Tamil Arts Academy (Volume 22) 14. பொய்கையின் சொல் மாலை இரா. நாகசாமி 2010-07-10
Article 13 | Contents | Article 15 | Home

பொய்கை ஆழ்வார் இடர் ஆழி நீங்க ஒர் அழகிய அகல் விளக்கேற்றுகிறர், images/IMG_3292.JPG வையம் தகளியா, வார் கடலே நெய் ஆக, வெய்ய கதிரோன் விளக்கு ஆக, செய்ய சுடர்-ஆழியான் அடிக்கே சூட்டினென் சொல்-மாலை- இடர்-ஆழி நீங்குகவே என்று. -- பொய்கை ஆழ்வார் உலகமே அகலாக (அகல் விளக்கு), கடலே நெய்யாக, சூரியன் விளக்காக, இடர் நீங்க பொய்கை ஆழ்வார் சூட்டிய சொல்மாலை என்றென்றும் வாடா மாலை. காலையை, கதிரவனை எவ்வளவு அழகாக, அனுபவித்து பாடியிருக்கறார்கள் நம் ஆழ்வார்கள் காலை எழுந்து உலகம் கற்பனவும், கற்று உணர்ந்த மேலைத் தலை மறையோர் வேட்பனவும், வேலைக்கண் ஓர் ஆழியான் அடியே: ஓதுவதும், ஓர்ப்பனவும்- பேர் ஆழி கொண்டான் பெயர். -- பொய்கை ஆழ்வார் பெயரும் கருங் கடலே நோக்கும்-ஆறு; ஒண் பூ உயரும் கதிரவனே நோக்கும்; உயிரும் தருமனையே நோக்கும்; ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும்-உணர்வு. -- பொய்கை ஆழ்வார் திருக் கண்டேன்; பொன் மேனி கண்டேன்; திகழும் அருக்கன் அணி நிறமும் கண்டேன்; செருக் கிளரும் பொன் ஆழி கண்டேன்; புரி சங்கம் கைக் கண்டேந் என் ஆழி வண்ணன்பால், இன்று. -- பேயாழ்வார்
Article 13 | Contents | Article 15 | Home