலக்கியங்கள் என்று சொல்லுவோம். பல புலவர்கள் சங்கமாகக் கூடி தங்கள் பாட்டுக்களை அரங்கேற்றியதால் சங்க இலக்கியங்கள் என்று பெயர் பெற்றன. இவை இன்றைக்கு சுமார் 2000 வருஷங்களுக்கு முந்தியவை. இந்தக் காலத்தைச் சார்நதவர்கள்தான் ஔவ்வையார், திருவள்ளுவர் முதலிய பெரியவர்கள். அந்த சங்க இலக்கியங்களில் ஒரு நிகழச்சி வருகிறது. ஒரு தச்சன் தன் குழந்தைகளுக்கு நல்ல தேர் பொம்மை ஒன்று செய்து கொடுத்தானாம். அது மிகவும் நேர்த்தியாக செய்யப்பட்ட பொம்மை. அதை இழுத்துக் கொண்டு அந்த தச்சச் சிறுவன் வேகமாக ஓடினானாம். எவ்வளவு வேகமாக ஓடினாலும் அந்தத் தேர் கீழே விழாமல் உருண்டு ஓடிக்கொண்டே இருந்ததாம். இப்போது சில தேர் பொம்மைகளை வாங்கி இழுத்துப் பாருங்கள். கொஞ்ச தூரம் ஓடுவதற்குள் "தொப்" என்று விழுந்து விடும். பழங்காலத்தில் தமிழ் நாட்டில் அவ்வளவு சிறந்த பொம்மைகள் செய்யக்கூடிய திறைமைசாலிகள் இருந்தார்கள். இவர்கள் துணி, பசை, குச்சி முதலியவைகளை வைத்துக்கொண்டும் பொம்மை செய்வார்களாம். அக்காலத்தில் ஒரு நாட்டிலிருந்து பக்கத்து நாட்டு மீது படையெடுப்பார்கள். சில சமயம், மாடு, ஆடுகள் இவைகளை தூக்கொண்டு ஓடி விடுவார்கள். அப்போது அந்த ஊரில் உள்ளவர்கள் சப்தம் செய்வார்கள். "எங்கள் ஊரை எதிரிகளிடமிருந்து காப்பாற்றுகிறோம்" என்று சொல்லுவார்கள். சண்டை வந்தால் வீரமாகப் போர் புரிவார்கள். சில சமயம் வெற்றி பெருவார்கள். சில சமயம் போரில் வீர மரணம் அடைவார்கள். அப்போது அவர்களுடைய உருவத்தை கல்லில் பொம்மையாகச் செதுக்கி, அதை நட்டுவைத்து அவ்வூர் மக்கள் பூஜிப்பார்கள். இதற்கு "வீரக்கல்" என்று பெயர். ஒரு சமயம் ஒரு புலி ஊருக்குள் புகுந்து தொந்தரவு செய்தது. அப்போது ஒரு வீரன் அப்புலியுடன் சண்டை போட்டு அதைக் கொன்றான். அவனுக்கும் வீரக்கல் எடுத்திருக்கிறார்கள். இது போன்று வீரர்களுக்குக் கல் நடும் பழக்கம் நம் நாட்டில் இருந்தது என்று சங்க இலக்கியங்களிலிருந்து அறிகிறோம். பல வீரக்கற்கள் கிடைத்திருக்கின்றன.
மாமல்லபுரம் அர்ஜுனன் தவம் முழுக் காட்சி
மாமல்லபுரம் அர்ஜுனன் தவம் முழுக் காட்சி
சிவபெருமானும் அர்ஜுனன் தவமும்
சிவபெருமானும் அர்ஜுனன் தவமும்
அர்ஜுனன் தவம் புறிகின்ற காட்சி
அர்ஜுனன் தவம் புறிகின்ற காட்சி
இன்னும் தமிழ் நாட்டில் அதிகமாக தோண்டிப் பார்க்கவில்லை. அதனால் அந்தகாலத்து பொம்மைகள் எப்படி இருந்தன அன்று தெரியவில்லை. சுமார் 1300 வருஷங்களுக்கு முன்னர் காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு பல்லவர் என்ற மன்னர்கள் ஆண்டார்கள். அவர்கள் மலைகளை எல்லாம் குடைந்து குகைக் கோயில்கள் செய்திருக்கிறார்கள். அது மட்டுமா! மலைகளைக் கோயில்களாகச் செதுக்கியிருக்கிறார்கள. இங்கு பெரிய பாறை ஒன்றில் அழகிய சிற்பங்கள் செதுக்கியிருக்கிறார்கள். இது அர்ஜுன தவம் என்ற கதையைக் குறிக்கும். இங்கு பல மிருகங்களின் பொம்மைகள் இருக்கின்றன. பெரிய யானைகள் ஓடுவது போலவும் இருக்கின்றன. அதன் காலடியில் யானைக் குட்டிகள் விளையாடுவது ரொம்ப அழகாக இருக்கிறது.
யானைக் குடும்பம்
யானைக் குடும்பம்
யானைக் குட்டி
யானைக் குட்டி
யானைக் குட்டிகள்
யானைக் குட்டிகள்
யானைக் குடும்பம்
யானைக் குடும்பம்
யானைக் குடும்பமும் தவம் செய்யும் பூனையும்
யானைக் குடும்பமும் தவம் செய்யும் பூனையும்
அதற்குப் பக்கத்தில் ஒரு பூனை. திருட்டுப் பூனை. அதற்கு ஓடி எலிகளைப் பிடிக்க முடியவில்லை. அதனால் ஒரு தந்திரம் செய்தது. தபஸ் செய்ய ஆரம்பித்தது. முதலில் எலிகள் எல்லாம் அதன் பக்கத்தில் செல்ல பயப்பட்டன. பின்னால் அது ஒரு எலியையும் கொல்லாதாது கண்டு எல்லா எலிகளும் அதன் காலடியில் விளையாடின. ஏமந்த சமயம் பார்த்து எலிகளைக் "கபக்கென்று" பிடிக்க பூனை பொய் தபஸ் செய்கிறது.
அழகிய மான்
அழகிய மான்
அழகிய மான்கள்
அழகிய மான்கள்
சிங்கம்
சிங்கம்
மான் ஒன்று படுத்துக் கொண்டு மூக்கைத் தடவிக் கொடுக்கிறது. குரங்குகள் விளையாடுகின்றன. சிங்கங்கள் நிற்கின்றன. பக்கத்தில் குரங்கு ஒன்று மடியில் குட்டியை வைத்து இருக்கிறது. அதற்கு மற்றொரு மந்திக்குரங்கு பேன் பார்க்கிறது. இது மிகவும் நல்ல சிற்பம். இது போன்று அழகிய சிற்பங்கள் எல்லாம் மாமல்லபுரத்தில் உள்ளன. பல்லவர்களுக்குப் பின்னால் வந்த சோழர்கள் கோயில்களில் கடவுளகளின் பல உருவங்கள் செய்து வைத்தார்கள். இது போன்று பலநாட்டுப் பழங்கால பொம்மைகளைப் பற்றி தெரிந்து கொள்ளும்போது அந்நாட்டு மக்களின் பண்பாட்டையும் தெரிந்து கொள்ள முடிகிறது அல்லவா? இதுபோன்று எவ்வளவோ நாடுகள் இருக்கின்றன. எவ்வளவோ விதமான பொம்மைகள் இருக்கின்றன. அவற்றைப்பற்றி கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்து கொள்லாம்.
காந்தாரப் பண்பாட்டில் | பொருளடக்கம் | அகெடமி