◀ Prev📑 ContentsNext ▶📖 3D Flipbook
இரா. நாகசாமி பொம்மை பழைய பொம்மை கிரேக்கப் பண்பாட்டில்
எகிப்தியப் பண்பாட்டில் | ரோமானியப் பண்பாட்டில் | பொருளடக்கம் | அகெடமி

இன்றைக்கு சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்க நாடு சிறந்த நாடாக விளங்கியது. கொஞ்சம் கொஞ்சமாக அது மிகவும் பலம் பெற்றது. அந்நாட்டு மக்கள் மிக அழகான பொம்மைகள் செய்வதில் சிறந்தவர்கள். முக்கியமாக அவர்கள் பொம்மைகள் பளிங்குக் கல்லாலும், வெண்கலத்தாலும், மண்ணாலும் அனவை. அவைகளைப்பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்னால் அவ்வூர் மக்களைப்பற்றித் தெறிந்து கொள்வோம். கிரேக்க நாட்டில் அரசரது ஆட்சி கிடையாது. ஒவ்வொரு நகரமும் தனி ராஜ்யமாக விளங்கியது. ஒவ்வொரு நகர மக்களும் தங்களைத் தாங்களே ஆண்டு கொண்டார்கள். மிகவும் முக்கியமான வேலைகளுக்குத் தங்களில் சிலரைத் தேர்ந்தெடுத்துக்கொண்டார்கள். நீதி வழங்குதல், பொதுக் கணக்குகள் பார்த்தல் முதலியவைகளைத் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் கவனித்து வந்தனர்.
கிரேக்கப் பண்பாட்டில் பொம்மை
கிரேக்கப் பண்பாட்டில் பொம்மை
கிரேக்க நாட்டில் சிறு வயதிலேயே சிறுவர்களை படிக்க அனுப்பி விடுவார்கள். ஒவ்வொரு சிறுவனும் படிப்போடு தேகப்பயிற்சியும் செய்யவேண்டம். ஓட்டப் பந்தயமங்கள் எல்லாம் கற்றுக்கொள்ள வேண்டம். குஸ்தி போட பயில வேண்டும். பெரியவனாக ஆகும்போது அவன் உடம்பு பார்பதற்கு அழகாக இருக்கவேண்டும். தான் நகரத்திற்கான சண்டை போடத் தயாராக இருக்க வேண்டும். தினமும் விளையாட்டுகள் இருந்ததால் சிறுவர்கள் உற்சாகமாக படித்தார்கள், விளையாடினார்கள். எல்லோரும் ஒழுங்காக நின்று கொண்டு, பாட்டுகள் பாடிக்கொண்டு, அதற்கொப்ப உடற்பயிற்சி செய்வார்கள். பாட்டுகளை வைத்து அதன் படி உடற்பயிற்சி செய்கிறோமே அதற்கு மியூசிகல் டிரில் என்று ஆங்கிலத்தில் பெயர். அதை முதன் முதலில் கண்டு பிடித்தவர்கள் கிரேக்க நாட்டுச் சிறுவர்கள். சிறுவர்களுக்கும் பெரியவர்கும் அநேக விளையாட்டுப் பந்தயங்கள் உண்டு. இவற்றில் எல்லாம் மிகச் சிறந்தது, ஒலிம்பியா என்ர இடத்தில், நான்கு வருடத்திற்கு ஒரு முறை நடைபெற்ற ஒரு பெரிய விளையாட்டுப் பந்தய விழாதான். அது 5 நாட்களுக்கு நடைபெறும். முதல் நாளன்று கடவுளை வணங்குவார்கள். மறுநாள் சிறுவர்க்கான போட்டிகள் நடைபெறும். கடைசிநாள் ஜெயித்தவர்களின் பெயர்களைக் கூப்பிடுவார்கள். அவர்களுக்கு மலர்மாலைகளை அணிவிப்பார்கள். அதுதான் அவர்களுக்குப் பரிசு. அந்தப் பரிசு பெற்றால் ஊர் மக்கள் முழுவதும் அவனைக் கொண்டாடுவர். பரிசுகள் கொடுக்கும் இந்த ஒலிம்பியா விளையாட்டுப் போட்டியைப் போலவே இப்போது உலக விளயாட்டுப் போட்டி ஒன்று நடக்கிறது. அதுவும் நான்கு வருஷங்களுக்கு ஒரு முறைதான் நடக்கும். அதற்கு என்ன பெயர் தெரியுமா ? ஒலிம்பிக் விளையாட்டு போட்டி.
