Tamil Arts Academy (Volume 22) 3. பித்தா! பிறை சூடீ! இரா. நாகசாமி 2010-07-10
Article 2 | Contents | Article 4 | Home

பித்தா! பிறை சூடீ! பெருமானே! அருளாளா! எத்தால் மறவாதே நினைக்கின்றேன்? மனத்து உன்னை வைத்தாய்; பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் - துறையுள் அத்தா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? என்று சுந்தரர் பாடினார். பரமனை கண்முன் கொணர்ந்து நிருத்தும் அருமையான பாடல். images/IMG_1811.JPG images/IMG_1764.JPG தேய்பிறை பதினோறாம், பன்னிறென்டாம் நாள்களில், உதயகாலத்தில், சுந்தரர் அனுபவித்துப் பாடி ஆனந்தப்பட்ட, பிறை சூடிய பிச்சனை, அச்சனைக் கண்டு மகிழலாம். அதேபோல் வளர்பிறை இரண்டாம், மூன்றாம் நாட்களில் அஸ்தமிக்கும், மாலை நேரம் மதி சூடிய பரமனைக் கண்டு ஆனந்தமடயலாம். தான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெற ஆவல்கொண்ட திருமூலர் ஆதிபரன் ஆட அங்கை கனலாட ஓதுஞ்சடை யாட உன்மத்த முற்றாட பாதிமதி யாட பாரண்ட மீதாட நாதமோ டாடினான் நாதந்த நட்டமே என்று பரமனை பாடினார். திருமூலர் பாதி மதியாட என்று பாடியதின் பொருள் என்ன? வளர்பிறை ஏழாம், எட்டாம் நாள் மாலையில் பாதி மதியாட பாரண்டமீதாடுகின்ற பரமனை காணலாம். அதேபோல் தேய்பிறை ஏழாம், எட்டாம் நாள் காலையில் பாதிமதியோடு உதித்தெழுகின்ற மார்தாண்டனை காணலாம். அக்காட்சியை காண்போர் மனம் ஆனந்ததில் திளைக்கும். அருணகிரநாதர் பாதி மதி மணிசடை நாதர் அருளிய குமரேசா என்று முருகனை அழகாக பாடுகிறார். பாதி மதிநதி போது மணிசடை நாத ரருளிய குமரேசா பாகு கனிமொழி மாது குறமகள் பாதம் வருடிய மணவாளா முற்றாத, முழுமை அடையாத, வளர்பிறை பதிமூன்றாம், பதிநான்காம் நாள் சந்திரனோடு நடம்புரியும் மரகதத்தை, நாவுக்கரசர் மிக அருமையாக பாடுகிறார். முற்றாத பால்மதியம் சூடினானை மூ உலகம் தான் ஆய முதல்வன்தன்னை செற்றார்கள் புரம் மூன்றும் செற்றார்ன்தன்னை திகழ் ஒளியை, மரகதத்தை, தேனை, பாலை குற்றாலத்து அமர்ந்து உறையும் குழகன் தன்னை கூத்து ஆட வல்லானை, கோனை, ஞானம் பெற்றார்கள் பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே images/IMG_1314.JPG images/IMG_1336.JPG குளிர்ந்த முழு மதியாட, தேவியை தென்பால் கொண்ட பரமனை சுந்தரர் தண் ஆர் மதிசூடீ! தழல் போலும் திருமேனீ எண்ணார் புரம் மூன்றும் எரியுண்ண ,ந், நகைசெய்தாய் மண் ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் - துறையுள் அண்ணா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? பௌர்ணமிக்கு மறுநாள் உதயகாலத்தில் அண்ணலின் ஆனந்த நடனத்தையும் முழு மதியின் அழகையும் கண்டு ஆனந்தம் அடையலாம். மார்தண்டனாகிய சூரியன் ஒருவர்காவும் காத்திராமல், அனைவர்கும் சமமாக தனது ஒளியைத் தந்து தனது கடைமையை செய்கிறார். இக்கருத்தை இயற்கையோடு ஒன்றி அனுபவித்த நமது முன்னோர்கள், எக்கணமும் தேஜஸ்வியாக இருந்து அனவர்கும் ஒளி தந்து நம் கடமையைச் செய்ய வேண்டும் என்று எடுத்துரைத்ததோடு வாழ்ந்தும் காட்டனர்.
Article 2 | Contents | Article 4 | Home