இந்தியாவில் மௌரிய சாம்ராஜயத்தை இன்றைக்கு சுமார் 2300 ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்படுத்தியவர் சந்திரகுப்த மௌரியர். அவருக்குப் பின்னால் வந்த அசோகச் சக்ரவார்த்தியைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர் மிகச் சிறந்த வீரர். கலிங்கத்தில் ஒரு சண்டை செய்தார். அதில் அவர் வெற்றியடைந்தார். இருந்தபோதிலும் ஆயிரக்கணக்கான வீரர்கள் இறந்து போனார்கள். அதைப் பார்த்த அசோகர் வருத்தப்பட்டார். இனிமேல் சண்டை செய்வதில்லை என்று பிரதிக்ஞை பூண்டார். புத்தர் சொன்ன வழியை பின்பற்றினார். அவர் காலத்தில் பொம்மைகள் எப்படி இருந்தன என்று பார்ப்போம்.
அசோகர் புத்தர் வழியைப் பின்பற்றினார் அல்லவா? அதனால் அநேக பௌத்த ஸ்தூபங்களை எழுப்பினார். பௌத்த ஸ்தூபங்கள் என்றால் என்ன தெரியுமா? புத்தர் இறந்த பிறகு அவருடைய புனித எலும்புகளை ஸ்படிகக் குவளைக்குள் வைத்து அதன் மேல் பந்துபோல் ஒரு கட்டிடம் எழுப்புவார்கள் அதற்கு ஸ்தூபம் என்று பெயர். அதன் முன் விளக்கேற்றி ஜனங்கள் வணங்கினார்கள். இந்த மாதிரி புத்தரின் சீடர்கள் இறந்த இடத்திலும் கட்டிடம் எழுப்பினார்கள். இதற்கும் ஸ்தூபங்கள் என்று பெயர். அசோகர் புத்தருக்கு பல ஸ்தூபங்கள் கட்டினார். அதோடு அவர் வேறு ஒரு வழியிலும் புத்தர் வழியைப் பரப்பினார். உயரமாகக் கல்தூண்களை நட்டு அதில் புத்தரின் வழியை எழுதி வைத்தார். இந்த கல்தூண்களைப் பளபளவென்று தேய்த்துப் பார்த்தால் கண்ணாடி மாதிரி இருக்கும்படி செய்தனர். அதனமேல்தான் எழுதினார்கள். இந்தத் தூணின் உச்சியில் அழகான மிருகங்களின் பொம்மைகளைச் செதுக்கினர். ஒரு தூணில் யானை, இன்னொரு தூணில் மாடு, இன்னொரு தூணில் சிங்கம் முதலிய பொம்மைகள் இருந்தன. ஒரு தூணில் நான்கு சிங்கங்கள் நான்கு திசைகளையும் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தன. அதன்மேல் ஒரு சக்கரம் இருந்தது. அந்தச் சக்கரம் விழுந்துவிட்டது. இததான் இப்போது இந்திய அரசாங்கச் சின்னமாக உள்ளது. காசுகளிலும், ஸ்டாம்புகளிலும் காணப்படுகிறது.
மௌரியப் பண்பாட்டில் பொம்மை
இது மாதரியான தூண்களையும் மற்ற பொம்மைகளையும் அசோகர் இந்திய சிற்பிகளைக் கொண்டு செய்வித்தார் அவருடைய ராஜ்யம் வடமேற்கே பாரசீகம்வரை பரவியிருந்தது. பாரசீக தேசத்துச் சிற்பிகளையும் கொண்டு இதுபோன்ற தூண்களை அசோகர் செதுக்கினார். அதனால் அசோகரது கலையில் இரண்டு தேசக் கலைகளையும் காணலாம்.
அசோகருக்கு பிறகு வட இந்தியாவை "சுங்கர்கள்" என்ற அரசர்களும், தக்காணத்தை "சாத்தவாஹனர்கள்" என்ற அரசர்களும் ஆணடார்கள். அவர்கள் அசோகர் கட்டுவித்த ஸ்தூபங்களை அழகிய சிற்பங்களைக் கொண்டு அலங்கரித்தார்கள். இந்த சிற்பங்கள் எல்லாம், பார்குத், சாஞ்சி, அமராவதி, நாகார்ஜுனகொண்டா முதலிய இடங்களில் கிடைத்தன. இதே காலத்தில் பம்பாய் நகருக்கருகில் கார்லே, பாஜா, அஜந்தா முதலிய இடங்களில் மலைகளைக் குடைந்து பௌத்த கோயில்கள் செய்தார்கள். இவைகளுக்குச் சைத்யஙகள் என்று பெயர். இதற்கு பின்னால் வந்த அரசர்களும் இதுபோன்ற குகைகளைக் குடைந்திருக்கிறார்கள். சிற்பங்களைச் செதுக்கியிருக்கிறார்கள். ஓவியங்களைத் தீட்டியிருக்கிறார்கள.
சிந்து நதிப் பண்பாட்டில் |
காந்தாரப் பண்பாட்டில் |
பொருளடக்கம் |
அகெடமி