|
தமிழ் புத்தாண்டுச் சிறப்பிதழ்
Issue Date: 14-Apr-2007
ஒளி உருவாம் நின் உருவம்:-
வேதத்தில் ஒரு மந்திரம் தீயின் உருவை வர்ணிக்கிறது. தீக்கு இரண்டு தன்மைகள் உள்ளன. ஒன்று சுட்டுக்கொளுத்தும் தன்மை. மற்றது தேவையான உஷ்ணம் அளித்து பாதுகாத்தலும் பிரகாசித்தலும். இவ்விரண்டு தன்மைகளும் தீயில் பிரிக்க முடியாதபடி இணந்துள்ளன. இந்த இருதன்மையையும் வேதம் கவிதை நயமாக உருவகித்துப் பாடுகிறது.
பகல் கண்டேன் நாரணனை:-
கையிலே சக்கரமும், ஒளி திகழும் சேவடியும் உடையவன் என்று கண்டேன். அவன் உருவம் சக்கர வடிவாய் உள்ளது. அவனுக்கு ஏராளமான ஒளிக்கதிர்கள். ஆதலின் அவனை ஆயிரம் கால்களை உடையவன் (ஸஹஸ்ரபாத்) என்றும் கூறுவர். அவன் யார் எனில் ஆகாயத்ததே விளங்கும் சோதிவடிவானவன், சூரியன். அவனே நாராயணன் என்கிறார் பூதத்தாழ்வார்.
வேதத்தின் சுருக்கு:-
வேதம் என்பது மிகப்பெரியது. கடல் போன்றது. அது முடிவில் சொல்வது என்ன? புருஷோத்தமனாகிய திருமாலை வணங்குவது தான் வேதத்தின் முடிந்த முடிவு என்பர். இதை அறிந்தார் சிறந்தோர், செல்வம் மிகுந்தவர்கள். செல்வத்தில் செல்வம் செவிச் செல்வம் அல்லவா? ஆதலின் செவிச் செல்வத்தை பெற்றோர் வேதமுடிவை அறிந்தோர். இதை அறியாதவர் ஏழைகள் என்கிறார் பூதத்தாழ்வார்.
செங்கண் அவன்:-
செங்கண் என்ற ஒரு சொல் இருக்கிறது. அதற்கு சிவந்த கண் என்று ஒரு பொருள். அதுபோல் சீரான பார்வை, நேர்மையான பார்வை என்றும் ஒரு பொருள். செந்தமிழ் என்கிறோம் அல்லவா அது போல். அந்தந்த இடத்துக்கு ஏற்ப நல்ல சொல்லை பயான்படுத்த வேண்டும். பொருள் கொள்ளவும் வேண்டும். இது பண்பாட்டின் பிரதிபலிப்பு என்று கூறலாம். அதை மனதில் கொள்கிறார் பொய்கை ஆழ்வார்.
அரியது எளிது:-
எது அரிது என நினைக்கிறோமோ அதை எளிதாக்கிவிட முடியும். நமது ஆற்றலால் என்கிறார் பூதத்தாழவார். ஏதாவது ஒன்றை அடைய முடியுமோ முடியாதோ என பயந்து இருக்க வேண்டாம். நமது ஆற்றலால் முயற்சி செய்து அதை அடைய முடியும் என்ற மனத்திண்மை கொள்ள வேண்டும் என்று ஊக்குவிக்கிறார்.
தீ வினைகள் அஃகாவே:-
பக்தியின் பெருமையைக் கூறும் ஆழ்வார்களும், நாயன்மார்களும் பரமனை தூய்மையான மனத்தினால் பரவினாலே போதும் நமது தீ வினைகள் எல்லாம் மறைந்துபோகும். கடுமையான பால விரதங்களை மேற்கொள்ள வேண்டாம் என வலியுறுத்தி உள்ளனர்.
Viśvasya Āyatanam:-
The Hindu temple is conceived in general parlance as “The Universe”. We come across a reference to a Universal Temple, called the great temple in the Veda. It is also called the temple of the universe 'Viśvasya Āyatanam' also mentioned as Āyatanam mahat. A study of this Vedic universal Temple reveals the remarkable insight of the Vedic sages into nature's working and the biological factors.
பழங்காசில் பலதேவர்:-
சுமார் முப்பது ஆண்டுகளுக்கும் முன்பு ஆப்கனிஸ்தானத்தைத் தாண்டி வடமேற்கில் "காணூம்" என்ற இடத்தில் பல காசுகள் அகழ்வாய்வில் கிடைத்தன. இவ்விடம் பாக்டீரியா என்று அக்காலத்தில் அழைக்கப்பட்டது. கிரேக்கர்களின் ஆட்சியில் இருந்தது. இங்கு கிடைத்த காசுகளில் பல காசுகள் சதுர வடிவில் இரு மொழிகளில் பெயர் பொறிக்கப்பட்டு காணப்பட்டன. ஒரு புறம் கிரேக்க மொழியிலும் மறுபுறம் சம்ஸ்கிருத மொழியிலும் எழுதப்பட்டு காணப்படுகின்றன. வரலாற்றுக்கு 180 ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்டவை. இவற்றில் தான் பலராமனின் உருவம் பொறிக்கப்பட்டு காணப்படுகிறது. அதாவது அக்காசின் தலையில் நின்ற வடிவிலே பலராமர் கையிலே கலப்பை தாங்கி காணப்படுகிறார். கிரேக்க ஆடை அணிந்து காணப்படுகிறார்.
नारायण सूक्तम्:-
நாராயண சூக்த்தம் — நாகரி எழுத்துகளில்
Nārāyaṇa Sūktam:-
Nārāyaṇa Sūktam — in Roman Script with Acented Characters.
𑌨𑌾𑌰𑌾𑌯𑌣 𑌸𑍂𑌕𑍍𑌤𑌮𑍍:-
நாராயண சூக்த்தம் — கிரந்த எழுத்து வடிவத்தில். கிரந்த்த எழுத்துரு ஆயிரம் ஆண்டுகளாக மாறாமல் உள்ள எழுத்து வடிவம்.
|