கிரேக்கச் சக்கரக் குதிரைப் பொம்மை
கிரேக்கச் சக்கரக் குதிரைப் பொம்மை
எதினா என்ற கடவுளைக் கிரேக்க நாட்டு மக்கள் வழிபட்டனர். அவள் பெயரால் ஏதன்ஸ் என்ற நகரம் விளங்கியது. அதுதான் கிரேக்கத் தலைநகரம். அங்கு மலைமேல் எதினாக் கடவுளுக்கு ஒரு கோயில் கட்டினார்கள். பெரிக்லஸ் என்ற பெரிய வீரன் அந்தக் கோயிலைக் கட்டினான். அது கட்டி 2400 வருஷங்கள் ஆகிவிட்டன. இன்னும் அந்தக கோயில் ஏதன்ஸ் நகரத்தில் இருக்கிறது. இந்தக் கோயிலை அழகான சிற்பங்கள் அலங்கரித்தன. இந்தக் கோயிலின் அழகைப் பார்த்து உலகமே ஆச்சரியப்படுகிறது. எதினா தெய்வத்தை மரத்தால் செதுக்கினார்கள். தங்க தகட்டால் போர்த்தினார்கள். வருஷா வருஷம் ஒரு விழா கொண்டாடினார்கள். ஒரு பெரிய கப்பல் செய்வார்கள் அதில் அந்தத் தெய்வாத்துக்கு ஆடை அணிகள் வைப்பார்கள். அந்தக் கப்பலை நாலு சக்கரங்களின் மேல் வைத்து இழுத்துக்கொண்டு கோயிலுக்குப் போவார்கள். இதைப் பின் தொடர்ந்து பெண்களும், வீரர்களும் குதிரை வீரர்களும் செல்வார்கள் அது கண்கொள்ளக் காட்சியாக இருக்குமாம். அதைச் சிற்பங்களில் செதுக்கியிருக்கிறார்கள். குழந்தைகளுக்குச் சின்னச் சின்னப் பொம்மைத் தேர்களும், வண்டிகளும் செய்து கொடுப்பார்கள். வேறுவகைப் பொம்மைகளும் செய்வார்கள். ஒரு மனித உருவம். கை, கால் எல்லாம் தனித்தனியாகச் செய்வார்கள். ஆணிகள் வைத்து சேர்த்து வடுவார்கள். அந்தப் பொம்மையின் கை, கால் எல்லாவற்றையும் தனித்தனியாக ஆட்டலாம். வேடிக்கையாக இருக்கும். நிறையப் பொம்மை அச்சுக்கள் செய்து அவற்றிலிருந்து பொம்மைகள் செய்தார்கள். உடம்பையெல்லாம் ஒரே அச்சிலிருந்து செய்வார்கள். தலைகளை மட்டும் வெவ்வேறு அச்சிலிருந்து செய்வார்கள். பிறகு இரண்டையும் பொருத்துவார்கள். இவைகளைப் பார்த்தால் ஒரே மாதிரியாகவும் இருக்கும். வெவ்வேறு மாதிரியாகவும் இருக்கும். இந்த பொம்மைகளை மண்ணால் செய்து சுட்து விடுவார்கள். பிறகு அழகிய வண்ணங்கள் பூசுவார்கள். இந்த பொம்மைகள் ரொம்ப அழகானவை. சுமார் ஆயிரக்கணக்கான பொம்மைகள் பூமிக்கடியிலிருந்து கிடைத்திருக்கிறது. கிரேக்கர்கள் பளிங்குக் கல்லினால் சிற்பம் செதுக்குவதிலும், வெண்கலத்தால் பொம்மைகள் செய்வதிலும் ரொம்பவும் சமர்தார்கள். எல்லாவற்றையும்விட அவர்களின் மண் பாண்டங்கள் மிகவும் சிறந்தவை. ஒவ்வொரு மண்பாண்டத்தின் மேலும் அழகான ஓவியங்கள், கறுப்பிலும் சிவப்பிலும் தீட்டப்பட்டு இருக்கும். குயவன் மண் பாண்டங்கள் செய்து ஓவியனிடம் கொடுத்து விடுவான். அவன் கிரேக்க கடவுள்கள், வீரர்கள் இவர்களின் படத்தைத் தீட்டுவான். பிறகு இப்பானையை நெருப்பில் போட்டு சுட்டு விடுவார்கள். அந்த ஓவியம் அழியவே அழியாது. இந்த மாதிரி அழியாத ஓவியங்களைப் பானைகள்மேல் எப்படி தீட்டுவது இப்போது யாருக்கும் தெரியாது. பல அழகான மண்பாண்டங்களை இவர்கள் செய்தார்கள். ஹோமர் என்பவர் ஒரு கிரேக்க கவி. அவர் குருடர். அவர் அற்புதமான இரண்டு காவியங்கள் எழுதியிருக்கிறார். இலியாட், ஒடிஸ்ஸி என்பன அவைகளின் பெயர். அவை நம்நாட்டில் இராமாயணம், மகாபாரதம் எப்படியோ, அப்படிப் படிக்கப்பட்டு வருகிறது. இந்த கிரேக்க வம்சத்தில் வந்தவன்தான் மாவீரன் அலெக்ஸாண்டர். சுமார் ஆயிரம் வருஷங்கள் சிறந்து விளங்கிய கிரேக்க நாடு கறிஸ்துவுக்கு 100 அண்டுகளுக்கு முன்னர் வலுவிழந்து போயிற்று.
எகிப்தியப் பண்பாட்டில் | ரோமானியப் பண்பாட்டில் | பொருளடக்கம் | அகெடமி